முந்தைய உரையாடல்கள்: முதல் தொகுதி - இரண்டாம் தொகுதி - மூன்றாம் தொகுதி

மலையாளம்-தமிழ்

தொகு

క్లిటోరియా என்ற மலையாளச் சொல்லுக்குரிய தமிழ் ஒலிப்பு என்ன?--≈ உழவன் ( கூறுக ) 04:04, 21 சூன் 2014 (UTC)Reply

இது மலையாளமல்ல..தெலுங்கு :)--மணியன் ( பேச்சு) 04:17, 21 சூன் 2014 (UTC)Reply
நகைச்சுவையாக இருக்கிறது. :D -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:39, 21 சூன் 2014 (UTC)Reply
தமிழ்க்குரிசல் மன்னிக்கவும்..ஓர் ஆர்வத்தில் பிறமொழி விக்கிகளை ஒப்பு நோக்கினேன்-- క్లిటోరియా என்ற தெலுங்குச் சொல் க்ளிடோரியா என்ற ஒலிப்பையும் அதற்கு இணையான மலையாள பக்கம் ശംഖുപുഷ്പം சங்குபுஷ்பம் என்ற ஒலிப்பையும் கொண்டுள்ளது. வங்காளம், ஒரியா, இந்தியில் அபராஜிதா எனக் கொடுக்கப்பட்டுள்ளது. மராட்டியில் கோகர்ணி எனக் கொடுக்கப்பட்டுள்ளது. --மணியன் (பேச்சு) 06:20, 21 சூன் 2014 (UTC)Reply
ట என்ற எழுத்து ட என்று சொல்லப்பட்டாலும், அதன் சரியான ஒலிப்பு ”ட்ட” என்பதாகும். பட்டம் என்பதை ப”ట”ம் என்பதைப் போல் எழுதுவார்கள்.

வினோத்தின் அட்சரமுக கருவியை பாருங்கள். அது உங்களுக்கு உதவக் கூடும். www.virtualvinodh.com/aksharamukha -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:39, 21 சூன் 2014 (UTC)Reply

என்னால் ஒரு நகைச்சுவை. மகிழ்ச்சி! புஷ்பமா?புஷ்பி என்ற ஐயத்தில் கேட்டேன். நகலெடுத்து ஒட்டியதில் தவறு செய்தேன். எப்படியோ வேண்டியது கிடைத்தது?மிக்க நன்றி நண்பர்களே!!--≈ உழவன் ( கூறுக ) 06:58, 21 சூன் 2014 (UTC)Reply
நீங்கள் இருவரும் எதைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்பது புரியவில்லை -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:22, 21 சூன் 2014 (UTC)Reply
சங்குப்பூ கட்டுரையை விரிவாக்கிய போது, அது தொடர்பான சொற்கள் திராவிடமொழிகளில் எப்படி கையாளப்படுகிறது என்று ஒரு நோட்டம் விட்டேன். அப்பொழுது மேற்கூறிய மலையாளச் சொல்லைக் கண்டேன். நீங்கள் மலையாள விக்கியிலிருந்து, தமிழுக்கு கட்டுரைகளை கொணர்ந்தீர்கள் அல்லவா? அந்த வகையில் மலையாளச்சொல்லின் ஒலிப்பை உங்களிடம் கேட்டறியவே இப்பக்கம் வந்தேன். ஆனால், தவறுதலாக நகலெடுக்கும் போது, தெலுங்கு சொல்லை ஒட்டிவிட்டேன். எனினும், மணியன் உகந்த மலையாளச் சொல்லிற்கான விளக்கம் தந்தார். ஏதேனும் இடர் என்னால் ஏற்பட்டு இருப்பின். பொருத்தருள்க!. மீண்டும் பிரிதொரு உரையாடலில் சந்திப்போம்.வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 07:33, 21 சூன் 2014 (UTC)Reply
  விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:51, 21 சூன் 2014 (UTC)Reply

அந்தமான் மாவட்டங்கள்

தொகு

வணக்கம் தமிழ்க்குரிசில், district - மாவட்டம். tehsil-இதற்கும் மாவட்டம் என்று தந்திருக்கிறீர்களே, district இன் உட்பிரிவு tehsil என்பதால் இரண்டுக்கும் ஒரே பெயர் வராது என நினைக்கிறேன், (எனக்கும் அதற்கான சரியான தமிழ்ப் பெயர் தெரியாததால் மாற்ற முடியவில்லை) சரியான சொல்லைக் கண்டுபிடித்து, கட்டுரையில் மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 07:47, 21 சூன் 2014 (UTC)Reply

tehsil என்பது வட்டத்தைக் குறிக்கும். வட்டாட்சியரை தாசில்தார் என்கிறோமே! தவறுதலாக எழுதியிருந்தால் திருத்திவிடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:01, 21 சூன் 2014 (UTC)Reply

மற்ற அந்தமான் மாவட்டக் கட்டுரைகளில் நீங்கள் வட்டம் என்று தந்துள்ளதால் அவ்வாறு மாற்றியிருக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 08:03, 21 சூன் 2014 (UTC)Reply

விக்கி இணைப்புகள்

தொகு

வணக்கம், நீங்கள் எழுதும் புதிய கட்டுரைகளுக்கு விக்கி தரவில் இணைப்பு ஏதும் நீங்கள் கொடுப்பதில்லை. இதனை வேறு யாரும் தருவார்கள் என என நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு. இவற்ரைக் கவனிக்க இப்போது தானியங்கிகளும் இயங்குவதாகத் தெரியவில்லை. விக்கித் தரவில் இல்லாததால் வேறு ஒருவர் ஜவுன்புர் மாவட்டம் என்ற பெயரில் புதிய கட்டுரை எழுதுவதற்கே அதிக சாத்தியக் கூறுகள் உள்ளன. இது உதாரணம் மட்டுமே. எனவே நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளுக்கு உடனடியாகவே விக்கி தரவில் இணைப்புக் கொடுங்கள். உங்களதும் மற்றையவரினதும் உழைப்பு வீணாகக் கூடாது.--Kanags \உரையாடுக 12:31, 23 சூன் 2014 (UTC)Reply

முன்பொரு முறை கூறியதைப் போல், இணைய டேட்டா குறைவாகவே இருக்கிறது. எனவே, ஜாவஸ்கிரிப்டை அணைத்து வைத்துள்ளேன். ஜாவஸ்கிரிப்டை இயக்கினால் என்னுடைய பங்களிப்புகள் பாதியாக குறையும். ஒவ்வொரு நாள் முடிந்ததும் புதிய கட்டுரைகளைப் பார்த்து நீங்களே இணைத்துவிடலாமே! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:51, 23 சூன் 2014 (UTC)Reply
அப்படியா, எனக்கு வேறு என்ன வேலை என்கிறீர்கள்? அப்படித்தானே? ஏதோ நாட்டு நகரங்களை அறிமுகப்படுத்த எனக்கு என்ன தலைவிதியா? இவையும் ஒரு வகையில் துடுப்பாட்ட வீரர்களை ஒத்த கட்டுரைகள் தாம் என்பதை நான் சொல்லி வைக்க விரும்புகிறேன்.--Kanags \உரையாடுக 21:12, 23 சூன் 2014 (UTC)Reply
@தமிழ்க்குரிசில் ஒரு பயனர் ஒரு விசயத்தை எடுத்துரைக்கும்போது, அதனை கவனித்து நாம் நம்மை திருத்த முயற்சி செய்வோம். திருப்பி, அவரையே பணிப்பது முறையல்ல. இது தன்னார்வப் பணியே; நம்மால் இயன்றதை செய்வோம். பங்களிப்பு குறைந்தாலும், செய்வதை தரமாக செய்திடுவோம். உங்களின் சொந்தப் பிரச்சினை புரிகிறது. எனினும், விக்கிக்கு தரம் முக்கியம். ஒரு மருத்துவர் எத்தனை நோயாளிகளைப் பார்த்தார் என்பதைவிட எத்தனை பேரை குணப்படுத்தினார் என்பதுதானே முக்கியம்? இளவயதினர் தமது துடிப்பினை தரத்திலும் காட்டவேண்டும் என்பது எனது விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:33, 24 சூன் 2014 (UTC)Reply
நான் விக்கியை விட்டு போகப் போறேன். :P உதவி செய்யுங்கன்னு கேட்டா ரெண்டு பேரும் திட்டுறீங்க. :( கனகு, உங்களுக்கு வேலை இல்லைன்னு சொன்னேனா? எல்லாத்தையும் மேற்பார்வையிடுகிறீரேன்னு கூடுதலா பார்க்க சொன்னேன். பெரும்பாலான இணையதளங்களை கணினியில் மொபைல் பதிப்பில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பிற தளங்களை ஜாவாஸ்கிரிப்டை அணைத்து, படங்களை அணைத்து டேட்டாவை மிச்சப்படுத்தி சமாளித்துக் கொண்டிருக்கிறேன். மொபைல் கம்பெனிக்காரர்களும் இணைய டேட்டாவை மாதாமாதம் குறைத்து வருகிறார்கள். :( நீங்கள் தான் உதவ வேண்டும். ஏதாவது குறையிருக்கு என்று குறை சொல்வது நல்லதல்ல. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:03, 24 சூன் 2014 (UTC)Reply
மூன்று விசயங்கள்...(1) நான் திட்டவில்லை (2) //ஏதாவது குறையிருக்கு என்று குறை சொல்வது நல்லதல்ல// இதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை (3) ஆரம்ப காலங்களில் உங்களின் பேச்சுகளில் இருந்த நேர்த்தி, இப்போது இல்லாதது - எனக்கு வியப்பினைத் தருகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:35, 24 சூன் 2014 (UTC)Reply
நான் கடுமையான சொற்களைப் பயன்படுத்தவில்லையே!!! என்னுடைய இறுக்கமான மன நிலை என் கருத்துகளில் பிரதிபலிக்கலாம். :( உதவுங்கள் என்று தானே கேட்டிருந்தேன். அடுத்தவரை பணிக்கிறேன் என்கிறீரே! :( -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:48, 24 சூன் 2014 (UTC)Reply
இதுகுறித்து மேலும் பேசுவது, நம் இருவருக்கும் ஆற்றல் விரயம். இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:18, 25 சூன் 2014 (UTC)Reply

தமிழ்க்குரிசில், தங்களுக்குத் தேவைப்படும் எனில் மேம்பட்ட இணைய வசதியைப் பெறும் பொருட்டு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். தற்போது தங்களுக்கு இருக்கும் நெருக்கடிக்கு இடையிலும் விக்கிப்பீடியாவில் பங்களிப்புகளை நல்குவதற்கு நன்றி. நம்மில் பலரும் எழுதும் பல கட்டுரைகள் தனித்துவ ஆர்வப் புலங்கள் குறித்து இருப்பதால் மேலும் பல பயனர்கள் உடனடியாக கவனித்து மேம்படுத்துவதற்கான வாய்ப்பு குறைவே. எனவே, இப்போது இல்லாவிட்டாலும் தங்களுக்கு இயன்ற போது, தாங்கள் முன்பு எழுதிய கட்டுரைகளில் விடுபட்டுள்ள வழக்கமான விக்கிப்பணிகளைக் கவனித்துச் சீராக்கி விடுங்கள் (எ. கா. விக்கித்தரவு இணைப்பு தருதல் போன்றவை). சில வேளை நாம் உரிமையுடனும் நகைச்சுவையுடனும் சொல்லும் கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்படலாம். எனவே, முடிந்த வரை நேரடியாகவே விசயத்தைச் சொல்லிவிடுவது தொடர்பாடல் / புரிதல் சிக்கலைத் தவிர்க்கும். எ.கா. //ஒவ்வொரு நாள் முடிந்ததும் புதிய கட்டுரைகளைப் பார்த்து நீங்களே இணைத்துவிடலாமே! :)// என்று சொல்வதற்குப் பதில் "இத்தகைய தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளுக்குள் பங்களிப்பதால் இப்பணியை என்னால் உடனே மேற்கொள்ள முடியவில்லை. இயன்றவர்கள் உதவுங்கள்" என்பது போல் கூறியிருந்தால் எதிர்வினை வேறு மாதிரி இருந்திருக்கும்.

