விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு125
கொள்கை | தொழினுட்பம் | அறிவிப்புகள் | புதிய கருத்துக்கள் | ஒத்தாசைப் பக்கம் |
தயவுசெய்து, புதிதாகத் தொகுக்கும்முன் பின்வருவனவற்றைக் கருத்திற் கொள்ளுங்கள்:
| புதிய கருத்துக்கள் எனும் ஆலமரத்தடிக் கிளையின் கீழ் புதிய கருத்துக்கள், ஆலோசனைகள் பற்றி உரையாடலாம்.
« பழைய உரையாடல்கள் |
தொடர்ச்சியான ஐ.பி தடை
தொகு- 112.134.74.54
- 112.134.75.153
- 112.134.72.29
- 112.134.75.141
- 112.134.5.58
- 112.134.4.184
- 112.134.72.91
- 112.134.3.118
- 112.134.1.151
- 112.134.75.202
மேலே குறிப்பிட்ட ஐ.பிகள் விசமத் தொகுப்பினை தொடர்ந்தும் செய்து கொண்டிருப்பதால் மேற்குறித்த ஐ.பிகளின் தொடர்களுக்கு தொடர் தடை (Range blocks) விதிக்கலாம் என பரிந்துரைக்கிறேன். உங்கள் கருத்தினையும் தெரிவியுங்கள். @Neechalkaran and Ravidreams: --AntanO (பேச்சு) 16:15, 7 ஏப்ரல் 2020 (UTC)
- 16 பிட் தடை செய்தால் (112.134.0.0 - 112.134.255.255) 65536 ஐ.பிகள் தடைக்குள்ளாகும். --AntanO (பேச்சு) 16:25, 7 ஏப்ரல் 2020 (UTC)
- விசமத்தொகுப்பு எடுத்துக்காட்டு தர முடியுமா? விசமத் தொகுப்பு அனைத்தும் தமிழில் இருந்தால் இத்தனை ஆயிரம் IP க்களை முடக்குவது சரியாக இருக்குமா என்று எண்ண வேண்டும். @Shanmugamp7: - இரவி (பேச்சு) 19:46, 7 ஏப்ரல் 2020 (UTC)
- விசமத் தொகுப்பு நின்றபடில்லை. மேலே பட்டியலிடப்பட்டுள்ள ஐ.பிகளின் பங்களிப்பிலும் விசமத்தொகுப்புக்களைக் காணலாம். @Shanmugamp7 and Ravidreams: --AntanO (பேச்சு) 19:34, 8 ஏப்ரல் 2020 (UTC)
- மேலே பட்டியல் இட்டுள்ள IP மட்டும் (இதே போல் பிறகு வருவனவற்றை ஒவ்வொன்றாகவும்) தடை செய்தால் போதாதா? IP பற்றிய தொழில்நுட்ப விவரங்கள் தெரியாது என்பதால் இதனை என் ஐயமாக முன் வைக்கிறேன். 65536 IP என்பது 65536 potential வெவ்வேறு தனி நபர்களைக் குறிப்பது ஆகாதா? --இரவி (பேச்சு) 23:53, 11 ஏப்ரல் 2020 (UTC)
- பார்கக mw:Help:Range_blocks, /16 ஐ தடை செய்தால் 65,536 ஐபி முகவரிகள் தடை செய்யப்படும். இதனை சிறிய வரம்பாக மாற்றி தடை செய்யலாம். 112.134.74.54/22 , 112.134.5.58/21 இந்த வரம்பைத் தடை செய்தால் 3000 ஐபி முகவரிகள் மட்டுமே தடை செய்யப்படும். இன்னும் சிறு வரம்புகளாகவும் மாற்றி தடை செய்யலாம். வரம்பைக் கணிக்க இது உதவும். இரவி பொதுவாக இப்படிப்பட்ட ஐபி முகவரிகள் மாறிக்கொண்டே (Dynamic) இருக்கும், ஒரு முகவரியை-தடை செய்தால் அவர்கள் Router ஐ மறுதொடக்கம் செய்தாலோ, தானாக ஒரிரு நாட்களிலோ அது மாறிவிடும்-சண்முகம்ப7 (பேச்சு) 03:37, 15 ஏப்ரல் 2020 (UTC)
- மேலே பட்டியல் இட்டுள்ள IP மட்டும் (இதே போல் பிறகு வருவனவற்றை ஒவ்வொன்றாகவும்) தடை செய்தால் போதாதா? IP பற்றிய தொழில்நுட்ப விவரங்கள் தெரியாது என்பதால் இதனை என் ஐயமாக முன் வைக்கிறேன். 65536 IP என்பது 65536 potential வெவ்வேறு தனி நபர்களைக் குறிப்பது ஆகாதா? --இரவி (பேச்சு) 23:53, 11 ஏப்ரல் 2020 (UTC)
- விசமத் தொகுப்பு நிலை கட்டுப்பட்டதாகத் தெரியவில்லை. ஐபி முகவரிகள் தொடர் தடையும் சிக்கல் உள்ளதுதான். நிர்வாகிகள் உடன் கவனம் செலுத்தினால் கட்டுப்படுத்தலாம். இந்த விசமத் தொகுப்பு தொடர்பில் கௌதம் சம்பத்துடன் மேலும் சில நிர்வாகிகள் கவனிப்பது சிறப்பாக இருக்கும். ஏன் பல நிர்வாகிகள் இணைப்பில் இருந்தும் விசமத் தொகுப்புகளை கண்டுகொள்வதில்லை என எனக்கு விளங்கவில்லை (?). @Shanmugamp7 and Ravidreams: --AntanO (பேச்சு) 16:15, 19 ஏப்ரல் 2020 (UTC)
- விசமத் தொகுப்புகள் கட்டுக்குள் வரவில்லை என்றால் User:shanmugamp7 கூறியபடி 3000 முகவரிகள் அல்லது எவ்வளவு குறைவாக முடியுமோ அவ்வளவு முகவரிகள் தடை செய்யலாம். இவற்றைக் கவனித்து நீக்குவதற்கு நன்றி. வேறு பல ஈடுபாடுகளால் விக்கிப்பணியில் கை கொடுக்க இயலாததற்கு வருந்துகிறேன். --இரவி (பேச்சு) 18:49, 19 ஏப்ரல் 2020 (UTC)
- இந்த விசமத் தொகுப்புகளை செய்யும் நபர் இலங்கையை சேர்ந்தவர். இவர் உபயோகித்த அனைத்து Ip முகவரியும் Srilanka Telecomயை சேர்ந்த Broad band Ip முகவரி ஆகும். இந்த ip முகவரிகளை உபயோகப்படுத்திய இடம் கம்பகா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களை குறிக்கிறது. மேலே உள்ள தகவலில் இருந்து, தடை செய்ய முடியுமா என்று பாருங்கள். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 19:41, 19 ஏப்ரல் 2020 (UTC)
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்
தொகுவணக்கம். மயிலாடுதுறை மாவட்டம் அண்மையில் உருவாக்கப்பட்ட பின்னர் Suresh myd என்ற பயனர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் பற்றிய கட்டுரைகளில் சிலவற்றில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் என்ற வகையில் கட்டுரையின் உள்ளடக்கத்திலும், தகவற்பெட்டியிலும் மாற்றங்கள் செய்து வருகிறார். அதனடிப்படையில் அந்தந்த பகுப்பில் சேரும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் என்ற புதிய பகுப்பினை உண்டாக்கி அந்தந்த இடத்தில் மாற்றி அமைத்து வருகிறேன் என்பதைத் தகவலுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:42, 6 ஏப்ரல் 2020 (UTC)
நீக்கிய பதிவை முழுமை செய்தும் தவறாகுமா?
தொகுபாடலாக்கமும் இசையும் (https://ta.wikipedia.org/s/8j3q) என்ற பதிவு நீக்கப்பட்டிருப்பினும் "இசைப்பாவிற்கான இலக்கண அமைவாக..." மீள இணைத்திருக்கிறேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.
காஜீ (KasiJeeva)
மறைக்கப்பட்ட ஐபி – பயன்படுத்த வேண்டிய கருவிகள்
தொகுஅனைவருக்கும் வணக்கம்
இந்த செய்தி மிகவும் முக்கியமானது. தவறான நோக்கத்துடான திருத்தங்களையும், மற்ற பயனர்கள் மீதான சீண்டல்களையும் தவிர்ப்பதற்கான கருவிகளைப் பற்றியது.
2001ஆம் ஆண்டில் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டதை அறிவீர்கள். அன்றில் இருந்து இன்று வரை, இணையப் பயனர்களின் தனியுரிமைத் தேவைகள் மாறுபட்டு வருவதை காண்கிறோம். எடுத்துக்காட்டாக, பக்கங்களின் திருத்த வரலாற்றிலும் அண்மைய மாற்றங்கள் பக்கத்திலும் உள்நுழையாத பயனர்களின் ஐபி முகவரிகள் காட்டப்படுகின்றன. விக்கிமீடிய நிறுவனம் இந்த ஐபி முகவரிகளை மறைப்பதற்கான திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஐபி முகவரிகளை ஏன் மறைக்க வேண்டும்? ஐபி முகவரிகளை கொண்டு ஒருவரைப் பற்றிய தகவல்களைப் பெற்றுவிட முடியும். நம்முடைய பங்களிப்புகளில் சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதற்காக இம்முடிவை எடுத்துள்ளோம்.
பயனர்களின் மீதான சீண்டல்களையும், தவறான நோக்கத்துடனான திருத்தங்களையும் தவிர்ப்பதற்காக சில யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுவரைக்கும் இதற்காக நாம் எடுத்த நடவடிக்கைகளை இனிமேல் எளிதாக்கவே இவை.
இந்த யோசனைகளை பரிசீலிக்க உங்கள் உதவி தேவை. இவற்றை செயல்படுத்துவதால் எந்த வகை சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும் என நினைக்கிறீர்கள்? இவற்றால் செலவினங்கள் கூடுமா? இவற்றால் ஏற்படும் பயனகள் என்னென்ன? இவற்றில் எவை உங்களுக்கு பயன்தரக் கூடியவை, எவை பயன் தராதவை என நினைக்கிறீர்கள்?
ஐபி தகவல்
தொகுஇவற்றை செயல்படுத்துவதால் எந்த வகை சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும் என நினைக்கிறீர்கள்? இவற்றால் செலவினங்கள் கூடுமா? இவற்றை எவ்வாறு மேம்படுத்தலாம்? இவற்றில் எவை உங்களுக்கு பயன்தரக் கூடியவை, எவை பயன் தராதவை என நினைக்கிறீர்கள்?
பயனர் தொகுத்த போது இருந்த இடத்தை பற்றிய தகவல் ஆங்கிலத்தில் மட்டும் இருந்தால், உங்கள் மொழிச் சமூகத்திற்கு பயன் தருமா? இடங்களைப் பற்றிய விவரங்களை மொழிபெயர்த்துத் தரும் கருவிகளை பயன்படுத்துகிறீர்களா? இருப்பின், அவற்றை இங்கே குறிப்பிட முடியுமா?
தொடர்புடைய திருத்தக் கருவிகள்
தொகுஇவற்றை செயல்படுத்துவதால் எந்த வகை சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும் என நினைக்கிறீர்கள்? இவற்றால் செலவினங்கள் கூடுமா? இவற்றை எவ்வாறு மேம்படுத்தலாம்? இவற்றில் எவை உங்களுக்கு பயன்தரக் கூடியவை, எவை பயன் தராதவை என நினைக்கிறீர்கள்?
தொடர்ந்து தவறாக நடக்கும் பயனர்களைப் பற்றிய தகவல் சேமிப்பு
தொகுஇவற்றை செயல்படுத்துவதால் எந்த வகை சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும் என நினைக்கிறீர்கள்? இவற்றால் செலவினங்கள் கூடுமா? இவற்றை எவ்வாறு மேம்படுத்தலாம்? இவற்றில் எவை உங்களுக்கு பயன்தரக் கூடியவை, எவை பயன் தராதவை என நினைக்கிறீர்கள்?
நாங்கள் குறிப்பிடாத எவ்விதத்திலாவது ஐபி தகவலை பயன்படுத்துகிறீர்களா?
தொகுm:IP Editing: Privacy Enhancement and Abuse Mitigation, m:IP Editing: Privacy Enhancement and Abuse Mitigation/Improving tools – உங்கள் மொழிச் சமூகம் நாங்கள் குறிப்பிடாத எவ்விதத்திலாவது ஐபி தகவலை பயன்படுத்துகிறதா? எவ்வகையில்? கருவிகளை மேமடுத்துவதற்காகவும், புதிய கருவிகளுக்காகவும் பரிந்துரைகளை வழங்குவீர்களா? /Johan (WMF) (பேச்சு) 16:59, 15 ஏப்ரல் 2020 (UTC)
கோவிட் 19
தொகுமலையாள விக்கியில் கொரோனோ தொடர்பான பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
കോവിഡ്-19: ജാഗ്രതയാണ് ഏറ്റവും നല്ല പ്രതിരോധം
അനാവശ്യമായി കണ്ണിലും മൂക്കിലും വായിലും സ്പർശിക്കാതിരിക്കുക
വ്യക്തികൾ തമ്മിൽ സുരക്ഷിത അകലം പാലിക്കുക, വൈറസ് ബാധ തടയാൻ മുഖാവരണം ഉപയോഗിക്കുക
കൈകൾ സോപ്പ് ഉപയോഗിച്ച് വൃത്തിയായി കഴുകി സൂക്ഷിക്കുക
കൈകൾ അണുവിമുക്തമാക്കാൻ ഹാൻഡ് സാനിറ്റൈസർ ഉപയോഗിക്കുക
സാമൂഹികമാദ്ധ്യമങ്ങളിലെ സന്ദേശങ്ങൾ വിശ്വസിക്കുന്നതിന് മുമ്പ് അവയുടെ സ്രോതസ്സ് ഉറപ്പുവരുത്തുക.
இதன் தமிழாக்கம்,
கோவிட் -19 : எச்சரிக்கையே சிறந்த பாதுகாப்பு
கண்கள், மூக்கு மற்றும் வாயை தேவையில்லாமல் தொடுவதைத் தவிர்க்கவும்.
தனிநபர்களிடையே பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கவும், வைரஸ் பரவாமல் தடுக்க முகமூடியைப் பயன்படுத்தவும்.
சோப்பு மற்றும் தண்ணீரில் மூலம் கைகளை சுத்தமாக வைத்திருங்கள்.
