கள்ளர் (இனக் குழுமம்)

(ஈச நாட்டுக் கள்ளர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கள்ளர் (Kallar) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் முக்குலத்தோர்களில் ஒரு பிரிவினர் ஆவர். பொதுவாக கள்ளர், மறவர், அகமுடையர் ஆகிய மூன்று பிரிவினரையும் சேர்ந்து முக்குலத்தோர் (தேவர்) எனப்படுவர்.[1]

கள்ளர்
கள்ளர் குழந்தைகள் நீண்ட காதணிகளை அணிவது, முன்பு ஒரு பொதுவான நடைமுறை
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, மலேசியா
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
முக்குலத்தோர்

இக்குழுவினரில் புதுக்கோட்டை சமஸ்தானம் தொண்டைமான் மன்னரும், பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர்.

சொற்பிறப்பு

கள்ளர் என்பதற்கு திருடன் என்று பொருள்படும் ஒரு தமிழ் சொல் ஆகும். இவர்களின் வரலாற்றில் கொள்ளை காலங்கள் உள்ளன.[2] கள்ளருக்கான பல சொற்பிறப்பியல் கருத்துக்கள் உள்ளன. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி தரும் விளக்கம் 'பண்டையர்' மற்றும் 'வெட்சியர்' ஆகும்.[3] 'கரியவர்' மற்றும் 'பகைவர்' என்று தமிழறிஞர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் விளக்கமளிக்கிறார்.[4] பணிக்கர் தன்னுடைய ஆய்வில் கள்ளர் என்பதற்கு 'குரு', 'நில உரிமையாளர்', 'கொற்றவர்' என்று குறிப்பிடுகிறார்.[5] மேலும் இறைவன்[6] என்ற பொருளும் தமிழில் உள்ளன.

இவர்கள் வாழ்கின்ற பகுதிகள் சோழ மற்றும் பாண்டிய மண்டலங்களில், "கள்ளர் நாடு", "கள்ளகம்", " கள்ளப்பால்" என்று அழைக்கப்படுகின்றன.[7][8][3] மேலும் கல்வெட்டுகளில் "கள்ளர்பற்று" என்றும்[9][10] , மராட்டிய மோடி ஆவணங்களில் கள்ளர் பாளையங்கள் "கள்ளப்பத்து" என்றும் குறிப்பிடப்படுகிறது.[11]

வரலாறு

 
1858 இல் தனது அரண்மனை தர்பாரில், புதுக்கோட்டை இராஜா ஸ்ரீ இராமச்சந்திர தொண்டைமான்

கள்ளர் இனம் என்பது தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வசிக்கின்றனர். ஆங்கில ஆட்சி இந்தியாவிற்குள் வந்தவுடன் இவர்களின் செல்வாக்கு படிப்படியாகக் குறையத் துவங்கி தற்போது மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளனர்.

எட்கர் தர்ஸ்டன் தன்னுடைய "தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும்" என்னும் நூலில் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை கள்ளர்கள் நீண்ட காது வளர்க்கும் பழக்கமுடையவர்கள் என்று குறிப்பிடுகிறார்.[12] இதனை முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, தன்னுடைய யாழ்ப்பாணக் குடியேற்றம் என்ற நூலில் கள்ளருடைய காதுகள் பாரமான காதணிகளுடன் தொங்கியிருப்பதைக்கண்ட சிங்களவர் பரிகாசமாக இவர்களை லம்பகர்னர் என்று அழைத்தனர் (லம்பம் - தொங்குகின்ற, கர்னர் – காதுடைவர் என்பது அதன் பொருள்) என்று குறிப்பிடுகிறார்.[13]

கள்ளர்கள் திருமண சடங்கின் போது இருவீட்டார்களும், அவர்களின் பண்பாட்டின் அடையாளமாக வளரியை மாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்கள். வளரியை அனுப்பி மணமகளை அழைத்து வாருங்கள் “send the valari and bring the bride” என்று கூறியுள்ளார்கள்.[14]

கள்ளர்கள் பாரம்பரியமாக அடிமுறை மற்றும் வர்ம அடி என அழைக்கப்படும் தற்காப்புக் கலையை பயிற்சி செய்துவந்துள்ளனர்.[15]சோழர் மற்றும் பாண்டியர் மன்னர்களின் படையினராக கள்ளர்கள் இருந்தனர். தஞ்சாவூர் கள்ளர்கள், இன்று பெரும்பாலும் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.[16]

17 -18 ஆம் நூற்றாண்டில் இசுலாமியர், ஆங்கிலேயர், பிரெஞ்சு அரசுகளுக்கு எதிராகவும் மற்றும் ஆதரவாகவும் கள்ளர்கள் செயல்பட்டனர். "Father J Bertrand" தன்னுடைய குறிப்பில், கிபி 1662 ல் தஞ்சாவூர் மீது படையெடுத்து வந்த பிஜப்பூர் சுல்தான் சுல்மான் ஆதில் ஷாவுக்கு எதிராக, கள்ளர் தலைவன் மெய்க்கொண்டானின் தலைமையில் கள்ளர்கள் வெற்றிபெற்றனர் என்றும், "Father Peter Martin" தன்னுடைய குறிப்பில், கிபி 1700 ல் நாகமலை கள்ளர்கள், மதுரையை கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்று குறிப்பிடுகிறார்கள்.[17][18]

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், கட்டலூர் மற்றும் பெரம்பலூர் கள்ளர் தலைவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு ஆதரவளித்தனர். தஞ்சாவூர் மராத்தியரிடம் இன்னல்களுக்கு உள்ளாகிய கிருத்துவர்கள், கிபி 1745இல் மார்ச் மாதம் தஞ்சாவூர் மாவட்டம், குண்ணம்பட்டி பகுதி கள்ளர்களிடம் சரணடைந்தனர்.[19]

ஆனந்தரங்கம் பிள்ளை தன்னுடைய நாட்குறிப்பில் கிபி 1751 மே 24 நாள் பிரெஞ்சு அரசாங்கம், ஆங்கிலேய அரசுக்கு எதிராக தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டி ஆறு பிரிவு கள்ளர்களான தன்னரசு கள்ளர்கள், பிரமலைக் கள்ளர்கள், விசங்கிநாட்டு கள்ளர்கள், தொண்டைமான் நாட்டு கள்ளர்கள், அழகர்கோயில் கள்ளர், நாகமலை கள்ளர்களுக்கு கடிதம் எழுதி ஆதரவு கேட்டதை குறிப்பிட்டுள்ளார்.[20]

கிபி 1755 இல் ஆங்கிலயேயர்களுக்கு எதிரான போரில் கள்ளர்கள் 18 அடி நீளம் கொண்ட ஈட்டியை கொண்டு தாக்கியுள்ளார்கள்.[21]

கிழக்கிந்திய கம்பெனியின் மதுரை கவர்னராக இருந்த மருதநாயகம், 1759 ஆம் ஆண்டு திருநெல்வேலி பகுதியில் உள்ள வடகரை பாளையக்காரர், ஆங்கிலேயருக்கு துணையாக இருந்த திருவிதாங்கூர் மீது கள்ளர்கள் துணையுடன் தாக்குதல்களை நடத்தியதை முறியடித்தார்.[22] அதே ஆண்டு சூலை மாதம் ஆங்கிலேயருக்கு எதிராக மதுரையில் போரிட்ட கள்ளர் தலைவனையும், அவனோடு போரிட்ட 500 கள்ளர்களையும் திருப்பரங்குன்றத்தில் ஒரே நாளில் தூக்கிலிட்டு கொன்றார்.[23]

1763 ஆண்டில், கர்நாடகப் போர் நடைப்பெற்ற காலத்தில், ஆங்கிலேயர் படையெடுப்பின் போது, ஆங்கிலேய கர்னல் ஹீரான் என்பவன் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலிலுள்ள இறைவன் திருமேனி, பொன் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தான். இவனுடன் கள்ளர் மரபினர் போர் செய்து, ஆங்கிலேய படையை வென்று, எல்லாவற்றையும் மீட்டு வந்தனர். இதில் பல ஆங்கிலேய சிப்பாய்கள் கொல்லப்பட்டார்கள்.[24][25][26][27]

1767 ஆம் ஆண்டில், ஒரே நாளில் சுமார் 5000 கள்ளர்கள், மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அருகே வரி செலுத்த மறுத்தபோது, பிரிட்டிஷ் படைகளால் கொல்லப்பட்டனர்.[28]