Kanags, தமிழ்க்குரிசில் தற்போது தான் படிப்பை முடித்து சில நெருக்கடிகளுக்கு இடையில் பங்களித்து வருகிறார். தன் நிலையையும் விளக்கி இருக்கிறார். அவர் :) குறி போட்டு சற்று உரிமையும் நகைச்சுவையும் கலந்து எழுதியிருப்பதாகவே புரிந்து கொண்டேன். உங்களையோ யாரையுமோ ஏவியதாகத் தோன்றவில்லை. அவரிடம் இந்த அளவு கடுமை தேவையா? நம்மில் பலரும் எழுதும் பல கட்டுரைகள் தனித்துவ ஆர்வப் புலங்கள் குறித்து இருப்பதால் மேலும் பல பயனர்கள் உடனடியாக கவனித்து மேம்படுத்துவதற்கான வாய்ப்பு குறைவே. எனவே, கட்டுரைகளைத் தொடங்குபவர்களே இயன்றளவு இயன்ற போது மேம்படுத்துவது நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை மட்டும் இன்னும் கனிவாக தெரிவித்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். நெடுநாள் பங்களிப்பவர்கள் இடையிலேயே இவ்வாறான உரையாடல்கள் நிகழ்வது தமிழ் விக்கிப்பீடியாவின் பொதுவான நலனுக்கு உகந்தது அல்ல. நன்றி. --இரவி (பேச்சு) 07:07, 25 சூன் 2014 (UTC)Reply

என்னுடைய பேச்சு, தமிழ்க்குரிசிலை மனவருத்தம் அடையச் செய்திருக்கும்; அதற்காக வருந்துகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:31, 25 சூன் 2014 (UTC)Reply

பழங்குடியினர்

தொகு
மலைப்பண்டாரம் என்ற கட்டுரையில் நான் கொடுத்த தலைப்பு நாளிதழில் பார்த்துத்தான் எடுத்தேன். அதை சரி செய்ததற்க்கு நன்றி.--Muthuppandy pandian (பேச்சு) 12:14, 27 சூன் 2014 (UTC)Reply
முத்துப்பாண்டி, ஏற்கனவே நானும் இதுபோன்ற சில கட்டுரைகளை எழுதியுள்ளேன். ”கேரளப் பழங்குடியினர்” என்ற வார்ப்புருவைப் பாருங்கள். அதில் இருப்பதே சரியான உச்சரிப்பு. :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:17, 27 சூன் 2014 (UTC)Reply

புதியன பகுதியில் உங்களின் பங்களிப்புகள் பெருமைப்படும்படி அமைந்துள்ளது. வாழ்த்துக்கள் உங்களின் சேவைக்கு. தொடரட்டும் பல லட்சம் கோடி பங்களிப்புக்ள்.--Muthuppandy pandian (பேச்சு) 06:51, 24 சூலை 2014 (UTC)Reply

  விருப்பம் மிக்க நன்றி, முத்துப்பாண்டி! உங்கள் வாழ்த்து எனக்கு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தருகின்றது. :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:05, 24 சூலை 2014 (UTC)Reply

பனஸ்கந்தா மாவட்டம்

தொகு

குஜராத்தி, மராத்தி, இந்தி மொழிக் கட்டுரைகளின்படி இம்மாவட்டத்தின் பெயர் ’பனாஸ்காண்டா’ என்றுள்ளது என நினைக்கிறேன். சரிபார்த்துச் சொல்லுங்கள். மாற்றிவிடவா?--Booradleyp1 (பேச்சு) 16:18, 28 சூன் 2014 (UTC)Reply

பெரும்பாலான கட்டுரைகளில் மூல மொழிப் பெயர்களைக் கொண்டே தலைப்பிடுகிறேன். சில மொழிகளில் சில எழுத்துகள் வேறுபடுவதுண்டு. அனைத்து மாவட்டங்களின் பெயர்களையும் நானே முழுக்க முழுக்க பார்த்து தானே எழுத்துப் பெயர்ப்பு செய்தேன். எப்படி தவறு நிகழ்ந்தது??. பனஸ்காண்டா என்று தான் உள்ளது. மாற்றிவிடுங்கள். :( -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:23, 28 சூன் 2014 (UTC)Reply

2013 கட்டுரைப் போட்டி பரிசு விவரம்

தொகு

வணக்கம், தமிழ்க்குரிசில். 2013 கட்டுரைப் போட்டிப் பரிசுகள், பரிசுத் தொகை விவரம் இங்கு உள்ளது. ஒரு முறை சரி பார்த்து விடுங்கள். உங்கள் பரிசுத் தொகை, சான்றிதழை அனுப்பி வைக்க பின்வரும் விவரங்கள் தேவை. இவற்றை ravidreams at gmail dot com என்ற முகவரிக்கு, ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து அனுப்பி வையுங்கள். இங்கு பொதுவில் பகிர வேண்டாம். தாங்கள் என்னுடன் பகிரும் தகவல் வேறு யாருடனும் எக்காரணம் கொண்டும் பகிரப்படாது என்று உறுதியளிக்கிறேன்.

  • உங்கள் வங்கிக் கணக்கு விவரம் (கணக்கில் உள்ள முழுப்பெயர், கணக்கு எண், கணக்கின் வகை (சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு போல), வங்கியின் பெயர், வங்கி முகவரி, IFSC குறியீட்டு எண்.

மேற்கண்ட விவரத்தைப் பகிர விரும்பவில்லை என்றால், பரிசுத் தொகை காசோலை மூலம் அனுப்பி வைக்க இயலும். அதற்கு

  • வங்கிக் கணக்கில் உள்ள உங்கள் முழுப்பெயர் விவரம் தேவை.
  • சான்றிதழ்கள் / காசோலை அனுப்பி வைக்க உங்கள் இல்ல முகவரி தேவை.

இவ்விவரங்கள் கிடைத்த உடன் மின்மடல் மூலம் மறுமொழி அளித்து உறுதிப்படுத்துகிறேன். பரிசுத் தொகையும் சான்றிதழும் சூலை மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும்.

நன்றி. --இரவி (பேச்சு) 19:21, 30 சூன் 2014 (UTC)Reply

பகுப்பு இணைத்தல்

தொகு

நீங்கள் தொடங்கும் மாவட்டங்கள் குறித்த கட்டுரைகளைத் தாய்ப் பகுப்பான ’இந்திய மாவட்டங்கள்’ என்ற பகுப்பில் பொதுவாக இணைக்காதீர்கள். இன்று காலைதான் இந்திய மாவட்டங்கள் பகுப்பில் உள்ள மாவட்டங்கள் கட்டுரைகளை உரிய பகுப்புகளுக்கு நகர்த்தினேன். இப்பொழுது மீண்டும் உங்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகள் அதற்குள் உள்ளன. அந்தந்த மாநில மாவட்டங்களின் பகுப்பில் நீங்களே இணைத்துவிட்டால் பகுப்பு இணைக்கும் வேலை இருமுறை செய்யவேண்டுயிருப்பதைத் தவிர்க்கலாம். இதில் உங்களுக்குச் சிரமம் இருக்காது என நினைக்கிறேன்.நன்றி. --Booradleyp1 (பேச்சு) 14:24, 1 சூலை 2014 (UTC)Reply

என்னால் முடிந்திருந்தால் செய்திருப்பேனே. பகுப்புகள் இணைக்க ஜாவாஸ்கிரிப்ட் தேவை. :( ஜாவாஸ்கிரிப்டை இயக்கினால் பல மடங்கு டேட்டாவை இழக்க நேரிடும். பக்கத்தை ஏற்றுவதற்கான நேரமும் அரை நிமிடம் வரை நீடிக்கும். எரிச்சலைத் தரும். எனவே, செய்ய இயலாது. பொறுத்திருங்கள். தங்களால் முடியுமெனில் செய்யுங்கள். இல்லாவிடில், நேரம் கிடைக்கும் போது நானே செய்கிறேன். விக்கிமீடியாவில் கோரிக்கை விடுத்து, பணம் பெற்றவுடன் செயலாற்றிவிடுகிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:59, 1 சூலை 2014 (UTC)Reply

தமிழ்க்குரிசில், நீங்கள் குறிப்பிடும் தொழில்நுட்பச் சிக்கல் எனக்குப் புரியாதென நினைக்கிறேன். நீங்கள் ஏற்கனவே ஒரு பகுப்பை இணைப்பதால்தான் அது சரியானதாக இருக்கட்டுமே என்று சொல்ல வந்தேன் வேறொன்றும் இல்லை. என் பார்வையில் படும் கட்டுரைகளில் மாற்றுவதில் எனக்கு ஒன்றும் சிக்கலில்லை, என்னால் முடிந்தவரை செய்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 15:31, 1 சூலை 2014 (UTC)Reply

பதக்கம்

தொகு
  களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
கடந்த சில நாட்களாக அண்மைய மாற்றங்களைக் குத்தகைக்கு எடுத்திருப்பதைப் பாராட்டி :) இரவி (பேச்சு) 13:07, 11 சூலை 2014 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

:D :P நன்றிண்ணே! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:15, 11 சூலை 2014 (UTC)Reply

  விருப்பம் --ஸ்ரீகர்சன் (பேச்சு) 02:01, 12 சூலை 2014 (UTC)Reply

  விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:38, 15 சூலை 2014 (UTC)Reply
  விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 08:01, 13 சூலை 2014 (UTC)Reply
  விக்கிப் புயல் பதக்கம்
உங்கள் பங்களிப்புகளின் வேகத்தையும் வீச்சினையும் கண்டு வியந்து இந்த பதக்கத்தை வழங்குகிறேன்.-- mohamed ijazz(பேச்சு) 08:10, 13 சூலை 2014 (UTC)Reply
  விருப்பம் நன்றி நண்பரே! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:17, 13 சூலை 2014 (UTC)Reply
  விருப்பம் முடியலடா சாமி:) இரண்டு நாட்களுக்குள் இன்னோர் பதக்கமா!!! தொடர்ந்து அசத்துங்கள் அண்ணா:) ஆனால் அண்மைக்காலங்களில் இவரையும் விடக் களைப்படையாமலும் புயல் போன்றும் இன்னோர் விடயம் செயற்படுகின்றது அதுதான் விக்கியன்பு! அதுக்கும் யாராவது பதக்கம் போட மாட்டீங்களா!!!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:08, 13 சூலை 2014 (UTC)Reply
:P மிக்க நன்றி தம்பி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:13, 13 சூலை 2014 (UTC)Reply
  விருப்பம் --மணியன் (பேச்சு) 17:13, 13 சூலை 2014 (UTC)Reply

பதக்கம்

தொகு
  விடாமுயற்சியாளர் பதக்கம்
களைப்படையாமல், கடினமாக உழைக்கும் தங்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக... இப்பதக்கம் வழங்கப்படுகிறது! -- mohamed ijazz(பேச்சு) 10:05, 14 சூலை 2014 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மிக்க நன்றி! (பதக்கம் வழங்கும் போதும் கூட சாம்பிள் கொடுத்துப் பார்க்கிறார்களே!!) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:13, 14 சூலை 2014 (UTC)Reply
  விருப்பம் நான் காண்பது கனவா நனவா?! 2+1=3 அசத்துங்கள் அண்ணா!!!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 03:03, 15 சூலை 2014 (UTC)Reply
  விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:38, 15 சூலை 2014 (UTC)Reply

உதவி (தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது)

தொகு

வணக்கம் தமிழ்க்குரிசில் :) ஆஷ்டன் குட்சர், ஷான் அஷ்மோரே, டாம் ஹிட்டலேச்டன் போன்ற கட்டுரைகளில் திரைப்படங்களை தமிழாக்கம் செய்து உதவுமாறு கேட்டு கொள்கின்றேன். Thilakshan (பேச்சு) 16:35, 14 சூலை 2014 (UTC)Reply

உங்கள் கவனத்திற்கு

தொகு

வார்ப்புரு:கோழிக்கோடு மாவட்டம்

  • கோழிக்கோடு, கொயிலாண்டி, வடகரா என மூன்று உட்பிரிவுகள் ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அவை கோழிக்கோடு மாவட்டத்தின் வட்டங்களா? அப்படியானால் அதனைக் குறிப்பிட்டால் வார்ப்புருவைப் பார்ப்பவர்களுக்கு எளிதாகப் புரியுமென நினைக்கிறேன்.
  • மாவூர், எலத்தூர் போன்ற சில ஊர்களின் உள்ளிணைப்பு தமிழ்நாட்டிலுள்ள ஊர்களுக்குச் செல்கிறது. இதனைக் கொஞ்சம் கவனிக்கவும்.--Booradleyp1 (பேச்சு) 16:50, 18 சூலை 2014 (UTC)Reply
கேரளத்தின் பலப் பல ஊர்ப் பெயர்கள், தமிழகத்து ஊர்ப் பெயர்களை ஒத்துள்ளன. நீங்கள் குறிப்பிட்டவற்றை சரி செய்தாலும், இன்னும் நிறைய வரவுள்ளன. இவற்றை disambiguation திருத்தக் கருவி மூலம் சரி செய்திடுவோம். சிக்கல் ஒன்றும் இல்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் ஒவ்வொரு மாவட்டத்தையும் சுழற்சி முறையில் விரிவாக்கி வருவதால் மாற்றிவிடலாம். :) வார்ப்புருவில் வட்டங்களை கீழும், ஊர்களை மேலும் தந்திருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் இவை தவிர, ஆறுகள், பிற நீர்ப்பரப்புகள், சுற்றுலாத் தலங்கள், கோயில்கள் என மேலும் இணைப்புகள் சேர்க்க வேண்டியுள்ளது. அதிகமான சிவப்பு உள்ளிணைப்புகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக சிறிது சிறிதாக செய்து வருகிறேன். நீங்கள் சொன்னதை கவனித்தில் கொண்டேன். இன்னும் நான்கைந்து நாட்களில் அனைத்து மாவட்டங்களைப் பற்றிய அடிப்படை கட்டுரைகளை முடித்துவிடலாம். பின்னர், வார்ப்புருக்களை விரிவாக்குவோம். போதிய கட்டுரைகள் இல்லாமையால், சில வேளைகளில், வட்டங்களைப் பற்றிய கட்டுரைகளை, அதே பெயர் கொண்ட நகராட்சியுடனும், ஊராட்சியுடனும் இணைப்பு தந்து குழப்பியிருக்கின்றனர். அதையும் இடத்திற்கேற்றாற்போல் மாற்றியமைக்க வேண்டும். அவ்வப்போது மேற்பார்வை இட்டுக் கொண்டே வாருங்கள். சில வேளைகளில், wikidataவில் இணைக்க மறந்துவிடுகிறேன். அதையும், கட்டுரைகளுக்கு ஏற்ப புது பகுப்புகளை உருவாக்கியும் உதவுங்கள். முதற்கட்டமாக கட்டுரைகளின் உருவாக்கம் முடிந்த பிறகு, தகவற்பெட்டிகளையும், அரசியல் என்ற பிரிவையும் சேர்ப்போம். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:43, 19 சூலை 2014 (UTC)Reply

உங்கள் கவனத்திற்கு -2

தொகு

பிறமொழித் தலைப்புகளைக் கொண்ட கட்டுரைகளில் முதற்பகுதி அறிமுகம் பின்வருமாறு கட்டாயம் இருக்க வேண்டும்: உதாரணம். //கிராக்கோவ் (Kraków) என்னும் நகரம் போலந்து நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும்.//. இங்கு ஆங்கிலப் பெயர் (அல்லது மூல மொழிப் பெயர்) கட்டாயம் தரப்பட வேண்டும். ஆங்கிலத்தில் தேடுபவர்கள் அதிகமாக இருக்கும். இதனால் ஆங்கிலச் சொல்லையும் தருவது நல்லது. இதே நடைமுறையை இந்திய மொழிக் கட்டுரைகளிலும் வேண்டும். கேரளத்தில் உள்ள ஓர் ஊரைப் பற்றி எழுதினால், தமிழ்ப் பெயர் (ஆங்கிலப் பெயர், மலையாளப் பெயர்) என்றவாறு தரப்படல் வேண்டும். இது அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களிலும் உள்ள நடைமுறை.--Kanags \உரையாடுக 13:05, 31 சூலை 2014 (UTC)Reply

