பயனர் பேச்சு:Nan/தொகுப்பு02

Active discussions

கட்டுரைப் போட்டிதொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:55, 27 அக்டோபர் 2013 (UTC)

நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெற நியமித்தல் தொடர்பான பரிந்துரைக் குழுதொகு

நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் நியமித்தல் தொடர்பான பரிந்துரைக் குழு உங்களை ஓர் உறுப்பினராக பங்களிக்க வேண்டுகிறேன். பங்களிக்க இசைவு எனில் குழு என்ற பகுதியில் உங்கள் பெயரைச் சேர்த்து விடுங்கள். நன்றி. --Natkeeran (பேச்சு) 13:38, 28 அக்டோபர் 2013 (UTC)

வணக்கம் நட்கீரன்! வார நாட்களில் நேரம் குறைவாக உள்ளமையாலும், வேதியியல் விரிவுரை வகுப்புகளை நடத்த இக்காலகட்டத்தில் முன்னரே ஒத்துக் கொண்டதாலும், என்னால் இப்பொறுப்பை ஏற்க இயலாது. மன்னிக்கவும்--நந்தகுமார் (பேச்சு) 14:13, 28 அக்டோபர் 2013 (UTC)

நன்றிதொகு

நமது மொழியை, நாம் தானே வளப்படுத்த வேண்டும். இந்த கட்டற்ற கலைக்களஞ்சியத்தின் மூலம், தமிழுக்கு என்னால் இயன்ற சிறு முயற்சி/உதவி. அவ்வளவு தான். இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் கேட்பேன்...--Saba rathnam (பேச்சு) 10:39, 7 நவம்பர் 2013 (UTC)

தேவையற்ற வழிமாற்றுகள் நீக்கம்தொகு

தேவையற்ற வழிமாற்றுத் தலைப்புகளை நீக்கும் போது அத்தலைப்பு ஏதேனும் கட்டுரைகளுக்கு இணைக்கப்பட்டுள்ளனவா எனக் கவனியுங்கள். இதனை நீங்கள் இடப்பக்கத்தில் உள்ள இப்பக்கத்தை இணைத்தவை என்ற பகுதியில் பார்க்கலாம். இணைப்புள்ள கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து சரியான தலைப்பையும் மாற்ற வேண்டும். அதன் பின்னர் வழிமாற்றை நீக்கலாம். அல்லது கட்டுரைகளில் சிவப்பு இணைப்பு வரும். நன்றி.--Kanags \உரையாடுக 20:06, 7 நவம்பர் 2013 (UTC)

நீங்கள் கூறியவண்ணமே செய்கிறேன்--நந்தகுமார் (பேச்சு) 07:36, 8 நவம்பர் 2013 (UTC)
சுவர்ணலதா இணைக்கப்பட்டுள்ள பக்கங்கள். திருத்தி விடுங்கள்.--Kanags \உரையாடுக 20:16, 11 நவம்பர் 2013 (UTC)

வார்ப்புரு:Fatsதொகு

ஐயா, வார்ப்புரு:Fats என்ற வார்ப்புருவை நீக்குவதன் மூலம் சில கட்டுரைகளில் சிவப்பிணைப்புகள் உருவாகும். மேலும் ஆங்கிலத்திலிருந்து வரும் புதிய மொழிபெயர்ப்புக் கட்டுரைகளில் சிவப்பிணைப்புகள் உருவாகும் என நினைக்கிறேன். ஆகவே இப்பக்கத்தை மீளுருவாக்கம் செய்யலாமா?--நீச்சல்காரன் (பேச்சு) 03:18, 9 திசம்பர் 2013 (UTC)

மீளுருவாக்கம் செய்துவிட்டேன். நன்றி--நந்தகுமார் (பேச்சு) 07:40, 9 திசம்பர் 2013 (UTC)

படங்களை இணைத்தமைக்கு மிக்க நன்றி நந்த குமார்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:53, 10 திசம்பர் 2013 (UTC)

வார்ப்புரு:தமிழ்நாட்டின் பொருளாதாரம்தொகு

தமிழ்நாட்டுப் பொருளாதாரம், இதில் தமிழ்நாட்டின் பொருளாதாரம், பெட்டியை மாற்றுவது எப்படி? தொகு பக்கத்தில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் என்ற பெட்டி இல்லை. Raghukraman (பேச்சு) 13:28, 6 சனவரி 2014 (UTC)