1790 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு வரி கட்ட மறுத்த உடையார் பாளையம் பாளையக்காரர், நவாபினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவரை, 10,000 கள்ளர் படையினர் சிறையிலிருந்த பாளையகாரரை விடுவித்தனர்.[29] 1801 ஆம் ஆண்டு மருது பாண்டியர்களுக்கு, துணையாக போர் செய்த கருமாத்தூர் கள்ளர் தலைவர்கள் ஆண்டியப்ப தேவர், சடை மாயன், கொன்றி மாயத் தேவர் ஆகிய மூவரும் ஆங்கிலேயர்களால் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் (இன்றைய பினாங்கு) நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டனர்.[30]

1857 களில் ஆங்கிலேயரின் குற்றப் பரம்பரைச் சட்டமானது புரட்சி செய்யும் குழுக்களை அடக்கி அவர்கள் மீதும் பாய்ந்தது. அது கள்ளர்கள் மீதும் ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது.[31] குற்றப் பரம்பரைச் சட்டத்தில் இருந்து வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார் தஞ்சாவூர், திருச்சி பகுதியில் உள்ள கள்ளர்களையும்[32], மேலூர் வையாபுரி அம்பலம், சிவகங்கை பகுதி கள்ளர்களையும், மதுரை, தேனி பகுதி கள்ளர்களை ஜார்ஜ் ஜோசப் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் மீட்டனர்.[33]

இந்தியாவில் மிகவும் பழமையான, 60,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மனிதர்களின் எம் 130 மரபணுவை கொண்ட ஆதி மனிதர் என்று விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்ட விருமாண்டி தேவர் என்பவர் கள்ளர் மரபை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.[34]

வரலாற்றுப் புத்தகங்கள்

  • நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய 'கள்ளர் சரித்திரம்'
  • ராசராசன் கல்விப் பண்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ள 'ராசராசனும் கள்ளர் வரலாறும்'
  • சாமி. கரிகாலன் எழுதிய 'கள்ளர் வரலாற்று சுருக்கம்'
  • வந்தியத் தேவன் எழுதிய 'பிறன்மலை கள்ளரும் வரலாறும்'

மக்கள்தொகை

தமிழகத்தில் மறவர், பிரமலைக் கள்ளர், கந்தர்வக்கோட்டை கள்ளர், கூட்டப்பால் கள்ளர், பெரிய சூரியர் கள்ளர், செம்பநாடு மறவர் உள்ளிட்ட சீர்மரபினர் 17 லட்சத்து 18 ஆயிரத்து 532 பேர் வசிக்கின்றனர்.[35]

கள்ளர்களின் கிளைப்பிரிவுகள்

  • கிளைவழி கள்ளர்கள்
  • அம்புநாட்டுக்கள்ளர்
  • செங்களநாட்டுக்கள்ளர்
  • மீய்செங்கிளிநாட்டுக்கள்ளர்
  • ஏழுநாட்டுக்கள்ளர்
  • நாலுநாட்டுக்கள்ளர்
  • பிரம்பூர்நாட்டுக்கள்ளர்
  • மாகாணக்கள்ளர்
  • பிரமலைக் கள்ளர்
  • மயில்ராயன்கோட்டை நாட்டுக்கள்ளர்
  • வல்லநாட்டு கள்ளர்
  • மட்டையர் வம்ச கள்ளர்
  • ஈசநாட்டுக் கள்ளர்

ஈசநாட்டுக்கள்ளர்

ஈசநாட்டுக்கள்ளர் என்போர் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்கள் ஆவர். இவர்கள் கள்ளர் இனக்குழுமத்தை சேர்ந்தவர் இவர்களுடைய குலப்பட்டம் - தேவர், விஜயதேவர், சோழங்க தேவர், தொண்டைமான், பல்லவராயர், இராசாளியார், நாட்டார், பிள்ளை, அம்பலகாரர், வாண்டையார், சேர்வைகாரன், சோழகன், பழுவேட்டரையர், கொங்கரையர், மாளுசுத்தியார், ஒண்டிப்புலியார், கிளாக்குடையார், கொடும்பாளுர்ராயர், சேனைகொண்டார், சேதுராயர், சேனாபதியார், தக்கோலாக்கியார், தஞ்சைராயர், தென்னவன், நரசிங்கதேவர், ஈழங்கொண்டர், கரைமீண்டார், நாகராயர்,தென்கொண்டாா், நாடாவி மேலும் பல ஆயிரம் பட்டங்கள் உள்ளன.

கள்ளர் ஜமீன்கள்

தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டம் பகுதியில் இருந்த கள்ளர் மரபினரின் ஜமீன்கள் [36][37]

குறிப்பிடத்தக்க நபர்கள்

ஜமீன்தார்கள்

சுதந்திர போராட்ட வீரர்கள்

ஆன்மீகம்

தமிழ் இலக்கியம்

இயற்கை அறிவியலாளர்கள்

கல்வி சேவை

திரைப்படத்துறை

விளையாட்டுத்துறை

அரசியல்

கள்ளர் குலப் பட்டங்கள் பட்டியல்

கள்ளர் மரபினரின் பட்டப்பெயர்கள்.[54][55]

அகத்தியர். அகத்தியார் அங்கராயர். அங்கரான், அங்கரார் அங்கவார் அன்கராயர். அனகராயர் அங்கதராயர் அச்சமறியார் அச்சிப்பிரியர் அச்சித்தேவர் அச்சுத்தேவர் அச்சுதத்தேவர் அச்சமறியார்

அச்சிராயர் அச்சுதர். அச்சுதபண்டாரம். அச்சுதராயர் அசையாத்துரையார். அசையாத்துரையர் அடக்கப்பட்டார். அடைக்கப்பட்டார் அடக்குப்பாச்சியார் அடங்காப்பிரியர் அடைவளைந்தார். அடவளைந்தார். அடைவளைஞ்சார். அண்டம்வளைந்தார். அண்டங்கொண்டார். அண்டப்பிரியர் அண்டமுடையர். அண்டக்குடையர் அண்டாட்சியார் அண்ணாகொண்டார் அண்ணுண்டார். அண்ணூத்திப்பிரியர். அண்ணுத்திப்பிரியர். அண்ணுப்பிரியர். அதிகமார். அதியமார் அதியபுரத்தார் அதிகாரி அதிகாரியார் அதிகையாளியார் அத்திப்பிரியர் அத்தியாக்கியார். அத்திரியாக்கியார். அத்திரிமாக்கியார் அத்திரியர். அத்திராயர். அத்தியரையர். அத்திஅரையர். அத்தியாளியார். அநந்தர். அறந்தர். அமரகொண்டார். அமரண்டார். அமராண்டார் அம்பர்கொண்டார் அம்பராண்டார் அம்பர்த்தேவர் அம்பாணர். அம்பலத்தார். அம்பலம். அம்பானையர் அம்பானைத்தேவர் அம்மலத்தேவர். அம்மாலைத்தேவர். அம்மானைத்தேவர். அம்பானைத்தேவர் அம்பானை

அம்மையார். அம்மையர் அம்மையன் அம்மையத்தரையர் அம்மையத்தேவர். அம்மையதேவர் அயிரப்பிரியர் அரதர் அரசர். அரசதேவர் அரசப்பிரியர். அரசுப்பிரியர் அரசாண்டார் அரசாளர். அரசாளியார். அரசாட்சியார். அரசுகொண்டார் அரசுக்குடையார். அரசுக்குடையர். அரசுடையார். அரசுடையர் அரசுக்குளைச்சார். அரசுக்குவாச்சார். அரசுக்குழைத்தார். அரிப்பிரியர் அரியப்பிள்ளை. அரியபிள்ளை. அரியதன். அருண்மொழித்தேவர். அருமொழிதேவர். அருமடார் அருமத்தலைவர் அருமநாடார். அருமைநாடார். அருமநாடர். அருமடார். அருவாநாடர். அருவநாடார் அருமநாட்டார். அருமைநாட்டார். அருவாநாட்டார் அருவாத்தலைவர். அருவாத்தலையர். அலங்காரப்பிரியர். அலங்கற்பிரியர். அல்லிநாடாள்வார். அலும்புள்ளார் அன்னக்கொடியார். அன்னக்கொடியர். அன்னமுடையார். . அன்னவாயில்ராயர். அன்னவாசல்ராயர். அண்ணவசல்ராயர

”ஆ”

ஆரக்கண்ணியர் ஆரஞ்சுற்றியார். ஆரச்சுத்தியார் ஆர்சுற்றியார். ஆர்சுத்தியார். ஆரிச்சுற்றியார் ஆரம்பூண்டார். ஆரமுண்டார். ஆரூரார். ஆரூராண்டார் ஆரூராளியார். ஆராளியார் ஆலங்கொண்டார் ஆலத்தொண்டார். ஆலத்தொண்டமார் ஆலத்தரையர். ஆலப்பிரியர். ஆளற்பிரியர். ஆளம்பிரியர். ஆலம்பிரியர் ஆவத்தியார். ஆவத்தயர். ஆவத்தார். ஆவணத்தார் ஆவாண்டார். ஆவாண்டையார் ஆவண்டார் ஆவாளியார். ஆதாழியார். ஆதியபுரத்தார் ஆளியார். ஆள்காட்டியார். ஆள்காட்டியர் ஆற்க்காடுராயர் ஆநந்தர். ஆஞ்சாததேவர்.