வார்ப்புருவில் தந்திருக்கிறேனே! கேரள ஊர்களுக்கு வார்ப்புரு சேர்த்தவுடன் அந்த வார்ப்புருவில் தரலாம் என்றிருந்தேன். முதல் வரியிலேயே, பிற மொழிப் பெயர், ஆங்கிலப் பெயர், பிறந்த தேதி, இயற்பெயர், மற்ற பெயர்கள் போன்ற அனைத்தையும் தருவது படிப்பதற்கு இடையூறாக அமையும். அதை நாமும் பின்பற்றுவது சரியாகத் தோன்றவில்லை. எனவே, அவற்றை வார்ப்புருவில் இடுகிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:17, 31 சூலை 2014 (UTC)Reply
விக்கி நடை என்று ஒன்றுள்ளது. அதனைப் பின்பற்றுங்கள். ஒவ்வொருவரும் தமக்கு வசதிப்பட எழுத முடியாது.--Kanags \உரையாடுக 13:25, 31 சூலை 2014 (UTC)Reply
முதல் வரியிலேயே பாதி வரி தகவலாக இல்லாமல் நீங்கள் கூறியதைப் போல் இருப்பதோ, தமிழிலக்கணத்திற்கு பொருந்தாத எழுத்து நடையையோ, ஆங்கிலத்திற்கு ஏற்றார் போல் நீண்ட வரியோ விக்கி நடையாகாது என நினைக்கிறேன். இவை மூன்றுமே பொதுவாக பின்பற்றப்படுவதில்லை. நீங்கள் சொன்ன விக்கி நடைக்கான பேச்சு பக்க இணைப்பைத் தருக. அங்கு உரையாடுவோம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:35, 31 சூலை 2014 (UTC)Reply
கட்டுரையின் முதலாவது சொல் (கட்டுரைத் தலைப்பு) அது தடித்த எழுத்திலும் இருக்க வேண்டும் என்றாவது உங்களுக்குத் தெரியுமா? எப்படியிருப்பினும் உங்கள் விருப்பப்படி எழுதுங்கள். விக்கி குப்பையாகப் போனால் எனக்கென்ன வந்தது?--Kanags \உரையாடுக 21:04, 31 சூலை 2014 (UTC)Reply
நான் சொன்னதை நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை. மூல மொழிப் பெயர்களுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் அவற்றை வார்ப்புருவின் மேற்பகுதியில் தந்திருக்கிறேன். வார்ப்புரு இல்லாத கட்டுரைகளில் பின்னர் சேர்ப்பேன். முதல் வரியிலேயே பிற மொழிப் பெயர், ஆங்கிலப் பெயர், எழுத்துப்பெயர்ப்பு, ஒலி, ஐ.பி.ஏ எழுத்துமுறை, பிறப்பு, இறப்பு, பிற பெயர்கள் என அனைத்தையும் தருவதுதான் குப்பையாக இருக்கும். இவற்றை வார்ப்புருவில் இட்டுவிட்டால் பொருத்தமாகவும் அழகாகவும் இருக்கும். முதல் வரியிலேயே இடுவது படிப்பதற்கு இடையூறாக அமையும். மேலும், என் விருப்பப்படி யாருக்கும் ஆதரவாக எழுதும் பழக்கம் என்னிடத்தில் இல்லை. நான் மேற்கூறிய மூன்று விதிகளும் தமிழ் விக்கிப்பீடியாவை குப்பையாக்கி வருகின்றன. :( மூத்த நிர்வாகியான நீங்கள் அவற்றை கவனத்தில் கொண்டால் தரத்தை உயர்த்தலாம். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:01, 1 ஆகத்து 2014 (UTC)Reply

முதல் வரியிலேயே பிற மொழிப் பெயர், ஆங்கிலப் பெயர், எழுத்துப்பெயர்ப்பு, ஒலி, ஐ.பி.ஏ எழுத்துமுறை, பிறப்பு, இறப்பு, பிற பெயர்கள் என அனைத்தையும் தருவது பல விக்கிப்பீடியாக்களிலும் உள்ள நடைமுறை தான். அதனைத் தான் சிறீதரன் வலியுறுத்துகிறார். அதே வேளை, இவ்வாறு எழுதுவது படிப்பதற்கு இடையூறாக உள்ளது என்று தமிழ்க்குரிசில் கூறுவதும் உண்மை தான். எனவே, தனிப்பட இதனை உரையாடாமல், விக்கிப்பீடியா பேச்சு:நடைக் கையேடு பக்கத்தில் நடை மாற்ற வேண்டுகோளை முன்வைக்குமாறு தமிழ்க்குரிசிலை வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 05:42, 1 ஆகத்து 2014 (UTC)Reply

நான் மேற்கூறிய மூன்று விதிகளையும் கவனிக்குமாறு வேண்டுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:46, 1 ஆகத்து 2014 (UTC)Reply
சரி, நடைக் கையேட்டில் தொடர்ந்து உரையாடுவோம். அங்கு இணக்க முடிவு வரும் வரை, தற்போது உள்ள நடைமுறையையே பின்பற்ற வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 06:06, 1 ஆகத்து 2014 (UTC)Reply
சரி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:16, 1 ஆகத்து 2014 (UTC)Reply
கனகு, வருத்தமடைய வேண்டாம். முன்னர் இருந்த தவறுகளை திருத்திக் கொண்டே வந்திருக்கிறேன். சிலவற்றிற்கு காலம் எடுக்கலாம். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:28, 2 ஆகத்து 2014 (UTC)Reply

மாதம் 1000 தொகுப்புகள் மைல்கல்

தொகு

வணக்கம், தமிழ்க்குரிசில்/தொகுப்பு 04!

 

நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

--இரவி (பேச்சு) 07:58, 2 ஆகத்து 2014 (UTC)Reply

ஆச்சரியமா இருக்கு!!   விருப்பம் உதவித்தொகையின் பலன் போலிருக்கிறது! :D :P -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:29, 2 ஆகத்து 2014 (UTC)Reply
நல்லம், வாழ்த்துக்கள் --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:56, 2 ஆகத்து 2014 (UTC)Reply
  விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:14, 2 ஆகத்து 2014 (UTC)Reply

உதவி

தொகு

வணக்கம் :) தமிழ்க்குரிசில் கட்டுரையில் மேற்கோள்கள் சேர்ப்பது எப்படி? Thilakshan (பேச்சு) 23:01, 05 ஆகஸ்ட் 2014 (UTC)

எளிமையாக செய்யலாம்! எந்த வரிக்கு ஆதாரம் சேர்க்கிறீர்களோ, அங்கே <ref>[http://www.examplewebsite.com தளத்தின் தலைப்பு]</ref> என்று தந்துவிடுங்கள். இது ஒரு எடுத்துக்காட்டு தான். ”http://www.examplewebsite.com” என்பதற்கு மாற்றாக நீங்கள் தேடி எடுத்த இணையதளத்தை இடுங்கள். ஒரு இடைவெளிவிட்டு, அந்த இணையதளப் பக்கத்தின் தலைப்பை எழுதுங்கள். கட்டுரையின் இறுதியில் {{reflist}} என்று எழுதுங்கள். மேற்கோள் சேர்க்கப்பட்டு, கட்டுரையின் இறுதிப் பகுதியில் காட்டப்படும். இணையதளம் மட்டுமின்றி, புத்தகத்தையும் மேற்கோளாகக் காட்டலாம். எ.கா: <ref> திருக்குறள் - அறத்துப்பால் : குறள் 114</ref>  :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:34, 6 ஆகத்து 2014 (UTC)Reply

கவனிக்கவும்

தொகு

வணக்கம் தமிழ்க்குரிசில் ஐயா புதிய பயனர் ஒருவர் பயனர்:Zubair ,பயனர்:Mohamedtet ,பயனர்:Zubair11 மற்றும் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த 180.215.103.149 ,/116.202.172.165 /180.215.115.128 / 180.215.99.122 கணக்குகளை வைத்து விக்கியில் பங்களிப்பதை அவதானிக்க முடிகிறது இவர் என்ன செய்ய முனைகிறார் ??????  -- mohamed ijazz(பேச்சு) 11:47, 17 ஆகத்து 2014 (UTC)Reply

பயனர்களின் நடவடிக்கையை ஆய்ந்து பார்த்தேன். இருவரும் விசமத் தொகுப்புகள் செய்திருப்பதாகத் தெரியவில்லை. இருவரும் ஒரே கட்டுரைகளில் மாற்றங்களைச் செய்திருக்கின்றனர். கட்டுரைகளில் தவறான உள்ளடக்கம் இருந்தால் நீக்கிவிடுங்கள். ஒரே ஆள் இரு கணக்குகளை வைத்திருப்பதாக சந்தேகப்படுகிறீர்களா? விக்கிப்பீடியா:பயனர் மீது அவதூறு செய்வதை தடுத்தல் (வரைவு), விக்கிப்பீடியா:பயனர் தடை வேண்டுகோள்கள் ஆகிய பக்கங்களைப் பாருங்கள். மற்ற பயனர்களைக் கேட்டுப் பாருங்கள். எனக்கு ஐ.பி கணக்குகளை கண்காணித்து பழக்கமில்லை. அதைப் பற்றி தெரியாது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:11, 17 ஆகத்து 2014 (UTC)Reply
இப்போதைக்கு எதுவும் செய்வதற்கில்லை. தொடர்ந்து கண்காணிக்கலாம்.--Kanags \உரையாடுக 12:20, 17 ஆகத்து 2014 (UTC)Reply

திருநீர்

தொகு

//தேவையில்லாத வழிமாற்று: இருந்த உள்ளடக்கம்: '#வழிமாற்றுதிருநீறு' (தவிர, 'Dineshkumar Ponnusamy' மட்டுமே பங்..) // இப்பக்கத்தினைப் பார்க்கவும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:58, 18 ஆகத்து 2014 (UTC)Reply

ஓ! கவனியாது இருந்துவிட்டேன்!! இப்போது திருத்திவிடுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:07, 18 ஆகத்து 2014 (UTC)Reply
நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:41, 20 ஆகத்து 2014 (UTC)Reply

சான்று குறித்து

தொகு

//பொதுவான தகவல்களுக்கு சான்றுகள் தேவைப்படாது// விக்கிப்பீடியாவில் உள்ள பெரும்பான்மையான கட்டுரைகள் பொதுவான தகவலையே குறிக்கின்றன. அனைத்து விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கும் சான்றுகளும் ஆதாரங்களும் அவசியமானதாகும். எந்தவொரு கட்டுரையும் விதிவிலக்கல்ல. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:30, 3 செப்டம்பர் 2014 (UTC)

இல்லை, நான் குறிப்பிட்டது பொது அறிவை. பொதுவாக அறியக் கூடிய தகவல்களுக்கு சான்றுகளைக் கோருவது ஏற்கத்தக்கது அல்ல. கட்டுரையில் அடிப்படைத் தகவல்களே உள்ளன. கூடுதலாக ஏதாவது தகவல்களை வழங்கியிருந்தால் அதற்கு சான்று கோரலாம். ஐயம், எதிர்பார்ப்பு (உணர்ச்சி), வெறுப்பு ஆகிய கட்டுரைகளின் முதல் பத்திகளையும், உணர்ச்சி என்ற கட்டுரையும் காண்க. கட்டுரையில் உள்ள தகவலைப் பொருத்தே சான்று கோர முடியும். en:Common_knowledge என்ற பக்கத்தை நோக்குக. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:41, 3 செப்டம்பர் 2014 (UTC)
நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்துக் கட்டுரைகளிலும் சான்றுகள் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு சான்று கூட இல்லாமல் பல கட்டுரைகள் உள்ள காரணத்தால் பத்தி வாரியாக, வரிவரியாக சான்று கோறுவதில்லை. நிச்சயமாக ஒரு கட்டுரைக்கு ஒரு சான்றாவது தேவை; இதில் மாற்றுக்கருத்தே இல்லை. பொதுவாக அறியக் கூடிய தகவல் என்று எதுவும் இல்லை, அவ்வாறான கொள்கைகளும் விக்கிப்பீடியாவில் இல்லை. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:48, 3 செப்டம்பர் 2014 (UTC)
கட்டுரையில் தகவலைப் பொருத்தே சான்றைத் தர முடியும். ஒரு சான்று தரப்படுவதால் மீதமுள்ளவை சரியென்றாகிவிடாது. சான்று தரப்படவில்லை என்பதால் அது குறையுள்ளதாகிவிடாது. பொது அறிவு என்பது பொதுவாக ஒருவர் அறிந்திருக்கக் கூடியது தான். en:Wikipedia:Common_knowledge என்ற பக்கம் விக்கிப்பீடியாவின் விதியில் உள்ளது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:14, 3 செப்டம்பர் 2014 (UTC)