உதவவும் சிவகார்த்திகேயன் (பேச்சு) 13:34, 6 சனவரி 2014 (UTC)
வார்ப்புரு இங்கு உள்ளது--நந்தகுமார் (பேச்சு) 19:27, 6 சனவரி 2014 (UTC)
ஒரு பக்கத்‌தில் உள்ள அனைத்து வார்ப்புருக்களும் தொகுக்கும் வண்ணம் பக்கத்‌தின் கடைசியில் கீழே.... உள்ளது. அதை ஒரு பக்கத்‌தில் "தொகு" பொத்தானை அழுத்திய பின் பார்கலாம்.--நந்தகுமார் (பேச்சு) 19:34, 6 சனவரி 2014 (UTC)

நந்தகுமார் -- நன்றி. Raghukraman (பேச்சு) 02:24, 7 சனவரி 2014 (UTC)

திரு Nanதொகு

வணக்கம். உங்கள் வரவேற்பிற்க்கு நன்றி. நான் 2006 முதல் ஆங்கில விக்கிப்பெடியவில் உறுப்பினர். தமிழ் விக்கிப்பெடிய வரவேற்க்கப்படவேண்டியதே. அதை காட்டிலும் எனது கருத்து நம்மை பற்றி பிறர் தெரிந்து கொள்ள சிறந்த வழி ஆங்கில விக்கிப்பெடியவே. ஏனென்றால் கூகில் தேடலில் முதன்மையான விடையை தருவது விக்கிப்பெடியவே அவற்றில் கவனம் செலுத்தவேண்டும். நமது உணவு கலாசாரம் ஆகியவற்றை பிறர் சொந்தம் கொண்டாடுவதை பார்த்து தான் முதலில் நான் விக்கிப்பெடியவில் பதிய ஆர்வம் கொண்டேன். தமிழ்ப் பற்றி அறிவு குறைவே, என்னால் முடிந்தவற்றை செய்து கொண்டு இருக்கிறேன். அதில் நமது மக்கள் அனைவரும் பங்குக்கொள்ள வேண்டும்மென்று கேட்டு கொள்கிறேன். M.Arulraja (பேச்சு) 08:16, 13 திசம்பர் 2013 (UTC)M.Arulraja

  விருப்பம்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 09:09, 16 திசம்பர் 2013 (UTC)

மீளமைத்தல்தொகு

நீங்கள் என்னொரு புதியவரின் பக்கத்தில் கொடுத்த இணைப்பு தவறாக (அப்படி ஒரு பக்கம் இல்லை) இருந்ததால் நீக்கினேன். அவர் குழம்பிவிடக்கூடதென்பதர்காகவே அவ்வாறு செய்தேன். தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 09:09, 16 திசம்பர் 2013 (UTC)

துப்பரவுப் பணிகள்தொகு

துப்பரவு, வரவேறுப் பணிகளைச் சிறப்பாகச் செய்துவருகிறீர்கள். நன்றிகள். --Natkeeran (பேச்சு) 05:07, 24 திசம்பர் 2013 (UTC)

  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 06:57, 24 திசம்பர் 2013 (UTC)

மருத்துவக் கட்டுரைகள் மொழிபெயர்ப்புத் திட்டம்தொகு

வணக்கம் நந்தகுமார்! நீங்கள் விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு திட்டத்தில் பல கட்டுரைகளில் பங்களித்துள்ளீர்கள். அங்கே பங்குபற்றும் பயனர்கள் பட்டியலில் உங்கள் பெயரையும் இணைத்துவிடுங்களேன். மேலும், தற்போது ஆங்கில விக்கித்திட்டத்தின் (எமது திட்டப் பக்கத்தில் ஏற்கனவே இணைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன) மூலமாக தமிழ்விக்கிப் பயனரல்லாதவர்களால் சில கட்டுரைகள் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு வருவதை அறிவீர்கள்தானே. கவனித்திராவிட்டால், பேச்சுப்பக்கத்தில் அது தொடர்பான விபரங்களைப் பார்க்கலாம். மேலும் ஆங்கிலத் திட்டத்தில், இதனை முன்னின்று செயற்படுத்தும், James Heilman, MD யின் பயனர் பேச்சுப் பக்கத்திலும் மேலதிக விபரங்களைப் பார்க்கலாம். நீங்களும் இதில் இணைந்து செயற்படுவீர்கள் என நம்புகின்றேன். தயவு செய்து அறியத் தருவீர்களா? அப்படி இணைந்து கொள்வதாயின், இங்கே நீங்களும் பதிவு செய்துவிடுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 15:20, 19 சனவரி 2014 (UTC)

