கே. பி. சேகர்
ருத்ராபதி சேகர் என அழைக்கப்படும் கே. பி. சேகர் (K. P. Sekar) என்பவர் ஒரு தென்னிந்திய திரைப்பட பின்னணி குரல் கலைஞர் ஆவார். இவர் சாருக் கான் உள்ளிட்டவர்களுக்கு தமிழ் படங்களில் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.[1][3] இவர் தமிழக அரசிடமிருந்து தமிழக அரசு திரைப்பட விருதைப் பெற்றவர்.
கே. பி. சேகர் | |
---|---|
தாய்மொழியில் பெயர் | ருத்ராபதி சேகர் [1] |
பிறப்பு | ருத்ராபதி சேகர் இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை |
பணி | நடிகர் பின்னணி குரல் கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1988 - தறோபோது வரை |
பெற்றோர் | கே. பி. ருத்ராபதி (தந்தை)[2] |
வாழ்க்கைத் துணை | காயத்திரி சேகர் |
பிள்ளைகள் | அக்ஷத் தேஜ் வில்வா |
தொழில்
தொகுசேகர் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கே. பி. ருத்ராபதி இயக்குனர் ஏ. பி. நாகராசன் கீழ் பணியாற்றியவர்.[1] சேகர் குழந்தை கலைஞராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் நேரடி தமிழ் படமான பவித்ரா (1994) படத்தில் அஜித் குமாரின் கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுத்து அதன் மூலம் அறிமுகமானார. அமரேந்திர பாகுபலி கதாபாத்திரத்திற்காக பிரபாசுக்கு பின்னணி குரல் கொடுத்தது அதன் வழியாக தொழில் வாழ்வில் ஏற்றம் கண்டார். விவேகம் படத்திற்காக விவேக் ஒபரோய்க்கு பின்னணி குரல் கொடுத்தார்.[3] இவரது மற்ற முக்கிய படங்களாக காதல் தேசம், உள்ளம் கேட்குமே, பயணம் ஆகியவை அடங்கும். மலரினும் மெல்லிய (2011) படத்திற்காக சிறந்த ஆண் பின்னணி குரல் கலைஞருக்கான தமிழக அரசு திரைப்பட விருதை பெற்றார். இவர் முக்கியமாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்படும் தெலுங்கு, இந்தி, ஆங்கில படங்களுக்கு தமிழ் பின்னணி குரல் கொடுக்கிறார், இதில் மார்வெல் காமிக்ஸ் யுனிவர்ஸ் படங்களான டெட்பூல் , ஆண்ட் மேன் அண்ட் தி வாஸ்ப், எக்ஸ்-மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கன. பெருவெற்றி தெலுங்கு திரைப்பட மாவீரன் படத்தின் தமிழ் மொழியாக்கத்தில் பின்னணி குரல் கொடுத்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியான சாருக் கான் தொகுப்புரை வழங்கிய இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியான கௌன் பனேகா குரோர்பதி பருவம் 2 ஐ இவர் தமிழில் குரல் கொடுத்து மொழியாக்கம் செய்தார்.[1] மேலும் இவர் கொடைக்கானல், என்னை அறிந்தால், அடங்க மறு உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசேகர் காயத்ரியை திருமணம் செய்து கொண்டார், இவருக்கு அக்ஷாந்த் தேஜ் மற்றும் வில்வா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.[1]
திரைப்படவியல்
தொகுநடிகராக
தொகுஆண்டு | படம் | பாத்திரம் | Ref(s) |
---|---|---|---|
2008 | கோடைக்கானல் | நந்தா | |
2011 | பயணம் | செய்தியாளர் | |
2015 | என்னை அறிந்தால் | காவல்துறை அதிகாரி | |
2018 | அடங்க மறு | நீக்கப்பட்ட காட்சி [4] | |
2020 | சீறு | கிஷோர் |
பின்னணி குரல் கொடுத்த பாத்திரங்கள்
தொகுதமிழ்ப் படங்கள்
தொகுஆண்டு | படம் | பாத்திரம் | நடிகர் | குறிப்புகள் | Ref(s) |
---|---|---|---|---|---|
1994 | பவித்ரா | அசோக் | அஜித் குமார் | ||
1994 | இளைஞர் அணி | ஹரிஷ் | |||
1994 | உங்கள் அன்பு தங்கச்சி | இராஜ ரவீந்திரா | |||