பதக்கம்

தொகு
  சிறப்புப் பதக்கம்
தங்களுக்குக் கிடைத்த உதவித் தொகையைப் பயன்படுத்தி மிகச் சிறப்பான பங்களிப்புகளை நல்கி வருவதைப் பாராட்டி இப்பதக்கத்தை அளித்து மகிழ்கிறேன். உங்கள் முன்மாதிரிப் பங்களிப்புகளைச் சுட்டி தேவையுள்ள இன்னும் பலருக்கும் இது போன்ற உதவித் தொகை திட்டம் சென்றடைய முனைகிறேன். நன்றி. இரவி (பேச்சு) 22:02, 6 செப்டம்பர் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம் நன்றி ரவி! மகிழ்ச்சியாக இருக்கிறது. :) உதவித் தொகைப் பெற வாக்களித்த அனைவருக்கும் நன்றிக் கடன் பட்டுள்ளேன். :) அனைவருக்கும் நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:08, 7 செப்டம்பர் 2014 (UTC)
  விருப்பம் -- mohamed ijazz(பேச்சு) 05:48, 7 செப்டம்பர் 2014 (UTC)
  விருப்பம்--Commons sibi (பேச்சு) 07:09, 7 செப்டம்பர் 2014 (UTC)
  விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 05:04, 8 செப்டம்பர் 2014 (UTC)
உழைப்பிற்கு பாராட்டுகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:08, 22 அக்டோபர் 2014 (UTC)Reply
CommonsSibi, ஸ்ரீகர்சன், சிவகுருநாதன் சார் ஆகியோருக்கு நன்றி! :P உதவிகரமாய் இருந்து வழிநடத்திச் செல்லுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:27, 22 அக்டோபர் 2014 (UTC)Reply

Monuments of Spain Challenge

தொகு

Hello and welcome to the contest. Two important things: the editing starts on October 1st and we wish you good luck and enjoy the event. B25es (பேச்சு) 14:41, 29 செப்டம்பர் 2014 (UTC)

  விருப்பம் Thanks for reminding. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:27, 29 செப்டம்பர் 2014 (UTC)

உங்களுக்குத் தெரியுமா? திட்டம்

தொகு


அடடே!   விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:12, 15 அக்டோபர் 2014 (UTC)Reply

குறுங்கட்டுரைகள்

தொகு

தமிழ்க்குரிசில், முனைப்பான பங்களிப்புகளை நல்கி வருவதற்கு நன்றி. புதிய கட்டுரைகளை உருவாக்கும் போது அவை குறைந்தது 2 kb அளவுக்கு மேலாவது இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இங்கு சட்டமன்ற உறுப்பினர் என்று வெற்றுப் பகுதி இருப்பது போல் இல்லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு உருவாக்கப்படும் பல கட்டுரைகள் உருவாக்கிய நிலையிலேயே தேங்கி விடுவதே வழமையாக உள்ளது. எனவே, முதல் முனைப்பிலேயே இயன்ற அளவு முழுமையான கட்டுரைகளை உருவாக்க வேண்டுகிறேன். அதே போல், ஒரே மாதிரியான தரவுகளை அடிப்படையாக கொண்ட கட்டுரைகள் என்றால் தானியக்கமாக உருவாக்க முடியுமா என்றும் பாருங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 06:59, 22 அக்டோபர் 2014 (UTC)Reply

தானியக்கமாக உருவாக்குவதில் சிக்கல் இருக்கிறது. மூன்று சுற்றுகளாக கட்டுரைகளை உருவாக்கி வருகிறேன். மக்களவைத் தொகுதி, சட்டமன்றத் தொகுதி, மாவட்டம்/மண்டலம், தொகுதி உறுப்பினர்கள் என்ற வரிசையில் போகிறது. முதல் சுற்றில், இவற்றை பற்றிய கட்டுரைகளை உருவாக்குவேன். இரண்டாம் சுற்றில் இற்றைப்படுத்தலும், கூடுதல் தகவல் இருந்தால் அவற்றையும் சேர்ப்பேன். மூன்றாவது சுற்றில் பிழை திருத்தமும், வார்ப்புரு போன்ற கூடுதல் பெட்டிகளும் இட்டு, ஒழுங்கமைவும் செய்வேன். முன்னைப் போலன்றி, இத்தகைய கட்டுரைகளுக்கு அரசு ஆவணங்கள் கிடைக்கின்றன. அவற்றை சான்றாக்கிவிடலாம். அதனால் கட்டுரைகள் தேங்க வாய்ப்பில்லை. மூன்று ஆவணங்களை மாற்றி மாற்றி பார்த்து, கட்டுரையை எழுதுவது கடினமாய் இருக்கிறது. மூல ஒலியை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. எனவே தான் மூன்று சுற்றுகளாக எழுதுகிறேன். எங்கும் ஓடிவிட மாட்டேன். :D இவற்றை முழுமையாக்குவதற்கு உறுதியளிக்கிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:20, 22 அக்டோபர் 2014 (UTC)Reply
தமிழ்க்குரிசில், கேரள, ஆந்துர சட்டமன்ற உறுப்பினர்கள் பற்றிய கட்டுரைகளுக்கும், துடுப்பாளர்கள் பற்றிய கட்டுரைகளுக்கும் இடையில் பெரிய வேறுபாடுகளை நான் காணவில்லை. உங்கள் ஒரு சில கட்டுரைகளை நான் திருத்தியிருக்கிறேன். ஆனாலும், நீங்கள் அவற்றை எதையும் கணக்கில் எடுப்பதாகத் தெரியவில்லை, மாறாக ஏராளமான கட்டுரைகளை தொடர்ந்து உருவாக்கி வருகிறீர்கள்.--Kanags \உரையாடுக 11:42, 27 அக்டோபர் 2014 (UTC)Reply
நீங்கள் செய்த திருத்தங்கள் எதையும் நான் பார்த்திருக்கவில்லை. :( சட்டமன்ற உறுப்பினர்களை பற்றிய கட்டுரைகளுக்கான தகவல் அரசு தளத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அது அடிப்படையானது. அதைத் தவிர, மூல மொழிக் கட்டுரைகளும், நாளேடுகளும் உள்ளன. கேரளத்துக்கு மலையாளத்திலும், ஆந்திரத்துக்கு தெலுங்கிலும் கட்டுரைகள் உள்ளன. மேலும், அந்தந்த பகுதிகளில் இயங்கும் ஆங்கில நாளேடுகளும் உதவிகரமாக இருக்கும். இது தொடக்கம் தான். கவலை வேண்டாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:47, 27 அக்டோபர் 2014 (UTC)Reply
வணக்கம் தமிழ்க்குரிசில் . எனக்கு அரசியல் மிகவும் பிடிக்கும் . தங்களுடைய "சுற்றுகளுக்கு" பங்கம் வராமல் என்னால் உதவ முடியும் என்றால் கூறுங்கள் , உதவ காத்துக் கொண்டிருக்கிறேன் . --Commons sibi (பேச்சு) 12:26, 27 அக்டோபர் 2014 (UTC)Reply
சிபி: ஆகா, அருமையான யோசனை! உங்களைத் தான் தேடிக்கொண்டிருந்தேன். :P இந்திய அரசியல்வாதிகள், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களவைத் தொகுதிகள், சட்டமன்றத் தொகுதிகள் ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்தலாம். இவற்றில் உங்களுக்கு பிடித்த கட்டுரைகளை எழுதியோ, திருத்தியோ உதவுங்கள். :) நீங்கள் விரும்பினால் ஏதாவது ஒரு சுற்றில் கலந்துகொள்ளுங்களேன். விரைந்து முடிப்போம். :) தற்போதைக்கு, வார்ப்புரு:ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள், வார்ப்புரு:ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள் ஆகியவற்றில் இருந்தும் தொடங்கலாம். சித்தூர் மக்களவைத் தொகுதி, சித்தூர் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றை முன்மாதிரியாக கொள்ளலாம். :) வேறு ஏதேனும் திட்டம் இருந்தாலும் சொல்லுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:35, 27 அக்டோபர் 2014 (UTC)Reply
நான் வேலையை செய்யத் துவங்குகிறேன் . பிழை இருப்பின் சுட்டிக்காட்டவும் :)   விருப்பம்--Commons sibi (பேச்சு) 07:06, 28 அக்டோபர் 2014 (UTC)Reply
வேலையைத் தொடங்குவதாக ஒப்புக்கொண்ட பின்னர் என்னால் துவங்க இயலவில்லை :( டிசம்பர் 15 வரை விக்கி விடுப்பில் உள்ளேன் . அதன் பின்னர் துவங்குகிறேன் . தாமதத்திற்க்கு மண்ணிக்கவும் :( --Commons sibi (பேச்சு) 04:06, 27 நவம்பர் 2014 (UTC)Reply

பெண்ணியம் தொடர்பான வலைவாசல்

தொகு

வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி .--Commons sibi (பேச்சு) 08:44, 27 அக்டோபர் 2014 (UTC)Reply

Thank you

தொகு
 

Thanks a lot for your participation! B25es (பேச்சு) 19:12, 17 நவம்பர் 2014 (UTC)Reply

பதக்கம்

தொகு
  சிறப்புப் பதக்கம்
அரசியல் சார் கட்டுரைகளில் உங்கள் சீரான உழைப்பைப் பாராட்டி இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். இரவி (பேச்சு) 05:56, 22 நவம்பர் 2014 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம் --மணியன் (பேச்சு) 08:03, 22 நவம்பர் 2014 (UTC)Reply
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 08:05, 22 நவம்பர் 2014 (UTC)Reply
வாழ்த்திய உள்ளங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உறுதுணையாக இருந்து வழிநடத்துக. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:23, 22 நவம்பர் 2014 (UTC)Reply
  விருப்பம் -- mohamed ijazz(பேச்சு) 05:30, 24 நவம்பர் 2014 (UTC)Reply

தானியங்கிக் கட்டுரைகள்

தொகு

தானியங்கியாக நீங்கள் உருவாக்கியிருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகள் பற்றிய கட்டுரைகளை விரைவில் மேம்படுத்துவீர்கள் என நம்புகிறேன்.--Kanags \உரையாடுக 20:01, 26 நவம்பர் 2014 (UTC)Reply

இது தொடர்பில் செலினியம் வழியாக என்றால் என்ன ?--மணியன் (பேச்சு) 03:09, 27 நவம்பர் 2014 (UTC)Reply
கனகு, ஏற்கனவே வாக்களித்திருந்தபடி, மேம்படுத்துவேன். இரண்டு/மூன்று நாட்களுக்குள் முடித்துவிடுவேன். மணியன், செலினியம் என்பது உலாவியை தன்னியக்கம் செய்யக் கூடியது. ஜாவாவில்(பிற நிரல் மொழிகளிலும்) நிரல் எழுதி, செலினியத்தை இயக்கினால், (எந்த ஒரு) உலாவியை(யும்) தானே திறந்து, வலைப்பக்கங்களில் புகுபதிந்து, உரையை எழுதி, பக்கத்தை சமர்பித்துவிடும்!! :D auto form filling என்று கூறலாம். இதைக் கொண்டு வலைப்பக்கங்களில் உள்ள வெவ்வேறு elementகளை(links, buttons, etc.,) அழுத்தவும், textbox/textarea உள்ளிட்ட பகுதிகளில் உரையை உள்ளிடவும் முடியும். இதைக் கொண்டு, விக்கிப்பீடியாவில் உள்ள பெரும்பாலான வேலைகளைச் செய்ய முடியும். captcha போன்றவை இருக்கும் பக்கங்களில் ஏதும் செய்ய முடியாது. உங்களுக்கு என்னால் ஏதும் ஆகுமெனில் செய்வேன்.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:11, 27 நவம்பர் 2014 (UTC)Reply

தமிழ்குரிசில், உலாவியை தன்னியக்கம் செய்யக் கூடியது என்ற செலினியத்திற்கு இன்னும் கட்டுரை எழுதப்படவில்லை. தற்போது உள்ள செலீனியம் கட்டுரை வேதியியல் தனிமம் பற்றி கூறுவது. --குறும்பன் (பேச்சு) 16:50, 27 நவம்பர் 2014 (UTC)Reply

பகுப்பு

தொகு

ஒரே கட்டுரையில் துணைப்பகுப்பு இருந்தால் அதன் தாய்ப் பகுப்பை இணைக்கத்தேவையில்லை தானே, அல்லது ........................ கூறவும். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:26, 18 திசம்பர் 2014 (UTC) Reply

மிகவும் அவசியமில்லாவிடில் தேவையில்லை. ஆனாலும், ஒவ்வொன்றையும் தனித்தனியாக அணுகி முடிவெடுப்பதே நல்லது.--Kanags \உரையாடுக 07:32, 18 திசம்பர் 2014 (UTC)Reply
ஆம் ஆதவன். தாய்ப்பகுப்பும் சேய்ப்பகுப்பும் ஒரே கட்டுரையில் தேவையில்லை. ஆனால், சிலவற்றில் தேவைப்படும். எடு: இந்திய அரசு என்ற கட்டுரையில் இந்தியா என்ற பகுப்பும், அதன் துணைப் பகுப்பான இந்திய அரசு என்ற பகுப்பும் இருக்க வேண்டும். ஏனென்றால், இந்திய அரசு என்ற கட்டுரை, இந்தியா என்ற பகுப்புக்கு முக்கியமான கட்டுரை. அதைப் போல, சம்பல்பூர் மாவட்டம் என்ற கட்டுரை, ஒடிசாவின் மாவட்டங்கள் என்ற பகுப்பிலும் இருக்க வேண்டும், சம்பல்பூர் மாவட்டம் என்ற பகுப்பிலும் இருக்க வேண்டும். இது navigationக்கு உதவியாக இருக்கும். சம்பல்பூர் மாவட்டத்தைப் பற்றிய, முதன்மை அல்லாத பிற கட்டுரைகள் சம்பல்பூர் மாவட்ட பகுப்பில் மட்டும் இருக்க வேண்டும். சம்பல்பூர் மாவட்டம் என்பது முதன்மைக் கட்டுரை என்பதால், அதன் தாய்ப்பகுப்பிலும் சேர்க்கப்படுவது நலம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:33, 18 திசம்பர் 2014 (UTC)Reply

  விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 05:39, 22 திசம்பர் 2014 (UTC)Reply

சிகரம்:பிலிப்பீன்சு

தொகு
சிகரம் என்ற ஒரு புதிய திட்டத்தினூடாக பிலிப்பீன்சு கட்டுரையை முழுமையாக விரிவாக்கியுள்ளேன். இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக்க முன்மொழிவதற்காகச் சில உதவிகளை உங்களிடத்தில் நாடி நிற்கின்றேன். உங்களுக்கு நேரமிருப்பின் பிலிப்பீன்சு கட்டுரையைச் சரிபார்த்து பிழைகள் இருப்பின் திருத்தி உதவுங்கள். மேலதிக தகவல்களுக்கு திட்டத்தின் பக்கத்தைப் பாருங்கள்.