உங்களுக்கத் தெரியுமா அறிவிப்புதொகு


தயவுசெய்து வாக்களிக்கதொகு

இங்கு சென்று vote' என்பதை click செய்து yes என்பதை தெரிவுசெய்யவும், வேணு மெனில் கருத்துக்களையும் இடவும். --யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:43, 9 பெப்ரவரி 2014 (UTC)

உங்களுக்கு யார் பொருத்தமானவர் என தோன்றுகிறதோ அவர்களுக்கு வாக்களியுங்கள். எனக்குதான் வாக்களிக்க வேண்டும் என்றில்லை. மேலும் Yes, No, Neutral இதில் எது உங்களுக்கு சரி என படுகிறதோ அதன்படி வாக்களியுங்கள். நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 12:11, 9 பெப்ரவரி 2014 (UTC)
வணக்கம்! என்னுடைய தமிழ் விக்கிபீடியா கணக்கு "Nan" என்ற பெயரிலும், "Wikidata கணக்கு" "nankut " என்ற வேறு பெயரிலும் இருப்பதால் ("nan"என்னும் பெயர் ஏற்கனவே உபயோகத்திலுள்ளது என வருகிறது. அது என் கணக்கு இல்லை), என்னால் வாக்களிக்க இயலவில்லை. கணக்குகளை ஒருங்கிணைக்க முன்பு முயன்றேன். முடியாததால் அப்படியே விட்டுவிட்டேன்.--நந்தகுமார் (பேச்சு) 19:15, 9 பெப்ரவரி 2014 (UTC)

வேண்டுகோள்...தொகு

வணக்கம்! தற்போது தங்களின் அலுவலகப் பணிகளில் நீங்கள் மும்முரமாக இருப்பதனை உணர்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது உங்களின் வட்டார தேர்தல் தொகுதிகள் குறித்த இற்றைகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:13, 5 ஏப்ரல் 2014 (UTC)

வணக்கம்! செல்வ. சிவகுருநாதன். தற்போதைய பணிச்சூழலில் இவற்றை செய்ய இயலுமா எனத் தெரியவில்லை. என்றாலும், அரசியல், சினிமா, கிரிக்கெட் முதலியவைக் குறித்து எழுதுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. அறிவியல், மருத்துவம் ஆகிய கட்டுரைகள் மொழிப்பெயர்க்க, எழுத நிறைய உள்ளன. முடிந்தவரை அதிகமாகப் பங்களிக்க முயற்சி செய்கிறேன். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 05:13, 6 ஏப்ரல் 2014 (UTC)

  விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:06, 7 ஏப்ரல் 2014 (UTC)

உதவி தேவைதொகு

வணக்கம் Nan ஆர். ஜே. உத்ரா கட்டுரைக்கான மேற்கோள்கள் அனைத்தையும் ஆர். ஜே. உத்ரா எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்துள்ளார் அந்த மின்னஞ்சலில் தகவல்களை மேற்கோளாக பயன் படுத்த முடியுமா --✍☪mohamed ijazz☪® (பேச்சு) 07:12, 21 ஏப்ரல் 2014 (UTC)

வணக்கம் முகமது! மேற்கோள்கள் நம்பத்தக்கதாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் அவற்றை கட்டுரையில் இணைப்பதில் எந்த தவறும் இல்லை. மேற்கோள்கள் பற்றிய அதிக விவரங்களை இங்கு பாருங்கள்--நந்தகுமார் (பேச்சு) 09:06, 21 ஏப்ரல் 2014 (UTC)

க்ரிஷ் 3தொகு

க்ரிஷ் 3 என்ற தலைப்பில் ஒரு வழிமாற்றம் இருந்திருந்தால் பிரச்சினை தோன்றியிராது. புதிய பயனர் வழிமாற்றம் செய்வது தெரியாமல் புதிய கட்டுரையை அதே உள்ளடக்கத்துடன் ஆரம்பித்திருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன். இதனால் அவரை உடனடியாகத் தடை செய்த உங்கள் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை. தொடர்ந்து இந்நடவடிக்கையில் ஈடுபட்டால் தடை செய்வதில் நியாயம் இருக்கலாம். பொதுவாகப் பயன்படுத்தப்படும் தலைப்புகளில் வழிமாற்றுகள் வைத்திருப்பது பல வகைகளில் நன்மை பயக்கும்.--Kanags \உரையாடுக 12:45, 13 மே 2014 (UTC)