1996 | காதல் தேசம் | கார்த்திக் | வினீத் | ||
1996 | செல்லக்கண்ணு | விக்னேஷ் | |||
1997 | நந்தினி | வினீத் | |||
1999 | காதலர் தினம் | ராஜா | குணால் | ||
1999 | மலபார் போலீஸ் | அப்பாஸ் | |||
1999 | மோனிசா என் மோனோலிசா | இராமன் திரிக்கா | |||
1999 | சுயம்வரம் | அப்பாஸ் | |||
2001 | ஆனந்தம் | அப்பாஸ் | |||
2001 | கண்ணா உன்னை தேடுகிறேன் | சத்யன் | |||
2001 | ஒன் டூ திரீ | ராஜூ சுந்தரம் | |||
2002 | புன்னகை தேசம் | குணால் | |||
2002 | காதல் வைரஸ் | தீபக் | ரிச்சர்ட் ரிசி | ||
2002 | வருஷமெல்லாம் வசந்தம் | ரமேஷ் | குணால் | ||
2002 | பேசாத கண்ணும் பேசுமே | விக்ரம் | குணால் | ||
2002 | காதல் கிறுக்கன் | வினீத் | |||
2002 | அற்புதம் | குணால் | |||
2003 | பந்தா பரமசிவம் | அப்பாஸ் | |||
2003 | எனக்கு 20 உனக்கு 18 | சிறீதர் | தருண் குமார் | ||
2003 | சூரி | சூரியா | விக்னேஷ் | ||
2003 | குறும்பு | ரவி | அல்லரி நரேஷ் | ||
2004 | சூப்பர் டா | குணால் | |||
2004 | ஷாக் | அப்பாஸ் | |||
2005 | செவ்வேல் | ஜெய் ஆகாஷ் | |||
2005 | உள்ளம் கேட்குமே | சாம் | சாம் | ||
2005 | சின்னா | விக்ரமாதத்தா | |||
2005 | பம்பரக்கண்ணாலே | கௌதம் | விக்ரமாதித்யா | ||
2005 | வணக்கம் தலைவா | அப்பாஸ் | |||
2006 | 47ஏ பெசன்ட் நகர் வரை | அப்பாஸ் | |||
2006 | மனதோடு மழைக்காலம் | சாம் | |||
2006 | ஒரு காதல் செய்வீர் | சந்தோஷ் | |||
2007 | நண்பனின் காதலி | விக்ரமாதித்யா | |||
2008 | நேபாளி | பிரேம் | |||
2008 | மலரினும் மெல்லிய | இளங்கோ | விக்னேஷ் | சிறந்த ஆண் பின்னணி குரல் கலைஞருக்கான தமிழக அரசு திரைப்பட விருது | [5] |
2010 | பெண் சிங்கம் | உதய்கிரண் | |||
2010 | குட்டி | சமீர் தத்தனி | |||
2011 | பயணம் | மேஜர் ரவீந்திரா | அக்கினேனி நாகார்ஜுனா | ||
2011 | காசேதான் கடவுளடா | சரண் | |||
2014 | நினைத்தது யாரோ | ரிச்சசர்ட் ரிஷி | |||
2015 | பாகுபலி | அமரேந்திர பாகுபலி | பிரபாஸ் | ||
2015 | வேதாளம் | அபினை | கபீர் துகன் சிங் | ||
2016 | ஒரு மெல்லிய கோடு | சாம் | |||
2017 | பாகுபலி 2 | அமரேந்திர பாகுபலி | பிரபாஸ் | ||
2017 | விவேகம் | ஆரியன் சிங்கா | விவேக் ஒபரோய் | ||
2018 | சொல்லிவிடவா | சந்தன் குமார் | |||
2018 | பாஸ்கர் ஒரு ராஸ்கல் | சஞ்சை | அப்தப் சிவதசனி | ||
2019 | காஞ்சனா 3 | கபீர் துகான் சிங் |
தமிழ் மொழிமாற்று படங்கள்
தொகுஆண்டு | படம் | பாத்திரம் | நடிகர் | Ref(s) | |
---|---|---|---|---|---|
1995 | ரங்கீலா | முன்னா | ஆமிர் கான் | ||
1998 | ரஷ் ஹவர் | லீ | கிறிஸ் டக்கர் | ||
1999 | தால் | அக்சை கண்ணா | |||
2001 | பாப்பா | வெங்கடேஷ் | |||
2001 | காதல் கலாட்டா | வெங்கடேஷ் | |||
2004 | தேசம் | சாருக் கான் | |||
2005 | மாஸ் | நாகார்ஜுணா | |||
2007 | ரஷ் ஹவர் 2 | லீ | கிறிஸ் டக்கர் | ||
2007 | ஸ்டாலின் | கோபிசந்த் | |||
2007 | டான் | நாகார்ஜுணா | |||
2008 | புதுகோட்டை அழகன் | நாகார்ஜுணா | |||
2008 | பெட்டைம் ஸ்டோரிஸ் | ஸ்கீட்டர் ப்ரோன்சன் | ஆடம் சேண்ட்லர் | ||
2009 | மாவீரன் | ஹர்சா | ராம் சரண் | ||
2011 | ஸ்ரீ ராம ராஜ்யம் | இலட்சுமணன் | சிறீகாந்த் | தமிழ் பதிப்பிற்கு மட்டும் | |