--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:11, 28 திசம்பர் 2014 (UTC)Reply

விக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

தொகு
 
அனைவரும் வருக

வணக்கம் தமிழ்க்குரிசில்/தொகுப்பு 04!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 04:17, 30 திசம்பர் 2014 (UTC)Reply
வணக்கம் தமிழ்க்குரிசில், வழமை போலவே இம்மாதம் உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். இம்மாதமும் தொடர்ந்தும் மேலும் பல முனைப்பான பங்களிப்பாளர்களை உருவாக்குவது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை இங்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:50, 16 சனவரி 2015 (UTC)Reply

பதக்கம்

தொகு

சிறப்புப் பதக்கம்

தொகு
  சிறப்புப் பதக்கம்
தமிழ்க்குரிசில் அண்ணா அவர்களே!, தாங்கள் இவ்வரிய திட்டத்தில் தங்கள் பங்களிப்பைச் செலுத்தும் முகமாக 100 தொகுப்புக்களை மேற்கொண்ட பயனர்களுள் ஒருவராகத் திகழ்வது எமக்கு மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் பங்களிப்பைக் கௌரவிக்கும் முகமாக இப்பதக்கைத்தை தங்களுக்கு அளிக்கின்றோம், தங்கள் சீரிய சிறப்பான தொகுப்புக்கள் மேலும் தொடர எம் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்! என்றென்றும் அன்புடன் தமிழ் விக்கிப்பீடியர்கள்!...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:11, 1 சனவரி 2015 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம் நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:39, 1 சனவரி 2015 (UTC)Reply

கேரள நீர்நிலைகள்

தொகு

வறண்டு கிடக்கும் கேரள நீர்நிலைகளைக் கொஞ்சம் கவனியுங்கள் :)--இரவி (பேச்சு) 06:33, 16 சனவரி 2015 (UTC)Reply

இந்த நான்கு நாட்களில் பல கட்டுரைகளை எழுதி விரிவாக்கலாம் என்று இருந்தேன். கணினியில் ஏற்பட்ட கோளாறால் இரண்டு நாட்கள் வீணாகிவிட்டன. :( இப்போது ஓரளவுக்கு சரியாகி உள்ளது. நாளை காலையில் திறக்கும் போதும் சரியாக இயங்குமெனில், கட்டாயம் எழுதுவேன் அண்ணே! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:45, 16 சனவரி 2015 (UTC)Reply

தானியங்கிக் குறுங்கட்டுரைகள்

தொகு

தமிழ்க்குரிசில், நீங்கள் பல குறுங்கட்டுரைகளை உருவாக்கி வருகிறீர்கள், குறிப்பாக சட்டமன்றத் தொகுதிகள் பற்றிய கட்டுரைகள். முன்னர் எழுதிய நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எதுவுமே மேம்படுத்தப்படாமல் உள்ளன. அவற்றுக்கும் மேலாக மேலும் மேலும் போதிய தகவல்கள் இல்லாமல் புதிய கட்டுரைகளை (தானியங்கி மூலமாகவோ தெரியவில்லை) ஏராளமாக உருவாக்கி வருகிறீர்கள். அருள் கூர்ந்து பழைய கட்டுரைகளை மேம்படுத்திய பின்னர் புதிய கட்டுரைகளை ஆரம்பியுங்கள். இல்லையேல் பழைய கட்டுரைகள் அழிக்கப்படும் ஆபத்து உள்ளது.--Kanags \உரையாடுக 08:33, 29 சனவரி 2015 (UTC)Reply

பழைய கட்டுரைகளை இற்றைப்படுத்திவிட்டேன். (கவனிக்கவில்லையா?) புதியவற்றையும் ஓரிரு நாட்களில் முடித்திடுவேன். இவை 2000 பைட்டுகளை தொடுகின்றன.

தொடர்புடைய கட்டுரைகளாக எழுதினால் தான் எளிதில் முடிக்க முடியும். தொடர்பும் அதிகரிக்கும். இவை வளரும் தன்மையுடையன. சில தொகுதிகளை தவிர்த்து பெரும்பாலானவை நீடிக்கக் கூடியவை. அடுத்த தேர்தல் முடிவுகளையும் சேர்க்க முடியும்! இவற்றைக் கொண்டு நாடு முழுவதுக்குமான புவியியல் கட்டுரைகளுக்களில் அரசியல் பிரிவை சேர்க்க முடியும். :-) இவற்றுக்கான அடிப்படை ஆவணங்களைக் கொண்டே இற்றைப்படுத்துகிறேன். கவலை வேண்டாம். இத்தகைய புதிய கட்டுரைகளை கவனித்தே வருகிறேன். எதுவும் விடுபடாது. -தமிழ்க்குரிசில்.

ஒரு எடுத்துக்காட்டு மட்டும்: [1].--Kanags \உரையாடுக 20:13, 29 சனவரி 2015 (UTC)Reply
கிட்டவுர் சட்டமன்றத் தொகுதி என்ற கட்டுரையை தகுந்த ஆங்கில விக்கிக் கட்டுரைக்கு இணைக்கப் பார்க்கிறேன். ஐந்து நிமிடங்களுக்கு மேல் செலவழித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. (எனக்குத் தேவை தானா?) இதன் ஆங்கிலப் பெயரைத் தருகிறீர்களா? கட்டுரை ஆரம்பமே இந்த சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]இது மேரட் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது என்றவாறு எழுதப்பட்டுள்ளது. இது விக்கி நடைமுறைக்கு ஒவ்வாதது. தானியங்கி கொண்டு எழுதினாலும், ஓரளவாவது மனித உழைப்பும் தேவை.--Kanags \உரையாடுக 11:38, 8 பெப்ரவரி 2015 (UTC)
ஆங்கிலக் கட்டுரை இருக்கும் பட்சத்தில் நானே இணைத்திருப்பேன். பெரும்பாலானவற்றிற்கு ஆங்கில இணைப்புகள் இல்லை. ஆங்கிலத்திலோ, மூல மொழியிலோ கட்டுரை இருக்கும் பட்சத்தில் இணைத்திருப்பேன். கட்டுரைகளை திருத்திக் கொண்டிருக்கிறேன். கூடுதல் விவரங்கள் வார்ப்புருவை இணைக்கும் பொழுது சேர்க்கப்படும்.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:47, 8 பெப்ரவரி 2015 (UTC)
தமிழ்க்குரிசில், நீங்கள் பல்வேறு தகவல் ஆதாரங்களில் இருந்து மனித உழைப்பைச் செலுத்தி தொகுத்தே இக்கட்டுரைகளை எழுதுகிறீர்கள் என்று அறிவேன். எனினும், விக்கிப்பீடியா:தரவுத்தள கட்டுரைகள் பாருங்கள். அங்குள்ள வழிகாட்டல்களைப் பின்பற்ற முடியுமா பாருங்கள். எடுத்துக்காட்டுக்கு, ஒரு மாதிரிக் கட்டுரையை உருவாக்கி பயனர்களின் கருத்தைக் கோருங்கள். அக்கருத்துகளின் அடிப்படையில் உங்கள் பணியைத் தொடருங்கள். கட்டுரையின் தொடக்கத்தில் தலைப்பு கட்டாயம் இடம் பெற வேண்டும். "இந்த சட்டமன்றத் தொகுதி" என்பது போல் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். ஆங்கில விக்கி, பிற விக்கி இணைப்புகள் இல்லாவிட்டாலும், கட்டுரையின் தொடக்கத்தில் ஆங்கில எழுத்துகளிலும் மூல மொழி எழுத்துகளிலும் ஊரின் பெயரைத் தாருங்கள். இது சிறீதனைப் போன்ற மற்ற ஆர்வலர்கள் கட்டுரையை மேம்படுத்த உதவும். நன்றி.--இரவி (பேச்சு) 13:50, 8 பெப்ரவரி 2015 (UTC)

சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு:பிலிப்பீன்சு

தொகு

சிகரம் திட்டத்தினூடாக விரிவாக்கப்பட்ட பிலிப்பீன்சு கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக நியமிப்பதற்கு இப்பக்கத்தில் முன்மொழிந்துள்ளேன். உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவியுங்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 12:02, 5 பெப்ரவரி 2015 (UTC)

உதவி

தொகு

பேச்சு:சீல்டா தொடருந்து நிலையம்‎, பேச்சு:ரத்லம், பேச்சு:ஜெலும் எக்ஸ்பிரஸ்-இப்பக்கங்களில் உங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:44, 16 பெப்ரவரி 2015 (UTC)

unable to contribute for a period of over a month, due to hardware problem in laptop. Typing this from my new phone. Tried typing in tamil. Cant type faster. Sorry.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:51, 22 பெப்ரவரி 2015 (UTC)
அம்மையாரே, ஐ யம் பேக்!! ;) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:38, 27 மே 2015 (UTC)Reply

Translating the interface in your language, we need your help

தொகு
Hello தமிழ்க்குரிசில், thanks for working on this wiki in your language. We updated the list of priority translations and I write you to let you know. The language used by this wiki (or by you in your preferences) needs about 100 translations or less in the priority list. You're almost done!
 
எல்லா விக்கிகளுக்கும் மொழிபெயர்ப்புகளைச் சேர்க்க அல்லது மாற்ற, மீடியாவிக்கி உள்ளூராக்கல் திட்டமான translatewiki.net ஐப் பயன்படுத்துக.

Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:07, 26 ஏப்ரல் 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு

தொகு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:33, 7 மே 2015 (UTC)Reply

முதற்பக்க அறிமுகம்

தொகு

வணக்கம் தமிழ்க்குரிசில். அடுத்த இரு வாரங்களுக்கு உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். எப்போதும் போல் தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 07:56, 24 மே 2015 (UTC)Reply

கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக இயங்காது இருந்த கணினியை நேற்று தான் சரிசெய்து கொண்டு வந்தேன். அதே போலவே, அலுவலகத்திலும் சேர்ந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் கணினியை ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள் :) இப்படித் தான் நடக்கும் என்று முன்பே யூகித்திருந்தேன். :P மூன்றாவது மாம்பழமாகவே கிடைத்துள்ளது. நன்றிண்ணே! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:37, 27 மே 2015 (UTC)Reply
வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:37, 27 மே 2015 (UTC)Reply
  விருப்பம் நன்றி சிவகுரு! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:34, 28 மே 2015 (UTC)Reply

நான் ஏதோ பெரிய பட்ஜெட் சினிமாவின் நாயகன் பாத்திர சுவரொட்டின்னு நினைச்சுட்டேன்பா. வாழ்த்துக்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:59, 3 சூன் 2015 (UTC)Reply

  நன்றி தென்காசியாரே! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:15, 4 சூன் 2015 (UTC)Reply
வாழ்த்துக்கள் தமிழ்க்குரிசில்! கி. கார்த்திகேயன் (பேச்சு) 07:07, 4 சூன் 2015 (UTC)Reply
நன்றி கார்த்தி! :)   -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:15, 4 சூன் 2015 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

தொகு
 
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:43, 7 சூலை 2015 (UTC)Reply

தொடருந்து பற்றிய கட்டுரைகள்

தொகு

தொடருந்து வழித்தடத்தைக் குறிப்பிடும்போது AM, PM என்பவற்றை மு. ப., பி. ப. என மாற்றி விடுங்கள் (எடுத்துக்காட்டு: 13.00 PM-பி. ப. 13.00 1.00 PM-பி. ப. 1.00 ). --மதனாகரன் (பேச்சு) 08:23, 18 சூலை 2015 (UTC)Reply

சரி! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:25, 18 சூலை 2015 (UTC)Reply

உளங்கனிந்த நன்றி!