இது இரண்டாவது முறை. வேறு ஒரு ஐ.பி. முகவரியிலிருந்து பதிவு செய்திருந்தார். அதை நீக்கியிருந்தேன். இரண்டு ஐ.பி முகவரியும் 59.94.161.... என்று ஆரம்பித்து இருந்தது. ஏற்கனவே கட்டுரை உள்ளது என தெரிவித்து அக்கட்டுரையை நீக்கியிருந்தேன். மீண்டும் இதே முறையில் பதிவிட்டதாலேயே அவரைத் தடை செய்திருந்தேன். இது தவறான செய்கை அல்லவா? நீங்கள் விரும்பினால் தடையை நீக்கி விடுங்கள்--நந்தகுமார் (பேச்சு) 13:10, 13 மே 2014 (UTC)
அப்படியானால் சரி.--Kanags \உரையாடுக 13:20, 13 மே 2014 (UTC)

வேண்டுகோள்தொகு

வணக்கம் Nan! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:26, 17 மே 2014 (UTC)
வணக்கம். மேற்கோள்கள் இல்லை எனப் பட்டியலிடப்பட்டிருக்கும் இக்கட்டுரையைப் பாருங்கள். ஏற்கனவே, 16 மேற்கோள்கள் உள்ளனவே.--நந்தகுமார் (பேச்சு) 05:47, 17 மே 2014 (UTC)
வணக்கம் நந்தகுமார், நீங்கள் குறிப்பிட்டுக்காட்டியுள்ள பக்கம் கூகிள் மொழிபெயர்ப்பு திட்டத்தின்கீழ் இயந்திர மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கட்டுரை. ஆங்கில விக்கிப்பீடியாவில் தரக்கட்டுப்பாட்டு கொள்கை மிகவும் கெடுபிடியானவை. இப்பக்கத்தில் இருக்கும் வார்ப்புருவானது, அக்கட்டுரையின் நன்மைகள் என்ற பகுதி எவ்வித மேற்கோளையும் சுட்டவில்லை என்பதினை குறிக்கிறது. மேலதிக தகவல்கள் தேவைப்படின் கோரவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:54, 17 மே 2014 (UTC)
கூகிள் மொழிபெயர்ப்பில் அப்படியே உள்வாங்கப்பட்டவிட்டது. இவ்வாறு பல "வார்ப்புருக்கள்" கூகிள் மொழிபெயர்ப்பு கட்டுரைகளில் காணப்படுகின்றன. --AntonTalk 05:57, 17 மே 2014 (UTC)

துடுப்பாட்டக்காரர்கள் பற்றிய குறிப்பிடத்தக்கமை வரையறைதொகு

வணக்கம். துடுப்பாட்டக்காரர்களின் குறிப்பிடத்தக்கமை வரையறை தொடர்பாக உங்கள் கருத்து தேவைப்படுகிறது. பார்க்க: விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை வாக்கெடுப்பு. பின்னணி உரையாடலுக்கு, பகுப்பு பேச்சு:துடுப்பாட்டக்காரர்கள் பார்க்கவும். நன்றி.--இரவி (பேச்சு) 13:48, 17 மே 2014 (UTC)

இரு கட்டுரைகளை இணைப்பது எப்படி?தொகு

A, B என்ற இரு கட்டுரைகளை இணைக்க வேண்டுமானால், முதலில் எந்தக் கட்டுரைத் தலைப்பை முதன்மைப்படுத்துவது என்று தீர்மானியுங்கள். எ+கா: A என்ற கட்டுரையை முதன்மைப்படுத்துவோம். A கட்டுரையில் உள்ள முக்கிய தகவல்களை B கட்டுரையில் சேருங்கள். பின்னர் அதனை A கட்டுரைக்கு மாற்றுங்கள். மாற்றும் போது A கட்டுரை ஏற்கனவே உள்ளது. அதனை நீக்க வேண்டுமா எனக் கேட்கும். ஆம், என்று தயங்காமல் கூறி மாற்றுங்கள். பின்னர் A கட்டுரையை நீக்க வேண்டும். பின்னர் அதே A கட்டுரையை மீள்விக்க வேண்டும். மீட்டமைக்க என்பதை அழுத்துங்கள். மேலும் தகவல்களுக்கு: விக்கிப்பீடியா:கட்டுரைகளை ஒன்றிணைத்தல் ஐப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 00:13, 20 நவம்பர் 2010 (UTC)