”இ”

இன்புச்செட்டி

இரட்டப்பிரியர். இரட்டப்பிலியர் இராக்கதர். இராக்கசர். இராங்கிப்பிலியர். இராங்கப்பிரியர் இராங்கியர் இராசகுலம் இராசாளியார். இராயாளியார். இராஜாளியார். இராதராண்டார். இராரண்டார் இராதராயர். இராதரார். இராதரன் இராமலிங்கராயதேவர். இராலிங்கராயதேவர். இராயங்கொண்டார். இராயமுண்டார். இராயதேவர். இராயர் இராயப்பிரியர். இராசப்பிரியர். இராசாப்பிரியர். இராயாண்டார். இறையாண்டார். இராரண்டர். இராயாளர் இருங்களர். இருங்கள்ளர். இருங்களார் இருங்கோளர். இருங்கோஇளர். இரும்பர் இருப்பரையர் இளங்கொண்டார். இளமுண்டார். இளந்தாரியார

”ஈ”

ஈச்சங்கொண்டார். ஈங்கொண்டார் ஈழங்கொண்டர். ஈழமுண்டார் ஈழ்த்தரையர்

”உ”

உத்தங்கொண்டார். உத்தமுண்டார் உத்தமங்கொண்டார். உத்தப்பிரியர். யுத்தப்பிரியர். உத்தமாண்டார். உத்தமண்டார். உத்தாரப்பிரியர். உத்தாரப்பிலியர். உய்யக்கொண்டார். உதாரப்பிரியர். உதாரப்பிலியர் உலகங்கத்தார். உலகம்காத்தார் உலவராயர் உலகுடையார். உலகுடையர் உலகுய்யர். உலயர் உழுக்கொண்டார் உழுப்பிரியர். உழுவாண்டார். உழுவண்டார். உழுவாளர் உழுவாளியார். உழுவாட்சியார். உழுவுடையார். உழுவுடையர். உரங்கார் உறந்தைகொண்டார் உறந்தைப்பிரியர் உறந்தையர் உறந்தையாண்டார் உரந்தையாளர் உறந்தையாளியார். உறந்தையாட்சியார். உறந்தையுடையார். உறந்தையுடையர். உறந்தைராயர் உறயர். உறியர்

”ஊ”

ஊணர். ஊணியர் ஊணியார் ஊமத்தயர் ஊமத்தநாடார். ஊமத்தநாடர். உமத்தரையர் ஊமைப்பிரியர். ஊமைப்பிலியர் ஊரத்திநாடார். ஊரத்தியார். ஊரத்தியர். ஊரான்பிலியர். ஊரர்ன்பீலியர்.

”எ”

எண்ணாட்டுப்பிரியர், எத்திப்பிரியர், எத்தொண்டார்,

”ஏ”

ஏத்திப்பிரியர், ஏத்திரிப்பிரியர் எத்தியப்பிரியர். ஏத்தொண்டார் ஏகம்பத்தொண்டார் ஏகம்பத்துப்பிரியர். ஏன்னாட்டுப்பிரியர் ஏனாதிகொண்டார் ஏனாதிநாட்டுப்பிரியர். ஏனாதிப்பிரியர், ஏனாதியார்

”ஐ”

ஐயப்பிரியர், ஐரைப்பிரியர், ஐந்நூற்றுப்பிரியர்.

”ஒ”

ஒண்டிப்பிரியர், ஒண்டிப்பிலியர். ஒண்டிப்புலியார் ஒளிகொண்டார் ஒளிப்பிரியர் ஒளியாண்டார் ஒளியாளார் ஒளியாளியார். ஒளியாட்சியார் ஒளியுடையார், ஒளியுடையர் ஒளிராயார். ஒளிவிராயர் ஒற்றையார். ஒற்றையர்

”ஓ”

ஓசையார், ஓசையர் ஓடம்போக்கியார் ஓட்டம்பிடுக்கியார், ஓட்டம்பிடிக்கியார் ஓந்திரியர், ஓந்திரையர், ஓந்தரையர் ஓமசையர், ஒமனாயர், ஓனாயர் ஓமாந்தரையர் ஓமாமரையர் ஓமாமுடையர் ஓம்பிரியர் ஓமாமெபிரியர், ஓயாம்பிலியர்

”க”

கங்கர் கங்கநாட்டார், கங்கநாடர், கங்கைநாடர், கங்கைநாட்டார், கங்கநாட்டார் கங்காளநாட்டார் கங்கைராயர் கச்சிராயர், கச்சைராயர், கச்சியராயர் கஞ்சர் கஞ்சராயர் கடம்பர் கடம்பரார் கடம்பையர் கடம்பராயர், கடம்பைராயர் கடம்பப்பிரியர், கடியப்பிலியர் கடாரம்கொண்டார், கடாரத்தலைவர், கடாத்தலைவர், கடாத்தலையர் கடாரத்தரையர், கடாத்திரியர் கடாரந்தாங்கியார், கடாரம்தாங்கியார் கட்டத்தேவர் கட்டராயர் கட்டவிடார் கட்டுவிடான் கட்டவெட்டியார் கட்டைகொண்டார், கட்டைக்குண்டார் கட்டையார், கட்டயர் கட்டையாளியார், கட்டாணியார் கண்டப்பிரியர் கண்டபிள்ளை, கண்டப்பிள்ளை, காடப்பிள்ளை கண்டர், கன்னைக்காரர் கன்னக்காரர் கவுண்டர் கண்டராயர், கண்டவராயர் கண்டர்கிள்ளி, கண்டர்சில்லி கண்டியர், கண்டியார் கண்டுவார் கண்ணரையர் கணியர்

கதவடியார் கத்தரிகொண்டார், கத்தூரிமுண்டார் கத்தரிநாடர், கத்திநாடர் கத்தரியர், கத்திரியர், கத்தூரியர் கத்தரியாளியார் கரங்கொண்டார், கரமுண்டார் கரம்பைகொண்டார் கரடியார், கருடியார் கரம்பராயர் கரம்பையார், கரம்பையர், கரம்பியத்தார் கருக்கொண்டார், கருத்துண்டார், கருப்பூண்டார் கருடிகருப்பக்கள்ளர் கருப்பற்றியார், கருப்பட்டியார், கரும்பற்றியார், கருப்பட்டியர் கருப்பிரியர் கருப்பையர், கருப்புளார் கருமண்டார், கரமுண்டார் கரும்பராயர் கரும்பர், கருமர் கரும்பாண்டார் கரும்பாளர் கரும்பாளியார், கரும்பாட்சியார் கரும்புகொண்டார் கரும்புடையர் கரும்பூரார் கருவபாண்டியர் கருவாண்டார் கருவாளர் கருவாளியார், கருவாட்சியார் கருவுடையார், கருவுடையர் கருவூரார், கருப்பூரார் கருப்பக்கள்ளன் கலயர் கலிங்கராயர், கலிங்கராயதேவர், கலியர் கலியனார் கலியாட்சியார் கலிராயர் களத்துவென்றார் களந்தண்டார், களந்தையாண்டார் களபர், களவர், களாவர், களர் களரி கள்வன் களப்பாளர், களப்பளார், களப்பிலார், களப்பிரர் களப்பாளியார், களப்பாடியார் களப்பாள்ராயர், களப்பாளராயர் களள்குழியார்

களமுடையார், களமுடையர் களக்குடையார், களக்குடையர், களக்கடையர், கழுத்திரையர் கக்குடையர் கனகராயர் கன்னகொண்டார் கன்னக்குச்சிராயர் கன்னதேவர் கன்னபாண்டியர் கன்னப்படையார், கன்னப்படையர், கன்னப்பட்டையார் கன்னப்பிரியர் கன்னமுடையார், கன்னமுடையர் கன்னராயர், கன்னவண்டி கண்வாண்டார் கந்தானி

கன்னிராயர் கன்னாண்டார் கன்னாளர் கன்னாளியார், கன்னாட்சியார்

”கா”