தொகு
 

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:59, 25 சூலை 2015 (UTC)Reply

கருத்துக் கோரல் - த.இ.க ஊடாக த.வி வளர்ச்சி வாய்ப்புக்கள்

தொகு

தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான வாய்ப்புக்கள், செயற்திட்டங்கள் பற்றி உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்

--Natkeeran (பேச்சு) 15:12, 28 சூலை 2015 (UTC)Reply

கிராமங்கள் பகுப்பு

தொகு

கிராமங்களுக்குப் பதிலாக பகுப்பு:குஜராத் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் பகுப்பைப் பயன்படுத்துங்கள்.--Kanags \உரையாடுக 07:14, 30 சூலை 2015 (UTC)Reply

ஊர்களும் நகரங்களும் என்ற பகுப்பு cities and towns என்பதற்கானது. ஊர் என்பது பேரூர் என்றவாறு மாற்றப்பட வேண்டியிருக்கும். கிராமங்களுக்கு villages என்றவாறான தனிப்பகுப்பு இருப்பதே சரி என்று தோன்றுகிறது!! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:18, 30 சூலை 2015 (UTC)Reply
கிராமம் (தமிழ்ச் சொல் அல்ல) என்பது ஊர், city, town - நகரம். குசராத்து பற்றி ஏராளமான குறுங்கட்டுரைகள் உருவாக்கப் போகிறீர்கள் போல் தெரிகிறது. எனவே, புதிய பகுப்புகள் உருவாக்க முன்னர் ஆலமரத்தடியிலோ அல்லது வேறெங்காலுமோ உரையாடிவிட்டு உருவாக்குங்கள்.--Kanags \உரையாடுக 07:31, 30 சூலை 2015 (UTC)Reply
  விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 10:28, 30 சூலை 2015 (UTC)Reply
பகுப்பு பேச்சு:இந்திய ஊர்களும் நகரங்களும் காண்க -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:02, 30 சூலை 2015 (UTC)Reply

இந்திராநகர்

தொகு

பெங்களூருவில் உள்ள இந்திராநகர் இடைவெளி இல்லாதது, பிற நகரத்தில் உள்ள இந்திரா நகர்களுக்கு இடைவெளி வரும். மீண்டும் அதனுடைய மூலப்பக்கத்திற்கு நகர்த்த வேண்டுகிறேன். ஆங்கில விக்கியிலும் அவ்வாறே உள்ளது, கவனிக்க. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:03, 16 ஆகத்து 2015 (UTC)Reply

கன்னட விக்கியில் இடைவெளிவிட்டே எழுதியிருந்தனர். தமிழிலும் இடைவெளிவிட்டு எழுதும் பழக்கமுள்ளதால் அவ்வாறு நகர்த்த வேண்டியிருந்தது. எ.கா: தியாகராய நகர், அஷோக் நகர், அண்ணா நகர், பாரதி நகர் என்பன போல. சரியானதெனில் மாற்றிவிடுங்கள். (இந்திராநகரில் இடைவெளி இல்லையா? :D மக்கள் எப்படி குடியிருக்கிறார்கள்! :P ) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:08, 16 ஆகத்து 2015 (UTC)Reply
இடைவெளி இல்லாத்ததால், நெருக்கடியில் தான் பெங்களூரு நகரம் முழுவதும் இருக்கிறது.   அரசுமுறைப் பெயரில் இடைவெளி இல்லை, அதனால் இடைவெளி வேண்டாம் என்றே எண்ணுகிறேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:17, 16 ஆகத்து 2015 (UTC)Reply
சரி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:03, 16 ஆகத்து 2015 (UTC)Reply

ஈராயிரவர் பதக்கம்

தொகு
 

தமிழ் விக்கியில் 2000 கட்டுரைகள் எழுதியதற்காக எனது பாராட்டுக்கள். --AntanO 19:13, 20 செப்டம்பர் 2015 (UTC)

நன்றி! மகிழ்ச்சியாக இருக்கிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:53, 26 செப்டம்பர் 2015 (UTC)

மூவாயிரவர் பதக்கம்

தொகு
 

தமிழ் விக்கிப்பீடியாவில் மூன்று ஆயிரம் கட்டுரைகளைப் உருவாக்கியதற்காக இந்த சிறப்புச் சான்று. வாழ்த்துக்கள்! மிகவிரைவில் 4000 ஐ எட்டிவிடுவீர்கள்!! --AntanO 19:13, 20 செப்டம்பர் 2015 (UTC)

வாழ்த்துகள் தமிழ்க்குரிசல் ! எண்ணிக்கையை எட்டி விட்டீர்கள் ! எண்ணியதையும் முடித்து விடுங்கள் !!--மணியன் (பேச்சு) 08:11, 21 செப்டம்பர் 2015 (UTC)
வாழ்த்துகள் அண்ணா!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:38, 21 செப்டம்பர் 2015 (UTC)
  விருப்பம் வாழ்த்துகள் அண்ணா:)--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:45, 21 செப்டம்பர் 2015 (UTC)
தமிழ்க்குரிசிலின் பணி தொடர வாழ்த்துகள். --மதனாகரன் (பேச்சு) 12:11, 21 செப்டம்பர் 2015 (UTC)
அப்டித்தான் அடிச்சு நொருக்குங்க தல.. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:11, 21 செப்டம்பர் 2015 (UTC)
  விருப்பம்--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 13:13, 21 செப்டம்பர் 2015 (UTC)
அனைவருக்கும் நன்றி! சிறப்பான தருணமாக உணர்கிறேன் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:55, 26 செப்டம்பர் 2015 (UTC)

விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் ஒருங்கிணைப்பாளராக உதவ வேண்டுகிறேன்

தொகு

விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் ஒருங்கிணைப்பாளராக இணைந்து உதவ வேண்டுகிறேன். திட்டத்துக்கு ஏற்ற தலைப்புகளை இனங்காணல், அவற்றில் பங்களிக்குமாறு ஆர்வமுள்ள பங்களிப்பாளர்களைத் தூண்டுதல், விதிகளுக்கு ஏற்ப கட்டுரைகள் வடிக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்காணித்து முடிவுகளை அறிவித்தல் ஆகிய பணிகளில் உதவி தேவை. நன்றி.--இரவி (பேச்சு) 08:56, 25 அக்டோபர் 2015 (UTC)Reply

நான் பங்களிப்பாளராகவே இருந்துவிடுகிறேனே! எனக்கு அஞ்சலட்டையின் மீது தான் ஆசை!! :P -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:54, 25 அக்டோபர் 2015 (UTC)Reply
ஒருங்கிணைப்பாளர்களும் போட்டியில் கலந்து கொண்டு அஞ்சல் அட்டை, விக்கிபீடியா ஆசியத் தூதர் பட்டம் வெல்லலாம். ஆனால், ஒருங்கிணைப்புக்கு உதவி தேவை. ஒரு கை கொடுங்கள் !--இரவி (பேச்சு) 13:06, 25 அக்டோபர் 2015 (UTC)Reply
ஹையா! இது நல்லாருக்கே! :) என்ன செய்யணும்னு சொல்லுங்கண்ணே! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:40, 25 அக்டோபர் 2015 (UTC)Reply

ஆசிய மாதம், 2015

தொகு
 

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
  • இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.


குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்றி

ஆசிய மாதம் - முதல் வாரம்

தொகு
 

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.

  • இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
  • (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
  • இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.

கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.

கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.

{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.

நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)Reply

ஐயம்...

தொகு

ஊராட்சிகள் குறித்த கட்டுரைகளில் 'தலைப்பு மாற்றத்திற்கு' வேண்டுகோள் வைத்து வருகிறீர்கள். காரணம் அறியலாமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:05, 14 நவம்பர் 2015 (UTC)Reply

பெயர்களில் எழுத்துப்பிழையோ, பெயர்ப்பிழையோ இருந்தால் அவ்வாறு இட்டிருப்பேன். சில எடுத்துக்காட்டுகள்: ayanrajapatti என்பது அயன்றஜபட்டி என்று உள்ளது. அயன்ராஜபட்டி என்பதே சரியான பெயராக இருக்கக்கூடும். naicken என்ற பெயர் நாயக்கன் என்றே வர வேண்டும். நைக்கன் என்று எழுதப்பட்டிருக்கிறது. pedda என்ற தெலுங்கு சொல் பெத்த என்ற வர வேண்டும். பெடா என்று இருக்கிறது. ஆங்கிலப் பெயர்களை அப்படியே தமிழாக்கி இருப்பதால்(!) l வருமிடங்களில் ழகரத்துக்கு மாற்றாக லகரம் வந்திருக்கிறது. தொண்டாமநல்லூர் என்பது தொண்ட(டை)மாநல்லூர் என்ற வரவேண்டும். திருநள்ளூர் திருநாளூர் என்றுள்ளது. துறை துரை என்றும், குறிச்சி குருச்சி என்றும் உள்ளது. சங்கரபாண்டியபுரம் சங்கரபன்டியாபுரம் என்றுள்ளது. நானே மாற்றியிருப்பேன். மற்றவர்களிடம் உறுதி செய்துகொள்ளவே வார்ப்புருவை இட்டுள்ளேன். :) தவறிருந்தாலோ, ஐயமிருந்தாலோ பேச்சுப் பக்கத்தில் குறீப்பிடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:16, 14 நவம்பர் 2015 (UTC)Reply
பேச்சுப்பக்கத்தில் தலைப்பு மாற்ற கருத்து இல்லாவிட்டால், தலைப்பு மாற்றக் கோரிக்கையை நீக்கிவிடலாம். எனவே கட்டாயம் பேச்சுப்பகக்த்தில் தெரிவிக்கவும். அல்லது நிச்சயமான பிழைகளை சரியான தலைப்புக்கு வழிமாற்றின்றி நகர்த்திவிடுங்கள். நீச்சல்காரன் பேச்சுப்பக்கத்தில் l > ழகர > லகர வேறுபாட்டைத் தெரிவியுங்கள். --AntanO 14:54, 14 நவம்பர் 2015 (UTC)Reply
ண,ன, ர,ற, ல,ள,ழ வகை பிழைகள் உள்ளவற்றை நகர்த்திவிடுகிறேன். மற்றவற்றிற்கு பேச்சுப் பக்கத்தில் கருத்தை இடுகிறேன். கண்காணித்து வருக. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:12, 14 நவம்பர் 2015 (UTC)Reply
இளயநல்லூர் ஊராட்சி என்பதை இளையநல்லூர் ஊராட்சி என்று மாற்றுவதற்கு பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்காமலும், வார்ப்புரு கோரிக்கை இடாமலும் மாற்றலாம் என்பது என் கருத்து. ஏன் வேலையை அதிகமாக்க வேண்டும். நீச்சல்காரன் கருத்தை அறிவது நல்லது. --AntanO 15:27, 14 நவம்பர் 2015 (UTC)Reply
தற்காலிகமாக இந்த செயல்பாட்டை நிறுத்துகிறேன். (நினைவுக் குறிப்பை வைத்துள்ளேன்) நீச்சலண்ணன் கருத்தை தெரிவித்ததும் தொடர்கிறேன்.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:35, 14 நவம்பர் 2015 (UTC)Reply
  விருப்பம்--AntanO 15:45, 14 நவம்பர் 2015 (UTC)Reply

@ நீச்சல்காரன்... தமிழ்க்குரிசலின் கருத்தினைக் கவனிக்கவும்! (மன்னிக்கவும், உங்களுக்கு அழுத்தம் தருவதாக நினைக்க வேண்டாம்; மேலும் எனக்கும் இவற்றைக் கவனிக்க இப்போது நேரம் இல்லை) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:03, 14 நவம்பர் 2015 (UTC)Reply

தானியங்கி மூலமாகவே திருத்த இயலுமா? அல்லது நாம் திருத்த வேண்டுமா? எனும் ஐயப்பாட்டின் காரணமாகவும் நீச்சல்காரனின் பார்வைக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:25, 14 நவம்பர் 2015 (UTC)Reply

தலைப்பை மாற்றுவதற்கு, அல்லது கட்டுரைகளில் திருத்தம் செய்வதற்கு தானியங்கியை நாட வேண்டிய அவசியமில்லை. யாரும் மாற்றலாம். மாற்றும் போது அந்தந்த ஊராட்சிகளின் வார்ப்புருக்களிலும் மாற்றம் செய்ய வேண்டும். ஆனாலும், வெறும் ஊகத்தின் அடிப்படையில் தலைப்பைத் தெரிவு செய்ய வேண்டாம். சில ஊர்ப்பெயர்கள், மூலப் பெயரில் இருந்து ஆங்கிலத்துக்குச் சென்று, தமிழுக்குத் திரிபடைந்து வந்து அதுவே புழக்கத்தில் உள்ளன என்பதையும் கவனிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு வெளியிட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இப்பெயர்கள் திரட்டப்பட்டுள்ளன. அவர்கள் பட்டியல்களை ஆங்கிலத்திலா தந்திருக்கிறார்கள்?--Kanags \உரையாடுக 21:21, 14 நவம்பர் 2015 (UTC)Reply
கசிநாயக்கன்பட்டி என்றும் புழக்கத்தில் உள்ளது அதை காசிநாயக்கன்பட்டி என்று மாற்றுவது பொருந்துமா எனத் தெரியவில்லை. நிச்சயமாகத் தெரிந்தால் மட்டும் பெயரை மாற்றுவதே சிறந்தது. அரசுத்தகவல்கள் அப்படியே கட்டுரையாக்கப்பட்டுள்ளன. அதனால் பெயர் மாற்றும் செய்வது எதிர்கால இற்றைப்படுத்தலுக்கு இடராகும். அதே வேளையில் அரசுத் தரவிலும் பிழைகள் உள்ளதை ஏற்கிறேன். அதற்காக அரசுத்துறையினரிடம் மீண்டும் பெயர்களைச் சரிபார்க்கச் சொல்லிக் கேட்டுள்ளேன். முழுத்தானியக்கமும் நிறைவுபெறும்வரை இடைப்பட்ட காலத்தில் பெயர்மாற்றம் செய்வதைத் தவிர்த்து, பிழைகளை இங்கே சுட்டிக்காட்டலாம். -நீச்சல்காரன் (பேச்சு)
எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்ப்பெயர்களில் சில தவறாகவே உள்ளன. சில கட்டுரைகளில் தலைப்பு (ஊராட்சி) ஒரு மாதிரியும், அதே பெயர் கட்டுரையின் உள்ளில் (ஊராட்சிக்கு உட்பட்ட ஊர்) ஒரு மாதிரியாகவும் உள்ளது. எல்லாவற்றையும் குறித்து நீங்கள் கூறிய பக்கத்தில் இடுகிறேன். ஆவன செய்க. மற்றோரும் கவனத்தில் கொள்க. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:18, 15 நவம்பர் 2015 (UTC)Reply

மிகப் பொறுமையாக இப்பணியை மேற்கொண்டு வருவதற்கு நன்றி. தொடர்ந்து பதிந்து வரும் பிழைகளைத் தனிப்பக்கத்தில் மேற்கொள்ள வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 10:15, 16 நவம்பர் 2015 (UTC)Reply

ஆசிய மாதம் - இறுதி வாரம்

தொகு
 

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
  2. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  3. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  4. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)Reply

Request

தொகு

Greetings.

Could you create in Tamil Wikipedia, the article en:Baku Zoo?

Thank you.