நீங்கள் குறிப்பிட்டதைப் படித்துவிட்டுதான் செய்து வருகிறேன். தவறு ஏதேனும் உள்ளதா? --நந்தகுமார் (பேச்சு) 09:12, 22 சூன் 2014 (UTC)
இல்லை, இப்போது உன்னிப்பாகக் கவனித்தபோது நீங்கள் சரியாகவே செய்திருக்கிறீர்கள். இந்தூர் வழிமாற்றை புதிதாக உருவாக்கியதை நான் தவறாகப் புரிந்து கொண்டேன்:).--Kanags \உரையாடுக 09:47, 22 சூன் 2014 (UTC)
ஒருங்கிணைத்தல் குறிப்புகள், எனக்கும் பயனுள்ளதாக இருக்கின்றன. மிக்க நன்றி. வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 09:50, 22 சூன் 2014 (UTC)
பி கட்டுரையை ஏ கட்டுரைக்கு மாற்றும் போது வழிமாற்றை வைத்துக் கொண்டு நகர்த்துங்கள்.--Kanags \உரையாடுக 12:02, 22 சூன் 2014 (UTC)
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 14:15, 22 சூன் 2014 (UTC)

விக்கி விடுப்புதொகு

050714-லிருந்து நந்தகுமார் விக்கி விடுப்பில் செல்கிறார். மீண்டும் சுவீடிய கோடை விடுமுறைக்குப் பின் விக்கிப்பணிக்கு திரும்புவார்--நந்தகுமார் (பேச்சு) 09:52, 29 சூன் 2014 (UTC)

  விருப்பம் விடுமுறையை இனிதே கழித்து மீண்டும் விக்கிக்கு வந்து சிறப்புறப் பங்களியுங்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:19, 29 சூன் 2014 (UTC)
நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 17:08, 29 சூன் 2014 (UTC)

பதக்கம்தொகு

  தீக்குறும்பு களைவர் பதக்கம்
Commons sibi (பேச்சு) 14:36, 26 ஆகத்து 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 14:44, 26 ஆகத்து 2014 (UTC)
  விருப்பம்வாழ்த்துக்கள்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:20, 26 ஆகத்து 2014 (UTC)

சந்தேகம்தொகு

மனதில் உறுதி வேண்டும் என்ற தலைப்பில் 1987 ஆம் ஆண்டைத் தவிர வேறு ஆண்டுகளில் திரைப்படம் வெளிவந்துள்ளதா?--Kanags \உரையாடுக 08:31, 30 ஆகத்து 2014 (UTC)

இணையத்தில் தேடியதில் இப்படம் 1987 ஆம் ஆண்டு வந்ததாக உள்ளது. வேறு படம் இதே பெயரில் வெளிவந்திருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. விக்கிபீடியா பக்கத்திலும் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த பட பட்டியல்களில் இதன் பெயர் உள்ளது. இது குறித்துப் பிற பயனர்களுக்குத் தெரிந்திருந்தால் உதவி செய்யவும்--நந்தகுமார் (பேச்சு) 08:40, 30 ஆகத்து 2014 (UTC)

வார்ப்புரு:கொழுப்புகள், எண்ணெய்கள்தொகு

நீங்கள் உருவாக்கிய வார்ப்புரு:கொழுப்புகள், எண்ணெய்கள் என்ற தகவல்சட்டம் {{translate}} என்ற வார்ப்புருவால் பயன்படுத்தப்பட்ட கட்டுரைகளில் அக்கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட வேண்டியதாக தவறாக வருகிறது. பார்க்க அரிசித் தவிட்டு எண்ணெய். மேலும் கைபேசி பார்வையில் தகவல்சட்டமே வரவில்லை. அதையும் சற்று சரிபார்க்க! நன்றி - தமிழ்த்தம்பி (பேச்சு) 06:54, 31 ஆகத்து 2014 (UTC)