உங்கள் கைகளை கிருமி நீக்கம் செய்ய கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்தவும்
சமூக ஊடகங்களில் உள்ள செய்திகளை நீங்கள் நம்புவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இதுபோலவே தமிழ் விக்கிப்பீடியாவிலும் பதாகையை அமைக்கலாம்.-இரா. பாலாபேச்சு 12:34, 27 ஏப்ரல் 2020 (UTC)
காளீஸ்வரர் காளையார்கோயில்
தொகுவணக்கம், காளீஸ்வரர் காளையார்கோயில் மற்றும் காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் என்ற இரு தலைப்புகளில் உள்ளவை ஒரே கோயிலைப் பற்றியதாகும். அடையாளம் தெரியாத பயனர் 2401:4900:4833:90d6::122b:e3ec இரண்டிலும் மாறி மாறி சில மாற்றங்களைச் செய்துள்ளார். சிலவற்றை மீளமைக்க முடிந்தது. சிலவற்றை மீளமைக்க முடியவில்லை. அவை உரிய மேற்கோளுடன் காணப்படவில்லை. உரிய மேற்கோள்களின்றி சில அடையாளம் தெரியாத பயனர் அவ்வப்போது இவ்வாறு பல பதிவுகளில் செய்து வருகின்றனர். (அவ்வப்போது திரு. பயனர்:Gowtham Sampath உள்ளிட்ட பலர் அதனை மீளமைத்து வருகின்றனர். அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.) இவ்விரு பதிவுகளில் இந்த அடையாளம் தெரியாத பயனர் செய்த மாற்றத்தை சரிசெய்ய ஆவன செய்ய வேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:41, 30 சூன் 2020 (UTC)
- @பா.ஜம்புலிங்கம்: ஆயிற்று ஐயா-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:57, 30 சூன் 2020 (UTC)
புதுப்பயனர்களைத் தொகுக்கத்தூண்டும் திட்டம்
தொகுஅண்மையில் வியட்டுநாமிய விக்கியர் சிண்டி (இவர் விக்கிமீடியா வளர்ச்சித்திட்டத உறுப்பினர்) புதுப்பயனர் தொகுக்கத்தூண்டும் பணிகளைப் பற்றிக்குறிப்பிட்டார். நான் படித்துப் பார்த்தவரை இவ்வசதியினால் சிறிது பயன் கிடைக்கும்போலிருக்கிறது. இதை வெள்ளோட்டம் விட்ட விக்கிப்பீடியாக்களில் 1.7% கூடுதல் தொகுப்புகள் இதன்வழி வந்துள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பான எனது ஐயங்களை திட்டத்தின் பேச்சுப்பக்கத்தில் கேட்டு வருகிறேன். இதைத் தமிழ் விக்கியில் அறிமுகப்படுத்துவதைப் பற்றி அனைவரது கருத்துக்களையும் அறிய விரும்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 14:59, 6 ஆகத்து 2020 (UTC)
விக்கிப்பீடியா பயிற்சி
தொகுஅனைவருக்கும் வணக்கம், நான் கடந்த ஒரு வாரமாக கோவை ச்றீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விக்கிப்பீடியா குறித்த பயிற்சியில் பங்கேற்ற புதிய பயனர். தினம் ஒரு பொருண்மையில் பயிற்சியளிக்கப்பட்டவிதம் சிறப்பாக அமைந்தது. விக்கிப்பீடிய நிர்வாகிகளுடன் கலந்துரையாடியதில் மிக்க மகிழ்ச்சி. பயிற்சியாளர்கள் பயில்பவர்களின் மட்டத்திற்கு இறங்கிவந்து பயிற்சியளித்தது சிறப்பு. குறிப்பாக தகவலுழவன் அறிமுகத்தினை குறிப்பிட விரும்புகிறேன். எங்களுடைய கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் தந்து விக்கீப்பீடியா பங்களிப்பில் எங்களைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றவிதம் பாராட்டுக்குரியது. எமது கல்லூரியின் (மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி) பெயரானது தவறாக பதிவாகி இருந்ததை நீக்க உதவியற்கு நன்றி. நன்றியுடன் --சத்திரத்தான் (பேச்சு) 01:13, 25 ஆகத்து 2020 (UTC)
மொழிபெயர்ப்புக் குறித்த ஐயங்கள்
தொகு- ஒரு கட்டுரையை மொழிபெயர்க்கும் பொழுது அங்கேயே வெளியிடுவதனால் என்ன பயன்?--முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ) (பேச்சு) 01:35, 28 ஆகத்து 2020 (UTC)
- ஒரு கட்டுரையை மொழிபெயர்க்கும் இடத்தில் வெளியிடுவதற்கும் அக்கட்டுரையை புதிய கட்டுரையாக உருவாக்குவதற்கும் என்ன வேறுபாடு?--முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ) (பேச்சு) 01:35, 28 ஆகத்து 2020 (UTC)
- சிறப்பு:Content Translation இப்பக்கத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கும் தனியாக வெளியிடுவதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. இரண்டும் அடிப்படையில் இரண்டு வகையான யுக்தி. முதல் வகையானது எந்திர மொழி பெயர்ப்பின் துணை கொண்டு உருவாவது அடுத்த வகையானது அவ்வாறு இல்லாமல் தனியாக நாம் மொழிபெயர்ப்பது/புதிதாக எழுதி சேர்ப்பது. பகுப்பு, படங்கள், உள்ளிணைப்பு, விக்கித்தரவு போன்றவை முதல் வகையில் எளிதாக செய்ய முடியும் கூடுதலாக முழுமை அடையாத மொழிபெயர்ப்பை draftஆக சேமித்துக் கொள்ளமுடியும். எந்திர மொழிபெயர்ப்பைக் கொஞ்சம் பயன்படுத்தலாம் என எண்ணுவோருக்கும், விரைவாக ஒரு கட்டுரையை முடிக்கவேண்டும் என நினைபோருக்கும் முதல் வகை பயன்படும். கூடுதல் தகவல், கூடுதல் மேற்கோள், புதிய கட்டுரை அமைப்பு என மேம்படுத்த நினைப்போருக்கு இரண்டாம் வகை பயன்படும். -நீச்சல்காரன் (பேச்சு) 09:25, 28 ஆகத்து 2020 (UTC)
- நன்றி நீச்சல்காரன்.--முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ) (பேச்சு) 00:16, 29 ஆகத்து 2020 (UTC)
கட்டுரை தொகுப்பாக்க ஐயங்கள்
தொகு- வழிமாற்றுதெலுங்கு இலக்கணம் இந்தக் கட்டுரையில் தொகுக்கும் பொழுது, சில வார்ப்புருக்கள் அவ்வாறே இடம் பெற்றுவிடுகின்றன. அவ்வாறு ஏன் இடம்பெறுகின்றன? சான்று - (தெலுங்கில் மூன்று பால்கள் உள்ளன. வார்ப்புரு:Gapஎ-டு. வார்ப்புரு:Gap#ஆண்பால் (புருஷ லிங்கமு), வார்ப்புரு:Gap#பெண்பால் (ஸிரீ லிங்கமு), வார்ப்புரு:Gap#அலிப்பால் (நபும்ஸக லிங்கமு).)
பயனர் பெயரை மாற்றுவது எப்படி?
தொகு- எனது பயனர் பெயர் தமிழில் உள்ளது. அதனை ஆங்கிலத்தில் மாற்றுவதற்கான வழிமுறை உள்ளதா?--முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ) (பேச்சு) 01:07, 29 ஆகத்து 2020 (UTC)
மேல் விக்கியில் பயனர் பக்கத்தை உருவாக்குவது எப்படி?
தொகு- மேல் விக்கியில் பயனர் பக்கத்தை உருவாக்கும் வழிமுறையையும் அதனைப் பிற திட்டங்களில் இணைக்கும் வழிமுறையையும் கூறுங்கள்--முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ) (பேச்சு) 13:10, 30 ஆகத்து 2020 (UTC).
இவ்வாறான உதவிகளுக்கு விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் ஏற்புடையது. இங்கு புதிய கருத்துக்களை பதிவிடுவது ஏற்புடையது. நன்றி. --AntanO (பேச்சு) 02:25, 7 செப்டம்பர் 2020 (UTC)
தொகுத்தல் போர்
தொகுபிக் பாஸ் தமிழ் 4 கட்டுரையில் தேவையற்ற தொகுத்தல்கள் நடைபெறுகிறது. நிருவாகிகள் தற்காலிகமாக இக்கட்டுரையைப் பூட்டுமாறு கோருகிறேன்.-இரா. பாலாபேச்சு 14:00, 17 சனவரி 2021 (UTC)
- ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 16:03, 17 சனவரி 2021 (UTC)
பெருநகர் பகுதி
தொகுபெருநகர் பகுதி (metropolitan / metro) இங்கு அப்படியே மெட்ரோ எழுதப்படுகிறது. எ.கா: சென்னை மெட்ரோ. இதற்கு சரியான வழிகாட்டல் தேவை. காண்க: பேச்சு:சென்னை மெட்ரோ --AntanO (பேச்சு) 02:28, 15 பெப்ரவரி 2021 (UTC)
- @AntanO: வணக்கம் அண்ணா. பொதுவாக (metropolitan / metro) என்றால் தமிழில் பெருநகர் பகுதியை குறிக்கும், (உ+தா:சென்னை பெருநகரம்) இது சென்னையின் மதிப்பீட்டை குறிக்கிறது.
ஆனால் metro railway station என்று வரும்போது பெருநகர் தொடருந்து நிலையம் அல்லது பெருநகர் பகுதி தொடருந்து நிலையம் எழுதலாமா என்றால் அது சந்தேகத்துக்குரியது தான். தமிழகத்தில் chennai metro என்பதை, அப்படியே தமிழில் சென்னை மெட்ரோ என்றே அனைத்து செய்திதாள்களிலும், இணையதளத்திலும் மற்றும் சென்னை மெட்ரோவின் அதிகாரபூர்வ இணையதளத்திலும் எழுதுகின்றனர், அப்படி இருக்கும் போது metro என்பதை தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. metro rail என்பதற்கு விரைவுப்போக்குவரத்து என்று மற்றொரு பெயரும் உள்ளது. -- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 03:49, 16 பெப்ரவரி 2021 (UTC)
பார்வை மாற்றுத்திறன் பயனர்களுக்கான உதவி ஆவணம்
தொகு15 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முறையாக விக்கிப்பீடியா வருபவர்களுக்கு எழுத்துரு முதல் பல்வேறு அடிப்படைத் தகவல்களைக் கொண்டதாக நமது வழிகாட்டல் பக்கமிருந்தது. அது போல இன்றைக்குத் தேவையான தகவலைத் தொகுத்து, வளரும் தொழில்நுட்பத்திற்கேற்பவும், பரவலான பயனர்களை அடையும் பொருட்டும் விக்கிப்பீடிய இடைமுக அமைப்பையும், உதவிப் பக்கங்களையும் மேம்படுத்தும் தேவையுள்ளது. பல ஆண்டுகளாகவே கைப்பேசி இடைமுகத்தைப் பயன்படுத்தியும், அது சார்ந்த பயிற்சிகளையும் கொடுத்தும் வருகிறோம். ஆனால் அவைசார்ந்த உதவிப் பக்கங்கள் இல்லை. அவற்றை உருவாக்க வேண்டும், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் பயனர் கையேடும், அவர்களுக்கும் ஒத்திசைவான பக்கமாக https://www.w3.org/TR/WCAG20/ இந்தப் பரிந்துரைப்படி இயன்றவற்றை மேம்படுத்த வேண்டும். விக்கியைப் பயன்படுத்தும் போது பொதுவாகக் கைப்பேசியில் அணுகக்கூடிய சிக்கல்கள் என்னென்ன? அவற்றிற்கு மாற்றாக நீங்கள் கையாளும் முறை என்ன? பார்வை மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன? அவர்களுக்கான சிறந்த திரைபடிப்பான் எவை? வேறு ஆலோசனைகளையும் வழங்கலாம். இவற்றைக் கொண்டு உதவிப் பக்கங்களை உருவாக்குவோம். -நீச்சல்காரன் (பேச்சு) 18:59, 24 மே 2021 (UTC)
- தங்களது முயற்சிக்குப் பாராட்டு--Neyakkoo (பேச்சு) 10:11, 25 மே 2021 (UTC)
- தமிழ் விக்சனரியில் பயனர் பேச்சு:Td.dinakar என்பவருக்கு 2013 ஆம் ஆண்டு முதல் விக்சனரி குறித்த பயிற்சி அளித்துள்ளேன். அவர் இந்தியாவின் முதல் (இந்த உடற்திறனுள்ள ) IRPS அதிகாரி. சென்னையில் தென்னக இரயில்வேயில் உள்ளார். அவர் வடபழனி வீட்டுக்குச் சென்றுள்ளேன். 2016 ஆம் ஆண்டு உறைவிட விக்கிப்பீடியராக இருந்த போது, நானும் சென்னை என்பதால், அவரிடம் அடிக்கடி உரையாடுவது உண்டு. எனது வாழிடம் இப்பொழுது சேலம். கடந்த 5வருடங்களாக தொடர்பு இல்லை. தொலைபேசி எண் மாற்றிவிட்டார். முதல் இந்திய விக்கிமாநாடு நடந்த போது, அறிமுகமான இந்தி பங்களிப்பாளர் ஒருவரை சந்தித்தேன். சேலம் KPN பேருந்து அமைப்பில் பயணச்சீட்டு தரும் ஒருவரும் இத்தகைய மாற்றுத்திறனாளி. இப்பொழுது அவர் அங்கு இல்லை. இத்தகையோரை உருவாக்கும் அமைப்பு உள்ளது. ஆய்ந்தால் தகவல்கள் கிடைக்கும். தினகர் மராத்தியர் என்றாலும், தமிழில் இவருக்கென தனி விசைப்பலகையை வடிவமைத்துள்ளார். பைத்தான் வழி இவரைப் போன்றோர் வடிவமைத்துள்ள மென்பொருளைப்(NVDA) பயன்படுத்தியிருந்தார். மாற்றம் வேண்டுமென்று கேட்டிருந்தார். அப்பொழுது பைத்தான் குறித்து ஒன்றும் தெரியாது. முன்னெடுப்பு எடுத்தமைக்கு நன்றி. அழையுங்கள் உடன் இணைகிறேன். உரிய தொடர்பு எண்களை பெற்று தங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
-
அனிரூத்(User:अनिरुद्ध कुमार), இந்தி
-
தினகர்
இடக்கரடக்கல்
தொகுவிக்கிப்பீடியாவில் இடக்கரடக்கல் எதுவும் கிடையாதே? இடக்கரடக்கலால் தமிழிலுள்ள பல சொற்களைப் புறந்தள்ள வேண்டி ஏற்படுகிறதல்லவா.--பாஹிம் (பேச்சு) 05:22, 12 சூலை 2021 (UTC)
ஆசிய மாதம் போட்டி
தொகுஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் ஆசிய மாதம் போட்டி நடத்தப்படும். இந்த முறை ஏன் அது நடத்தப்படவில்லை? --TNSE Mahalingam VNR (பேச்சு) 15:56, 23 நவம்பர் 2021 (UTC)
பங்களிப்பாளர் அறிமுகம்
தொகுமுன்னர் முதல்பக்கத்தில் காட்சிப்படுத்திய விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு தொடரவில்லை. இடையில் மிகவும் சிறப்பாகப் பங்களிக்கும் பயனர்கள் பலர் விக்கியில் எழுதி வருகிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்த இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்தப் பரிந்துரைக்கிறேன். @Hibayathullah: நீங்கள் சிறப்பாகச் சில காலம் தொடர்ந்தீர்கள், அதை மீண்டும் செயல்படுத்த இயலுமா? அல்லது என்ன உதவிகள் வேண்டும் என்று குறிப்பிட இயலுமா? பயனர் கி.மூர்த்தி இன்னும் 26 கட்டுரைகளில் 6000 கட்டுரைகளைத் தொடங்கியவர் என்ற இலக்கினை அடையவுள்ளார். இது புதிய மைல்கல். இச்செய்தியுடன் மீண்டும் அறிமுகத் திட்டத்தைத் தொடருவோம் எனப் பரிந்துரைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 09:12, 24 திசம்பர் 2021 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 18:09, 25 திசம்பர் 2021 (UTC)
- விருப்பம்--மகாலிங்கம்--TNSE Mahalingam VNR (பேச்சு) 08:28, 2 சனவரி 2022 (UTC)
- விருப்பம்--ஹிபாயத்துல்லா (பேச்சு) 14:10, 17 சனவரி 2022 (UTC)
விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்திற்கு கீழ்காணும் பயனர்கள் பெயரைப் பரிந்துரைக்கிறேன்:
--நந்தகுமார் (பேச்சு) 18:22, 17 சனவரி 2022 (UTC)
- இவ்வறிமுகங்களை வரும் வாரங்களில் செய்கிறேன். மைல்கல் இலக்கான ஐயாயிரம் கட்டுரைகளை உருவாக்கிய பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தியை மீண்டும் அறிமுகம் செய்து அடுத்தடுத்த வாரங்களில் புதியவர்களை அறிமுகம் செய்யவுள்ளேன். -நீச்சல்காரன் (பேச்சு) 19:21, 17 பெப்ரவரி 2022 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 23:50, 17 பெப்ரவரி 2022 (UTC)
6000 கட்டுரை தொடங்கியவர்
தொகு6000 கட்டுரைகளைத் தொடங்கி புதிய இலக்கினை அடைந்துள்ள கி.மூர்த்தி பற்றி எபிபி செய்தி நிறுவனத்தில் கட்டுரையாகவும் நேர்காணலாகவும் வெளிவந்துள்ளது. வாழ்த்துக்கள். -நீச்சல்காரன் (பேச்சு) 08:09, 2 சனவரி 2022 (UTC)
- வாழ்த்துகள் கி.மூர்த்தி. --TNSE Mahalingam VNR (பேச்சு) 08:29, 2 சனவரி 2022 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:26, 2 சனவரி 2022 (UTC)