Menikure Talk 19:26, 9 December 2015‎‎ (UTC)

Hi Menikure, User:~AntanO4task has created the article. See here பக்கூ விலங்குக் காட்சிச்சாலை -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:35, 10 திசம்பர் 2015 (UTC)Reply
Thank you very much for your contribution.
Menikure Talk 00:33, 16 December 2015‎‎ (UTC)

Thanks for creating the நாகா நடனம் article in Tamil Wikipedia

தொகு

Hi, thanks much for creating the quick article about the Naga dance (w:or:ନାଗା ନାଟ) in your language, really appreciate that. I would personally like to thank you by creating an article in my home wiki i.e. Odia Wikipedia related to Tamil culture. Could you suggest me an article that already exists on English Wikipedia as I cannot read Tamil unfortunately and Google Translate does a horrible job in translating Indian languages into English and vice versa. --Psubhashish (பேச்சு) 11:37, 20 திசம்பர் 2015 (UTC)Reply

Ok :) en:Jallikattu, en:Silambattam, en:Karakattam. Please give me the link of Article requests page in Odia wiki. I have lot more to request!! :P Thanks in Advance. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:41, 20 திசம்பர் 2015 (UTC)Reply

ஐயம்...

தொகு

வண்க்கம் தோழர். திரிப்புரா ---- வில் 'ப்' வராது அல்லவா?--கி.மூர்த்தி 16:51, 21 திசம்பர் 2015 (UTC)

தோழரே, திரிபுரா, திரிப்புரா என இருவேறு மாதிரி எழுதுவோரும் உண்டே. சொல்லின் இடையில், குறிப்பாக மெல்லின எழுத்துகளை ஒட்டி, வல்லினம்(பகரம்) வந்தால் மென்மையான (ba) ஒலியை பெறும். எ.கா: பச்சை, பசை ; எபோலா, எப்போது; அலகு, அலக்கு; திரிபு, திரிப்பு. எனவே, இது சரியென்றே எண்ணுகிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:59, 21 திசம்பர் 2015 (UTC)Reply

திரிபுரா வார்ப்புரு

தொகு

திரிபுரா வார்ப்புருவில் நான் செய்துள்ள மாற்றத்தைக் கவனியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 19:59, 23 திசம்பர் 2015 (UTC)Reply

இது தெரியாமல் மண்டையை பிய்த்துக் கொண்டிருந்தேன். :D நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:34, 24 திசம்பர் 2015 (UTC)Reply

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்

தொகு
  விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:07, 25 திசம்பர் 2015 (UTC)Reply

கருவி

தொகு

தாங்கள் தொகுத்தல் சுருக்கம் உதவியான் கருவியை பயன்படுத்தலாமே. தினமும் பத்து கட்டுரைகளுக்கு மேல் உருவாக்குகிறீர்கள். திரும்பத் திரும்ப 'துவக்கம்' என்று தொகுத்தல் சுருக்கம் என டைப் செய்வதற்கு பதிலாக சுலபமாக துவக்கம், உரை திருத்தம் போன்றவற்றை இணைக்க உதவியாக இருக்கும்.-- மாதவன்  ( பேச்சு  ) 08:06, 26 திசம்பர் 2015 (UTC)Reply

ஆமாம், முன்பெல்லாம் பிரவுசரே காட்டும். ஓரிரு எழுத்துகளை அடித்ததும், மீதியை அதுவே எடுத்துக் கொள்ளும். செட்டிங்கில் எதையோ மாற்றிவிட்டேன் போலும். நீங்கள் சொன்ன கருவியை பயன்படுத்திப்பார்க்கிறேன். நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:21, 26 திசம்பர் 2015 (UTC)Reply

உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்

தொகு


ஆசிய மாதம் - நிறைவு

தொகு
 

வணக்கம்!

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியதால், உங்கள் பெயரினை இந்த மதிப்பீட்டுப் படிவத்தை நிரப்புவதன் மூலம் உள்ளீடு செய்யுங்கள்.

குறிப்பு: படிவம் ஆங்கிலத்தில் உள்ளது. உதவி தேவையெனின் என் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி! --AntanO 09:27, 13 சனவரி 2016 (UTC)Reply

நிரப்பியுள்ளேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:21, 13 சனவரி 2016 (UTC)Reply

நாலாயிரவர் பதக்கம்

தொகு
 
நாலாயிரவர் பதக்கம்
தமிழ்க்குரிசில், தமிழ் விக்கியில் 4,000 கட்டுரைகளுக்கு மேல் உருவாக்கி விட்டீர்கள். விக்கியில் 4,000 கட்டுரைகள் உருவாக்கிய இரண்டாவது விக்கிப்பீடியர் தாங்களே. தமிழ் விக்கிப்பீடியர் சார்பில் இப்பதக்கத்தினை அளிப்பதில் மிக்க மகிழ்ச்சி. மேலும் உங்களின் சிறந்த பங்களிப்பினை எதிர்பார்க்கிறேன். இந்த வேகத்தில் தொடர்ந்தால் இந்த வருடமே அடுத்த இலக்கை எட்டிவிடலாம். வாழ்த்துக்கள் தமிழ்க்குரிசில் :)!!!.-- மாதவன்  ( பேச்சு ) 14:29, 7 பெப்ரவரி 2016 (UTC)
நன்றி மாதவன்! இவற்றில் கிட்டத்தட்ட 1/10 பங்கு கட்டுரைகள் தானியக்க முறையில் ஏற்றப்பட்டவை. தவிரவும், சொற்களை மட்டும் கணக்கிட்டால் 5000 பைட்டுகளுக்கு அதிகமாக ஒரு 500 கட்டுரைகள் தான் எழுதியிருப்பேன். ஏனையவற்றை மேம்படுத்தினால் தான், உங்கள் பதக்கத்தை பெற்ற திருப்தி ஏற்படும். ஊக்கப்படுத்தியதற்கு நன்றி! :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:34, 7 பெப்ரவரி 2016 (UTC)
வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:30, 14 பெப்ரவரி 2016 (UTC)
நன்றி சிவகுரு அவர்களே -தமிழ்க்குரிசில் (பேச்சு) 20:36, 16 சூலை 2018 (UTC)Reply

உதவி

தொகு

காக்கிநாடா வருவாய்க் கோட்டம் கட்டுரையில் படம் வரவில்லை உதவி தேவை --கி.மூர்த்தி 15:44, 13 பெப்ரவரி 2016 (UTC)

உங்களுக்கு மின்னஞ்சல் கிடைத்துள்ளது!

தொகு
 
வணக்கம். உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது - உங்கள் மின்னஞ்சல் கணக்கைப் பார்க்கவும்!
Message added 07:50, 5 மார்ச் 2016 (UTC). நீங்கள் இந்த அறிவிப்பை {{மின்னஞ்சல்}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்!



 மாதவன்  ( பேச்சு ) 07:50, 5 மார்ச் 2016 (UTC)

Address Collection Notice

தொகு

Hi there, thank you for contributing to Wikipedia Asian Month in November 2015. You are qualified to receive (a) postcard(s) but we did not hear your back in past two months, or it could be an error on Google's server or a mistake. If you still willing to receive one, please use this new surveyto submit your mailing address. The deadline will be March 20th.

--AddisWang (talk) 14:40, 9 March 2016 (UTC)

நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு

தொகு

தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.--இரவி (பேச்சு) 13:04, 27 மார்ச் 2016 (UTC)

விக்கிக்கோப்பை

தொகு

விக்கிக்கோப்பையில் பங்குபற்றியமைக்கு மிக்க நன்றிகள். புள்ளிகளை கணக்கிடுவதற்காக நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை பயனர் நிலவரம் என்பதில் சேர்த்துவிட வேண்டுகிறோம் ஏற்கனவே சேர்ந்திருந்தால் இவ்வறிவிப்பை கவனிக்கத்தேவையில்லை.-- மாதவன்  ( பேச்சு ) 07:15, 3 ஏப்ரல் 2016 (UTC)

உதவி

தொகு

Char Maijdia என்ற ஊரின் பெயரை எவ்வாறு மொழியாக்கம் செய்யலாம்?--கி.மூர்த்தி 12:17, 16 ஏப்ரல் 2016 (UTC)

பயனர்:கி.மூர்த்தி, চর মাইজদিয়া - சர் மாய்ஜ்தியா என்பதே சரியான பெயர் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:23, 17 ஏப்ரல் 2016 (UTC)
தோழர் , என்னுடைய கட்டுரைகளில் நான் வடமொழி எழுத்துகளைத் தவிர்த்து எழுதிவருகிறேன். ஆகவே சர் மாய்ஜ்தியா எனக்கு உடன்பாடு இல்லை.--கி.மூர்த்தி 14:09, 18 ஏப்ரல் 2016 (UTC)
அப்படியெனில் அதற்கு இணையான தமிழ் எழுத்துக்களில் எழுதலாமே. சர் மாய்தியா என்றவாறு எழுதலாம். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 02:38, 26 ஏப்ரல் 2016 (UTC)

Participate in the Ibero-American Culture Challenge!

தொகு

Hi!

Iberocoop has launched a translating contest to improve the content in other Wikipedia related to Ibero-American Culture.

We would love to have you on board :)

Please find the contest here: https://en.wikipedia.org/wiki/Wikipedia:Translating_Ibero_-_America/Participants_2016

Hugs!--Anna Torres (WMAR) (பேச்சு) 13:55, 10 மே 2016 (UTC)Reply

Participate in the Ibero-American Culture Challenge!

தொகு

Hi!

Iberocoop has launched a translating contest to improve the content in other Wikipedia related to Ibero-American Culture.

We would love to have you on board :)

Please find the contest here: https://en.wikipedia.org/wiki/Wikipedia:Translating_Ibero_-_America/Participants_2016

Hugs!--Anna Torres (WMAR) (பேச்சு) 13:55, 10 மே 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்

தொகு
 
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக   எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை   கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற   மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற   பாலாஜீ,   மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை 2016

தொகு

விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)Reply

பகுப்புகள்

தொகு

தமிழ் விக்கியில் பகுப்புகளுக்கு வழிமாற்றுகள் வைத்திருப்பதில்லை.--Kanags \உரையாடுக 02:37, 23 சூலை 2016 (UTC)Reply

சரி.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 02:39, 23 சூலை 2016 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

தொகு
 

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:51, 26 சூலை 2016 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

தொகு
 

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்

தொகு
 
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக   எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை   கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற   மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற   மாதவன்,   உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)Reply

வார்ப்புரு மேம்பாடு உதவி

தொகு

2016 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பக்கத்தில் உள்ள வார்ப்புரு:Infobox Olympics India என்னால் சரியாகத் தமிழ்படுத்த இயலவில்லை. அடுக்கடுக்கான வார்ப்புருக்களும் moduleகளும் பயன்படுத்தப்படுள்ளதால் எனக்குச் சிக்கலாக உள்ளது. நீங்கள் இதனைச் சரிபார்க்க இயலுமா ? வங்காள மொழியில் செய்துள்ளதையும் காண்க. --மணியன் (பேச்சு) 19:23, 15 ஆகத்து 2016 (UTC)Reply

மணியன், முயற்சி செய்கிறேன் ஐயா! Country IOC alias DMA போன்ற வார்ப்புருக்கள் தேவை தானா என்று எண்ணியிருந்தேன். கட்டுரைகளில் நாடுகளின் பட்டியலை இட எளிமையாய் இருக்கும் போலிருக்கு. அவற்றை உருவாக்குவதற்கு ஆலோசனை வழங்குக. இதை என்னால் சரிசெய்ய முடியுமா என்று பார்க்கிறேன். பல வார்ப்புருக்களில் வரியமைப்பு ஆங்கில முறையிலேயே இருப்பதால், அதை தமிழில் எழுதுவதில் சிக்கல் இருக்கிறது. வார்ப்புருவில் திருத்தம் செய்ய நேரிடலாம். வார்ப்புரு நிரலாக்கத்தைப் பற்றிய அடிப்படை பயிற்சிப் பட்டறையை நடத்தினால் பல வார்ப்புருக்களை எளிதில் சீரமைக்கலாம். ரவி, வார்ப்புரு நிரலாக்கத்தைப் பற்றிய அடிப்படை பயிற்சிப் பட்டறை நடத்துவது பற்றி ஆலோசியுங்களேன். என்னைப் போன்றோருக்கு பயனளிக்கும். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:38, 16 ஆகத்து 2016 (UTC)Reply
நன்றி தமிழ்க்குரிசல். பயனர் அசுவின் தற்போது தீர்வை வழங்கியுள்ளார். நீங்கள் குறிப்பிடுவது போல வார்ப்புரு நிரலாக்கம் குறித்த அடிப்படை பயிற்சித் தேவை. தற்போது விக்கிமீடியா நிரல் லுவா மொழியில் moduleகளை பயன்படுத்துகின்றது. தவிரவும் தமிழ்மொழியில் எழுதத் துணியாத தமிழ் இளைஞர்களை, (கல்லூரி மாணவர்கள், மேநிலைப் பள்ளி மாணவர்கள்) இந்தப் பணிக்காவது தமிழ் விக்கிப்பீடியாவில் பங்கேற்க அழைக்கலாம். பட்டறை நடத்தினால் என்னையொத்தவர்களின் ஏற்புத் திறன் எவ்வளவு என்பதும் கருத்தில் கொள்ள வேண்டும். --மணியன் (பேச்சு) 16:45, 16 ஆகத்து 2016 (UTC)Reply

Rio Olympics Edit-a-thon

தொகு

Dear Friends & Wikipedians, Celebrate the world's biggest sporting festival on Wikipedia. The Rio Olympics Edit-a-thon aims to pay tribute to Indian athletes and sportsperson who represent India at Olympics. Please find more details here. The Athlete who represent their country at Olympics, often fail to attain their due recognition. They bring glory to the nation. Let's write articles on them, as a mark of tribute.