வணக்கம் தமிழ்த்தம்பி!
  • இந்தத் தகவல்சட்டத்தில் உள்ள சில ஆங்கிலப் பெயர்களுக்கு எனக்கு தமிழில் பெயர் தெரியாததால் மொழிபெயர்க்க வேண்டும் என்ற வார்புருவை நான்தான் இட்டேன். நீங்களோ அல்லது வேறு பயனர்களோ இப்பெயர்களை மொழிப்பெயர்த்து உதவினால் நன்றாக இருக்கும்.
  • கைபேசி பார்வையில் தகவல்சட்டம் வருவதற்கு தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் உதவ ஒத்தாசைப் பக்கத்தில் உங்கள் செய்தியை பதிந்துள்ளேன்.--நந்தகுமார் (பேச்சு) 07:19, 31 ஆகத்து 2014 (UTC)
உடனடியாக பார்த்ததற்கு நன்றி நந்தகுமார்! மொழிபெயர்க்க வேண்டும் என்பது வார்ப்புருவிற்கு வரவேண்டும் அல்லவா? ஆனால் தற்போது வார்ப்புரு உள்ளிட்ட கட்டுரைகளில் "இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது." என்று வருகிறது. இது குழப்பத்தை ஏற்படுத்தும். தெரியவில்லை, இதுவும்கூட தொழில்நுட்ப பிண்ணனியினால் இருக்கலாம். - தமிழ்த்தம்பி (பேச்சு) 08:10, 31 ஆகத்து 2014 (UTC)
இதை Kanags திருத்திவிட்டார். அவருக்கு நன்றி! <noinclude> சேர்த்ததன்மூலம் நான் எதிர்பார்த்த செயல்பாடு வந்திருக்கிறது. - தமிழ்த்தம்பி (பேச்சு) 09:11, 31 ஆகத்து 2014 (UTC)
வார்ப்புருக்களுக்குள் இவ்வாறான வார்ப்புருக்கள் இடும் போது அவை கட்டுரைகளைப் பாதிக்காமல் இருக்க <noinclude> என்பதற்குள் இட வேண்டும்.--Kanags \உரையாடுக 09:14, 31 ஆகத்து 2014 (UTC)
  விருப்பம், நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 12:05, 31 ஆகத்து 2014 (UTC)

பதக்கம்தொகு

  களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
நான் அண்மைய மாற்றங்கள் எப்பொழுது பார்ப்பினும், உங்களது பங்களிப்பே காண்கிறேன். நானும் நிர்வாகி ஆகி பல மாதங்கள் ஆகியும், இன்று வரை ஏதேனும் செய்யவேண்டும், பக்கத்தை நீக்க வேண்டும், புதுப்பயனரை வரவேற்க வேண்டும், என்று அந்த பதிகைகளுக்கு சென்றால், அங்கே எல்லாவற்றையும் நீங்களே செய்து விடுகிறீர்கள். அவ்வ்வு! Vatsan34 (பேச்சு) 17:18, 26 அக்டோபர் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:36, 26 அக்டோபர் 2014 (UTC)
  விருப்பம், நன்றி!--நந்தகுமார்
அயரா உழைப்புக்கு வணக்கம் !--இரவி (பேச்சு) 14:28, 18 நவம்பர் 2014 (UTC)

பெண்ணியம் தொடர்பான வலைவாசல்தொகு

வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி .--Commons sibi (பேச்சு) 08:45, 27 அக்டோபர் 2014 (UTC)

இந்தப் பக்கத்தில் தாங்கள் தெரிவித்த பரிந்துரைகளை செயற்படுத்தி வருகிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:10, 6 நவம்பர் 2014 (UTC)
நன்றி சிவகுரு!--நந்தகுமார் (பேச்சு) 05:44, 6 நவம்பர் 2014 (UTC)

சிறந்த நிருவாக பணி உழைப்பாளர்தொகு

  சிறந்த நிருவாக பணி உழைப்பாளர்
39 நிருவாகிகளிலும் அதிகமாக நிருவாக அணுக்கத்தினைப் பயன்படுத்தி செயற்படுவதற்காக இப்பதக்கத்தினை தங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த 365 நாட்களிலும் நீங்களே அதிகளவு நிருவாகப் பணிகளைச் செய்துள்ளீர்கள். மேலும் பணி சிறக்க வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்! --AntonTalk 03:52, 16 நவம்பர் 2014 (UTC)
  விருப்பம், நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 06:32, 16 நவம்பர் 2014 (UTC)

தொடர்உழைப்பிற்கு நன்றிகளும், பாராட்டுகளும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:41, 17 நவம்பர் 2014 (UTC)

உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி ஆன்டன், சிவகுரு!--நந்தகுமார் (பேச்சு) 07:51, 18 நவம்பர் 2014 (UTC)
வாழ்த்துகள் !! உங்கள் சீரிய பணிக்கு எனது பாராட்டுக்களும் நன்றிகளும் !!--மணியன் (பேச்சு) 08:00, 18 நவம்பர் 2014 (UTC)
நன்றி மணியன்!--நந்தகுமார் (பேச்சு) 13:03, 18 நவம்பர் 2014 (UTC)
அட, இப்படி எல்லாம் புள்ளிவிவரம் இருக்கா? வாழ்த்துகள் நந்தகுமார்.--இரவி (பேச்சு) 14:28, 18 நவம்பர் 2014 (UTC)
  விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 14:39, 18 நவம்பர் 2014 (UTC)
நன்றி இரவி, இஜாசு --நந்தகுமார் (பேச்சு) 18:03, 18 நவம்பர் 2014 (UTC)

திரைப்படத் தலைப்புகள்தொகு

தனித்தன்மையான தலைப்புகளுக்கு திரைப்படம் என்ற அடைமொழி தேவையற்றது. அதே பெயரில் வேறு கருத்துள்ள சொற்கள் இருந்தால் திரைப்படம் என்ற அடைமொழி சேர்ப்பது தகுந்ததாக இருக்கும்.--Kanags \உரையாடுக 21:36, 28 நவம்பர் 2014 (UTC)

வெளியிணைப்புகள்தொகு

ஐயா, வெளியிணைப்புக்களை கட்டுரைப்பகுதிக்குள் இணைப்புத்தருவது இல்லை. அவற்றை வெளியிணைப்புகள் எனும் பகுதியில் தருவார்கள். கரோலின்ஸ்கா மையக் கட்டுரையில், பிரிவுகளுக்கான வெளியிணைப்புக்கள் தேவை இல்லை. அத்தோடு, நேரடியாக தொடர்புபட்டுள்ளவை பற்றி எழுதுவது கட்டுரையின் நடு நிலைமையைப் பாதிக்கும். சில விக்கிக் கொள்கைகளுக்கு முரணானது. தாங்கள் அங்கே இணைப் பேராசிரியராகவே இருப்பதால், அக்கட்டுரையை தாங்கள் எழுதலாமா முடியாதா என எனக்குத் தெரியவில்லை. கவனிக்கவும். நன்றி :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 17:06, 8 திசம்பர் 2014 (UTC)

ஆதவன் உங்கள் கருத்துக்களைத் தெரிவித்தமைக்கு நன்றி. உண்மையில் நீங்கள் கூறிய இரண்டாம் கருத்தில் எனக்குத் தெளிவில்லை.

1) பிரிவுகளுக்கான வெளியிணைப்புக்கள் தேவை இல்லை: சிலப் பயனர்களுக்காவது பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதி முன்பு இணைத்திருந்தேன். தேவையில்லை எனில் நீக்கிவிடலாம்.

2) நான் இங்கு பணி புரிவதால் கரோலின்ஸ்கா மையத்தைக் குறித்து எழுதக்கூடாது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. எதற்கும் இரவி, கனக்ஸ், ஆன்டன், மணியன் கருத்துகளையும் அறிய ஆவல்.

நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 11:53, 9 திசம்பர் 2014 (UTC)