- விருப்பம்--பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 16:25, 18 பிப்ரவரி 2022 (UTC)
- @கி.மூர்த்தி: வாழ்த்துகள் அண்ணா...-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 07:49, 3 சனவரி 2022 (UTC)
- @கி.மூர்த்தி: வாழ்த்துகள் ஐயா...--தாமோதரன் (பேச்சு) 01:26, 18 சனவரி 2022 (UTC)
முரண்பாடுகள்
தொகுபிறமொழிச் சொற்கள்
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் பிறமொழிச்சொற்கள் தவிர்க்க முடியாத நிலையில் அதிக பயன்பாட்டில் உள்ளது. பிறமொழிச்சொற்களில் மொழி முதலெழுத்துக்கான விதிமுறைகளை பின்பற்றுவதில் சிக்கல்கள் உள்ளன. நபர்கள் தொடர்பான கட்டுரைகளில் எம். எஸ். பாஸ்கர் என்பதை எம். எசு. பாசுகர் என்று மாற்ற வேண்டியுள்ளது. ஸ்டிக்கர், ஸ்டார் என பல சொற்கள் தமிழுக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டியுள்ளது. இந்த மாற்றங்களைத் தவிர்த்து அச்சொற்களுக்கென்று தனி நிறமிட வேண்டுகிறேன். --சா அருணாசலம் (பேச்சு) 07:29, 20 பெப்ரவரி 2022 (UTC)
- நபர்களின் பெயர்கள் தொடர்பாக எவ்வித கட்டாயமான விதிமுறைகளும் இல்லை. எம். எசு. பாசுகர் என்று மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஸ்டிக்கர், ஸ்டார் என்ற சொற்களை அவை ஒரு திரைப்படத்தின் பெயராகவோ அல்லது நிறுவனத்தின் பெயராகவோ இருந்தால் நாம் தமிழ் முறையில் மாற்றி எழுதலாம். அல்லாது விட்டால் தகுந்த தமிழ்ச்சொற்களை எழுத வேண்டும். ஆனாலும் இவ்வாறானவற்றிற்குத் தனி நிறமிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. அவ்வாறிடுவது கட்டுரையின் அழகைப் பாதிக்கும். எந்த மொழி விக்கிப்பீடியாவிலும் இவ்வாறான நடைமுறை இல்லை.--Kanags \உரையாடுக 09:59, 20 பெப்ரவரி 2022 (UTC)
- கட்டாய விதிமுறை இல்லாத போது நபர்களின் பெயர்கள் தமிழ்முறைப்படி மாற்றப்படுவதை தடுக்க வேண்டும். இதனால் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கலாம். பெயர்களுக்கு சொந்தக்காரர்கள் ஏன் என் பெயரை இப்படி மாற்றீனீர்கள்? என்று கேட்க வாய்ப்புள்ளது. தமிழ்த் திரைப்படங்களில் இயக்குனர்கள் என்ன பெயரிட்டார்களோ அதே பெயரிடுதல் நல்லது என்று எண்ணுகிறேன். -- சா அருணாசலம் (பேச்சு) 10:37, 20 பெப்ரவரி 2022 (UTC)
நிர்வாக பகிர்வு
தொகுநிர்வாகிகள் 34 பேரில் தீவிரமாக நிர்வகிப்பவர்கள் சிலருக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. புதிய பயனர்கள் பேச்சு பக்கங்களில் பண்பற்று எழுதுகிறார்கள். பயனர் ஒருவரை தடை செய்வதற்கு முன் அவர்கள் தொகுக்குகின்ற கட்டுரையை பூட்டி விடுவது, பின்னர் அவர்களின் பேச்சு பக்கங்களில் அறிவிப்பின்றி தடை செய்வது, போன்று நடைமுறைப்படுத்துங்கள். நிர்வாக பணிகளை முடிந்தவரை நிர்வாகிகள் அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி. --சா அருணாசலம் (பேச்சு) 18:26, 5 ஏப்ரல் 2022 (UTC)
- @சா அருணாசலம்: நீங்கள் குறிப்பிடும் சம்பவம்/பயனர் எதுவெனத் தெரியவில்லை ஆனால் ஒவ்வொரு நிகழ்வைப் பொறுத்து முடிவை எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் புதியவர்கள் மீது தடை விதிப்பது இத்தகைய தன்னார்வப் பணிகளை வளர்க்காதென நினைக்கிறேன். இயன்றவரைப் பயனருக்குப் புரியவைப்போம் முடியாத போதே தடைபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 20:47, 6 ஏப்ரல் 2022 (UTC)
- @Neechalkaran: தடைப் பதிகை மட்டுமே கடுமையான நடவடிக்கையாக இருக்கும். AbstractGuy99, JamalJL. இவ்விரு பயனர்களில், முதல் பயனர் அவர் உருவாக்கிய கட்டுரை நீக்கயதற்காக கடும் சொற்களைப் பயன்படுத்தி உள்ளார். இன்னொருவர் தடைப் பதிகைக்குப் பின் கடும் சொற்களைப் பயன்படுத்தி உள்ளார். எப்படியும் அவர்கள் உருவாக்கிய கட்டுரைகள் தேவையற்றது என அவர்களுக்கு உணர வைத்து பின்பு நீக்கலாம். உடனுக்குடன் நீக்காமல் நீக்கல் வேண்டுகோளுடன் அவர்கள் உருவாக்கிய கட்டுரைக்கு ஏற்றவாறு முன்மாதிரி கட்டுரைகளின் இணைப்பை தந்து 1 மாத கால நேரம் வழங்கி, பின்பு கட்டுரைகளை ஒரே நாளில் நீக்கிவிடலாம். உள்ளடக்கங்களை மாற்றுகிறார் என்றால் குறிப்பிட்ட கட்டுரை நிர்வாகிகள் மட்டும் தொகுக்கும் வகையில் பூட்டி விடலாம். சா அருணாசலம் (பேச்சு) 02:18, 7 ஏப்ரல் 2022 (UTC)
ந.ந.ஈ.தி (LGBT) என்னும் பால்புதுமை
தொகுவிக்கிப்பீடியா இதுவரை LGBT தொடர்பான கட்டுரைகளுக்கு தரப்படுத்தப்பட்ட கலைச்சொற்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போதைக்கான பொதுப்புரிதலாக ந.ந.ஈ.தி (நம்பி, நங்கை, ஈரர், திருநர்) என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறோம். இதில் பலருக்கும் மாற்றுக்கருத்துக்கள் உள்ளன. ந.ந.ஈ.தி சமூகமும் இச்சொற்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் சமீபத்தில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் பால்புதுமை தொடர்பான சொற்களுக்கான வழிகாட்டும் கையேடு தொடர்பான ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது. விக்கியில் உள்ள பால்புதுமை பக்கங்கள் அனைத்தையும் அக்கையேட்டில் குறிப்பிட்டுள்ள பதங்களுக்கு மாற்றுவதே முறை. மேலே இணைப்பு தரப்பட்டுள்ள மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற ஆணை எண் W.P.No. 7284 of 2021 (தேதி: 18.02.2022)ஐத் தரவிறக்கி அதில் 14ம் பக்கம் முதல் கொடுக்கப்பட்டுள்ள சொற்களஞ்சியத்தின் சொற்களில் யாருக்கேனும் மாற்றுக்கருத்து இருப்பின் தெரியப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். விக்கியின் பக்கத் தலைப்புகள், பகுப்புகள், கட்டுரையின் சொற்கள் ஆகியவற்றில் பலவாறு பாவிக்கப்படும் ந.ந.ஈ.தி தொடர்பான சொற்கள் அனைத்தையும் அக்கையேட்டில் உள்ளவாறு மாற்றவும் அனைவரின் உதவியை எதிர்பார்க்கிறேன்.
- ஆங்கிலத்தில் பரவலான பயன்பாட்டில் உள்ள சில சொற்களுக்கு நீதிமன்றம் பரிந்துரைத்த பதங்கள்:
Intersex - ஊடுபால்; gender - பாலினம்; gender identity - பாலின அடையாளம்; gender non conforming person - பாலின அடையாளங்களுடன் ஒத்துப் போகாதவர்; transgender person - திருநர்; transman, transgender man - திருநம்பி; transwoman, transgender women - திருநங்கை; cis gender - ஆதிக்கப் பாலினம், சிஸ்; sexuality - பாலியல்பு; sexual orientation - பாலீர்ப்பு; heterosexuality - எதிர்பாலீர்ப்பு; homosexuality - ஒருபாலீர்ப்பு, தன்பாலீர்ப்பு; bisexuality - இருபாலீர்ப்பு; pansexuality - அனைத்துப் பாலீர்ப்பு, பலபாலீர்ப்பு; asexuality - அபாலீர்ப்பு; queer - பால்புதுமை; LGBTQIA+ - குயர், பால்புதுமையினர். -CXPathi (பேச்சு) 07:33, 8 ஏப்ரல் 2022 (UTC)
துப்புரவுப் பணி
தொகுவிக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு - இதனை கருத்திற் கொள்ளலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:03, 26 சூன் 2022 (UTC)
- விருப்பம்--அருளரசன் (பேச்சு) 15:14, 26 சூன் 2022 (UTC)
- விருப்பம்- இணைந்து இயன்றதைச் செய்கிறேன்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 13:25, 3 சூலை 2022 (UTC)
- விருப்பம்--ஸ்ரீதர். ஞா (✉) 15:35, 3 சூலை 2022 (UTC)
பகுப்பு:பகுப்பில்லாதவை என்பதனை பார்வையிட்டு பணி செய்தால், பெருமளவில் துப்புரவு செய்ய இயலும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:00, 3 சூலை 2022 (UTC)
மேற்கோளாக காட்டப்படும் இணையத்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள்
தொகுஇந்திய தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் தொடர்ந்து மாற்றங்கள் அடிக்கடி நடந்துகொண்டே இருக்கும். உள்பக்கங்கள் தொடர்மாறுதலுக்கு உள்ளாகின்றன. எனவே நாம் காட்டியிருக்கும் மேற்கோள்கள் வேலை செய்யாது. இதற்கான தீர்வு குறித்து வழி காண வேண்டும். உதாரணம்: என். கிட்டப்பா --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:46, 15 சூலை 2022 (UTC)
- இதற்கு, archive.org தளம் பயன்படும். இங்கு பார்க்கவும். இதுபோல் புதிய மேற்கோள்களை இணைத்துவிட்டால் தற்போது உள்ளது போன்ற பிணக்கு வராது. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 22:48, 15 சூலை 2022 (UTC)
- InternetArchiveBot என்ற தானியங்கி இந்தப் பணியைத் தான் செய்து வருகிறது.--Kanags \உரையாடுக 22:52, 15 சூலை 2022 (UTC)
தமிழக ஊராட்சிகள் தொடர்பாக பயனர் ராஜசேகர் எழுதி வரும் கட்டுரைகள் தொடர்பான குழப்பம்
தொகுபயனர்:Mereraj என்பவர் கடந்த சில தினங்களாக உருவாக்கி வரும் தமிழக ஊராட்சி தொடர்பான கட்டுரைகள் எதற்காக உருவாக்கப்படுகின்றன? முன்னதாக நீச்சல்காரன் தனது தானியக்கக் கருவி மூலம் உருவாக்கிய கட்டுரைகள் ஏற்கெனவே இருக்கும் போது இதன் அவசியமென்ன? ஒரே ஊராட்சிக்கு இரண்டு கட்டுரைகள் ஏன்? நிர்வாகிகள் கவனிக்க.--TNSE Mahalingam VNR (பேச்சு) 13:35, 20 ஆகத்து 2022 (UTC)
TNSE Mahalingam VNR ஒரு ஊராட்சிக்கு இரு கட்டுரைகள் இருந்தால் அவற்றில் ஒன்று கண்டிப்பாக நீக்கப்படவேண்டும். நான் பார்த்தவரையில் ஒரே பெயரில் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள ஊராட்சி கட்டுரைகளை அவர் உருவாக்கி வருவதாக தெரிகிறது. என் பார்வைக்கு தவறான கட்டுரை படாமல்கூட இருந்திருக்கலாம். ஒரே ஊராட்சிக்கு இரு கட்டுரைகள் இருந்தால் ஓரிரண்டை இங்கு சுட்டிக் காட்டினால் அதுபற்றி விவாதிக்க சற்று உதவியாக இருக்கும், நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 15:40, 20 ஆகத்து 2022 (UTC)
பயனர் ராஜசேகர் தான் ஒரே பெயரில் வெவ்வேறு மாவட்டங்களில் ஊராட்சிகள் இருப்பதாகவும், ஏற்கெனவே உருவாக்கப்படாத விடுபட்ட ஊராட்சிக் கட்டுரைகளை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளார். தெளிவுபடுத்திக் கொள்வதாகவே இந்த ஐயத்தை எழுப்பினேன். ஒரே தலைப்பிலான இரண்டு கட்டுரைகள் உருவாக்கப்படக்கூடாது என்பதற்காகவே கேட்டேன். நன்றி.--TNSE Mahalingam VNR (பேச்சு) 16:24, 20 ஆகத்து 2022 (UTC)
கூடுதல் கவனக்குவியம் பெற்றுள்ள துப்புரவுப் பணிகள்
தொகு- 2009 ஆண்டில் பதிவேற்றம் செய்யப்பட்ட சுமார் 1000 கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மைப்படுத்துதல் குறித்து கருத்துகளும் பரிந்துரைகளும் இங்கு வரவேற்கப்படுகின்றன.
- 2017 ஆம் ஆண்டில் தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட கட்டுரைகளை திருத்தி, துப்புரவு செய்து, செம்மைப்படுத்தி வருகிறோம். இந்தப் பணியினை விரைவுபடுத்துதல் குறித்து கருத்துகளும் பரிந்துரைகளும் இங்கு வரவேற்கப்படுகின்றன. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:27, 28 ஆகத்து 2022 (UTC)
உதவிக் காணொளிகள்
தொகுவணக்கம், விக்கிப்பீடியா தொடர்பான உதவிக் காணொளிகள் இங்கு உள்ளன. இது தவிர வேறு ஏதேனும் பணிகள் காணொளிகளாக இருந்தால் உதவியாக இருக்கும் எனக் கருதினால் அதனை அறியத் தாருங்கள், புதியதாக உருவாக்கலாம். நன்றி
மும்பை விக்கிப் பயனர் தேவை
தொகுமும்பை டாட்டா சமூக அறிவியல் கழகத்தில் தமிழ் விக்கிப்பீடியா குறித்துக் கலந்துரையாடவும் வாய்ப்பிருந்தால் பயிற்சியளிக்கவும் ஒரு குழுவினர் உதவி கேட்டுள்ளனர். ஏற்கனவே சில முன்னாள் பயனர்களைத் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. ஆர்வமுள்ள விக்கிப் பயனர்கள் யாரேனும் மும்பையில் இருந்தால் அறியத் தரவும். -நீச்சல்காரன் (பேச்சு) 14:40, 15 செப்டம்பர் 2022 (UTC)
அக்டோபர் 2022: அதிக தொகுப்புகள்
தொகுஅக்டோபர் 14 - 10,415 தொகுப்புகள், அக்டோபர் 15 - 24,582 தொகுப்புகள், அக்டோபர் 16 - 4,220 தொகுப்புகள் என நடந்துள்ளது. எவ்வகையான தொகுப்புகள் என அறிய இயலவில்லை. அக்டோபர் 2022 --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:42, 13 திசம்பர் 2022 (UTC)
- நீங்கள் குறிப்பிட்டுள்ள தரவுகள் தானியங்கித் தொகுப்புகளையும் உள்ளடக்கியது. AswnBot மட்டும் 40,000 இற்கும் அதிகமான தொகுப்புகளை செய்துள்ளது.--Kanags \உரையாடுக 08:07, 13 திசம்பர் 2022 (UTC)
@Kanags: உதவிக்கு நன்றி! அக்டோபர் 2022 மாதத்தை தேர்ந்தெடுத்துப் பார்ப்பதில் எனக்கு சிரமம் இருந்தது. தொகுப்புகள் குறித்து இப்போது புரிந்துகொண்டேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:26, 13 திசம்பர் 2022 (UTC)
@Aswn: அக்டோபர் 2022 மாதத்தில் AswnBot 40,146 தொகுப்புகளை செய்திருப்பதாக அறிகிறோம். அக்டோபர் 2022இல் செய்யப்பட்ட தொகுப்புகளே ஒரு மாதத்தில் செய்யப்பட்ட அதிகபட்ச தொகுப்புகள் (all time high) என்பதாக தரவுகள் சொல்கின்றன. எனவே, AswnBot மூலம் எவ்வகையான தொகுப்புகளை செய்தீர்கள் என்பதனை அறிய ஆர்வம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:26, 13 திசம்பர் 2022 (UTC)
- @Selvasivagurunathan m: AswnBot மூலம் இருவகையான தொகுப்புகள் மேற்கொள்ளப்பட்டன,
- 25000+ மேற்கோள் வார்ப்புரு parameters பிழைகள் திருத்தம் - மேற்கோள் வார்ப்புரு புதுப்பித்தமையால் கட்டுரைகளில் மேற்கோள் பிழைகள் அதிகமாக காணப்பட்டன. குறிப்பாக இரண்டு - deprecated parameter மற்றும் invalid parameter பிழைகள். இவை தானியங்கி மூலம் தற்போதைய parameter-களுக்கு திருத்தப்பட்டன. இவற்றை வார்ப்புரு மூலமே திருத்த முயன்றேன், ஆனால் தொடர்ந்து பராமரிக்க தேவை இருக்கும் என்பதால் ஆங்கில விக்கி மரபிலேயே தொடரலாம் என்று தானியங்கியினை இயக்கினேன்.