காங்கயார், காங்கயர், காங்கெயர், காங்கேயர், காங்கியர் காசிநாடர், காசிநாடார் காசிராயர் காடவராயர் காடுவெட்டி, காடுவெட்டியார் காராட்சியார் காராண்டார் காராளர் காரி, காரியார் காருடையார், காருடையர் காரைக்காச்சியார் காரையாட்சியார் கார்கொண்டார் கார்ப்பிரியர் கார்யோகர் கார்யோகராயர் காலாடியார், காவாடியார் காவலகுடியார், காவலகுடியர், காலாக்குடியார், காலாக்குடியர் காளாக்குழியார் காலிங்கராயர் காலிங்கராயதேவர் காவலாளியார், காவலியார், காவாலியார், காவளியார், காளியார் காவிரிவெட்டி, காவெட்டி, காக்கரிவெட்டி காவெட்டார்

”கி”

கிடாத்திரியார் கிருட்டினர் கிளாவர் கிளாக்கர் கிளக்கட்டையார் கிளாக்குடையார் கிளாக்குடையர்

கிளாக்கடையார், கிளாக்கடையர் கிள்ளியார் கிளியிநார் கிள்ளிகண்டார், கிளிகண்டார், கிள்ளிகொண்டார், கிள்ளிநாடர், கிளிநாடர் கிள்ளியாண்டார், கிளியாண்டார், கிளிப்பாண்டார் கிள்ளிராயர், கிளிராயர் கிளுப்பாண்டார் கிழண்டார்

கீ எழுத்தில் பட்டப்பெயர்கள்

கீரக்கட்டையர், கீரைக்கட்டையார் கீரமுடையார், கீரமுடையர், கீருடையார், கீருடையர், கீழுடையர் கீரரையர், கீரையர் கிழப்பிரியர் கீழரையர் கீழண்டார், கீழாண்டார் கீழாளர் கீழாளியார், கீழாட்சியார் கீழையர் கீழாளியார், கீழாட்சியார் கீழுடையார், கீழுடையர் கீழ்க்கொண்டார்

”கு”


குங்கிலியர் குச்சராயர், குச்சிராயர், குச்சியராயர் குடிகொண்டார், குடிக்கமுண்டார், குடியாளர், குடிபாலர் குட்டுவர் குட்டுவழியர், குட்டுவள்ளியர் குண்டையர், குமதராயர் குமரர் குமரண்டார், குமாரண்டார், குமாராண்டார், குமறண்டார், குமரையாண்டார், குமரையண்டார் குமரநாடர் கும்பத்தார், கும்பந்தார் கும்மாயன் குருகுலராயர் குளிகொண்டார்

குழந்தைராயர், குறுக்கண்டார், குறுக்காண்டார், குறுக்கொண்டார் குறுக்களாஞ்சியார் குறுக்காளர் குறுக்காளியார், குறுக்காட்சியார் குறுக்கைப்பிரியர் குருக்கையர் குருக்கையாண்டார் குருக்குடையார், குருக்குடையர் குறும்பர் குறும்பராயர்

”கூ”


கூசார், கூர்சார் கூடலர் கூட்டர் கூத்தப்பராயர், கூரார், கூராயர் கூரராயர், கூரராசர் கூழாக்கியார் கூழாளியார், கூழாணியார் கூழையர்

”கே”

கேரளராயர் கேளராயர் கேரளாந்தகன்

”கொ”

கொங்கணர் கொங்கரையர், கொங்ககரையர், கொங்குதிரையர் கொங்குராயர் கொடிக்கமுண்டார், கொடிகொண்டார், கொடியாளர், கொடிபாலர் கொடிராயர், கொடிக்கிராயர், கொடிக்கவிராயர் கொடும்பர், கொடும்பையர் கொடும்பராயர், கொடும்பைராயர், கொடும்புராயர் கொடும்பாளுர்ராயர், கொடும்மளுர்ராயர் கொடும்பிராயர், கொடும்புலியர், கொடுப்புலியர், கொடுப்புலியார் கொடும்பைப்பிரியர், கொடும்பப்பிரியர் கொடும்பையரையர் கொட்டையண்டார், கொம்பட்டி

கொல்லத்தரையர், கொல்லமுண்டார் கொழுந்தராயர் கொழந்தைராயர், கொழந்தராயர், கொழுந்தைராயர், கொளந்தைராயர்

கொற்றங்கொண்டார் கொற்றப்பராயர், கொத்தப்பராயர் கொற்றப்பிரார், கொற்றப்பிரியர், கொற்றபிரியர், கொத்தப்பிரியர் கொற்றமாண்டார், கொத்தமாண்டார் கொற்றரையர் கொற்றாண்டார் கொற்றாளர் கொற்றாளியார், கொற்றாட்சியார் கொன்றையர், கொன்டையர், கொண்டையர் கொன்னமுண்டார் கொப்பாண்டியர்

”கோ”

கோட்டரையர் கோட்டையரையர், கோட்டைத்திரையர் கோட்டைகருட்டியார் கோட்டைமீட்டர் கோட்டையாண்டார், கோதப்பிரார் கோரர் கோதண்டப்பிரியர், கோதண்டப்புலியர் கோபாண்டியர், கோப்பணர், கோப்பர் கோபாலர் கோப்புலிங்கம் கோப்பனார் கோன்றி கோழயர், கோழியர் கோழிராயர் கோறர் கோனேரி கோனெரிகொண்டார் கோனெரிமேல்கொண்டார், கோனெரிமேல்கொண்டான், கோனெரிமேற்கொண்டார் கோனாடுகொண்டார்

”கை”

கைலாயதேவர் கைலாயராயர் கையராயர்

”ச”

சக்கரர் சக்கரை, சர்க்கரை, சக்கரையர், சாக்கரையர் சக்கராயர், சக்காராயர் சக்கரநாடர் சக்கரநாட்டார் சக்கரப்பநாட்டாள்வார், சக்கரையப்பநாட்டாள்வார், சர்க்கரையப்பநாட்டாள்வார் சன்னவராயர், சனகராயர், சங்கத்தியார், சங்காத்தியார், சங்காத்தியர், சங்கப்பிரியர், சங்கப்பிலியர், சங்கேந்தியார் சங்கரர் சங்கரதேவர் சங்கரராசர் சங்கரராயர் சரபோதி சண்டப்பிரதேவர் சத்திரங்கொண்டார் சந்திரதேவர் சமயர், சம்பட்டி

சமையர் சமயதேவர் சமயாளியார், சமயாட்சியார் சட்டம்பி

சம்பிரதியார் சம்பிரத்தேவர், சம்பிரதேவர் சம்புராயர் சம்புவராயர் சம்மதிராயர் சரவணர், சரவர் சயங்கொண்டார், சவுட்டியார், சமட்டியார், சம்பட்டியார் சவுளியார் சன்னநாடர், சன்னாடர் சன்னராயர், சன்னவராயர் சவுளி

”சா”

சாகோட்டைதாங்கியார், சாகொடைதாங்கியார் சாணர், சாணையர், சாணரையர் சானூரர் சாதகர் சாத்தயர் சாத்தரையர் சாம்பாளியார், சாம்பலாண்டியார் சாலியதேவர் சாளுக்கியர் சாளுவர் சாவளியார், சாவாடியர், சாடியார்

”சி”

சிங்களநாடர், சிங்கநாடார் சிங்களப்பிரியர், சிங்கப்பிலியர், சிங்கப்பீலியர், சிங்கப்புலியர் சிக்கராயர், சிங்கராயர் சிங்களராயர் சிங்களர், சிங்களார் சிங்களாளியர், சிங்களாந்தகன், சிங்களேந்தியார் சிங்காரியர், சிங்காரிக்கர் சிந்துராயர்

சிட்டாட்சியார், சிற்றாட்சியார், சித்தாட்சியார் சிந்துராயர் சிலம்பர், சிலுப்பர், சிலுப்பியர், சிலுகியர், சிலுப்பியார் சிவலிதேவர் சிவலிங்கதேவர் சிவன் சிவந்தாக்கி சிறுநாடர் சிறுநாட்டுராயர் சிறுப்பிரியர் சிறுமாடர், சிறுமடார் சிறுராயர் சீனத்தரயைர்

”சு”

சுக்கிரர் சுக்கிராயர், சுக்கிரபராயர், சுக்கிரியராயர் சுண்டையார், சுண்டையர், சுன்றயர் சுத்தவீரர், சுற்றிவீரர் சுந்தர் சுந்தரராயர் சுரக்குடியார், சுரக்குடையர், சுரைப்பிடுங்கியார், சுரப்பிடுங்கியர்,