For every 20 articles created collectively, a tree will be planted. Similarly, when an editor completes 20 articles, a book will be awarded to him/her. Check the main page for more details. Thank you. Abhinav619 (sent using MediaWiki message delivery (பேச்சு) 16:54, 16 ஆகத்து 2016 (UTC), subscribe/unsubscribe)Reply

வணக்கம். kheta ram என்ற பெயரை கேடா ராம் எனலாமா? கேத்தா ராம் என்று எழுதலாமா?--கி.மூர்த்தி (பேச்சு) 11:46, 28 ஆகத்து 2016 (UTC)Reply
மூர்த்தி சார், கேத்தா ராம் என்று எழுதுவது தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். மற்ற மொழிகளில் அப்படித் தான் எழுதியுள்ளனர். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:48, 28 ஆகத்து 2016 (UTC)Reply
நன்றி குரிசில்! மாற்றி விடுகிறேன்--கி.மூர்த்தி (பேச்சு) 11:50, 28 ஆகத்து 2016 (UTC)Reply

கட்டுரை நீக்கம்

தொகு

இந்தோனேசிய அரசமைப்புச் சட்டம் என்ற கட்டுரை நீக்கல் வார்ப்புர இட்டு பல மாதங்கள் கடந்து இற்றைப்படுத்தப்படாமல் உள்ளது. இதை விக்கியாக்கம் செய்யலாம். விக்கியாக்கம் செய்வதில் ஆர்வம் இல்லாவிட்டால் நீக்கிவிடலாம். --AntanO 13:26, 11 அக்டோபர் 2016 (UTC)Reply

நீண்ட நாட்களாக இந்த பக்கமே வர முடியவில்லை. வந்தவுடன் சரியாக்கிவிடுகிறேன். இயலாதபட்சத்தில் நீக்கிவிடுங்கள். நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:23, 12 நவம்பர் 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை 2017

தொகு
 
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:58, 9 திசம்பர் 2016 (UTC)Reply

மாநில பெயர்

தொகு

உத்தராகண்டம்மா உத்தராகண்டமா? உத்தராகண்டம் என்று தவியில் பயன்படுத்துவோம் என்று முன்பு முடிவெடுத்ததாக நினைவு --குறும்பன் (பேச்சு) 03:33, 5 சனவரி 2017 (UTC)Reply

குறும்பன், நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள்? உத்தராகண்டம் என்று தானே நானும் எழுதுகிறேன் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:47, 5 சனவரி 2017 (UTC)Reply

உத்தராகண்டம் சட்டமன்றத் தேர்தல்,2017 என்பதை உத்தராகண்ட சட்டமன்றத் தேர்தல், 2017 மாற்றியுள்ளீர்கள் தானே? அதனால் ஐயம் வந்துவிட்டது . ஓ மன்னிக்க அது நீங்கள் இல்லை அது செல்வகுரு நாதன், இப்போது தான் கவனித்தேன். எத் தலைப்பு சரி?? --குறும்பன் (பேச்சு) 20:53, 5 சனவரி 2017 (UTC)Reply

கேரளத்தின் சட்டமன்றத்தை ’கேரளம் சட்டமன்றம்’ என்றல்லாமல், கேரள சட்டமன்றம் என்றழைப்பதைப் போல, உத்தராகண்டத்தின் சட்டமன்றத்தை உத்தராகண்ட சட்டமன்றம் என்றவாறாக மாற்றினேன். தலைப்பு முன்னர், உத்தராகண்டம் சட்டமன்றத் தேர்தல் என்றவாறிருந்தது.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:33, 7 சனவரி 2017 (UTC)Reply

போட்டி

தொகு

நீங்களும் போட்டியில் பங்குபற்றலாமே அண்ணா!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:47, 5 மார்ச் 2017 (UTC)

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு

தொகு

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி.


--Natkeeran (பேச்சு) 21:44, 10 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1

தொகு

 


அறிவிப்பு

போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...


--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:44, 12 மார்ச் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017

தொகு

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:33, 10 ஏப்ரல் 2017 (UTC)

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!

தொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:03, 30 ஏப்ரல் 2017 (UTC)

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

தொகு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு

தொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:54, 21 மே 2017 (UTC)Reply

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

தொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:59, 31 மே 2017 (UTC)Reply

Translating Ibero-America is back! Come and join us :)

தொகு

Hi!

Iberocoop has launched a translating contest to improve the content in other Wikipedia related to Ibero-American Culture.

We would love to have you on board :)

Please find the contest here

Hugs!--Anna Torres (WMAR) (பேச்சு) 00:35, 12 சூன் 2017 (UTC)Reply

ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை

தொகு

வணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 08:15, 20 சூன் 2017 (UTC)Reply

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

தொகு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

ஆசிய மாதம், 2017

தொகு
 

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் 2015 அல்லது 2016-ம் ஆண்டு கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

2017-ம் ஆண்டிற்கான ஆசிய மாதப்போட்டி நவம்பர் 1 முதல் துவங்கியது. சுமார் 44 கட்டுரைகள் தற்போது வரை உருவாக்கப்பட்டுள்ளது. நீங்களும் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களுடைய பங்களிப்பை நல்க அன்போடு அழைக்கின்றோம்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
  • குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
  • உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
  • 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
  • தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
  • உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.
விரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க

நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:26, 14 நவம்பர் 2017 (UTC)Reply

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

தொகு

அன்புள்ள தமிழ்க்குரிசில்,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு உங்களுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி.--இரவி (பேச்சு) 18:29, 18 மார்ச் 2018 (UTC)

இரவி அண்ணனுக்கு நன்றி! செய்தியை இப்போதே படித்தேன். இத்திட்டத்தின் தொலைநோக்கை அறிந்து மகிழ்கிறேன். வரும் வாரங்களில் கூடுதல் பங்களிப்பை வழங்குவேன் என்று கூறி விடைபெறுகிறேன். நன்றீ ;)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:17, 24 ஏப்ரல் 2018 (UTC)

Share your experience and feedback as a Wikimedian in this global survey

தொகு
WMF Surveys, 18:19, 29 மார்ச் 2018 (UTC)

Reminder: Share your feedback in this Wikimedia survey

தொகு
WMF Surveys, 01:17, 13 ஏப்ரல் 2018 (UTC)

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey

தொகு
WMF Surveys, 00:27, 20 ஏப்ரல் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்

தொகு

வணக்கம்.

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.

வழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.

இது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

எடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

நாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.

நன்றி.

இரவி 11:59, 1 மே 2018 (UTC)Reply


யாவா மொழியில் எழுதப்பட்ட நிரலை மேம்பாடு செய்ய உங்கள் உதவி தேவை.

தொகு

வணக்கம். தொடக்கப் பணியாக சிறுதுப்புரவு நிரலொன்று யாவா நிரலில் எழுதப்பட்டுள்ளது. இது தானியங்கிப் பாதையில் தெரியாமல், அண்மைய மாற்றங்களில் மட்டுமே தெரிகிறது. உங்கள் முன்மொழிவை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.--உழவன் (உரை) 14:56, 16 மே 2018 (UTC)--உழவன் (உரை) 14:56, 16 மே 2018 (UTC)Reply

User:Info-farmer அண்ணே, நிரல்களை பார்த்தேன். நீங்கள் கூறுவது எனக்குப் புரியவில்லை. அந்த நிரலால் செய்யப்படும் மாற்றம் ’தானியங்கி’ என்ற பிரிவில் காட்டுவதில்லை என்று கூறுகிறீர்களா? பயனர் சதீசின் கணக்கின் வழியே அத்தொகுப்புகள் செய்யப்படுகின்றன. பயனரது கணக்கு தானியங்கியாக ஏற்கப்படவில்லை என நினைக்கிறேன். எனவே, மனிதத் தொகுப்பாக காட்டும். நீங்கள் கூறியது இதைத் தானா? வேறு எதாவதா?-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:53, 17 மே 2018 (UTC)Reply
நீங்கள் உங்கள் கணக்கில் இயக்கிப் பாருங்கள். எனது தானியங்கி கணக்கில் இயக்கினாலும் அது மேற்கூறிய வழுவோடு தான் உள்ளதை அறிய முடியும். நான் பைத்தான்3 கற்று வருகிறேன். அதனால் யாவா மொழி கற்கும் சூழ்நிலை தற்போது இல்லை. அவசரமில்லை. சீர் செய்த பின்பு இதனை பைத்தானுக்கு மாற்றும் சிந்தனை உள்ளது. உங்களுக்கு பைத்தான் தெரிந்தால், அவர் செய்தவரை மாற்றித் தந்தீர்கள்என்றாலும், இரட்டிப்பு மகிழ்ச்சி. முடிந்தால் நேரம் இருக்கும் போது அழைக்கவும். உங்களுடன் பேசி வெகுநாட்கள் ஆகிறது.--உழவன் (உரை) 02:43, 18 மே 2018 (UTC)Reply
இந்த மாற்றம் செய்த பிறகு தான் இந்த உரையாடல் பகுதியைத் திறக்க முடிகிறது. இல்லையெனில், முழுபக்கத்தினையும் திறந்தே பிறகு தொகுக்க முடிகிறது. --உழவன் (உரை) 02:49, 18 மே 2018 (UTC)Reply

தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்!

தொகு

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)

வேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறது

தொகு

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவோர் அனைவருக்கும் பொதுவான செய்தி.

நேற்று (சனி) அனைவரும் அயராது கட்டுரைகளை அளித்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பஞ்சாபியை முந்தி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் - 981. பஞ்சாபி - 974. இந்த முன்னணியைத் தக்க வைப்பது நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இன்று முதல் போட்டி முடியும் மே 31 வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 50+ கட்டுரைகளை எழுதுவது வெற்றியை உறுதி செய்யும். இது வரை 44 பேர் போட்டியில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். எல்லாராலும் இந்த வாரம் பங்களிப்பது இயலாது என்பதால், ஒவ்வொருவரும் அடுத்த ஐந்த நாட்களும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் போட்டியை வெல்லலாம். போட்டி முடியும் வரை ஒவ்வொரு நாள் நிலவரத்தை இங்கு இற்றைப்படுத்துகிறேன். நன்றி -- இரவி

Hareesh Paredi

தொகு

இந்தக் கட்டுரையை 9000 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க முடிகிறதா பாருங்கள். போட்டிக் கணக்கில் சேர்க்கலாம். --இரவி (பேச்சு) 02:39, 28 மே 2018 (UTC)Reply

மீண்டும் பஞ்சாபியர் முன்னணி!!

தொகு

வணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள்! தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி

வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை!

தொகு

வணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி

வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்

தொகு

வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி

Regarding project tiger internet

தொகு

Sir, Have you bought Internet? If not please buy before 14th June 2018. If you already bought internet please send us the bill. If you have any doubt please write to me at gopala cis-india.org --Gopala Krishna A (பேச்சு) 10:52, 7 சூன் 2018 (UTC)Reply

கவனிக்க

தொகு

தங்களுக்கு இக்கட்டுரையில் இ. எஸ். பொறியியல் கல்லூரி என்னா பிரச்சினை என்று எனக்கு புரியவில்லை. கொஞ்சம் விவரமாக கூறவும்..

பயனர்:Gowtham Sampath, உரையாடல்/பேச்சுப் பக்கங்களில் உரையாடும்போதும், கருத்தின் முடிவில் ~~~~ என்று இட்டு, பக்கத்தைச் சேமித்தால் கையொப்பமாக மாறிவிடும். பழகிக் கொள்ளுங்கள். தனியார் நிறுவனங்களைப் பற்றி எழுதும்பொழுது கூடுதல் கவனமாக எழுதுங்கள். குறிப்பிடத்தக்க மூன்று குறைகள்: குறிப்பிடத்தக்கமை, சான்றுகள், எழுத்துநடை.

1) கட்டுரையின் தலைப்பு குறிப்பிடத்தக்கதா என்று பார்க்க வேண்டும். இக்கல்லூரி மாநில அளவிலோ, தேசிய அளவிலோ குறிப்பிடத்தக்க சாதனை செய்திருந்தால் அதைக் குறிப்பிடலாம். பெரும்பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தாலோ, இன்ன பிற முக்கியத் தகவல்களையோ இருந்தால் அதைக் குறிப்பிடலாம். குறிப்பிடத்தக்கதாய் எதுவும் இல்லாதபட்சத்தில் கட்டுரை நீக்கப்பட வாய்ப்புள்ளது.

2) தனியாட்கள்/தனியார் நிறுவனங்களைப் பற்றி எழுதும்போது தகுந்த சான்று சேர்க்க வேண்டும். நீங்கள் தரும் சான்றானது நம்பகத்தன்மை உடையதாய் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இக்கல்லூரி பெற்ற அங்கீகாரங்களுக்கு சான்று கிடைத்தால் சேர்க்கலாம். (இணையத்தில் கிடைக்கின்றன) பெருவாரியான தமிழகக் கல்லூரிகள் ஒரு துறைக்கு சான்று பெற்றுவிட்டு, அனைத்து துறைகளுக்கும் பெற்றதைப் போல் காட்டிக் கொள்வது உண்டு. வரலாறு போன்ற முக்கியமான தகவல்களுக்கு சான்று கண்டிப்பாக தரப்பட வேண்டும். “30 வருடங்கள் அனுபவம் பெற்றது” போன்ற வரிகளுக்கு சான்றுகள் தருவது நம்பகத்தன்மையை கூட்டும். நாளேடுகளில் தொடர்புடைய செய்திகள் வந்திருந்தால் அவற்றைக் குறிப்பிடலாம். தரப்பட்டிருக்கிற சான்று ஏற்கக் கூடியதில்லை.

3) கட்டுரையில் பல இடங்களில் எழுத்துப்பிழைகளோ வாக்கியப் பிழைகளோ இருக்கின்றன. அவற்றையும் திருத்திவிடுங்கள். கூடுதல் தகவல்கள் கிடைத்தாலும், பத்தி வாரியாக பிரித்து எழுதலாம். நன்றி. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:48, 8 ஆகத்து 2018 (UTC)Reply


தங்களின் அறிவுரைக்கு நன்றி... "கௌதம் ❤ சம்பத் (பேச்சு) 06:09, 8 ஆகத்து 2018 (UTC)"Reply

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018

தொகு

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு

தொகு
 
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

வணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:41, 2 நவம்பர் 2018 (UTC)Reply

Return to the user page of "தமிழ்க்குரிசில்/தொகுப்பு 04".