- 10000+ மேற்கோள் திகதிகள் பிழைத்திருத்தம் - மேற்கோளிற்கான Lua Module பயன்படுத்துவதால் தமிழ் மாதங்கள் மற்றும் சில format-களை ஏற்காமல் கட்டுரைகளில் பிழைகளை காட்டியது. பொதுவாக check accessdate என்று பிழை காட்டியது. தமிழ் மாதங்களை Module:Citation/CS1/Configuration-இனை திருத்தி சரிசெய்தேன். Format-களை தானியங்கி மூலம் சீரமைக்கப்பட்டன.
- இரண்டும் சில நூறு திருத்தங்கள் மூலம் தீவிர சோதனை செய்யப்பட்டே தானியங்கி இயக்கப்பட்டது. அனைத்து திருத்தங்களுக்கும் தக்க தொகுப்பு சுருக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி --அஸ்வின் (பேச்சு) 17:36, 23 திசம்பர் 2022 (UTC)
கைப்பாவை (தகவலுக்காக)
தொகுSnthilakammarist - சுமார் 20 கைப்பாவை கணக்குகள். இன்னும் உருவாக்கப்படலாம். AntanO (பேச்சு) 04:54, 12 சனவரி 2023 (UTC)
மேற்கோள்கள்
தொகுகோவை மற்றும் மதுரையில் அண்மையில் நடந்த பயனர் சந்திப்புகளில் கட்டுரைகளில் கொடுக்கப்படும் மேற்கோள்கள் குறித்து உரையாடினோம். அதில் சில ஊடகங்களின் பக்கங்களைச் சந்தா இல்லாமல் படிக்கமுடியாது என்பதை யாரோ சுட்டிக் காட்டியும் பேசினார். அச்சிக்கல்களுக்குத் தீர்வளிக்க விக்கிமீடிய அறக்கட்டளையின் https://wikipedialibrary.wmflabs.org/ என்கிற திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அறக்கட்டளையே ஊடகத்தினரிடம் ஒப்பந்தமிட்டு அந்த வளங்களைப் பயனர்கள் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்துகிறார்கள். எனவே கட்டுரை மேற்கோளிற்குத் தேவைப்படும் எந்தெந்த ஊடகங்கள்(உலக அளவில்) கட்டணமுறையில் உள்ளனர் என்று பரிந்துரைக்கக் கோருகிறேன். நான் தி இந்து (ஆங்கிலம் & தமிழ்), விகடன் குழும இதழ்களைப் பயன்படுத்துகிறேன், பரிந்துரைக்கிறேன். அதுபோல உங்களுக்குத் தேவைப்படும் ஊடகங்களைப் பட்டியலிடலாம். ஏற்கனவே இலவசமாக உள்ள ஊடகங்களையோ அச்சில் மட்டும் உள்ள ஊடகங்களையோ பரிந்துரைக்க வேண்டாம். அறிவியல் இதழோ, நாளிதழோ, மாத இதழோ, பதிப்பகமாகவோ இருக்கலாம் அவர்கள் உள்ளடக்கம் இணையத்தில் இருப்பதாக இருக்க வேண்டும்.-நீச்சல்காரன் (பேச்சு) 06:24, 9 பெப்ரவரி 2023 (UTC)
- நீலம் மற்றும் காலச்சுவடு ஆகிய இரு இதழ்களைப் பரிந்துரைக்கிறேன். தமிழக வரலாறு, சமூகவியல், இலக்கியம், நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றுக்கான ஆதாரங்களையும், வல்லுநர் கருத்துக்களையும் இவ்விதழ்கள் வழியாக மேற்கோள் காட்டமுடியும். நன்றி! -CXPathi (பேச்சு) 03:34, 12 பெப்ரவரி 2023 (UTC)
போட்டிகளும், கலைக்களஞ்சியத்தின் தரமும்.
தொகுஉலக அரங்கில் தமிழ் விக்கியை வெளிப்படுத்தவும், கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் போட்டிகள் தேவை. ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் பாதிப்பிற்கு உள்ளாகிறது எனும் கவலையை தெரிவிப்பது நமது கடமை. பங்களிப்பாளர்கள் கூடுதல் கவனம் கொள்ளவேண்டும் என்பது எனது வேண்டுகோள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:24, 3 மார்ச் 2023 (UTC)
- என்னென்ன மாதிரியான குறைகள் ஏற்படுகின்றன என்று பட்டியலிட்டால் அதைக் குறைக்க முனையலாம். பிற மொழிகளில் உள்ளது போல முழு இயந்திர மொழிபெயர்ப்பைப் போட்டிக்காகப் பயன்படுத்தும் போக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லை. மொழிபெயர்ப்பில் பிழைகள் உள்ளனவா?-நீச்சல்காரன் (பேச்சு) 17:08, 3 மார்ச் 2023 (UTC)
கேட்க முற்பட்டதற்கு நன்றி.
- மொழிபெயர்ப்புக் கருவி உதவியைக் கொண்டு வழக்கமான தருணங்களில் உருவாக்கப்படும் கட்டுரைகளில் ஆசிரியரே கூடுதல் கவனம் செலுத்தி, உடனடியாக மேம்படுத்துகிறார். போட்டியில் கலந்துகொள்ளும் போது, அடுத்தக் கட்டுரைக்கு கவனம் சென்றுவிடுகிறது. இதனைப் பரவலாக 80% கட்டுரைகளில் காண முடிகிறது. இக்கட்டுரைகள் தவறான சொற்றொடர் அமைப்புகளைக் கொண்டிருப்பதால், படித்துப் புரிந்துகொள்ளும் கட்டுரை அமைப்பில் இல்லை.
- ஆங்கிலக் கட்டுரையில் 'மேலும் பார்க்கவும்' துணைத் தலைப்பின் கீழ், விக்கி உள்ளிணைப்புடன் பட்டியலிட்டுள்ளார்கள். அதனையும் மொழிபெயர்த்து, இங்கு பட்டியலிடுவது வாசகர்களுக்கு உதவப் போவதில்லை. (தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே கட்டுரை இருந்தால் பட்டியலிட்டு உள்ளிணைப்பு தரலாம்).
- சிவப்பு உள்ளிணைப்புகளை நீக்க வேண்டும் என்பதில் முனைப்பில்லை.
- கட்டுரைத் தலைப்புகளில் கூடுதல் கவனம் தேவை.
- சில நேரங்களில் எந்தப் பகுப்பும் இடப்படுவதில்லை.
- உரிய பகுப்புகள் இடப்படுவதில்லை. (எடுத்துக்காட்டாக பிறந்த ஆண்டு, இறந்த ஆண்டு,வாழும் நபர்கள் என்பவை மட்டும் போதாது, குறிப்பிட்ட துறைக்குரிய பகுப்பு இட வேண்டும்)
- சுட்டிக்காட்டலை சிலர் எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் கருத்திற் கொள்வதில்லை
குறிப்பு: வெளிப்படையாக எனது கருத்துகளை முன்வைத்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:52, 3 மார்ச் 2023 (UTC)
- விருப்பம்--கு. அருளரசன் (பேச்சு) 00:15, 4 மார்ச் 2023 (UTC)
- இங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியன. நடுவர்கள் ஒரு கட்டுரை அதற்கான தகுதியினைக் கொண்டிருக்கவில்லை என்றால் அதனை மேம்படுத்த குறிப்பிடலாம். உம். மாசி சடையன். பிற மொழிக் கட்டுரைகளை மொழிப்பெயர்ப்பதில் உள்ள சிக்கல்கள் 1) பொருத்தமான தமிழ் சொற்கள் விக்சனரியிலும் கிடைப்பதில்லை. 2) பெயர்ச்சொற்களை தமிழ்படுத்தாமல் உச்சரிப்பு அடிப்படையில் மொழிபெயர்ப்பதை தவிர வேறு வழியில்லை.
இது போன்ற போட்டிக் காலங்களில் தான் கட்டுரைகளின் எண்ணிக்கையினை அதிகரிக்க இயலும். தரமும் முக்கியம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. பிறமொழிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையினை தொகுப்பு அடைந்தவுடன் அதனை நிறைவு செய்து விடுகின்றனர். ஆனால் தமிழ் போட்டியாளர்கள் பெரும்பாலும் முழு கட்டுரையினையும் மொழிபெயர்த்து வழங்குகின்றனர். குறிப்பிட்ட தரத்திற்கு கீழ் கட்டுரை இருப்பின் நடுவர்கள் அதற்கு ஒப்புதல் தராமல் காரணத்தினை கூறி சரிசெய்ய அறிவுறுத்தலாம்.--சத்திரத்தான் (பேச்சு) 00:47, 4 மார்ச் 2023 (UTC)
- @Selvasivagurunathan m: குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. மேலே குறிப்பிட்டவற்றில் சிலவற்றை மேம்படுத்துவதன் மூலம் சரிசெய்யலாம் உதாரணம் சிவப்பு இணைப்புகளை நீக்கல், பகுப்பிடச் சுட்டிகாட்டல் போன்ற இடங்களில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் அல்லது எதிர்காலத்தில் பயனர்களே மேம்படுத்திக் கொள்ளலாம். அதனால் கட்டுரை பிழையாகாது. ஆனால் கட்டுரைகளில் உள்ள வாக்கியப் பிழைகள், பொருட்பிழைகளில் கவனம் கொள்ள வேண்டும் என்பதை ஏற்கிறேன். தமிழ் விக்கிப்பீடிய விதிகள் பொதுவாகவே ஆர்வகொண்டு பங்களிக்கும் பயனர்களுக்கு இனிய அனுபவமாகவும் இருக்க வேண்டும் விக்கிப்பீடிய உள்ளடக்கத் தரமும் குறையாதவாறும் இருக்க வேண்டும். கவனத்தில் கொள்வோம்.- நீச்சல்காரன் (பேச்சு) 04:03, 5 மார்ச் 2023 (UTC)
- @Selvasivagurunathan m:தங்களது கருத்திற்கு நன்றி. விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (கொள்கை)#மொழிபெயர்ப்புக் கருவியில் கட்டுப்பாடுகள் இந்தப் பக்கத்தில் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கவும்.ஸ்ரீதர். ஞா (✉) 15:21, 5 மார்ச் 2023 (UTC)
- @Selvasivagurunathan m: குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. மேலே குறிப்பிட்டவற்றில் சிலவற்றை மேம்படுத்துவதன் மூலம் சரிசெய்யலாம் உதாரணம் சிவப்பு இணைப்புகளை நீக்கல், பகுப்பிடச் சுட்டிகாட்டல் போன்ற இடங்களில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் அல்லது எதிர்காலத்தில் பயனர்களே மேம்படுத்திக் கொள்ளலாம். அதனால் கட்டுரை பிழையாகாது. ஆனால் கட்டுரைகளில் உள்ள வாக்கியப் பிழைகள், பொருட்பிழைகளில் கவனம் கொள்ள வேண்டும் என்பதை ஏற்கிறேன். தமிழ் விக்கிப்பீடிய விதிகள் பொதுவாகவே ஆர்வகொண்டு பங்களிக்கும் பயனர்களுக்கு இனிய அனுபவமாகவும் இருக்க வேண்டும் விக்கிப்பீடிய உள்ளடக்கத் தரமும் குறையாதவாறும் இருக்க வேண்டும். கவனத்தில் கொள்வோம்.- நீச்சல்காரன் (பேச்சு) 04:03, 5 மார்ச் 2023 (UTC)
விருப்பம். @Sridhar G: தரத்தினை மேம்படுத்த நல்லதொரு செயலாக்க முயற்சி. வரவேற்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:56, 7 மார்ச் 2023 (UTC)
பயிற்சி வகுப்புகள்
தொகுசுமார் 40 பேருக்கும் அதிகமானோர் தமது கணக்கினை இன்று துவக்கியுள்ளார்கள். காண்க:கணக்குத் துவக்கம். தமிழ் நாட்டில் பயிற்சி வகுப்புகள் எவையேனும் நடக்கின்றனவா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:33, 17 மார்ச் 2023 (UTC)
- ஆலமரத்தடி, புலனக் குழு, முகநூல் ஆகியவற்றில் பயிற்சி குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அனைவருமே கைப்பேசியின் வழியாகத் தான் கணக்கினை உருவாக்கியுள்ளார்கள். இந்தப் பயனர்கள் யாரும் இதுவரை பங்களிக்கவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம். ஸ்ரீதர். ஞா (✉) 15:35, 17 மார்ச் 2023 (UTC)
தேவையற்ற தொகுத்தல்கள்
தொகுபயனர்:Amherst99 என்ற பயனர் கட்டுரைகளில் அடைப்புக் குறிக்குள் உள்ள ஆங்கிலப் பெயரின் முகப்பெழுத்தை மட்டும் சிறிய எழுத்தாக மாற்றிவருகிறார். இதைத் தவிர வேறெந்த தொகுப்புகளையும் இவர் செய்யவில்லை. இதை மட்டுமே தொடர்ந்து செய்துவந்துள்ளார். இதேபோல பல மொழிகளிலும் செய்துவருகிறார். இவர் எதற்காக இ்வாறு செய்கிறார் என்று புரியவில்லை.--கு. அருளரசன் (பேச்சு) 16:04, 19 மார்ச் 2023 (UTC)
- சிறிது காலம் தடை செய்யலாம். ஸ்ரீதர். ஞா (✉) 16:19, 19 மார்ச் 2023 (UTC)
- அவரது தொகுப்புகள் சரியே. அடைப்புக்குறிக்குள் உள்ள ஆங்கிலச் சொல்லின் (அது ஒரு proper noun ஆக இல்லாதவிடத்து, உ+ம்: America) முதல் எழுத்து சிறியதாகவே (monkeypox) இருக்க வேண்டும். அத்துடன், அந்த ஆங்கிலச் சொல்லை சாய்வெழுத்திலேயே எழுத வேண்டும்.--Kanags \உரையாடுக 07:38, 20 மார்ச் 2023 (UTC)
- வணக்கம்,Kanags ஆங்கிலத்தில் தலைப்புகள் இடும்போது Proper noun ஆக இருந்தாலும் Common noun ஆக இருந்தாலும் முகப்பெழுத்துக்களைத் தான் பயன்படுத்துகின்றனர் உதாரணம்: Monkeypox, MediaWiki மென்பொருளுக்கு ஏற்ப ஆங்கில விக்கிப்பீடியாவின் கட்டுரையின் தலைப்பு சிறிய எழுத்துக்களில் துவங்கக் கூடாது. காண்க. எனது புரிதல் தவறு எனில் சுட்டிக்காட்டவும். நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 15:21, 20 மார்ச் 2023 (UTC)
- அவரது தொகுப்புகள் சரியே. அடைப்புக்குறிக்குள் உள்ள ஆங்கிலச் சொல்லின் (அது ஒரு proper noun ஆக இல்லாதவிடத்து, உ+ம்: America) முதல் எழுத்து சிறியதாகவே (monkeypox) இருக்க வேண்டும். அத்துடன், அந்த ஆங்கிலச் சொல்லை சாய்வெழுத்திலேயே எழுத வேண்டும்.--Kanags \உரையாடுக 07:38, 20 மார்ச் 2023 (UTC)
- நீங்கள் சொல்வது சரி, ஆனால், நாம் இங்கு தலைப்பைப் பற்றி உரையாடவில்லையே. ஆங்கிலத்தில் நாம் தலைப்பிடவில்லை. தமிழ்க் கட்டுரையின் ஒரு பகுதியில் அச்சொல்லைத் தருகிறோம். சிறிய எழுத்தில் எழுதுவதுதான் சரியான முறை. MPox கட்டுரையில் monkeypox ஐ எவ்வாறு எழுதியிருக்கிறார்கள் எனக் கவனியுங்கள். ஒரு வரியின் ஆரம்பத்தில் எச்சொல்லாக இருந்தாலும் பெரிய எழுத்தில் (Mpox) இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 04:33, 21 மார்ச் 2023 (UTC)
செம்மைப்படுத்துதல் இரண்டாம் காலாண்டு
தொகுவணக்கம், செம்மைப்படுத்துதல் பணிக்கான இரண்டாம் காலாண்டில், தமிழக ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகளை துப்புரவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பாளர்களுக்கு நினைவுப் பரிசு (தண்ணீர் குடுவை, கேடயம், இதர) வழங்கலாமா என்பதற்கும் பணிமனைகளை நடத்தலாமா என்பதற்கும் உங்களது அனைவரது கருத்துக்களும் வரவேற்கப்படுகிறது.