”சூ”

சூரக்குடையர், சூரக்கொடையர் சூரப்பிடுங்கியர் சூரக்கோட்டையார், சூரக்கோட்டையர் சூரப்பிரியர், சூரப்பிலியர் சூரயர், சூரியர்

”செ”

செட்டியார் செட்டரையர்

செம்படையார், செம்படையர், செம்புடையர் செம்பரையர் செம்பியங்கொண்டார், செம்பொன்கொண்டார் செம்பியத்தரசு செம்பியதரையர் செம்பியப்பிரியர், செம்பிலியர், செம்பிழியர் செம்பியமுடையார், செம்பியமுடையர் செம்பியமுத்தரசு, செம்பியமுடையர் செம்பியர், செம்பர், செம்பொர் செம்பியரையர் செம்மைக்காரர் செம்மைகொண்டார் செயங்கொண்டார், செங்கிடியர் செந்தார், செந்தியார் செல்லர் செல்லரையர் செழியதரையர் செனவராயர், சென்னியாண்டார், சென்னண்டார் சென்னிராயர் சென்னித்தலைவர் சென்னிநாடர், சென்னிகொண்டார், சென்னாடார்

”சே”

சேனைகொண்டார், சேனக்கொண்டார் சேனைநாடர், சேனைநாடார் சேசேணர், சேணரையர், சேணாடர், சேணாநாடார், சேனைநாடார், சேணாண்டார், சேண்கொண்டார், சேனக்கொண்டார், சேனைக்கொண்டார், சேண்டப்பிரியர், சேண்டாப்பிரியர், சேண்பிரியர், சேண்ராயர், சேதுராயர், சேதிராயர் சேதிரார், சேதுரார் சேதுநாடர், சேதிநாடர் சேந்தமுடையார், சேந்தமுடையர், சேந்தமடையார் சேந்தராயர், சேந்தர், சேந்தூரியர், சேத்தூரியர் சேய்ஞலரையர், சேய்ஞலாண்டார் சேய்ஞலாளர் சேய்ஞலாளியர், சேய்ஞலாட்சியார் சேய்ஞற்கொண்டார், சேங்கொண்டார் சேய்ஞற்பிரியர் சேய்நற்பிரியர் சேய்ப்பிரியர் சேய்ப்பிளர், சேப்பிளார், சேப்பிழார் சேரமுடியர், சேறைமுடியர் சேர்வைகாரர், சேர்வை சேலைக்கொண்டார் சேறியர் சேறைராயர் சேற்றூரரையர் சேனாதிபதி, சேனாதிபதியார், சேனாபதியார், சேனாதியார், சேனாதி, சேனாதிபர் சேனைகொண்டார் சேனைத்தலைவர், சேனைத்தலையர் சேனைநாடார் சேவன்

சொ எழுத்தில் பட்டப்பெயர்கள்


சொக்கராயர், சொரப்பரையர், சொரப்பளிங்கியார் சொறியர் சோ எழுத்தில் பட்டப்பெயர்கள்

சோணாடர் சோணாடுகொண்டார், சோணாருண்டார் சோணையர் சோதிரையர் சோமணநாயக்கர், சோமநாயக்கர், சோதிரியர் சோமநாடர், சோமநாடார் சோழர், சோழகர், சோழயர், சோழவர், சோலையர், சோமணர் சோழன் சோழகங்கநாட்டார், சோழகங்கர், சோழகன்னகுச்சிராயர் சோழசனகராசர் சோழகேரளர் சோழகோன் சோழங்கர் சோழங்கதேவர், சோழகங்கதேவர் சோழங்கநாடர், சோழங்கநாடார் சோழங்கொண்டார் சோழசனகராசர், சோழதரையர், சோழதிரையர், சோழதிரியர், சோழுதிரையர், சோதிரையர் சோழதேவர், சோமதேவர் சோழநாடர், சோமநாடர், சோமநாடார் சோழநாயகர் சோழபல்லவர் சோழபாண்டியர், சோழப்பிரியர் சோழரசர், சோமரசர் சோழராசர், சோமராசர் சோழரையர் சோழயோத்தியராசர் சோழங்கிளையார் சோழாட்சியார், சோமாசியார்

ஞா எழுத்தில் பட்டப்பெயர்கள்

ஞானிசேவகர் ஞானசெல்வர் ஞானியர்


த எழுத்தில் பட்ட்ப்பெயர்கள்

தக்கோலர் தக்கோலாக்கியர், தக்கோலாக்கியார், தனஞ்சுரார் தக்கடியார்

தஞ்சைக்கோன் தஞ்சைராயர், தஞ்சிராயர் தனஞ்சராயர் தண்டத்தலைவர், தண்டத்தலையர், தண்டநாயகர் தத்தாண்டார், தத்துவண்டார், தத்துவாண்டையார், தமிழுதரையர் தழிஞ்சிராயர்

தம்பாக்கியார், தம்பாக்குடிக்கியார் தம்பிராயர், தம்பிரார் தலைமலையார், தலைமுறையார் தலையர், தலைவர் தலைராயர், தனராயர் தலைசைராயர், தனசைராயர் தளவாய் தளிகொண்டார் தளிதியர் தளிநாடர் தளிப்பிரியர் தளியர் தளியாண்டார் தளியாளர் தளியாளியார், தளியாட்சியார் தளியுடையார் தனிராயர் தனுசர், தனுச்சர் தன்மபால்குடிக்கியார்

தா எழுத்தில் பட்டப்பெயர்கள்

தாங்கியர் தாளிதியார் தாளியர் தாளதியார் தாந்தாணி தானாதியார் தானாதிபதியார் தானாபதியார் தானாதிபர் தானைத்தலைவர், தானைத்தலையர் தான்தோன்றியார், தான்தோணியார் தாக்கலாக்கியார்

தி

திண்ணாப்பிரியர் தின்னாப்பிரியர், தியாகர், தியாகி திராணியார், திராணியர் தியேட்டாளர் திருக்கட்டியர், திருக்காட்டியர், திருக்காட்டியார் திருக்காட்டுராயர் திருப்பூட்சியார் திருப்பூவாட்சியார், திருப்புழுச்சியார், திருவளச்சியார் திருமக்கோடைதாங்கி, திருவுடைதாங்கி திருமயிலர், திருமார் திருமயிலாண்டார், திருமயிலாட்சியார், திம்மாச்சியார் திருமுடியார் திருநாள்பிரியர்


து

துண்டர், துண்டயர், துண்டராயர், துண்டுராயர், துண்டீரராயர் துவார் துறைகொண்டார் துரையமர்ந்தார், துறந்தார் துறையாண்டார், துறவாண்டார், துறையுண்டார்

தெ

தெத்துவென்றார், தெத்துவெண்டார் தெலிங்கராயர் தென்கொண்டார், தெங்கொண்டார், தெங்கண்டார், தெங்கிண்டார் தென்னங்கியர் தென்னதிரையர் தென்னப்பிரியர், தென்னரையர், தென்னறையர் தென்னவராயர் தென்னவன், தென்னர்

தே

தேசிராயர், தேசுராயர் தேட்டாளர் தேவர் தேளி தேவப்பிரியர் தேவராயர். தேவாண்டார், தேவண்டார் தேவாளர் தேவாளியார், தேவாட்சியார் தேவுகொண்டார் தேவுடையார், தேவுடையர்

தொ

தொண்டார் தொண்டர் தொண்டையர் தொண்டைப்பிரியர், தொண்டாப்பிரியர் தொண்டைமான், தொண்டைமார் தொண்டைமான்கிளையார் தொண்டையர் தொரையண்டார்

தோ எழுத்தில் பட்டப்பெயர்கள்

தோப்பையார், தோப்பையர் தோப்பைராயர் தோன்றார், தோணார் தோணாத்தி தோப்பை தோளர்


நண்டர் நண்டல்ராயர் நண்டலாறுவெட்டி, நண்டலாறுவெட்டியார், நண்டுவெட்டியார், நண்டுவெட்டி நந்தியர், நந்தர் நந்திராயர், நந்தியராயர் நங்கியார், நரங்கியர், நரயர், நரியர் நரங்கியப்பிரியர், நரங்கியப்பிலியர், நரங்கப்பிலியர் நரசிங்கர் நரசிங்கதேவர், நரங்கியதேவர் நரசிங்கப்பிரியர் நரசிங்கராயர் நல்லப்பிரியர் நல்லவன்னியர் நல்லிப்பிரியர், நள்ளிப்பிரியர் நன்னியர், நயினியர், நைனியர், நைனியார் நன்னிராயர்

