தூய்மையான இந்திய நகரங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தூய்மையான இந்திய நகரங்களின் பட்டியல் (List of cleanest cities in India) தூய்மை இந்தியா இயக்கம் திட்டத்தின் கீழ் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை ஆண்டுதோறும் தேசிய அளவில் நகர மதிப்பீட்டை வெளியிடுகின்றன. இந்த மதிப்பீட்டில் சுமார் 500 நகரங்கள் மதிப்பிடப்படுகின்றன. இது இந்தியாவில் நகர்ப்புற மக்களில் 72 சதவீதத்தை உள்ளடக்கியது.

தூய்மையான நகரங்கள்: இந்தியா
இந்தோர்

அம்பிகாபூர், அகமதாபாது, உஜ்ஜைன்
மேலிருந்து மணிக்கூட்டுத் திசையில்: மங்கல் நகரப் பகுதி (விஜய் நகர்), ராசவாடா அரண்மனை, டாலி கல்லூரி, அட்டல் விகாரி வாஜ்பாயி பிராந்தியப் பூங்கா, பட்டல்பனி அருவி
நகரம்: இந்தோர்
மாகாணம்: மத்தியப் பிரதேசம்
நாடு: இந்தியா
எப்போதிருந்து: மார்ச் 2017
மதிப்பீட்டு வாரியம்: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
மதிப்பீட்டுத் திட்டம்: தூய்மை இந்தியா இயக்கம்
மைசூர்

இந்த கணக்கெடுப்பின் நோக்கத்திற்காக 2017வரை இந்தியா ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு நகரமும் 19 குறிகாட்டிகளில் அடிப்படியில் வகைப்படுத்தப்பட்டன. நகரங்கள் பச்சை, நீலம், கருப்பு மற்றும் சிவப்பு என நான்கு வண்ணங்களாக வகைப்படுத்தப்பட்டன. பச்சை தூய்மையான நகரம், மற்றும் சிவப்பு மிகவும் மாசுபட்டது என்பது இதன் பொருள். எந்த நகரங்களும் பச்சை நிறமாக மதிப்பிடப்படவில்லை. இருப்பினும், 2017-18 புலன்களின் கணக்கெடுப்பின் போது, மதிப்பீட்டின் அளவுருக்கள் மாற்றியமைக்கப்பட்டன. மேலும் நகரங்கள் மக்கள்தொகையின் அடிப்படையில், பெரும்நகரங்கள், பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நகரம் என வகைப்படுத்தப்பட்டன. மேலும் இந்த வகைப்படுத்தலின் படியே மதிப்பீடு நடந்தது. [1]

அண்மைய தரவரிசையின் (2020)ஸ்வச் சுரேக்ஷன் படி இந்தோர் தூய்மையான நகரமாகவும், சூரத்து இந்தியாவின் இரண்டாவது தூய்மையான நகரமாகவும் தரப்படுத்தப்பட்டன.[2][3][4]

சுருக்கம்

தொகு

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தூய்மை குறியீட்டின் அடிப்படையில் நகரங்களை வரிசைப்படுத்துகிறது. இந்த பட்டியல் ஆண்டுதோறும் தரப் பட்டியலில் முன்னிலை வகிக்கும் நகரங்களைச் சுருக்கமாகக் கூறுகிறது.

ஆண்டு முதலில் இரண்டாம் இடம்
நகரம் நிலை நகரம் நிலை
2020 பெரும்நகரம் இந்தோர் மத்தியப் பிரதேசம் சூரத்து குசராத்து
பெரிய நகரம் அகமதாபாது குசராத்து
நடுத்தர நகரம் மைசூர் கருநாடகம்
சிறிய நகரம் அம்பிகாபூர் சத்தீசுகர்
2019 பெருநகரம் இந்தோர் மத்தியப் பிரதேசம் அம்பிகாபூர் சத்தீசுகர்
பெரிய நகரம் அகமதாபாது குசராத்து
நடுத்தர நகரம் உஜ்ஜைன் மத்தியப் பிரதேசம் மைசூர் கருநாடகம்
சிறிய நகரம் புது தில்லி மாநகராட்சி மன்றம் தில்லி
2018 பெருநகரம் இந்தோர் மத்தியப் பிரதேசம் போபால் மத்தியப் பிரதேசம்
பெரிய நகரம் விசயவாடா ஆந்திரப் பிரதேசம்
நடுத்தர நகரம் மைசூர் கருநாடகம்
சிறிய நகரம் புது தில்லி மாநகராட்சி மன்றம் தில்லி
2017 இந்தோர் மத்தியப் பிரதேசம் போபால் மத்தியப் பிரதேசம்
2016 மைசூர் கருநாடகம் சண்டிகர் சண்டிகர்
2015 திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
2010 சண்டிகர் சண்டிகர் மைசூர் கருநாடகம்