உங்களின் கருத்துகளை இங்கேயே
பதிவிடுங்கள். நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 16:57, 28 மார்ச் 2023 (UTC)
- ஆதரவு நல்ல பரிந்துரை. சிறந்ததொரு ஊக்கமாக இருக்கும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:22, 31 மார்ச் 2023 (UTC)
- ஆதரவு இத்திட்டத்திற்கு வாழ்த்துகளுடன் ஆதரவளிக்கிறேன்-- சா. அருணாசலம் (பேச்சு) 08:23, 31 மார்ச் 2023 (UTC)
- ஆதரவு துப்புரவுப் பணி அவசியமான ஒன்று. துப்புரவில் தீவிரமாக ஈடுபடுவோரை ஊக்கமளிக்க பரிசுகள் வழங்குதல் இப்பணியில் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டு வரலாம். துப்புரவின் காரணமாக நம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் அதிகரிக்கும் என்பதால், இப்பணிக்கு முன்னுரிமை அளித்து பணிமனைகளை நடத்துவது, தீவிர பங்களிப்பாளர்களை ஊக்கப்படுத்தி பரிசுகள் வழங்குவது போன்ற முன்னெடுப்புகளைத் தொடங்கலாம்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 08:39, 31 மார்ச் 2023 (UTC)
- ஆதரவு தொடர்ச்சியாக குறிப்பிட்ட கால இடைவெளியில் பணிமனை நடத்தி துப்பரவினை தொய்வில்லாமல் தொடரலாம். --இரா. பாலாபேச்சு 15:50, 31 மார்ச் 2023 (UTC)
- ஆதரவு துப்புரவு பணி அவசியமான ஒன்று. கட்டுரைகளின் தரத்தினை கணக்கில் கொண்டு போகிற போக்கில் உருவாக்கப்பட்ட பக்கங்களை நீக்கி விடலாம், நீக்கப்படும் உயிரியல் பக்கங்களை புதிதாக உருவாக்க தயாராக உள்ளேன். பெண்ணியம் போட்டி காரணமாக தற்பொழுது சரியாக துப்புரவு பணியில் பங்களிக்க இயலவில்லை. --சத்திரத்தான் (பேச்சு) 16:05, 31 மார்ச் 2023 (UTC)
- ஆதரவு சிறப்பான ஒன்று--வசந்தலட்சுமி (பேச்சு) 02:08, 1 ஏப்ரல் 2023 (UTC)
- ஆதரவு துப்புரவு பணியை மேற்கொள்ள தயாராக இருக்கிறேன்.--Balu1967 (பேச்சு) 02:14, 1 ஏப்ரல் 2023 (UTC)
- ஆதரவு துப்புரவு பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக இருக்கும்.--கு. அருளரசன் (பேச்சு) 07:29, 1 ஏப்ரல் 2023 (UTC)
- ஆதரவு மேற்கொள்ளவேண்டிய முயற்சி. அவசியம் செய்யப்பட வேண்டிய ஒன்று. என் நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதால் இதில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள இயலா நிலை. பொறுத்துக்கொள்க. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:33, 1 ஏப்ரல் 2023 (UTC)
Help
தொகுHello, I am चक्रपाणी (Chakra-pani(Talk)) from Hindi Wikipedia! Is this the Village Pump of Tamil Wikipedia?
If Yes:
- Hindi Wikipedia has updated/created some articles related to your regional topic:
- hi:लायन-टेल्ड मकाक (Lion-Tailed Macaque)
In english wikipedia its says this monkey is also known as Wanderoo?
- What is the correct pronunciation of this word?
Your help will be greatly appreciated! -----चक्रपाणी (பேச்சு) 03:22, 8 ஏப்ரல் 2023 (UTC)
@சத்திரத்தான்: Kindly help on this request. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:29, 8 ஏப்ரல் 2023 (UTC)
தேவையற்ற, பெருவாரியான தொகுப்புகள்
தொகு2231376 என்பது போன்ற பின்னொட்டுகளைக் கொண்ட பயனர் கணக்குகள், தேவையற்ற பக்கங்களை உருவாக்கி வருகின்றனர். எங்கிருந்தோ நகலெடுக்கப்பட்ட உள்ளடக்கங்களை அவர்களின் பேச்சுப் பக்கத்திலும் இட்டு வருகிறார்கள். ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளில் தீக்குறும்புகளைச் செய்யவில்லை. எனினும் அண்மைய மாற்றங்களில், கண்காணிப்பு என்பது கடினமாக உள்ளது. இங்கு ஏதோவொரு இடையூறை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, தனி நபரோ அல்லது ஒரு குழுவோ இயங்குவதாக ஐயம் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:00, 13 ஏப்ரல் 2023 (UTC)
- இவ்வாறான பயனர்கள் நகலெடுத்தல், ஏற்கெனவே உள்ளவற்றை மீண்டும் புதுக்கட்டுரையாக தொடங்குதல், இயந்திர மொழிபெயர்ப்பு, சொந்தக்கருத்து போன்ற வேண்டாத தொகுப்புக்களில் ஈடுபடுகின்றனர். யார் இவர்கள், ஏதும் பயிற்சி நடைபெறுகிறதா? சில பயனர்: 2211382vaishnavipsivaram, 2240676michaldamacmeller, 2211477deekshitha --AntanO (பேச்சு) 11:33, 16 ஏப்ரல் 2023 (UTC)
- பயனர் அட்டவணை (உருவாக்கிய தேதி அடிப்படையில்) --AntanO (பேச்சு) 03:34, 17 ஏப்ரல் 2023 (UTC)
ஆர் வி எசு கலை அறிவியல் கல்லூரி தொடர்புபட்ட / தொடர்பானவர்களில் பெயர்களில் அதிக பயனர் கணக்குகளும், தேவையற்ற தொகுப்புகளும் இடம் பெறுகின்றன. ஏதும் பயிற்சிஇடம் பெறுகின்றதா? அல்லது விசமத்தொகுப்பா? @Selvasivagurunathan m and Neechalkaran: --AntanO (பேச்சு) 08:18, 17 ஏப்ரல் 2023 (UTC)
@AntanO: எனக்குத் தெரிந்தளவில், நாம் யாரும் அண்மையில்/இப்போது பயிற்சி வகுப்புகள் நடத்தவில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:06, 17 ஏப்ரல் 2023 (UTC)
பதாகை இடுவது குறித்து...
தொகு"தற்போது நடைபெற்று வரும் செம்மைப்படுத்துதல் பணி குறித்தான தகவலை பதாகையாக இட்டால், கவனத்தை ஏற்படுத்தும்; பயனர்கள் பலர் பங்களிக்கத் தொடங்குவர்" என்பதாக ஒரு பரிந்துரை உள்ளது. இது குறித்து பயனர்கள் தங்களின் கருத்துகளை / ஒப்புதல்களை இந்தப் பக்கத்தில் பதாகை அறிவிப்பு எனும் பகுதியில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். -- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:42, 19 ஏப்ரல் 2023 (UTC)
பொதுவாக - விக்கிப்பீடியா ஆண்டு விழாக்கள், பயிற்சிப் பட்டறைகள், மாரத்தான் நிகழ்வுகள், புதிய கட்டுரைகளை எழுதுவதற்கான போட்டிகள், ஒளிப்பட போட்டிகள் ஆகியன குறித்தே தமிழ் விக்கிப்பீடியாவில் பதாகைகள் இடுவது வழக்கம். துப்புரவு / செம்மைப்படுத்துதல் குறித்தான பதாகைகளை இதுவரை நாம் கண்டதில்லை. இப்போது தேவையிருப்பதாக நாம் கருதுகிறோம். ஏனெனில், வழக்கமாக பங்களிப்பவர்கள் மட்டுமே இப்பணிகளை செய்ய இயலாது; மற்றவர்களையும் ஈடுபடுத்துவது நன்மை உண்டாக்கும். எனினும், குமுகாயத்தின் ஒப்புதலுடன் இதனைச் செய்ய விரும்புகிறோம். எனவே, பயனர்கள் தமது கருத்துகள்/ஒப்புதல் இவற்றை மேற்குறிப்பிட்டுள்ள இணைப்பில் இடுமாறு வேண்டுகிறோம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:18, 23 ஏப்ரல் 2023 (UTC)
புதிய பயனர்களுக்கு பயிற்சியளிப்பதற்கான பயிலரங்குகள் (2023)
தொகுவணக்கம். புதிய பயனர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தி, அவர்கள் இங்கு பங்களிக்கும் வகையில் பயிற்சியளிப்பதற்காக திட்டமொன்று வரையப்பட்டுள்ளது. விவரங்களுக்கு, காண்க: விக்கிப்பீடியா:பயிலரங்குகள் 2023.
முக்கியக் கூறுகள்:
- செய்முறைகளை உள்ளடக்கிய 2 நாள் பயிற்சி.
- ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளை செம்மைப்படுத்துவதே முக்கிய நோக்கம். நல்ல புரிதலுக்குப் பிறகு, புதிய கட்டுரைகளை துவக்குமாறு வழிகாட்டப்படுவர்.
- கவனக்குவியம்: தமிழக ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல், ஒரு மேற்கோள்கூட இல்லாத கட்டுரைகளில் மேற்கோள்கள் சேர்த்தல்.
- பயிற்சி பெறுவோர்: கல்லூரி ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் (தனித்தனி நிகழ்வுகள்).
சூலை, ஆகத்து, செப்டம்பர் 2023 மாதங்களுக்காக திட்டமிடப்பட்டிருக்கும் பயிலரங்குகளை நடத்தத் தேவைப்படும் நிதியை விக்கிமீடியா அமைப்பிடமிருந்து பெறலாம் எனவும், அதற்காக Rapid Funds எனும் அணுகுமுறை உகந்தது எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
திட்டம், நிதி உதவி கோரல் அணுகுமுறை இவை குறித்தான உங்களின் ஆதரவு / எதிர்ப்பு, கருத்துகள், பரிந்துரைகளை இங்கு பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். -- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:19, 2 மே 2023 (UTC)
- ஆதரவு-- சா. அருணாசலம் (பேச்சு) 08:43, 2 மே 2023 (UTC)
- ஆதரவு சத்திரத்தான் (பேச்சு) 08:56, 2 மே 2023 (UTC)
- ஆதரவு--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:18, 2 மே 2023 (UTC)
- ஆதரவு -- ஸ்ரீதர். ஞா (✉) 19:58, 2 மே 2023 (UTC)
- ஆதரவு --பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 03:40, 3 மே 2023 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள்
தொகுதமிழ் விக்கிப்பீடியாவின் 'இருபதாண்டுகள் நிறைவு' தொடர்பாக கருத்தொன்று 'விக்கிப்பீடியர்கள் சந்திப்பு' எனும் தலைப்பின்கீழ் இங்கு இடப்பட்டுள்ளது. பயனர்கள் தமது கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:22, 13 மே 2023 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவின் 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் எளியவகை பங்களிப்பாக விக்கி மாரத்தான் 2023 பரிந்துரைக்கப்படுகிறது. பயனர்கள் தமது கருத்துகளை இங்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:30, 6 சூலை 2023 (UTC)
தவிர்க்கப்பட வேண்டியவை
தொகுபயனர்களின் உரையாடல் பக்கத்தில் அறிவிப்புகள் வழங்கும் போது //தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள், அல்லது நிறுத்திக் கொள்ளுங்கள்.// இது போன்று எழுதுவதால் பயனர்கள் மனவருத்தம் அடையவும் தொடர்ந்து எழுதாமல் விக்கிப்பீடியாவிலிருந்து விலகவும் வாய்ப்புள்ளது. இதனால் இதைத் தவிர்த்து தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பில் 1.ஈடுபடாதீர்கள். 2. எழுதாதீர்கள். என்று கூட எழுதலாம். இதற்கு அனைத்துப் பயனர்களும் ஆதரவு, எதிர்ப்பு, நடுநிலை கருத்துகளை வழங்குங்கள்.-- சா. அருணாசலம் (பேச்சு) 12:07, 12 சூன் 2023 (UTC)
கருத்து
தொகுவணக்கம்,நீங்கள் குறிப்பிட்டுள்ளது ஒரு பயனர் இரண்டாம் முறையாக ஆக்க நோக்கற்ற பங்களிப்பினை வழங்கும் போது விடப்படும் எச்சரிக்கை தானே , அதனால் தானே நிறுத்துங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. முதல்முறை செய்யும் போது பொதுவான அறிவிப்பு (துவிங்கிளில் உள்ளது போல் General Notice) மட்டும் இடலாம்.-- ஸ்ரீதர். ஞா (✉) 17:11, 12 சூன் 2023 (UTC)்்்்்
தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்
தொகுதமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் அனைவருக்கும் வணக்கம்.
செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. இச்சிறப்பைக் கொண்டாடும் வகையில் பயிற்சிப் பட்டறை, தமிழ் விக்கிப்பீடியர்கள் நேரில் சந்தித்து உரையாடுதல், மாரத்தான் ஆகிய நிகழ்வுகளை நடத்துவதற்கு பரிந்துரைகள் வைக்கப்பட்டன. விவரங்களுக்கு, காண்க: விக்கிப்பீடியா பேச்சு:விக்கி மாரத்தான் 2023
முக்கியக் கூறுகள்:
- கல்லூரி ஆசிரியர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தி, அவர்கள் இங்கு பங்களிக்கும் வகையில் பயிற்சியளிப்பதற்கான பயிற்சிப் பட்டறை.
- தமிழ் விக்கிப்பீடியர்கள் நேரில் சந்தித்து உரையாடும் வகையிலான கூடல் நிகழ்வு.
- மேற்குறிப்பிட்டுள்ள இரு நிகழ்வுகளை அடுத்தடுத்த நாட்களில் தஞ்சாவூரில் நடத்துதல்.
- பயிற்சிப் பட்டறை, கூடல் நிகழ்வு இவையிரண்டும் நடக்கும் வாரத்திற்கு அடுத்து வரும் வாரத்தில் இணையவழி மாரத்தான் நிகழ்வை நடத்துதல்.