நா எழுத்தில் பட்டப்பெயர்கள்

நாகங்கொண்டார் நாகதேவர் நாகநாடர் நாகப்பிரியர் நாகர், நாகன் நாகராயர் நாகாண்டார் நாகாளர் நாகாளியார், நாகாட்சியார் நாகுடையார், நாகுடையர் நாணசிவன், நாணசேவர், நானசேவர், நாடர், நாடார் நாட்டார் நாட்டாள்வார், நாடாள்வார், நாடாவார் நாட்டரசர் நாடாவி நாட்டரியார் நாட்டரையர், நாட்டறையர் நாய்க்கர், நாயக்கர் நாய்க்காடியார், நாக்காடியார், நாய்க்காவாடியார் நார்த்தேவர், நார்த்தவார், நாரத்தேவர் நாவிளங்கியார்

நீ

நீலங்கொண்டார்

நெ

நெடுங்கொண்டார், நெடுமுண்டார், நெறிமுண்டார் நெடுத்தர், நெடுத்தார் நெடுந்தரையர் நெடுவர், நெட்டையர் நெடுவாண்டார், நெடுவண்டார், நெடுவாண்டையர் நெடுவாளியார், நெடுங்காளியர் நெல்லிகொண்டார் நெல்லிதேவர் நெல்லிப்பிரியர், நெல்லியர் நெல்லியாண்டார் நெல்லியாளர் நெல்லியாளியார், நெல்லியாட்சியார் நெல்லியுடையார் நெல்லிராயர்

பகட்டுவார், பவட்டுவார், பவட்டுரார் பகட்டுராயர் பக்தாளர் பங்களராயர் பசும்படியார், பசும்பிடியார், பசும்பிடியர் பசுபதியார், பசுபதியர் பஞ்சரமார் பஞ்சராயர் பஞ்சரையர் பஞ்சையர்

பஞ்சந்தரையர், பஞ்சநதரையர் படைத்தலைவர், படைத்தலையர் படையாட்சி, படையாட்சியார், படையெழுச்சியார் பட்சியர் பட்டாண்டார் பட்டாளர் பட்டாளியார், பட்டாசியார் பட்டுக்கட்டியார் பட்டுகொண்டார் பட்டுடையர் பட்டுப்பிரியர் பட்டுராயர் பணிகொண்டார் பணிபூண்டார் பண்ணிக்கொண்டார், பண்ணிக்கொண்டர், பன்னிக்கொண்டார், பன்றிகொண்டார் பன்னம் கொண்டார் பண்ணிமுண்டார், பண்ணியமுண்டார், பண்ணிக்குட்டியார் பண்டாரத்தார் பத்தாண்டார் பத்தாளர், பக்தாளர், பயத்தார் பத்தாளியார், பத்தாட்சியார், பத்தாச்சியார், பெத்தாச்சியார் பத்துகொண்டார் பத்துடையார், பத்துடையர் பதுங்கராயர், பதுங்கரார், பதுங்கிரார், பதுங்கியார், பதுங்கர் பவம்பாளியர்

பம்பாளியார் பம்பாளியர், பயிற்றுராயர் பரங்கிலிராயர், பரங்கிராயர் பரங்கியர் பருதிகொண்டார் பருதிிதேவர் பருதிநாடர் பருதிப்பிரியர் பருதியர் பருதியாண்டார் பருதியாளர் பருதியாளியார், பருதியாட்சியார் பருதியுடையர் பருதிராயர் பருதிகொண்டார் பருதிக்குடையார் பருதிவாண்டையார் பப்புவெட்டியார் பலமுடையர், பலமுடியர் பல்லவதரையர் பல்லவநாடர் பல்லவர் பல்லவராயர் பல்லவவாண்டார், பல்லவாண்டார் பவட்டுவார், பாட்டுவார் பழங்கொண்டார், பழனங்கொண்டார், பழங்கண்டார் பழ்சைப்பிரியர் பழசையர், பழசையார் பழசையாளர், பழைசையாளர் பழசையாளியார், பழைசையாளியார், பழைசையாட்சியார், பழசையாட்சியார் பழத்தார், பழுவேட்டரையர் பழைசைகொண்டார் பழைசைநாடர் பழைசையாண்டார் பழைசையுடையார் பழையாறுகொண்டார் பழையாற்றார் பழையாற்றரையர் பனங்கொண்டார் பனைகொண்டார் பனைநாடர் பனைப்பிரியர் பனையதேவர் பனையர், பன்னையர், பன்னையார் பனையாண்டார் பனையாளர் பனையாளியார், பனையாட்சியார் பனையுடையார், பனையுடையர் பனைராயர்

பா

பாச்சிகொண்டார், பாச்சுண்டார் பாச்சிப்பிரியர், பாப்பிலியர், பரிசப்பிலியர் பாச்சிராயர் பாச்சிலாளி, பாச்சிலாளியார், பாண்டராயர், பாண்டுராயர் பாண்டுரார்

பாண்டிராயர் பாண்டியர், பாண்டியன் பாண்டியராயர் பாப்பரையர் பாப்பிரியர், பாப்பிலியர் பாப்புடையார், பாப்புடையர் பாப்புரெட்டியார், பாம்பாளியார், பாம்பாளியர், பாலைநாடர், பானாடர் பாலைநாட்டர், பானாட்டார், பால்நாட்டார் பாலையர், பாலியர், பாலியார்பாலையாண்டார், பாலாண்டர் பாலையுடையர், பாலுடையர், பாவுடையர், பவுடையார் பாலைராயர், பால்ராயர்

பி எழுத்தில் பட்டப்பெயர்கள்

பிசலண்டார் பிசலுண்டார் பின்னாண்டார் பின்னுண்டார்

பிச்சயன், பிச்சயர் பிச்சயங்கிளையார் பிச்சராயர் பிச்சாண்டார் பிச்சாளியார், பிச்சாளியர், பிச்சாடியர், பிச்சாடியார் பிரமராயர் பிரமர் பிலியராயர் பிள்ளைராயர் பிலிமுண்டார் பிலுக்கட்டி

பீ எழுத்தில் பட்டப்பெயர்கள்

பீலியர் பீலிமுண்டார்

பு புத்தகழிச்சார் புத்திகழிந்தார், புற்றில்கழிந்தார், புட்டில்கழிந்தார் புலிகொண்டார், புலிக்கொடியர், புலிக்கொடியோர், புலிக்குட்டியார், புலிக்குட்டியர், புல்லுக்கட்டியர் புலியாக்கியார், புலிக்கியார், புளுக்கியார் புழுக்கி

புலியூரார் புலிராயர் புள்ளராயர், புள்ளவராயர்

புரங்காட்டார் புறம்பயங்கொண்டார், புறம்பயத்தார், புறம்பயப்பிரியர் புறம்பயமுடையர் புறம்பயர், புறம்பயாண்டார் புறம்பயாளர் புறம்பயாளியார், புறம்பயாளியர், புறம்பயாட்சியார், புறம்பயாட்சியர் புன்னாகர், புண்ணாக்கர் புன்னைகொண்டார் புன்னையர்,

பூ எழுத்தில் பட்டப்பெயர்கள்

பூனையர் பூக்கட்டியார் பூக்கொண்டார் பூச்சியார், பூட்சியார், பூட்டங்கண்ணியர் பூதரையர், பூதாங்கியார், பூராங்கியார் பூங்காவணத்தார்

பூப்பிரியர் பூராயர் பூலார்

பூவர் பூவாண்டார், பூவாண்டர் பூவாளர் பூவாளியார், பூவாட்சியார் பூவுடையர் பூழிநாடர், பூழிநாடார் பூழியர்பிரான் பூழியூரார் பூழிராயர் பூவனையரையர்

பெ

பெரிச்சிக்கணக்கர் பெரியாட்சியார் பெத்தாச்சி பெரிச்சியார்

பே எழுத்தில் பட்டப்பெயர்கள்


பேரரையர், பேதரையர் பேயர் பேதிரியர் பைதுங்கர்

பொ

பொதியர், பொய்யர், பொய்ந்தார் பொம்மையர் பொய்கொண்டார், பொய்யுண்டார், பொய்கையாண்டார் பொய்ந்ததேவர், பொய்ந்தராயர், பொரிப்பொறுக்கியார் பொறையர் பொரைபொறுத்தார் பொற்றையர், பொத்தையர் பொத்தையன் பொற்றைவெட்டியார்,

பொற்றைவெட்டி, பொத்தன்வெட்டியார் பொன்னங்கொண்டார், பொன்னமுண்டார் பொன்பூண்டார் பொன்னங்குட்டியார் பொன்னக்குட்டி

