பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட நபர்கள்



நிமிடகவி நாஞ்சில் எஸ்.பி.தேசி. குமரி மாவட்டக் கவிஞர் மன்றத்தைத் தோற்றுவித்தவர் (1970). ஆன்மீக சமய இலக்கிய விற்பன்னர். கொடுக்கப்படும் கருத்தில் ஒரு நிமிடத்துளி நேரத்திற்குள் வெண்பா யாத்திடும் வல்லமை பெற்றதால் "நிமிடகவி" எனும் பட்டம் பெற்றவர். ( 1943 -1998 ). கருவூலத்துறையில் 33 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று இறுதிக்காலத்தில் இலக்கியப்பணியாற்றி நிறைவுப்படைப்பாக குமரி மாவட்டத்தின் தோவாளை வட்டத் தலைநகரான பூதப்பாண்டி திருத்தலத்தில் விளங்கும் அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை பூதலிங்கப் பெருமானுக்கு "திருப்பள்ளியெழுச்சி" இயற்றி வெளியிட்டுள்ள்ளார். தமிழகத்தின் பல மாவட்டங்களில் பணி நிமித்தமாக சென்ற பகுதிகளிலெல்லாம் திருப்பணி சார்ந்த தெய்வீகப் பாடல்களை இயற்றி வெளியிட்டுள்ளார். முத்தாய்ப்பாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருத்தலத்தின் உற்சவர்களுக்கெல்லாமாக ஐம்பத்தியிரண்டு நூல்களை வெளியிட்டதன் அங்கீகாரமாக அத்திருக்கோயில் நிருவாகம் வெளியிட்ட "திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை" ஆய்வு நூலில் அன்னாரின் மாண்மியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமது பணிக்காலங்களில் பின்பற்றிய உச்சகட்ட நேர்மையின் பலனாக பல அடக்குமுறைத் தண்டனைகளாக பல மாறுதல்கள், இடைநீக்கங்கள், பணிநீக்கங்கள், பணப்பலன் வெட்டு என தாம் சந்திக்க நேர்ந்த அத்துனைத். துயரங்களையும் இறை மற்றும் இலக்கியப்பணிக்கான அவகாசமாக ஆக்கி படைப்பிலக்கிய உலகில் பரிணமித்தவர். சமயப் பாகுபாடு இன்றி கிறித்தவப் பாடல்கள் ( இயேசுபிரானுமை எங்கிருந்தாலும் எண்ணித் துதித்திடுவோமே.. ) மற்றும் "இசுலாமெனும் இனிய மார்க்கம்" எனும் ஆய்வு நூல் என படைத்தவர். குமரி மாவட்டம் நாகர்கோவிலைப் பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்தவர். பறக்கை ஊரில் பள்ளிக் கல்வியும் நாகர்கோவில் தெ.தி.இந்துக்கல்லூரியில் பட்டப்படிப்பையும் பெற்றவர். தம் தந்தையார் ஓவிய ஆசிரியராகையால் அவரைப் போலவே ஓவியங்கள் வரைவதிலும் வல்லவர். 1970 களில் குமரி மாவட்டத்தின் பத்திரிகை உலகில் "கடுகு"எனும் பத்திரிக்கையை நடத்தியவர். முத்தமிழறிஞர் கலைஞர்பால் பேரன்பும் மரியாதையும் கொண்டவராதலால் திராவிட முன்னேற்றக்கழக அபிமானியாக விளங்கியவர். " கலைஞர் கவிமலர்" எனும் கவிதைத் தொகுப்பைக் கலைஞரிடம் நேரில் வழங்கி பாராட்டு பெற்றவர். அன்னாரின் நூல்கள் அவர்தம் கெழுதகை நண்பரும் புரவலருமான திருச்செங்கோடு "முருகேசன்" (LIC) அவர்கட்கு பாத்திய உரிமை செய்து இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட முற்போக்காளர். அன்னார் இயற்றிய பாடல்களை மறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்கள் பாடி பதிப்பித்த ஒலிப்பேழை இன்றும் நல்லபுள்ளி அம்மன் திருக்கோவிலில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

பூதப்பாண்டி பூதலிங்கேசுவரர் ஆலயத்தில் அன்னார் தோற்றுவித்த "சத்சங்கம்" இன்று வேர்பாவி விருட்சமாக உருவாகி பக்தர்களின் ஆன்மீக நாட்டத்தை ஆல்போல் தழைக்கச் செய்து அருள்பாலித்து வருகிறது.. "திருச்சிற்றம்பலம்"..

"கன்னியாகுமரி மாவட்ட நபர்கள்" பகுப்பிலுள்ள கட்டுரைகள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 162 பக்கங்களில் பின்வரும் 162 பக்கங்களும் உள்ளன.