2020 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்

(2020 ஐசிசி உலக இருபது20 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

2020 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம் (2020 ICC Men's T20 World Cup) என்பது 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும்.[1] இது 2020ஆம் ஆண்டு அக்டோபர் 18 தொடங்கி நவம்பர் 15 வரை நடைபெறவுள்ளது. இதன் இறுதிப்போட்டி மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெறவுள்ளது.

2020 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்
2020 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்.png
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்பன்னாட்டு இருபது20
நடத்துனர்(கள்)ஆத்திரேலியா ஆஸ்திரேலியா
2016
2022 →

அணிகளும் தகுதியும்தொகு

31 திசம்பர் 2018 நிலவரப்படி ஐசிசியின் இருபது20 தரவரிசையின் முதல் 9 அணிகள் மற்றும் தொடரின் நடத்துனரான ஆஸ்திரேலியா ஆகிய 10 அணிகளும் 2020 போட்டித் தொடருக்கு நேரடியாகத் தகுதிபெற்றன. அவற்றில் இலங்கை மற்றும் வங்காளதேசம் தவிர மற்ற 8 அணிகளும் சிறப்பு 12கள் சுற்றுக்குத் தகுதிபெற்றன. அந்த இரு அணிகளும், 2020 தகுதி-காண் போட்டிகள் மூலம் தகுதிபெற்ற 6 அணிகளும் சேர்ந்து குழுநிலைப் போட்டிகளில் மோதுகின்றன. அதிலிருந்து முதல் 4 அணிகள் சிறப்பு 12கள் சுற்றுக்கு முன்னேறும்.

தகுதி பெறும் விதம் நாள் நிகழ்விடம் மொத்த அணிகள் அணிகள்
நடைபெறும் நாடு 10 பிப்ரவரி 2015 1   ஆஸ்திரேலியா
ஐசிசி இருபது20 வாகை
(தரவரிசையின் முதல் 9 இடங்களில் உள்ள அணிகள்)
31 டிசம்பர் 2018 பல்வேறு 9   பாகிஸ்தான்
  இந்தியா
  இங்கிலாந்து
  தென்னாப்பிரிக்கா
  நியூசிலாந்து
  மேற்கிந்தியத் தீவுகள்
  ஆப்கானிஸ்தான்
  இலங்கை
  வங்காளதேசம்
2019 ஐசிசி உலக இருபது20

தகுதி-காண் போட்டிகள்

11 அக்டோபர்–

3 நவம்பர் 2019

  ஐக்கிய அரபு அமீரகம் 6   நெதர்லாந்து
  பப்புவா நியூ கினி
  அயர்லாந்து
  நமீபியா
  ஸ்காட்லாந்து
  ஓமான்
மொத்தம் 16

நிகழிடங்கள்தொகு

ஜனவரி 2018இல் பின்வரும் நிகழிடங்களை ஐசிசி அறிவித்தது:[2]

2020 ஐசிசி உலக இருபது20 நிகழிடங்கள்
அடிலெயிட் பிரிஸ்பேன் கீலோங் ஹோபார்ட்
அடிலெய்டு ஓவல் த காபா கர்தீனியா பூங்கா பெல்லரைவ் ஓவல்
கொள்ளளவு: 53,500 கொள்ளளவு: 42,000 கொள்ளளவு: 34,000 கொள்ளளவு: 20,000
       
போட்டிகள்: 6
(அரையிறுதி உட்பட)
போட்டிகள்: 4 போட்டிகள்: 6 போட்டிகள்: 8
மெல்பேர்ண் பேர்த் சிட்னி
மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம் பேர்த் அரங்கம் சிட்னி துடுப்பாட்ட அரங்கம்
கொள்ளளவு: 100,024 கொள்ளளவு: 60,000 கொள்ளளவு: 46,000
     
போட்டிகள்: 7
(இறுதி உட்பட)
போட்டிகள்: 6 போட்டிகள்: 7
(அரையிறுதி உட்பட)

மேற்கோள்கள்தொகு