பொன்னதேவர் பொன்னவராயர் பொன்னாண்டார் பொன்னாப்பூண்டார் பொன்னாரம்பூண்டார் பொன்னாளியார், பொன்னானியார், பொன்னானீயார், பொன்மாரியார் பொண்டவராயர்


போ

போசளர் போய்ந்தார் போய்ந்தராயர், போய்ந்தரராயர் போசுதேவர்

போரிற்கொளுத்தியார், போரைக்க்ப்ளுத்தியார் போரிற்சுற்றியார், போரைச்சுற்றியார் போரிற்பொறுக்கியார், போர்பொறுக்கியார், போர்க்கட்டியார், போர்க்கட்டியர், போர்க்காட்டியார், போறிர்கட்டியார் போர்மூட்டியார் போதரையர்

மங்கலதேவர், மங்கதேவர், மங்காத்தேவர், 1503. மொங்கத்தேவர் மங்கலத்தார் மங்கலநாடர் மங்கலப்பிரியர் மங்கலராயர் மங்கலர், மங்கலார் மங்கலண்டார் மங்கலாளர் மங்கலளியார், மங்கலாட்சியார் மங்கல்கொண்டார் மட்டியார், மட்டையர் மட்டையாண்டார் மட்டைராயர் மணவாளர் மணிக்கிரார் மணிராயர் மண்கொண்டார், மங்கொண்டார், மங்கண்டார், மண்ணைகொண்டார் மண்டலமாளியார் மண்டலராயர், மண்டராயர் மண்ணியார், மண்ணியர், மண்ணையார், மண்ணையர், மண்டலார் மண்ணவேளார்

மணியர், மணியார் மனவாரர்

மன்னயர், மன்னியர் மண்ணிராயர், மணிக்கராயர் மண்மலைக்காளியார் மண்வெட்டிக்கூழ்வழங்கியார், மண்வெட்டியில்கூழ்வாங்கி மதப்பிரியர், மதப்பிலியர், மதியாப்பிரியர் மதமடக்கு மநமடக்கு மந்திரியார், மந்தியார் மயிலாண்டார், மயிலாண்டர் மருங்கராயர், பருங்கைராயர், கைராயர் மலையர் மலையமான் மலையராயர் மலையரையர் மலைராயர், மலையராயர் மல்லிகோண்டார் மழநாடர் மழவராயர் மழவர் மழவாளியார், மழுவாடியார் மனமஞ்சார் மன்னையர், மன்னையார், மன்னையர், மன்னியர், மண்ணியர், மண்ணையர் மன்னசிங்கர், மன்னசிங்காரியார் மன்னதேவர் மன்னவேளார், மன்னவேள் மன்றாடியார்

மா

மாங்கொண்டார் மாங்காடர் மாங்காட்டார் மாகாளியார் மாதராயர், மாதைராயர், மாதுராயர், மாத்துராயர் மாதவராயர் மாதிரார் மாதையர், மாதயர் மாதையாண்டார், மாதயாண்டார் மாத்துளார் மாநாடர், மாடர், மாந்தராயர் மாந்தையரையர், மாந்தரையர் மாவிழிசுத்தியார் மாதையுண்டார்

மாப்பிரியர் மாமணக்காரர் மாம்பழத்தார், பழத்தார் மாலையிட்டார் மால் மாவலியார் மாவாண்டார், மாவாண்டர் மாவாளர் மாவாளியார், மாவாட்சியார் மாவுடையார் மாவெற்றியார், மாவெட்டியார் மாளிகைசுற்றியார் மாளிச்சுற்றியார், மாளிச்சுத்தியார் மாளிச்சர் மாளுவராயர் மானங்காத்தார் மானத்தரையர், மானம்விழுங்கியார், மானவிழுங்கியார், மானமுழுங்கியார் மான்சுத்தியார்

மி

மின்கொண்டார் மின்னாண்டார் மின்னாண்டார் மின்னாளியார் மீனவராயர்

மு எழுத்தில் பட்டப்பெயர்கள்

முடிகொண்டார், முடியைக்கொண்டார் முட்டியார் முணுக்காட்டியார், முனுக்காட்டியார் முண்டார், முண்டர் முதலியார் முத்துக்குமார் மும்முடியார், மும்முடியர் முருகர் முறையார் முனைகொண்டார், முனைமுண்டார் முனைதரையர், முனையதிரியர் முனையாளியார், முனையாட்சியார்

மூ

மூங்கிலியார், மூங்கிலியர் மூரியர், மூரையர், 1651. முறையார் மூவர், மூசி மூசியார் மூட்டார்

மூன்றர், மூக்குவெள்ளையர் மூவராயர்கண்டார் மூவரையர் மூவாளியார் மூவெற்றியார், மூவெட்டியார், மூளைவெட்டியார் மூவேந்த்ரையர் மூன்றாட்சியார், மூண்டவாசியார், மூண்டாசியார்

மெ

மெய்க்கன்கோபாலர் மெனக்கடார், மெனக்கடர் மெட்டத்தேவர்

மே

மேல்கொண்டார், மேற்கொண்டார், மேல்கொண்டார் மேல்நாடர், மேனாடர் மேல்நாட்டுராயர், மேனாட்டரையர் மேனாட்டுத்தேவர்

மொ எழுத்தில் பட்டப்பெயர்கள்

மொட்டதேவர் மொட்டாளியார், மொட்டாளியர், மொட்டாணியர் மோகூர்ப்பிரியர், மோதப்பிலியர்

வயிராயர், வயிரவர் வங்கணர், வங்கத்தரையர் வங்கர் வங்கராயர், வங்கனராயர் வஞ்சிராயர், வடுராயர், வடுகராயர் வண்டர், வாண்டார் வண்டதேவர் வம்பாளியார் வர்மர் வலங்கொண்டார், வலங்கண்டார் வல்லக்கோன் வல்லங்கொண்டார், வல்லுண்டார் வல்லத்தரசு, வல்லத்தரசர் வல்லத்தரையர், வல்லவரையர் வல்லமாண்டார் வல்லவராயர் வல்லரண்டார் வல்லாண்டார், வல்லண்டார் வல்லாளதேவர், வள்ளாளதேவர், வல்வாளதேவர் வல்லாளியார், வல்லாடியார், வல்லிடியார் வழியார் வழுதியார் வழுவாளியார், வழுவாடியார், வழுவாட்சியார் வலங்கூரர் வளத்தாதேவர் வளம்பர், வளவர்

வள்ளையர் வள்ளைராயர் வன்னிகொண்டார் வன்னிமுண்டார், வண்ணிமுண்டார், வண்ணியமுண்டார் வன்னியர், வன்னியனார்

வா

வாச்சார், வாச்சியார் வாச்சுக்குடையார், வாச்சிக்குட்டியர் வாஞ்சிராயர்,

வாட்கொண்டார், வாள்கொண்டார் வாட்டாட்சியார், வாட்டாச்சியார், வாட்டாச்சியர் வாணக்கர் வணதரையர், வாணதிரையர், வாணதிரியர், வாணாதிரியர் வாணாதிராயர் வாணரையர் வாண்டாப்பிரியர், வண்டப்பிரியர் வாண்டையார், வண்டயர் வாண்டராயர், வண்டைராயர் வாப்பிரியர், வாப்பிலியர் வாயாண்டார் வாயாளர் வாயாளியார், வாயாடியார், வாயாட்சியார். வாய்ப்புலியார் வாளாடியார் வாலியர் வாலிராயர் வாவுடையர் வாளமரர் வாளாண்டார் வாளாளர் வாளாளியார், வாளாட்சியார் வாளுக்குவலியர், வாளுக்குவேலியர் வாளுடையர் வாளுவராயர் வாள்கொளியார் வாள்பிரியர், வாட்பிரியர் வாள்ராயர் வாள்வெற்றியார், வாள்வெட்டியார், வாளால்வெட்டியார்

வி

விக்கிரமத்தார் விக்கிரமத்தரையர் விசயதேவர், விசயத்தேவர், விசாதேவர், விசயராயர், விசையராயர், விசராயர், விசுவராயர், விசுவரார் விசயாண்டார், விசலர் விசலப்பிரியர் விசலராயர் விசலாண்டார், விசலண்டார், விசலாளர் விசலாளியர், விசாலாளியார், விசலாட்சியார், விசாலாட்சியார் விசலுடையர் விசல்கொண்டார், விசலுண்டார், விசல்தேவர் விசல்நாடர் விசுவராயர் விண்டுராயர், விஞ்சிராயர், விஞ்சைராயர் விருதராசர் விருதராசபயங்கரர் விருதலார், விருதுளார் விலாடத்தரையர் வில்லர் வில்லதேவர் வில்லவதரையர், வில்லவதரையனார் வில்லவராயர், வில்வராயர் விழுப்பாதராயர் விளப்பர் விற்பனர், விட்டுணர் விற்பன்னராயர் வினவற்பிரியர், வினைத்தலைப்பிரியர், வினைத்தலைப்பிலியர்