2011 | எக்ஸ்-மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ் | சார்லஸ் சேவியர் / பேராசிரியர் எக்ஸ் | ஜேம்ஸ் மாக்கவோய் | ||
2012 | பிஸ்னஸ் மேன் | மகேஷ் பாபு | |||
2013 | விக்ரம்தாதா | நாக சைதன்யா | |||
2013 | சென்னை எக்ஸ்பிரஸ் | ராகுல் | சாருக் கான் | தொலைக்காட்சிக்காக மொழிமாற்றம் செய்யப்பட்டது | |
2014 | எக்சு-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று | சார்லஸ் சேவியர் / பேராசிரியர் எக்ஸ் | ஜேம்ஸ் மாக்கவோய் | ||
2014 | ஹாப்பி நியூ இயர் | சார்லி | சாருக் கான் | ||
2015 | ஆன்ட்-மேன் | ஸ்காட் லாங் / ஆண்ட் மேன் | பால் ருத் | ||
2015 | ருத்ரமாதேவி | அல்லு அர்ஜுன் | |||
2015 | பாஜிராவ் மஸ்தானி | பாஜிராவ் | ரன்வீர் சிங் | ||
2016 | தி ஆங்ரிபேர்ட்ஸ் மூவி | ரெட் | ஜேசன் சுதேகிஸ் | ||
2016 | கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் | ஸ்காட் லாங் / ஆண்ட் மேன் | பால் ருத் | ||
2016 | டெட்பூல் | வேட் வில்சன் / டெட்பூல் | ரையன் ரெனால்ட்சு | ||
2016 | எம். எஸ். தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி | மகேந்திரசிங் தோனி | சுசாந்த் சிங் ராஜ்புத் | ||
2016 | எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ் | சார்லஸ் சேவியர் / பேராசிரியர் எக்ஸ் | ஜேம்ஸ் மாக்கவோய் | ||
2018 | நடிகையர் திலகம் | விஜய் தேவரகொண்டா | |||
2018 | ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் | ஸ்காட் லாங் / ஆண்ட் மேன் | பால் ருத் | ||
2018 | கே.சி.எஃப் அத்தியாயம் ஒன்று | ராக்கி | யாஷ் | ||
2018 | என்பேரு சூர்யா என் வீடு இந்தியா | அல்லு அர்ஜுன் | |||
2018 | பத்மாவத் | அலாவுதீன் கில்சி | ரன்வீர் சிங் | ||
2018 | வெனம் | கார்ல்டன் டிரேக் / ரியோட் | ரிஸ் அகமது | ||
2019 | அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் | ஸ்காட் லாங் / ஆண்ட் மேன் | பால் ருத் | ||
2019 | தி ஆங்கிபேர்ட்ஸ் மூவி 2 | ரெட் | ஜேசன் சுதேகிஸ் | ||
2019 | அவனே ஸ்ரீமன்னாராயணன் | ஆய்வாளர் நாராயணன் | ரக்சித் செட்டி | ||
2019 | எக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ் | சார்லஸ் சேவியர் / பேராசிரியர் எக்ஸ் | ஜேம்ஸ் மாக்கவோய் | ||
2019 | சாஹோ | அசோக் சக்ரவர்த்தி | பிரபாஸ் | தமிழ் பதிப்பிற்கு குரல் | |
2019 | குருக்ஷேத்ரம் | துரியோதனன் | தர்சன் | ||
2020 | வைகுந்தபுரம் | பண்டு | அல்லு அர்ஜுண் | ||
2021 | செம திமிரு | துருவ் சர்ஜா |
தமிழ் தொலைக்காட்சி மொழிமாற்று தொடர்கள்
தொகுஆண்டு | தொடர் | பங்கு | Ref(s) |
---|---|---|---|
2007 | கௌன் பனேகா குரோர்பதி | சாருக் கான் | |
2009 | டிராகன் பால் இசட் | ஜோர்டான் |
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "அமரேந்திர பாகுபலியாகிய நான் - சேகர்". cinema.vikatan. 1 May 2017. பார்க்கப்பட்ட நாள் 26 May 2019.
- ↑ https://www.rediff.com/movies/2007//jan/25shekar.htm
- ↑ 3.0 3.1 "Deadpool, the funny Tamil Guy - Sekar". cinemaexpress. 8 April 2018. பார்க்கப்பட்ட நாள் 26 May 2019.
- ↑ https://www.youtube.com/watch?v=OABJNSJw0j4
- ↑ "தமிழக அரசின் திரை விருதுகள் அறிவிப்பு" [Tamil Nadu Government announces the State Film Awards] (in Tamil). filmibeat.com. 29 September 2009. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)