நாடு தழுவிய வருடாந்திர தூய்மை ஆய்வின் ஐந்தாவது பதிப்பான 'ஸ்வச் சர்வேஷன் 2020 ' முடிவுகள் வெளிவந்துள்ளன. மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மீண்டும் இந்தியாவின் தூய்மையான நகரமாக மாறியுள்ளது. குஜராத்தின் சூரத் இந்தியாவின் இரண்டாவது தூய்மையான நகரமாக உருவெடுத்தது. இதன்பின்னர் நவி மும்பை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சின் ஸ்வச்ச்தா நகர ஆய்வு அறிக்கையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.[5][6][7]

ஸ்வச் சர்வேஷன் 2020 4,242 நகரங்கள், 62 கன்டோன்மென்ட் போர்டுகள் மற்றும் 92 கங்கா நகரங்களை உள்ளடக்கியது. இந்த ஆய்வு 28 நாட்களில் மேற்கொள்ளப்பட்டது.[8]

இந்தியாவில் 2020 தூய்மையான நகரங்களின் பட்டியல் பின்வருமாறு:

ஸ்வச் சர்வேஷன் தரவரிசை நகரம் மாநில / ஒன்றியப் பிரதேசம்
1 இந்தோர் மத்தியப் பிரதேசம்
2 சூரத்து குசராத்து
3 நவி மும்பை மகாராட்டிரம்
4 அம்பிகாபூர் சத்தீசுகர்
5 மைசூர் கருநாடகம்
6 விசயவாடா ஆந்திரப் பிரதேசம்
7 அகமதாபாது குசராத்து
8 புது தில்லி தில்லி
9 சந்திரபூர் மகாராட்டிரம்
10 கார்கோன் மத்தியப் பிரதேசம்
ஆதாரம்: வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகம் . [9]

2017–18 கணக்கெடுப்பின் போது மதிப்பீட்டின் பரிமாணங்கள் அதிகரித்தன. சுற்றுச்சூழல், ஆற்றல் மற்றும் தூய்மை ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களில் சிறந்து விளங்கும் நகரங்களும் மாநிலங்களும் அடையாளம் காணப்பட்டது.

2016–2017

தொகு

ஸ்வச் சர்வேஷன் 2017 என்பது இந்தியாவின் 500 நகரங்களில் விரிவான சுகாதாரக் கணக்கெடுப்பாகும். இந்த கணக்கெடுப்பை நடத்த நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் இந்தியத் தர கழகத்தினை நியமித்தது; 2014இல் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கம் முன்னேற்றம் மற்றும் தாக்கத்தைத் சரிபார்க்க ஏற்படுத்தப்பட்டது. இது நகரங்களிடையே அவற்றின் சுகாதார நிலை குறித்த போட்டி உணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது சுகாதார நிலை குறித்த விரிவான மதிப்பீட்டை இத்திட்டம் வழங்குகிறது.

ஒவ்வொரு நகரத்தின் செயல்திறனும் ஐந்து முக்கிய கருப்பொருள் அளவுருக்களிலன் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது- நகரத் திடக்கழிவுகள் - மேலாண்மை-சேகரித்தல் மற்றும் போக்குவரத்து நகராட்சி திடக்கழிவுகள் - திடக்கழிவுகளைப் பதப்படுத்துதல் மற்றும் அகற்றுவது திறந்த மலம் கழித்தல்-இலவச/கழிப்பறைகள் திறன் மேம்பாட்டுக் கட்டமைப்பு மற்றும் மின்னணு கற்றல் பொது மற்றும் சமூக கழிப்பறை இடங்களை வழங்குதல் • தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு மற்றும் நடத்தை மாற்றம்

ஸ்வச் சர்வெக்ஷன் 2017 ஜனவரி 4 முதல் 2017 பிப்ரவரி 7 வரை நடத்தப்பட்டது.[10] முதல் 30 நகரங்களின் முடிவுகள் பின்வருமாறு:

ஸ்வச் சர்வெக்சன்
தரவரிசை
நகரம் மாநில / ஒன்றிய பிரதேசம்
1 இந்தோர் மத்தியப் பிரதேசம்
2 போபால் மத்தியப் பிரதேசம்
3 விசாகப்பட்டினம் ஆந்திரப் பிரதேசம்
4 சூரத்து குசராத்து
5 மைசூர் கருநாடகம்
6 திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
7 புது தில்லி மாநகராட்சி மன்றம் டெல்லி
8 நவி மும்பை மகாராட்டிரம்
9 திருப்பதி ஆந்திரப் பிரதேசம்
10 வடோதரா குசராத்து
11 சண்டிகர் சண்டிகர்
12 உஜ்ஜைன் மத்தியப் பிரதேசம்
13 புனே மகாராட்டிரம்
14 அகமதாபாது குசராத்து
15 அம்பிகாபூர் சத்தீசுகர்
16 கோயம்புத்தூர் தமிழ்நாடு
17 கார்கோன் மத்தியப் பிரதேசம்
18 ராஜ்கோட் குசராத்து
19 விசயவாடா ஆந்திரப் பிரதேசம்
20 காந்திநகர் குசராத்து
21 ஜபல்பூர் மத்தியப் பிரதேசம்
22 பெருநகர ஐதராபாத் மாநகராட்சி தெலங்காணா
23 சாகர் மத்தியப் பிரதேசம்
24 கட்னி மத்தியப் பிரதேசம்
25 நவ்சாரி குசராத்து
26 வாப்பி குசராத்து
27 குவாலியர் மத்தியப் பிரதேசம்
28 வாரங்கல் தெலங்காணா
29 மும்பை மகாராட்டிரம்
30 சூர்யபேட்டை தெலங்காணா
ஆதாரம்: நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் [11]

2015–2016

தொகு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் தூய்மை இந்தியா இயக்கம் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்கும், 73 நகரங்களைச் சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்து மதிப்பீடு செய்வதற்கும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒரு விரிவான கணக்கெடுப்பை நடத்தியது. ஸ்வச் பாரத் மிஷனுக்கான முதல் கணக்கெடுப்பு இது. இந்தியத் தர குசுமத்தினால் (கியூசிஐ) நடத்தப்பட்டது. இதற்கு ஸ்வச் சர்வெக்சன் என்று பெயரிடப்பட்டது. இது அனைத்து மாநில தலைநகரங்களையும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 53 நகரங்களையும் உள்ளடக்கியது. இதில் தரவு சேகரிப்பு மூன்று நிலைகளை உள்ளடக்கியது - நகராட்சி அமைப்புடன் தொடர்பு, நேரடி கண்காணிப்பு மற்றும் குடிமக்களின் கருத்து. துப்புரவு மற்றும் சுகாதாரத்தில் பின்வரும் ஆறு அளவிடக்கூடிய அம்சங்களில் செய்யப்பட்ட பணிகளை ஸ்வச் சர்வெக்ஷன் மதிப்பீடு செய்தது. திறந்தவிட மலம் கழித்தல்- நகரம் (ODF) மற்றும் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை (SWM) தகவல், கல்வி மற்றும் நடத்தை மாற்றத் தொடர்பு (IEBC) செயல்பாடு • சுத்தம், வீட்டுக்கு வீடு சேகரித்தல் மற்றும் போக்குவரத்து (திடக்கழிவுகள்) திடக்கழிவு பதப்படுத்துதல் மற்றும் அகற்றல் (திடக்கழிவுகள்) பொது மற்றும் சமூக கழிப்பறை இடங்களை வழங்குதல் தனிநபர் கழிப்பறைகளை நிர்மாணித்தல்

ஸ்வச் சர்வெக்ஷன் 2016 ஜனவரி 5 முதல் 2016 ஜனவரி 20 வரை நடத்தப்பட்டது.[12] கிடைக்கக்கூடிய சமீபத்திய ஆதாரங்களின்படி முடிவுகள் பின்வருமாறு:

ஸ்வச் சர்வெக்சன்
தரவரிசை
நகரம் மாநில / ஒன்றிய பிரதேசம்
1 மைசூர் கர்நாடகா
2 சண்டிகர் சண்டிகர்
3 திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
4 புது தில்லி தில்லி
5 விசாகப்பட்டினம் ஆந்திரப் பிரதேசம்
6 சூரத் குசராத்து
7 ராஜ்கோட் குசராத்து
8 கேங்டாக் சிக்கிம்
9 பிம்ப்ரி-சின்ச்வாட் மகாராட்டிரம்
10 மும்பை மகாராட்டிரம்
11 புனே மகாராட்டிரம்
12 நவி மும்பை மகாராட்டிரம்
13 வதோதரா குஜராத்
14 அகமதாபாத் குஜராத்
15 இம்பால் மணிப்பூர்
16 பனாஜி கோவா
17 தானே மகாராட்டிரம்
18 கோவை தமிழ்நாடு
19 ஐதராபாத் தெலங்காணா
20 நாக்பூர் மகாராட்டிரம்
21 போபால் மத்தியப் பிரதேசம்
22 அலகாபாத் உத்தரப் பிரதேசம்
23 விஜயவாடா ஆந்திரப் பிரதேசம்
24 புவனேஸ்வர் ஒடிசா
25 இந்தூர் மத்தியப் பிரதேசம்
26 மதுரை தமிழ்நாடு
27 சிம்லா இமாச்சலப் பிரதேசம்
28 லக்னோ உத்தரப் பிரதேசம்
29 ஜெய்ப்பூர் ராஜஸ்தான்
30 குவாலியர் மத்தியப் பிரதேசம்
31 நாசிக் மகாராட்டிரம்
32 வாரங்கல் தெலங்காணா
33 அகர்தலா திரிபுரா
34 லூதியானா பஞ்சாப்
35 வசாய்-விரார் மகாராட்டிரம்
36 சென்னை தமிழ்நாடு
37 குருகிராம் அரியானா
38 பெங்களூர் கருநாடகம்
39 தெற்கு தில்லி மாநகராட்சி டெல்லி
40 திருவனந்தபுரம் கேரளம்
41 அய்சால் மிசோரம்
42 காந்திநகர் குஜராத்
43 தில்லி மாநகராட்சி டெல்லி
44 கோழிக்கோடு கேரளம்
45 கான்பூர் உத்தரப் பிரதேசம்
46 துர்க் சத்தீசுகர்
47 ஆக்ரா உத்தரப் பிரதேசம்
48 ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர்
49 அமிருதசரசு பஞ்சாப்
50 குவகாத்தி அசாம்
51 பரீதாபாது அரியானா
52 தில்லி கிழக்கு மாநகராட்சி டெல்லி
53 சில்லாங் மேகாலயா
54 ஹூப்ளி-தார்வாடு கருநாடகம்
55 கொச்சி கேரளம்
56 அவுரங்காபாத் மகாராட்டிரம்
57 சோத்பூர் ராஜஸ்தான்
58 கோட்டா ராஜஸ்தான்
59 கட்டக் ஒடிசா
60 கோகிமா நாகலாந்து
61 தேராதூன் உத்தராகண்டம்
62 ராஞ்சி சார்க்கண்டு
63 ஜபல்பூர் மத்தியப் பிரதேசம்
64 கல்யாண் - டோம்பிவிலி மகாராட்டிரம்
65 வாரணாசி உத்தரப் பிரதேசம்
66 ஜம்சேத்பூர் சார்க்கண்டு
67 காசியாபாத் உத்தரப் பிரதேசம்
68 ராய்ப்பூர் சத்தீசுகர்
69 மீரட் உத்தரப் பிரதேசம்
70 பட்னா பீகார்
71 இட்டாநகர் அருணாசலப் பிரதேசம்
72 ஆசான்சோல் மேற்கு வங்காளம்
73 தன்பாத் சார்க்கண்டு
Source: நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் [11][13]

2014–2015

தொகு
தரவரிசை நகரம் மாநில / பிரதேசம் மதிப்பீட்டு புள்ளிகள் (20 இல்)
1 மைசூர் கருநாடகம் 18.50
2 திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு 14.25
3 நவி மும்பை மகாராட்டிரம் 14.18
4 கொச்சி கேரளம் 14.07
5 ஹாசன் கருநாடகம் 13.58
6 மண்டியா கருநாடகம் 13.52
7 பெங்களூர் கருநாடகம் 13.27
8 திருவனந்தபுரம் கேரளம் 12.98
9 ஹலிசாஹர் மேற்கு வங்காளம் 12.75
10 கேங்டாக் சிக்கிம் 12.68
ஆதாரம்: நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் [14]

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) இந்தியாவின் கூற்றுப்படி, 2015ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகக் குறைவான மாசுபட்ட நகரங்களைப் பற்றிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் காற்றின் தரத்தின் அடிப்படையில் நகரங்கள் தரப்படுத்தப்பட்டுள்ளது. குறைவான மாசுபட்ட நகரங்களில் பத்தனம்திட்டா, மங்களூர், வயநாடு, ஹாசன், மற்றும் பாலக்காடு ஆகியவை அடங்கும். கீழேயுள்ள அட்டவணை காற்றில் படிந்துள்ள PM10 அடிப்படையில் நகரங்கள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.[15][16]