வீ

வீசண்டார் வீசாண்டார் வீச்சாதேவர் வீண்டுராயர், வீணதரையர், வீணாதிரியர் வீரங்கொண்டார், வீரமுண்டார், வீரமுள்ளார் வீரப்பிரியர், வீரப்பிலியர், வீரப்புலியார் வீராண்டார், வீராண்டியார் வீணாதரையர், வீணாதிரியர், வீனைதிரையர்

வெ எழுத்தில் பட்டப்பெயர்கள்

வெக்காலியார் வெங்களபர், வெங்களப்பர் வெங்கிராயர் வெட்டுவராயர் வெட்டுவார், வெட்டுவர், வெட்டர் வெண்டர், வென்றார் வெண்டதேவர், வெண்டாதேவர் வெண்ணுமலையார், வெண்ணுமலையர் வெள்ளங்கொண்டார் வெள்ளடையார். வெள்ளடையர் வெள்ளதேவர் வெள்ளப்பனையர் வெள்ளாளியார், வெள்ளாணியார் வெற்றியர், வெறியர்

வே எழுத்தில் பட்டப்பெயர்கள் வேங்கைப்பிரியர், வேங்கைப்பிலியர் வேங்கைராயர், வேங்கையன் வேங்கையாளியார், வேட்கொண்டார் வேட்ப்பிரியர் வேணாடர் வேணுடையார், வேணுடையர் வேம்பராயர் வேம்பையன் வேம்பர் வேம்பாண்டார் வேளாண்டார் வேளார் வேளாளியார், வேளாட்சியார் வேளுடையார், வேளுடையர் வேளுரார், வேளுரர் வேள் வேள்ராயர்

வை

வைகராயர், வையராயர் வைதும்பர், வைதுங்கர், வைதும்பராயர், வைராயர்,

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Price, Pamela G. (1996). Kingship and Political Practice in Colonial India (Reprinted ed.). Cambridge University Press. pp. 62, 87, 193. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-52155-247-9.
  2. Dirks, Nicholas B. (1993). The Hollow Crown: Ethnohistory of an Indian Kingdom (2nd ed.). University of Michigan Press. p. 242. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780472081875.
  3. 3.0 3.1 செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி.
  4. கள்ளர் சரித்திரம். சென்னை: Jegam & Co, Dodsin Press. 1923. pp. 60.
  5. Journal Of Madras University Vol 81. 1990. pp. 84.
  6. சைவ சித்தாந்த அகராதி.
  7. கள்ளர் சரித்திரம். pp. [ 92].
  8. Formation and Transformation of Power in Rural India. 1996. p. 422.
  9. திருவாரூர் மாவட்டத் தொல்லியல் வரலாறு. 2000. p. 85.
  10. அறந்தாங்கித் தொண்டைமான்கள். 2008. p. 91.
  11. தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும குறிப்புரையும் (முதல் தொகுதி). 1989. p. 422.
  12. CASTES AND TRIBES OF SOUTHERN INDIA. 1909. p. 345.
  13. யாழ்ப்பாணக் குடியேற்றம். 1982. p. 6.
  14. Ethnographic Notes in Southern India. 1906. pp. 559.
  15. Zarilli, Philip B. (2001). "India". In Green, Thomas A. (ed.). Martial Arts of the World: An Encyclopedia. A – L. Vol. 1. ABC-CLIO. p. 177. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57607-150-2.
  16. Historical Dictionary of the Tamils (2nd ed.). The Scarecrow Press. 2007. p. 105.
  17. Tamilaham In The 17th Century (1956). p. 71.
  18. Tamilaham In The 17th Century (1956). 1956. p. 187.
  19. Saints, Goddesses and Kings: Muslims and Christians in South Indian Society. 1989. p. 57.
  20. Private diary of Ananda Ranga Pillai vol.8. 1922. p. 9.
  21. The War Of Coromandell=https://archive.org/details/in.ernet.dli.2015.91443/page/n180/mode/1up. p. 208.
  22. Yusuf Khan The Rebel Commandant. 1914. p. 99.
  23. Yusuf Khan : the rebel commandant. 1914. p. 97.
  24. திருமோகூர் தலவரலாறு. p. 18.
  25. "பாண்டிநாட்டுத் திருப்பதிகள்".
  26. "ஆலவாய்".
  27. "Maruthu Pandiyars".
  28. "Taking the road less travelled". The Hindu. 2013-10-24. http://www.thehindu.com/books/books-authors/taking-the-road-less-travelled/article5268387.ece. பார்த்த நாள்: 2016-10-07. 
  29. A General History of the Pudukkottai State. 1916. p. 294.
  30. South Indian Rebellion. 1971. p. 272.
  31. – CHANGE OF GROUP FROM ‘D’ TO GROUP ‘A’ IN THE LIST of B.C.s, MUDIRAJ, MUTRASI, TENUGOLLU CASTE (1994). Castes and Tribes of Southern India (PDF). Vol. pdf. Andhra Pradesh: Government Press. p. 1. பார்க்கப்பட்ட நாள் 2012-10-10. {{cite book}}: line feed character in |last1= at position 12 (help)CS1 maint: multiple names: authors list (link)
  32. குற்றப்பரம்பரை சட்டம், நவம்பர் 25-2017,புதியதலைமுறை
  33. "ரோசாப்பூ துரை ". ஆனந்த விகடன். https://www-vikatan-com.cdn.ampproject.org/v/s/www.vikatan.com/amp/story/government-and-politics%2Fmiscellaneous%2F159179-freedom-fighter-george-joseph-birthday?amp_js_v=a6&_gsa=1&usqp=mq331AQZKAFQCrABIPIBDzAxMjAxMDI3MjExMjAwMA%3D%3D. 
  34. "விருமாண்டி தேவர்". The Hindu. 2014-07-29. https://tamil.oneindia.com/news/india/evidence-first-indian-settlers-found-tamil-nadu-207186.html. பார்த்த நாள்: 2020-11-20. 
  35. அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதலமைச்சர் கருணாநிதி விளக்கம் சென்னை, ஜுலை.10-2009, தமிழ்கூடல், தட்ஸ் தமிழ், நக்கீரன்
  36. மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு. 1976. pp. 115.
  37. ந. மு. வேங்கடசாமி நாட்டார் (1923). கள்ளர் சரித்திரம். சென்னை: Jegam & Co, Dodsin Press. p. 91.
  38. Thanjavur Maratha Kings.
  39. "Alvars". இந்து தமிழ் (நாளிதழ்). {{cite web}}: no-break space character in |publisher= at position 14 (help)
  40. சோழர் வரலாறு. 1947. pp. [158].
  41. "18 சித்தர்கள்". Dailyhunt.
  42. "சோமசுந்தரேஸ்வரர் தேர்". புதிய தலைமுறை.
  43. "கொங்கிவயல் முத்துகருப்பய்யா ஆண்டவர்". தினமலர்.
  44. அண்ணாவின் பார்வையில்.
  45. "சி.எம். முத்து". தினமணி.
  46. "வேட்பாளர் தகவல்கள்". Dailyhunt.
  47. "Actor Sivaji Ganesan". Daily FT.
  48. "அனுராதா: பளுதூக்கும் போட்டி". பிபிசி(தமிழ்).
  49. "கபடி... கபடி...!". தினத்தந்தி.
  50. "உசிலம்பட்டி வீரர் சாதனை". இந்து தமிழ் (நாளிதழ்). {{cite web}}: no-break space character in |publisher= at position 14 (help)
  51. "Ex-feudal baron tests clout in Karaikudi for a sixth term". Times of India.
  52. Cage of Freedom: Tamil Identity and the Ethnic Fetish in Malaysia. 2007. p. 298.
  53. "Sasikala". Indian Express.
  54. கள்ளர் பட்டங்கள் வரலாறு. 1976. pp. 115.
  55. ந. மு. வேங்கடசாமி நாட்டார் (1923). கள்ளர் சரித்திரம். சென்னை: Jegam & Co, Dodsin Press. pp. 154.

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளர்_(இனக்_குழுமம்)&oldid=4148227" இலிருந்து மீள்விக்கப்பட்டது