பரிந்துரைக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தான உங்களின் ஆதரவு / எதிர்ப்பு, கருத்துகள், கூடுதல் பரிந்துரைகளை இங்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்; நன்றி! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:23, 12 ஆகத்து 2023 (UTC)
- ஆதரவு -- ஸ்ரீதர். ஞா (✉) 02:57, 13 ஆகத்து 2023 (UTC)
- ஆதரவு--கு. அருளரசன் (பேச்சு) 03:04, 13 ஆகத்து 2023 (UTC)
- ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 03:22, 13 ஆகத்து 2023 (UTC)
- ஆதரவு---சத்திரத்தான் (பேச்சு) 04:13, 13 ஆகத்து 2023 (UTC)
- ஆதரவு -- பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 06:20, 13 ஆகத்து 2023 (UTC)
- ஆதரவு-- சா. அருணாசலம் (பேச்சு) 09:57, 13 ஆகத்து 2023 (UTC)
- ஆதரவு-- மகாலிங்கம் இரெத்தினவேலு--மகாலிங்கம் இரெத்தினவேலு 04:45, 14 ஆகத்து 2023 (UTC)
- ஆதரவு--பிரயாணி (பேச்சு) 11:00, 15 ஆகத்து 2023 (UTC)
கருத்து
தொகுவிக்கிப்பீடியா மட்டுமல்லாது அதன் மற்ற திட்டங்களான விக்சனரி, விக்கிமூலம் , விக்கி பொதுவகம் மற்றும் விக்கி நூல்கள் போன்றவைகளை பற்றியும், அந்தந்த திட்டங்களில் முன்னோடிகளாக இருந்து வரும் பயனர்களால், அந்தந்த திட்டங்களைப் பற்றிய அறிமுக மற்றும் பங்களிப்புகளைப் பற்றிய ஒரு நிகழ்ச்சி இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என கருதுகிறேன் --பிரயாணி (பேச்சு) 11:00, 15 ஆகத்து 2023 (UTC)
- @பிரயாணி: வணக்கம். திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, தங்களின் கருத்தினையும் தெரிவித்ததற்கு நன்றிகள். ஆம், தமிழ் விக்கித் திட்டங்களில் பங்களிக்கும் பயனர்கள் அனைவரும் தஞ்சாவூரில் நடக்கவிருக்கும் கூடல் நிகழ்வில் கலந்துகொள்ளும் வகையில் அறிவிப்பினை செய்துள்ளோம். இங்கு காணுங்கள்: விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல்
- கல்லூரி ஆசிரியர்களுக்கான அறிமுகப் பட்டறை நிகழ்வில் அனைத்து தமிழ் விக்கித் திட்டங்கள் குறித்தும் அறிமுகம் தர இருக்கிறோம்.
- இந்த முறை மாரத்தான் நிகழ்வினை விக்சனரி, விக்கிமூலம் தளங்களிலும் நடத்துவோம்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:37, 15 ஆகத்து 2023 (UTC)
கோழியின உற்பத்தி, மேலாண்மைக் கல்லூரியில் (தமிழ்நாடு கால்நடை மருத்து அறிவியல் பல்கலைக்கழகம்) விக்கிப்பீடியா பயிலரங்கம்
தொகுஇன்று (25 ஆகத்து 2023) ஓசூரில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மைக் கல்லூரியில் (தமிழ்நாடு கால்நடை மருத்து அறிவியல் பல்கலைக்கழகம்) விக்கி ஊடகத்திட்டங்களை அறிமுகப்படுத்தி தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி அளிக்க உள்ளேன். தமிழ்ப்பரிதி மாரி (பேச்சு) 05:05, 25 ஆகத்து 2023 (UTC)
விக்கிப்பயணம்
தொகுவிக்கி திட்டங்களில் ஒன்றான விக்கிப்பயணம் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன். யாருக்காவது அதைப்பற்றிய தகவல்கள், பங்களிப்பது பற்றிய திட்டங்கள், செயல்பாடுகள் பற்றி தெரிந்திருந்தால் கூறவும். தொடர்பு கொள்கிறேன். வங்காள மொழி விக்கிப்பயண பயனர் User:Rangan_Datta_Wiki என்பவரைத் தொடர்பு கொண்ட போது குறைந்தது 10 நபர்கள் இருந்தால் இதைப்பற்றிய பயிற்சி அளிப்பதாக கூறியுள்ளார். நமது தமிழ் விக்கி சமுதாயத்தில் யாராவது இதில் பங்களிக்கும் பயனராக இருந்தால், கூறவும். --பிரயாணி (பேச்சு) 17:41, 5 அக்டோபர் 2023 (UTC)
- கற்றுக்கொள்ள ஆர்வமுண்டு. முறையான இடைமுகத்தை உருவாக்கினால், பயணங்களில் ஆர்வமுள்ளோரிடம் எடுத்துச்செல்ல இயலும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:37, 5 அக்டோபர் 2023 (UTC)
- விருப்பம்--கு. அருளரசன் (பேச்சு) 00:11, 6 அக்டோபர் 2023 (UTC)
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல்
தொகு@Kanags: உங்களின் அதிகார அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என்னைப் போன்ற புதுப்பயனர் கஷ்டப்பட்டு செய்த தொகுப்பை ஒரே நொடியில் வீணாக்குவது சரியான அணுகுமுறையா? சரி தவறு யோசிக்காமல் இஷ்டத்துக்கு செயல்பட வேண்டாம். 2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ஆப்கானிஸ்தான் அணியின் கொடியும் நாட்டின் கொடியும் வேறு வேறு. நீங்கள் cr வார்ப்புருவை பயன்படுத்தினால் நாட்டுக்கொடியே காட்டும். அதனால் தான் நான் AFGc வார்ப்புருவை பயன்படுத்தினேன். தவிர, கிரந்த வெறுப்பை கைவிடுங்கள். நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் தமிழ் மொழியின் ஒரு பகுதியாக கிரந்த எழுத்து மாறிவிட்டது. சரியான உச்சரிப்புக்கு அவை அவசியம். இத்துடன் விக்கிப்பீடியாவில் இருந்து விலகிக் கொள்கிறேன். அதிகார அத்துமீறல் தொடரும் வரை என்னைப்போன்ற புதுப்பயனர்களின் பங்களிப்பு குறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நன்றி. ElangoE2 (பேச்சு) 13:03, 13 அக்டோபர் 2023 (UTC)
- @ElangoE2: உங்கள் தொகுப்பில் ஏற்பட்ட பிணக்கிற்கு வருந்துகிறேன். பலர் கூடித் தொகுப்பதால் முரண்கள் எழுவது இயல்பு. பல காலம் உரையாடி ஒரு முடிவிற்கு வந்த ஒன்றில் மீண்டும் மாற்றத்தை புதிதாக நீங்கள் முன்வைக்கும் போது அதை ஏற்பது சிரமமாக இருந்திருக்கலாம். அதைக் கட்டுரைப் பேச்சுப் பக்கத்தில் உரையாடி வெளிப்படுத்தலாம். அனைவரும் தன்னார்வத்திலேயே பங்களிக்கின்றனர் அதனால் உரையாடலில் கடுமையான வார்த்தைகளைத் தவிர்த்துத் தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 17:46, 13 அக்டோபர் 2023 (UTC)
- @ElangoE2: நீங்கள் உருவாக்கிய AFGc வார்ப்புருவைப் பயன்படுத்தாமலே Cr என்ற வார்ப்புருவை மட்டுமே பயன்படுத்தி ஆப்கானித்தான் கொடியைத் திருத்தியிருக்க முடியும். அதனை உரையாடியே திருத்தியிருக்கலாம். Cr வார்ப்புருவைப் பயன்படுத்துவதன் மூலம் ஆங்கில விக்கியில் இருந்து நேரடியாகவே இங்கு முடிவுகளைப் பிரதியிடலாம். நீங்கள் செய்ததுபோல AFGc ஆக மாற்றத் தேவையில்லை. அவ்வாறே நான் இப்போது திருத்தியிருக்கிறேன். மற்றும்படி, கிரந்த எழுத்துகள் பயன்படுத்தப்படுவது முழுமையாகத் தடை செய்யப்படவில்லை. ஆனால், படிப்படியாக கிரந்தம் பயன்படுத்தப்படுவதைக் குறைப்பதே இங்குள்ள பயனர்களின் பெரும்பாலானோரின் நோக்கம்.--Kanags \உரையாடுக 05:05, 14 அக்டோபர் 2023 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர்களின் கூட்டுழைப்பின் மூலம் குறுகிய காலத்தில் தேவைப்படும் கட்டுரைகளை விரைந்து சேர்த்தல்
தொகுவருகிற 2023 திசம்பர் அல்லது 2024 சனவரி மாதத்திற்குள் அனைத்து தமிழ் விக்கிப்பீடியர்களின் கூட்டுழைப்பின் மூலம் தமிழில் தேவைப்படும் கட்டுரைகளைச் சேர்ப்பது மற்றும் அதிக எண்ணிக்கையிலான கட்டுரைகளை உருவாக்குவது தொடர்பாக ஒரு கட்டுரைப்போட்டி போன்ற நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்த ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். இது குறித்து உங்கள் கருத்துகளை அறியத் தாருங்கள். --மகாலிங்கம் இரெத்தினவேலு 02:17, 30 அக்டோபர் 2023 (UTC)
- ஆதரவு --சத்திரத்தான் (பேச்சு) 02:26, 30 அக்டோபர் 2023 (UTC)
- ஆதரவு புதிய கட்டுரைப் போட்டியின் மூலமாக அதிக கட்டுரைகள் உருவாக்கலாம். --சா. அருணாசலம் (பேச்சு) 03:42, 30 அக்டோபர் 2023 (UTC)
- ஆதரவு புதிய கட்டுரைப் போட்டியின் மூலமாக அதிக கட்டுரைகள் உருவாக்கலாம். --சார் 2023 (UTC) இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 04:00, 30 அக்டோபர் 2023 (UTC)
- ஆதரவு - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:25, 31 அக்டோபர் 2023 (UTC)
மகிழ்ச்சியும் அச்சமும்
தொகுநேற்று இந்திய அளவில் உருது மொழிக்கு அடுத்து எண்ணிக்கை அளவில் தமிழ் மொழி இரண்டாமிடத்தை அடைந்துள்ளது. அதற்காக கடந்த சில வாரங்களாகவே பலர் அயராது உழைத்துப் பல புதிய கட்டுரைகளை உருவாக்கினர். அதற்காக உழைத்த @Balu1967, பா.ஜம்புலிங்கம், சத்திரத்தான், கி.மூர்த்தி, உலோ.செந்தமிழ்க்கோதை, Thiyagu Ganesh, Sridhar G, TNSE Mahalingam VNR, and Arularasan. G: மற்றும் அனைவருக்கும் பாராட்டுக்கள். பொதுவாக எண்ணிக்கையை உயர்த்த வேண்டி போட்டிகளோ முயற்சிகளையோ நாம் எடுப்பதில்லை. எந்த மொழியினரும் நான்கைந்து வரிகளில் புதிய கட்டுரையைத் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கிவிடமுடியும். எனவே கட்டுரைகளின் எண்ணிக்கையை எப்படியும் உயர்த்த முடியும் ஆனால் கட்டுரையின் செழுமையையும் தரத்தையும் உயர்த்துவதே முக்கியமான சவால். கட்டுரையின் ஆழம் என்கிற அளவீட்டில் நாம் இன்னும் பின்தங்கியுள்ளோம். இயல்பாக, பங்களிக்கும் போது பொதுவான துப்புரவு, கண்காணிப்பு போன்ற இடங்களில் கவனம் செலுத்துவோம். ஆனால் போட்டியின் போது அவை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்ற அச்சம் ஏற்படுகிறது. இயல்பான பங்களிப்போ விரைவான பங்களிப்போ வளமான களஞ்சியத்தை உருவாக்கும் நோக்கில் சமரசம் வேண்டாம். இந்த இரண்டாமிடத்தை அடைவதைவிட அதைத் தக்க வைப்பது பெரும்பணி, அதைத் தொடர்ந்து செய்வோம். தொடர்ந்து பங்களிக்கும் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.-நீச்சல்காரன் (பேச்சு) 06:04, 17 நவம்பர் 2023 (UTC)
- விருப்பம் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:26, 17 நவம்பர் 2023 (UTC)
- விருப்பம் --Thiyagu Ganesh (பேச்சு) 05:03, 20 நவம்பர் 2023 (UTC)
- ஆம். உண்மை தான். கட்டுரைகளை நாம் இம்முறை தானியக்கமாக உருவாக்கவில்லை. அனுபவம் பெற்ற பயனர்களே வழக்கத்திற்கு மாறாக பெரிய கட்டுரைகளுக்குப் பதிலாக எண்ணிக்கையளவில் கூடுதலாக சில குறுங்கட்டுரைகளை உருவாக்கினார்கள். தொடர்ந்து நிறைய பயனர்கள் கட்டுரை உருவாக்கத்தில் ஈடுபடும் போது இந்த எண்ணிக்கை வேறுபாடு தொடர்ந்து நீடித்திருக்கும். நாமும் தொடர்ந்து பயிலரங்குகள், பயிற்சிப் பட்டறைகளை நடத்தி பல புதிய பயனர்களை ஈர்த்து வருகிறோம். ஆகவே, தமிழ் விக்கிப்பீடிய சமூகத்தில் பயனர்களின் தொடர்ந்த ஈடுபாட்டால் நம்மால் இந்த எண்ணிக்கை வேறுபாட்டைத் தக்க வைக்க இயலும் என்றே கருத வாய்ப்புள்ளது. --மகாலிங்கம் இரெத்தினவேலு 06:18, 17 நவம்பர் 2023 (UTC)
- விருப்பம் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:26, 17 நவம்பர் 2023 (UTC)
- விருப்பம் --Thiyagu Ganesh (பேச்சு) 05:03, 20 நவம்பர் 2023 (UTC)
- நெருக்கடியான என் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு தட்டச்சுப்பணி மற்றும் ஆய்வுப்பணிகளுக்கிடையில், இப்பணியை மேற்கொண்டேன். என் இலக்காக 50 கட்டுரைகள் என வைத்து 200+ கட்டுரைகளை எழுதினேன். நான் கேரளாவிலுள்ள அனைத்து மாவட்டக் கோயில்களை தலைப்பாகத் தெரிவு செய்தேன். பட்டியலிட்டேன். சான்று இல்லாதவற்றிற்கு தேடி சேர்த்துள்ளேன். படங்களை முறையாக இணைத்தேன். எழுத ஆரம்பிக்கும்போதுதான் முன்பு எழுதிய பலர் சிறிய கட்டுரைகளாகத் தெரிவு செய்து எழுதியுள்ளதை அறிந்தேன். கொல்லம் மாவட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது. கோழிக்கோடு, பத்தனம்திட்டா, கண்ணூர், இடுக்கி நிலுவையில் உள்ள மாவட்டங்களாகும். இவற்றைத் தொடர்ந்து எழுதுகிறேன். பிற அனைத்து மாவட்டங்களையும் முழுமையாக விடுபாடின்றி எழுதியுள்ளேன். விடுபாடு இருப்பின் அதனை சரிசெய்யவுள்ளேன். ஒரு குறிப்பிட்ட பொருண்மையைத் தெரிவு செய்து பெரிது,சிறிது என்ற வித்தியாசம் இன்றி தரத்தையும் மனதில் கொண்டு எழுத ஆரம்பித்தால் அந்தப் பொருண்மையிலான தலைப்பில் முழுமையாக எழுதிப் பணியை நிறைவு செய்யமுடியும் என்பதை அறிந்தேன். மூன்று கட்டுரைகளை எழுதும் நேரத்தில் ஒரு கட்டுரை எழுதும் நிலை பல நேரங்களில் எனக்கு ஏற்பட்டது. குறிப்பிட்ட தலைப்பில் விடுபாடு இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அதே சமயம் தரத்தையும் விட்டுக்கொடுக்கவில்லை. துணைநிற்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:31, 17 நவம்பர் 2023 (UTC)
- விருப்பம் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:26, 17 நவம்பர் 2023 (UTC)
- விருப்பம் --Thiyagu Ganesh (பேச்சு) 05:03, 20 நவம்பர் 2023 (UTC)
- அனைவருக்கும் பாராட்டுகளும், நன்றிகளும்! அண்மையக் காலத்தில் நடந்த விரைவான பங்களிப்பானது குறுங்கட்டுரைகளாக இருந்தாலும், முழுமையானவையாக இருந்தன. மொழிபெயர்ப்புத் தரத்திலும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க குறைகள் இல்லை. தொடர்பங்களிப்பாளர்களின் பங்களிப்பாக இருந்ததால் இது சாத்தியப்பட்டது. நீச்சல்காரனின் கருத்தின்படி, இரண்டாம் இடத்தை தக்க வைக்க முயற்சி செய்வோம். இணையாக, செம்மைப்படுத்துதல்/ ஒழுங்கமைவு/ துப்புரவு ஆகியப் பணிகளிலும் இப்போது போன்றே தொடர்ந்து ஈடுபடுவோம். இதன் மூலமாக தரத்தை நிலைநிறுத்த இயலும். மகாலிங்கம் ஐயாவின் கருத்தின்படி, அவ்வப்போது பயிலரங்குகள், பயிற்சிப் பட்டறைகளையும் நடத்துவோம். அதிகப் பங்களிப்பாளர்களை கொண்டுவருதலும் எதிர்காலத் தேவையாகும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:22, 17 நவம்பர் 2023 (UTC)
- விருப்பம் --Thiyagu Ganesh (பேச்சு) 05:03, 20 நவம்பர் 2023 (UTC)
ஒப்பீடு நடத்தப்பட்ட நாள்: 19-நவம்பர்-2023
விக்கிப்பீடியா | கட்டுரைகளின் எண்ணிக்கை | மொத்தப் பக்கங்கள் | மொத்தத் தொகுப்புகள் | பதிவுசெய்துள்ள பயனர்கள் | இயக்கத்திலுள்ள பயனர்கள் | படிமக் கோப்புகள் | ஆழம் |
---|---|---|---|---|---|---|---|
தாய் விக்கிப்பீடியா | 1,60,062 | 1,052,296 | 11,129,250 | 462,576 | 1,329 | 21,850 | 328 |
தமிழ் விக்கிப்பீடியா | 1,59,948 | 504,964 | 3,820,347 | 226,295 | 322 | 8,186 | 35 |
அறிதல்கள்:
- மொத்தப் பக்கங்களின் எண்ணிக்கை 2 மடங்கு
- மொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை 3 மடங்கு
- பதிவுசெய்துள்ள பயனர்களின் எண்ணிக்கை 2 மடங்கு
- இயக்கத்திலுள்ள பயனர்களின் எண்ணிக்கை 4 மடங்கு
- படிமக் கோப்புகளின் எண்ணிக்கை 2.5 மடங்கு
- வரிசை எண் 1, 2, 5 இவற்றின் காரணமாக ஆழம் எனும் அளவீடு 328 ஆக உள்ளது.