தரவரிசை நகரம் மாநில / பிரதேசம் PM10
1 பத்தனம்திட்டா கேரளா 23
2 மங்களூர் கர்நாடகா 31
3 வயநாடு கேரளா 33
4 ஹாசன் கர்நாடகா 36
5 பாலக்காடு கேரளா 36
ஆதாரம்: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) இந்தியா[15]
தரவரிசை நகரம் மாநில / பிரதேசம் மதிப்பீட்டு புள்ளிகள்
1 சண்டிகர் சண்டிகரின் யூனியன் பிரதேசம் 73.48
2 மைசூர் கர்நாடகா 70.65
3 சூரத்து குசராத்து 69.08
4 புது தில்லி டெல்லி 68.265
5 தில்லி கான்னாட். தில்லி 61.367
6 திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு 59.02
7 ஜம்சேத்பூர் சார்க்கண்டு 57.960
8 மங்களூர் கருநாடகம் 57.340
9 ராஜ்கோட் குசராத்து 56.118
10 கான்பூர் உத்தரப் பிரதேசம் 55.340
11 நவி மும்பை மகாராட்டிரம் 53.920
12 பெங்களூர் கருநாடகம் 53.637
13 சென்னை தமிழ்நாடு 53.630
14 ராவுர்கேலா ஒடிசா 53.400
15 மண்டியா கர்நாடகா 53.330
16 பிதாநகர் மேற்கு வங்காளம் 52.820
17 நொய்டா உத்தரப் பிரதேசம் 51.910
18 சில்லாங் மேகாலயா 51.550
19 அகமதாபாது குசராத்து 50.286
20 ஆலந்தூர் தமிழ்நாடு 50.240
21 அரித்துவார் உத்தராகண்டம் 49.850
22 பீதர் கருநாடகம் 49.820
23 அச்சல்பூர் மகாராட்டிரம் 49.666
24 விசயவாடா ஆந்திரப் பிரதேசம் 49.060
25 கொல்கத்தா மேற்கு வங்காளம் 48.965
ஆதாரம்: நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் [17]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Swachh Survekshan 2018 Report". Ministry of Urban Development. பார்க்கப்பட்ட நாள் 17 May 2018.
  2. "Tweet". Twitter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-20.
  3. "Swachh Survekshan 2020: Full rankings, check here to see if your city is on the list". India Today (in ஆங்கிலம்). August 20, 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-08-21.
  4. "Swachh Survekshan 2020". swachhsurvekshan2020.org. Archived from the original on 2020-09-29. பார்க்கப்பட்ட நாள் 2020-08-21.
  5. "Swachh Survekshan 2020: Indore is the cleanest city in India fourth time in a row". cnbctv18.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-21.
  6. "Swachh Survekshan 2020". swachhsurvekshan2020.org. Archived from the original on 2020-09-29. பார்க்கப்பட்ட நாள் 2020-08-21.
  7. "Swachh Survekshan 2020: Check out 10 dirtiest cities of the country". timesnownews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-21.
  8. "Swachh Survekshan 2020: Indore is the cleanest city in India fourth time in a row". cnbctv18.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-21.
  9. "Swachh Survekshan 2020". swachhsurvekshan2020.org. Archived from the original on 2020-09-29. பார்க்கப்பட்ட நாள் 2020-08-21.
  10. "State-wise assessment schedule - Swachh Sarvekshan 2017" (PDF). 10 Jan 2017. Archived from the original (PDF) on 28 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 11 May 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. 11.0 11.1 "Swachh Survekshan -2017 – ranks of 434 cities" (PDF). Archived from the original (PDF) on 2017-07-12. பார்க்கப்பட்ட நாள் 2021-06-04.
  12. "Govt to measure success of Swachh Bharat Mission, rank 434 cities on performance". 9 Jan 2016. பார்க்கப்பட்ட நாள் 16 Feb 2016.
  13. "Swachh Survekshan -2016 – ranks of 73 cities".
  14. [1].
  15. 15.0 15.1 "CPCB - National Ambient Air Quality Monitoring NAAQMS 2014-2015" (PDF).
  16. "TERI (India) 2015 - Air Pollution and Health" (PDF).
  17. Ministry of Urban Development: RANK OF CITIES ON SANITATION 2009–2010, Ministry of Urban Development, 10 May 2010.