- வரிசை எண் 3, 4 இவற்றின் காரணமாக மொத்தப் பக்கங்கள், மொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
முடிவுரை:
- பங்களிக்கும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.
- தேவைப்படும் பகுப்புகள், வார்ப்புருக்கள் உருவாக்கப்படல் வேண்டும். தேவைப்படும் உரையாடல்கள் நடத்தப்படல் வேண்டும். (இவற்றால், மொத்தப் பக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்)
- கட்டுரைகளில் தொடர் முன்னேற்றங்கள் இருக்க வேண்டும். (இவற்றால், மொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்)
இவையெல்லாம், ஆழம் எனும் அளவீட்டை தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளில் சில ஆகும்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:53, 19 நவம்பர் 2023 (UTC)
- விக்கிப்பீடியா:கட்டுரை ஆழம் - ஆழம் அளவிடும் முறை --AntanO (பேச்சு) 18:21, 19 நவம்பர் 2023 (UTC)
புதுப் பயனர்களுக்கான பயிற்சிகள்
தொகுதமிழ் விக்கிப்பீடியா குறித்து புதுப் பயனர்களுக்குப் பயிற்சியளிக்கும்போது, 'மொழிபெயர்ப்புக் கருவி மூலம் கட்டுரைகள் உருவாக்கும்' விளக்கத்தைத் தரவேண்டாம் என்பது எனது வேண்டுகோள்.
ஒரு கலைக்களஞ்சியத்தின் கூறுகள் குறித்தான அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாத, முயற்சி செய்யாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. தரமற்ற கட்டுரைகள் உருவாக்கப்படுவதாகவும், பலரின் நேரமும் உழைப்பும் வீணாவதாகவும் உணர்கிறேன். மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:33, 24 நவம்பர் 2023 (UTC)
- @Selvasivagurunathan m: சரியான கருத்து. பயனர்கள் அனைவரும் இந்தக் கருவியைப் பயன்படுத்தத் தெரிய வேண்டும். பல பழைய பயனர்கள் கூட இதனைப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை. இந்தக் கருவியுடன் கூகுள் மொழிபெயர்ப்பையும் பயன்படுத்தி கட்டுரைகள் மொழிபெயர்த்து சிறந்த முறையில் எழுத முடியும்.--Kanags \உரையாடுக 09:43, 24 நவம்பர் 2023 (UTC)
மிக்க நன்றி! ஆதங்கத்தைத் தெரிவித்ததன் வாயிலாக, அறியாத விசயம் ஒன்று குறித்துத் தெரிந்துகொண்டேன். ஜெயரத்னாவின் கருவியை ஆராய்கிறேன். நன்கு புரிந்துகொண்ட பிறகு, இங்கு செயல்படுத்த முயற்சி செய்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:45, 24 நவம்பர் 2023 (UTC)
மொழிபெயர்ப்பு பிழைகள்
தொகுமொழிபெயர்ப்பு கருவியால் மொழிபெயர்த்து கட்டுரை உருவாக்கும் போது
- 1. பகாசுரன் கட்டுரையில் ஏற்படுத்தப்பட்ட பிழை.
- 2. அன்னபூர்ணி என்ற வழிமாற்று பக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட பிழை. இதுபோன்ற பிழைகளை முந்தைய காலங்களில் கண்டுள்ளோம். இன்னும் இதுபோன்று நிகழாமல் பக்கங்களைத் தேடிப் பார்த்து கட்டுரை உருவாக்க வேண்டும்.-- சா. அருணாசலம் (பேச்சு) 16:45, 24 நவம்பர் 2023 (UTC)
மாதமொரு உரையாடல்
தொகுபிற இந்திய மொழி விக்கித் திட்டங்களில் அவ்வப்போது இணையம் வழியாகக் கலந்துரையாடல் நடப்பதை அறிந்திருப்போம். ஒருவகையில் சமூகத்தை ஒருங்கிணைக்க இத்தகைய கலந்துரையாடல்கள் பயனளிக்கின்றன. மேலும் புதிய பயனர்கள் சிலரும் பயிற்சிகளைக் கேட்டுவருகின்றனர். இதனடிப்படையில் மாதமொரு கலந்துரையாடலை நடத்தலாம் எனப் பரிந்துரைக்கிறேன். அதில் யாரேனும் ஒரு பயனர் தான் கற்ற ஒரு செயல்பாட்டை விளக்கிப் பயிற்சி அளிக்கலாம், ஒவ்வொரு திட்டம் தொடர்பான நிலைத் தகவல்களை ஒருங்கிணைக்கும் பயனர்கள் அளிக்கலாம். புதிய கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் இது உதவும். இந்த உரையாடலில் புதியவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறமுடியும். நெடுநாள் பயனர்களும் கற்றுக் கொண்டு தம்மையறியாமல் செய்துவந்த பிழைகளைத் தவிர்க்க உதவும். இந்தப் பரிந்துரையின் பரிச்சார்த்த முயற்சியாக நவம்பர் 26 ஆம் நாள் இணையவழி பயிற்சியினை பயனர்:Selvasivagurunathan m கொடுத்தார். 7 புதிய பயனர்கள் கலந்து கொண்டனர். பலரும் தொடர்ந்து பயிற்சியைக் கேட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மாதமொரு உரையாடலாக நிகழ்த்துவோமா? பயிற்சியளிக்கவும் முன்னெடுக்கவும் யாரேனும் விரும்புகிறீர்களா? -நீச்சல்காரன் (பேச்சு) 10:07, 27 நவம்பர் 2023 (UTC)
- நல்ல யோசனை. நேரடிச் சந்திப்புகளை நடத்துவதைக் காட்டிலும் இணையவழிச் சந்திப்புகளை நடத்துதல் எளிதானது. குறிப்பாக, வளைந்துகொடுக்க இயலும். முன்னெடுப்பு, பயிற்சியளித்தல் இவற்றை என்னால் செய்ய இயலும். இது தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மட்டுமா அல்லது சகோதரத் திட்டங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்தத் திட்டமா என்பதனையும் நாம் முடிவு செய்வோம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:44, 27 நவம்பர் 2023 (UTC)
- விக்கிப்பீடியா மட்டும். வெளி அமைப்புகளுடன் நடத்தும் போது பொதுத் தன்மைக்காக அனைத்துத் திட்டத்தையும் அறிமுகம் செய்கிறோம். இது விக்கிப்பீடிய உரையாடல் என்பதால் தேவையேற்பட்டாலொழிய அனைத்துத் திட்டத்தையும் இதில் ஒருங்கிணைக்க வேண்டாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 17:33, 27 நவம்பர் 2023 (UTC)
- நல்லது; அவ்வாறெனில் விக்கிப்பீடியாவிலேயே திட்டப்பக்கத்தை ஆரம்பிக்கலாமா? அல்லது மேல்விக்கியில் ஆரம்பிக்க வேண்டுமா? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:43, 27 நவம்பர் 2023 (UTC)
- இங்கே தான் ஆரம்பிக்க வேண்டும். -நீச்சல்காரன் (பேச்சு) 18:42, 27 நவம்பர் 2023 (UTC)
- விக்கிப்பீடியா:மாதாந்திர இணையவழிக் கலந்துரையாடல்கள் எனும் திட்டப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் திருத்தங்கள்/ மேம்பாடுகளை செய்து உதவுங்கள். ஒவ்வொரு ஆண்டிற்கும் துணைப் பக்கங்களை உருவாக்கிக் கொண்டால், சிறப்பானதொரு ஆவணப்படுத்துதல் அமையும். ஏனெனில் ஒவ்வொரு கலந்துரையாடல் தொடர்பாக பேச்சுப் பக்கங்களில் அதிகளவில் உரையாடல்கள் இருக்கக்கூடும். தவிர, ஒவ்வொரு மாதமும் இனிவரும் ஆண்டுகளிலும் இடைவிடாது செய்யவேண்டும் எனும் உத்வேகம் இருக்கும். எனவே, இப்போதைக்கு விக்கிப்பீடியா:மாதாந்திர இணையவழிக் கலந்துரையாடல்கள்/2023 எனும் பக்கத்தையும் உருவாக்கியுள்ளேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:46, 28 நவம்பர் 2023 (UTC)
தமிழ் டாட் விக்கி கட்டுரைகள்
தொகுஇன்று சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டவுடன் எழுத்தாளர் தேவிபாரதி பற்றித் தேடினேன். தமிழ் விக்கியில் கட்டுரையில்லை ஆனால் தமிழ் டாட் விக்கி தளத்தில் கட்டுரை இருந்தது. பொதுவாக அச்சில் வெளிவந்த கலைக்களஞ்சியத்தை ஒப்பிட்டுக் குறிப்பிடத்தக்க கட்டுரைகளை நாம் தமிழ் விக்கியில் எழுதிவருகிறோம். அது போல இணையத்தில் உள்ள இந்த தமிழ் டாட் விக்கி களஞ்சியத்தின் மூலமும் குறிப்பிடத்தக்க/ஆவணப்படுத்த வேண்டிய தலைப்புகளை அடையாளம் காணலாம் என நினைக்கிறேன். அத்தளத்தில் உள்ள 3600 தமிழ்க் கட்டுரைகளையும் தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள தமிழ் கட்டுரைத் தலைப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் சுமார் 2170 கட்டுரைகள் இங்கில்லை எனத் தெரிகிறது. சிலவேளை எழுத்துக்கள் மாறி கட்டுரையிருக்கலாம், குறிப்பிடத்தக்கமை இல்லாமலுமிருக்கலாம். இருந்தாலும் அவற்றில் கணிசமானவை இங்கே கட்டுரையாக்க வேண்டியவை என நினைக்கிறேன். அந்த வகையில் விருப்பமுள்ளவர்கள் விக்கி நடைமுறைக்குட்பட்டுக் கட்டுரையாக்க இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது. -நீச்சல்காரன் (பேச்சு) 17:23, 11 திசம்பர் 2023 (UTC)
- செய்ய வேண்டிய பணிதான் அண்ணா. ஆனால், அங்கிருந்து நகலெடுத்து ஒட்டும்முன் தமிழ் டாட் விக்கிக்கு ஒரு கட்டுரையை எழுதவாது மனம் வைப்போமா? - CXPathi (பேச்சு) 03:03, 18 திசம்பர் 2023 (UTC)
- இதில் மனம் வைப்பதற்கென்று ஏதுமில்லை. அக்களஞ்சியத்திற்குப் பல மேற்கோள்கள் உருவாகிக் குறிப்பிடத்தக்கமை பெரும்வேளையில் தமிழ் டாட் விக்கி என்ற பக்கத்தை உருவாக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 12:40, 23 திசம்பர் 2023 (UTC)
ஆங்கில மாதங்களின் பெயரில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்
தொகுதமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளின் திருத்த வரலாற்றைக் காணும்போது, ஆங்கில மாதங்களின் பெயரில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, தமிழ் கட்டுரை. இடைமுகத்தில் இத்தகைய மாற்றங்களைச் செய்யும்போது அதனை தமிழ் விக்கிப்பீடியா குமுகாயத்தில் உரையாடி, தீர்வு பெற்ற பிறகு செய்யவேண்டும். இதற்கென ஒரு நெறிமுறையை ஏற்படுத்த வேண்டும்.
செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்:
- பிப்ரவரி ---> பெப்பிரவரி
- மார்ச் --->மார்ச்சு
- ஏப்ரல் ---> ஏப்பிரல்
- ஆகத்து ---> ஓகத்து
- செப்டம்பர் ---> செப்தெம்பர்
- அக்டோபர் ---> ஒற்றோபர்
- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:39, 16 திசம்பர் 2023 (UTC)
- ஆம் இந்த மாற்றத்தை நானும் கவனித்தேன். பாகிம் இதனைச் செய்திருக்கிறார். ஒற்றோபர், ஓகத்து ஆகியவற்றை மீள்வித்திருக்கிறேன். இவை இங்கு மாற்றம் தெரிய ஓரிரு நாட்கள் எடுக்கலாம். ஏனையவற்றையும் கவனிக்கிறேன். @Fahimrazick: மேலுள்ள கருத்தைக் கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 22:13, 16 திசம்பர் 2023 (UTC)
இன்னொரு பயனர் எழுப்பியுள்ள கேள்வி - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:23, 17 திசம்பர் 2023 (UTC)
- பிப்ரவரி, ஏப்ரல் என்பன இலக்கணப் பிழை. பகர மெய்யை அடுத்து ரகரம் வராது. மார்ச் என்பதும் இலக்கணப் பிழை. சகர மெய்யில் சொல் முடியாது. செப்டம்பர் என்பதும் இலக்கணப் பிழையும் மொழித்தற் பிழையும் ஆகும். இங்கே தமிழ் மொழிக்கும் அதன் வரையறைக்குமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆங்கிலத்தின் உச்சரிப்புக்கல்ல. பாஹிம் (பேச்சு) 01:25, 17 திசம்பர் 2023 (UTC)
கனகு தேவையில்லாத மீள்விப்புகளைச் செய்திருப்பதைக் காண்கிறேன். இங்கே தமிழில் நாம் பயனர் இடைமுகத்தின் ஏவல் வினைகளைக் கணினி இயந்திரத்துக்கும் அதன் முறைமைக்குமே செய்கிறோம். அவை கட்டாயமாக அஃறிணையில் ஒருமையில் வந்தாக வேண்டும். ஏவல் வினையில் கணினியை நோக்கி செய்க என்பதும் ஆடு மாடுகளைப் பார்த்து வருக என்பதும் தமிழ் முறையல்ல.--பாஹிம் (பேச்சு) 01:31, 17 திசம்பர் 2023 (UTC)
- தமிழக அரசு ஆவணங்கள், குழந்தைகளுக்கு கற்பிக்கும் புத்தகங்கள், பெரும்பான்மை பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவற்றில் உள்ளபடி மாதங்களின் பெயர்களை எழுதலாம்.--கி.மூர்த்தி (பேச்சு) 01:47, 17 திசம்பர் 2023 (UTC)
- தமிழக அரசாங்க ஆவணங்களைக் கணக்கெடுக்க முடியாது. அவற்றில் ஏராளமான பிழைகள் இருக்கின்றன. இங்கே தமிழ் மொழிக்கே முக்கியத்துவம் தரப்பட்டாக வேண்டும். ஆங்கிலத்தின் உச்சரிப்புக்கோ வழுவான நடைகளுக்கோ அல்ல. எடுத்துக் காட்டாக பிப்ரவரி, மார்ச் போன்றன ஆங்கில உச்சரிப்புமல்ல தமிழுக்குச் சரியுமல்ல. பாஹிம் (பேச்சு) 02:06, 17 திசம்பர் 2023 (UTC)
- அரசு ஆவணங்களையும் பத்திரிகைசெய்திகளையும் மட்டுமே விக்கிப்பீடியாவில் சான்றாக கொடுக்கிறோம். ஒருவேளை எதிர்காலத்தில் தமிழறிஞர்களால் தரப்படுத்தப்பட்டால் உங்கள் பரிந்துரைகளை நடைமுறைக்கு கொண்டு வரலாம். அதுவரையில் பயன்பாட்டில் உள்ள பெயர்களை பயன்படுத்தலாம். புதியதாக எழுதப்பட வேண்டியவை நிறைய உள்ளன.--கி.மூர்த்தி (பேச்சு) 03:48, 17 திசம்பர் 2023 (UTC)
- அரசு ஆவணங்கள் என்றால் தமிழக அரசு ஆவணங்களாக இருக்க வேண்டுமா? இலங்கை, சிங்கப்பூர், மலேசிய அரசாங்க ஆவணங்களில் இருந்தால் தவறா? தமிழுக்கு மாற்றமான முறை எந்த ஆவணத்தில் இருந்தாலும் அது பிழை பிழையே. அத்துடன் தமிழகத்துக்கு வெளியில் மற்ற நாடுகளில் நான் கொடுத்த உச்சரிப்புகளும் எழுத்துக் கூட்டல்களும் வழக்கத்தில் உள்ளவையே. இங்கே வழுவாக உள்ள தமிழக அரசாங்க ஆவணங்களைக் கணக்கெடுக்க வேண்டியதில்லை. தமிழகத்தின் ஆட்சி மொழி தமிழ் என்றால் அவர்களும் தமிழ் மொழிக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டுமே தவிரத் தமிழுக்கு மாறான வழுவான வழக்கங்களுக்கல்ல. அவ்வாறு செய்யாமல் மற்றவற்றுக்கு முன்னுரிமை தருவது தமிழுக்குச் செய்யும் கொடுமை. பாஹிம் (பேச்சு) 04:31, 17 திசம்பர் 2023 (UTC)
இன்று முதல், வேண்டுகோள் வைத்தல் அல்லது மாற்றம் செய்ய விழைதல் ஆகியனவற்றிற்கு விக்கிப்பீடியா:இடைமுகப்பு மொழிபெயர்ப்பு/வேண்டுகோள்கள் எனும் பக்கத்தில் உரையாடுவோம். அனைவருக்கும் நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:58, 23 திசம்பர் 2023 (UTC)
நீர்வழிப் படூஉம் மற்றும் தேவிபாரதி தமிழ் விக்கிப்பீடியாவின் முகப்புப் பக்கத்தில் செய்திகளில் காட்சிப்படுத்த வேண்டுதல்
தொகுஎழுத்தாளர் தேவிபாரதி தனது நீர்வழிப் படூஉம் புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ள செய்தியை தமிழ் விக்கிப்பீடியாவின் முகப்புப் பக்கத்தில் செய்திகளில் காட்சிப்படுத்த வேண்டுகிறேன். --மகாலிங்கம் இரெத்தினவேலு 00:11, 28 திசம்பர் 2023 (UTC)
- விருப்பம் த♥உழவன் (உரை) 01:41, 28 திசம்பர் 2023 (UTC)
- வரும் காலங்களில், வார்ப்புரு பேச்சு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள் எனும் பக்கத்தில் நமது பரிந்துரைகளை வைக்கலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:05, 28 திசம்பர் 2023 (UTC)
விக்கிப்பீடியாவின் மொழிக்கொள்கை என்பது தமிழின் பொதுவழக்கை அப்படியே கையாள்வதாக இருக்க வேண்டுமா? அல்லது, பொதுவழக்கிற்கு மாறான விக்கிப்பீடியாவிற்கு மட்டுமான குழூஉக் குறிகள் கொண்டனவாக இருக்க வேண்டுமா? ஏனெனில், விஜயகாந்தின் மரணச் செய்தியை வெளியிட்ட எந்த ஊடகமும் அவர் பெயரை 'விசயகாந்து' என எழுதவில்லை. மேலும், ஸ்டாலின், ஜெயலலிதா முதலிய பெயர்களை நாம் கிரந்தத்துடனேயே பயன்படுத்துகிறோம். குறைந்தபட்சம், விக்கிப்பீடியாவிற்குள்ளாவது ஒரே விதிகளைப் பின்பற்றுவோமா? - CXPathi (பேச்சு) 14:29, 28 திசம்பர் 2023 (UTC)
- பொது வழக்கை ஏற்பதையே ஆதரிக்கிறேன். இருப்பினும் இத்தகைய தலைப்புகள் மேலும் பல உள்ளதாலும் முந்தைய அலுப்பூட்டும் உரையாடல்களைத் தவிர்க்கும் பொருட்டும் பொரும்பாலான பழைய தலைப்புகளில் விவாதம் நடப்பதில்லை. மற்றவர்களின் கருத்தறிந்து முடிவுகளை எடுக்கலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 16:44, 28 திசம்பர் 2023 (UTC)
ஒற்றெழுத்து
தொகு(த, ய, ற) இந்த எழுத்துகளில் முடிகின்ற-- சிறந்த, உயர்ந்த போன்ற முற்றுப் பெற்ற சொற்களுக்கு ஒற்றெழுத்து வராது. இதுபோலவே இந்திய, தேசிய, ஒன்றிய போன்ற சொற்களின் கடைசியிலும் ஒற்றெழுத்து வராது என்று நம்புகிறேன்.-- சா. அருணாசலம் (பேச்சு) 17:54, 31 திசம்பர் 2023 (UTC)
- எழுத்தை வைத்து ஒற்றெழுத்தைத் தீர்மானிக்க மாட்டோம். இலக்கணத்தை வைத்தே தீர்மானிப்போம். சிறந்த, உயர்ந்த என்பவை எச்சங்கள்; முற்று பெறாதவை. பெயரெச்சத்தில் ஒற்று வராது. இந்திய, தேசிய, ஒன்றிய போன்றவை மகர ஈற்று மெய்யெழுத்து கெட்டவை எனவே ஒற்று மிகும். -நீச்சல்காரன் (பேச்சு) 18:43, 31 திசம்பர் 2023 (UTC)
புதிய பங்களிப்பாளர்களை உருவாக்க கலந்துரையாடுக
தொகுபுதிய பயனர்களை எப்படி தக்க வைப்பது? என்ற கேள்வி, ஒவ்வொரு மொழி விக்கித்திட்டங்களிலும் முன்னணி கேள்வியாக உள்ளது. இது குறித்து முதலில் நான் அறிந்து கொண்டது, பெர்லின் நகரில் நடைபெற்ற 2030 வரை விக்கிமீடியா கையாள வேண்டிய உத்திகள் விக்கிக்கூடலிலும், எனது செலவில் சிங்கப்பூரில் நடைபெற்ற விக்கிமேனியாவில் கலந்து கொண்ட போதும்; இது குறித்து பிற மொழியினரின் எண்ணங்களையும் அறிந்தேன்.
- குறுகிய காலத்தில் தமிழ் விக்கிமூலம் இந்திய அளவில் முன்னணியில் வர எளிய வழிமுறைகளே உதவியாக இருக்கின்றன. அதற்கு சீனிவாசன்(OCR), நீச்சல்காரன்(Interface tools), பாலாஜி(நிதிநல்கை), வங்கமொழி விக்கியர்கள்(அட்டவணை), தெலுங்கு, கன்னட விக்கியர்கள்ய(உரிமம்),.. அதுபோல, தமிழ் விக்கிப்பீடியாவும் தொடர்ந்து முன்னணியில் இருக்க விருப்பம். " இனியொரு விதி செய்வோம் - அதை எந்நாளும் காப்போம் !--பாரதியார்"
- தகவலுழவன் முன்மொழிவு: ஒரு படம், ஒரு மேற்கோள், ஒரு பகுப்பு, சிலவரிகளுள்ள உள்ளடக்கம் கொண்டு குறுங்கட்டுரையை உருவாக்கக் கற்றுத்தருவதால் புதியவர்கள் ஒரு விக்கிக் கட்டுரையின் அடிப்படை வடிவத்தினை புரிந்து கொள்வர். ஏனெனில், பள்ளி, கல்லூரி, பிற தேர்வுகளில் கட்டுரை என்ற சொல், விக்கிக்கட்டுரை வடிவத்தினைக் குறிக்கவில்லை. அப்பணிச்சூழலில் வாழும் அவர்களை, இங்கு தொடர்ந்து பங்களிக்க/தக்க வைக்க இதனை முன்மொழிகிறேன். நீங்களும் முன்மொழிவுகளை தாருங்கள்.
த♥உழவன் (உரை) 03:25, 4 சனவரி 2024 (UTC)
- குறைந்தது 3 முதல் 5 வரையிலான வாக்கியங்களை உள்ளடக்கிய பத்தி ஒன்று, தேவைப்படும் தகவற்பெட்டி, ஏற்றுக்கொள்ளத்தக்க மேற்கோள் குறைந்தபட்சம் ஒன்று, உரிய பகுப்புகள், விக்கித்தரவுடன் இணைத்தல் - ஆகிய கூறுகளையே நேரடிப் பயிலரங்குகளிலும், இணையவழி பயிற்றுவித்தலிலும் கற்றுத் தருகிறோம். இக்கூறுகளைக் கொண்டிராத கட்டுரைகளில் மட்டுமே உரிய பராமரிப்பு வார்ப்புருக்கள் இடப்படுகின்றன. ஆர்வமுள்ள பயனர்களுக்கு அவர்கள் கேட்கும் உதவிகளை செய்து தந்தால், அவர்களை தக்க வைப்பதோடு, அவர்கள் மூலமாக புதுப் பயனர்களை கொண்டு வர இயலும். எடுத்துக்காட்டு: தேங்கிக் கிடக்கும் வரைவுக் கட்டுரைகள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:25, 4 சனவரி 2024 (UTC)
- எனது பார்வையில் அடிப்படைக் கட்டுரைகள் ஏற்கனவே உள்ளன. எனவே புதியவர்களைக் கட்டுரை எழுதச் சொல்வதைவிட மேம்பாட்டுப்பணிகளைச் செய்யச் சொல்லலாம். படங்கள் இணைப்பது. கட்டுரையை விரிவாக்குவது, வார்ப்புரு சேர்ப்பது, பிழைகளை நீக்குவது போலச் செய்யலாம். விக்கி நடைமுறை கற்ற பின்னர் கட்டுரை உருவாக்கலாம்.- நீச்சல்காரன் (பேச்சு) 10:54, 4 சனவரி 2024 (UTC)
எண்ணிக்கை > கட்டுரை ஆழம்
தொகு100விக்கிநாட்கள் திட்டம் பல கட்டுரைகளை த.விக்கு அளித்தாலும், இவ்வாறான விரைவான கட்டுரையாக்கம் எந்தளவிக்கு காத்திரமானவை என்பதில் கேள்விகள் உள்ளன. எ.கா: பகுப்பு பேச்சு:பார்லேரியா AntanO (பேச்சு) 13:13, 19 சனவரி 2024 (UTC)
2-நாள் பயிலரங்கு ஒன்றிற்கான முன்மொழிவு
தொகுதமிழ் விக்கிப்பீடியர்களுக்கு வணக்கம். புதிய பயனர்களுக்குப் பயிற்சியளித்து, அவர்களை தொடர் பங்களிப்பாளர்களாக மாற்றும் ஒரு முயற்சியாக... முன்மொழிவு ஒன்று விக்கிப்பீடியா பேச்சு:பயிலரங்கு 2024 (சோதனைத் திட்டம்) எனும் உரையாடல் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் கூறுகளை மேம்படுத்த உங்களின் கருத்துகள் / எண்ணங்கள் / பரிந்துரைகளை அதே உரையாடல் பக்கத்தில் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். திட்டத்தில் இணைந்து, ஒருங்கிணைப்பாளராக செயல்பட விரும்பினால், உங்களின் பெயரை விக்கிப்பீடியா:பயிலரங்கு 2024 (சோதனைத் திட்டம்) எனும் பக்கத்தில் பதிவுசெய்யுங்கள்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:26, 26 சனவரி 2024 (UTC)
முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திட்டம் குறித்தான உங்களின் ஆதரவு அல்லது எதிர்ப்பை இங்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இத்திட்டத்திற்கு எதிராக கருத்துகள் இருப்பின், அவற்றை இங்கேயே பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:06, 28 சனவரி 2024 (UTC)
- ஆதரவு--மகாலிங்கம் இரெத்தினவேலு 17:03, 28 சனவரி 2024 (UTC)
- ஆதரவு ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 06:36, 29 சனவரி 2024 (UTC)
- ஆதரவு--கு. அருளரசன் (பேச்சு) 06:50, 29 சனவரி 2024 (UTC)
- ஆதரவு--ஸ்ரீதர். ஞா (✉) 15:38, 31 சனவரி 2024 (UTC)
- ஆதரவு--பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 03:05, 1 பெப்பிரவரி 2024 (UTC)
பரணிட என்ன கால எல்லை வைக்கலாம்?
தொகுஇங்கு உங்களின் எண்ணங்களை தெரியபடுத்துங்கள். விக்கிப்பீடியா பேச்சு:ஆலமரத்தடி (தொழினுட்பம்) த♥உழவன் (உரை) 02:22, 1 பெப்பிரவரி 2024 (UTC)
உலோ. செந்தமிழ்க்கோதை மறைவு
தொகுபிப்ரவரி 1 பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை மறைந்தார். சில நுட்பக் காரணங்களால் சில நாட்கள் விக்கிக்குள் நுழையமுடியாததால் உடனே இங்கே அறிவிக்க இயலவில்லை. இருப்பினும் இதர சமூகத்தளங்களில் அறிவிக்கப்பட்டு விக்கிப் பயனர்கள் உட்படப் பொதுச் சமூகத்தினரில் இரங்கல் செய்தியினைப் பகிர்ந்து வருகின்றனர். அன்னாரினை நினைவுகூரும் வகையில் விக்கிமீடிய வலைப்பதிவும் இரங்கல் செய்தியினை வெளியிட்டுள்ளது. இணையவழியாக இப்பயனருக்கு ஒரு நினைவேந்தல் கூட்டம் நடத்தினால் சிஐஎஸ்சும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தனர். யாரேனும் முன்னெடுக்க விரும்பினால் அறியத்தரலாம். நடைபெறவுள்ள கணித்தமிழ் மாநாட்டில் நமது காட்சி அரங்கில் நேரடியாக நினைவஞ்சலி செலுத்தப் பரிந்துரைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 17:06, 5 பெப்பிரவரி 2024 (UTC)
- தற்போது நடைபெற்று வரும் கணித்தமிழ் மாநாட்டின் விக்கிமீடியக் காட்சி அரங்கில் பயனர் உலோ. செந்தமிழ்க்கோதையின் சிறு நினைவேந்தல் நிகழ்வை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அவரின் நினைவுகளும் உழைப்பும் புதியவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தலாம். வாய்ப்புள்ள பயனர்கள் நேரில் கலந்து கொள்ளலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 17:50, 9 பெப்பிரவரி 2024 (UTC)
மேற்கோள் பெட்டி
தொகுதுன்பேர்சியா கட்டுரையில் 150 மேற்கோள்கள் உள்ளன. அதனால், இதுபோன்ற கட்டுரையின் அடிப்புறத்தினையும், முன்தோற்றத்தினையும் விரைந்து, எளிதாகக் காண, மேற்கோள்களுக்கு பெட்டிவசதியைப் புதிதாக ஏற்படுத்தி உள்ளேன். உங்களின் எண்ணமிடுக. த♥உழவன் (உரை) 23:47, 14 பெப்பிரவரி 2024 (UTC)