நடுநிலையாக ஒரு பயனராக இருந்து எழுதுவதில் எவ்விதத் தவறும் இல்லை. தாம் பணியாற்றும் கல்லூரி பற்றியோ அல்லது படிக்கும் கல்லூரி பற்றியோ எழுதலாம். உரிமையாளர் ஒருவர் தனது நிறுவனத்தைப் பற்றிக் கட்டுரை எழுதுவதே விரும்பப்படுவதில்லை. --Kanags \உரையாடுக 12:14, 9 திசம்பர் 2014 (UTC)
குறிப்பிட்ட நிறுவனத்துக்கும் உங்களுக்கும் இருக்கும் தொடர்பு குறித்து கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் ஒரு வரி குறிப்பிட்டால் போதுமானது. இது, மற்றவர்கள் கட்டுரையின் நடுநிலையை உறுதி பார்க்க உதவும். நலமுரண் இருப்பதை மறைத்து ஒரு பக்கமாக எழுதுவதைத் தான் வரவேற்பதில்லை. --இரவி (பேச்சு) 12:18, 9 திசம்பர் 2014 (UTC)
நானும்கூட நான் படித்த பாடசாலை, பல்கலைக்கழகம் ஆகியன பற்றி எழுதியுள்ளேன். இங்கு நலமுரண் இல்லை. ஆதவன், ஆர்வமாக கவனிப்பதற்கு நன்றி. இதனை நல்லெண்ண நம்பிக்கை அடிப்படையிலும் அணுகலாம். --AntonTalk 13:07, 9 திசம்பர் 2014 (UTC)
இரவி, கனக்ஸ், ஆன்டன் மூவருமே குறிப்பிடது போல பணிபுரியும் நிறுவனத்தைக் குறித்தோ படித்த பாடசாலைகளைக் குறித்தோ எழுதக்கூடாது என்பதல்ல. விக்கி சந்திப்புக்களில் அவர்கள் சார்ந்த கல்வி நிறுவனத்தைக் குறித்தே பங்களிப்பைத் துவங்க ஊக்கப்படுத்துகிறோம். அந்த நிறுவனத்திற்கோ அமைப்பிற்கோ விளம்பரம் வழங்குவது போலவோ சான்றுகள் இல்லாது உயர்நவிற்சியணியில் (அல்லது எதிர்மறையில்) எழுதுவதோ தவிர்க்கப்பட வேண்டும். இரவி கூறுவது போல பேச்சுப்பக்கத்தில் ஓர் டிஸ்கி இடலாம்.
ஆதவனின் ஆர்வத்திற்கும் முனைப்பிற்கும் நன்றி !--மணியன் (பேச்சு) 13:20, 9 திசம்பர் 2014 (UTC)   விருப்பம்--≈ உழவன் ( கூறுக ) 13:24, 9 திசம்பர் 2014 (UTC)
தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன் :( ,

@நந்தகுமார் ஐயா,

//1)// கரோலின்ஸ்கா மையம் பற்றிய கட்டுரையில் மைய இணைப்பை வெளியிணைப்பில் தரலாம். மேலும் அதன் பிரிவுகள் (பிரிவுகளா??) பற்றிய வெளியிணைப்புக்கள் , அவற்றிற்கென தனிக் கட்டுரை இருப்பின் அதற்கு கட்டுரையில் இணைப்பளித்து அங்கு வெளியினைப்பாகத் தரலாம். சில பயனர்களுக்கு இல்லை, விக்கித் தகவல்கள் அனைவருக்குமே பயனுள்ளவை தானே :)
//2// நீங்கள் அங்கு பணி புரிவதால் (நேரடியாகத் தொடர்புபட்டுள்ளதால்) அக்கட்டுரையின் நடுநிலை பாதிக்கும் என்றே கூறினேன். [1] , //நான் இங்கு பணி புரிவதால் கரோலின்ஸ்கா மையத்தைக் குறித்து எழுதக்கூடாது என்பதை நான் அறிந்திருக்கவில்லை.// இக்கருத்தின் மூலம் நீங்கள் எனது கருத்தை தவறாகப் புரிந்து கொண்டது போல் தெரிகிறது. மன்னிக்கவும். பார்க்க [2] நன்றி.
தங்களின் சிறந்த கருத்துக்களை இங்கு பதிந்து தெளிவை ஏற்படுத்திய அனைத்துப் பயனர்களுக்கும் நன்றிகள்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:08, 9 திசம்பர் 2014 (UTC)
இரவி, கனக்ஸ், ஆன்டன், மணியன் உங்கள் அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி!
ஆதவன், கரோலின்ஸ்கா மையத்தின் வெவ்வேறு துறைகள், பிரிவுகள் குறித்துத் தனிக் கட்டுரைகள் எழுத்தப்படவில்லை. எழுதும்போது நீங்கள் கூறியவண்ணம் வெளியிணைப்புகளைக் கொடுத்துவிடலாம். உங்கள் இரண்டாம் கருத்துப் புரிந்துகொள்ளக் கூடியதே. "எதையும் சந்தேகித்து, ஆராய்ந்து பார்த்து, தெளிவடைவது வரவேற்கத்தக்க அணுகுமுறையே". பாராட்டுக்கள்!--நந்தகுமார் (பேச்சு) 18:35, 9 திசம்பர் 2014 (UTC)


  1. நேரடியாக தொடர்புபட்டுள்ளவை பற்றி எழுதுவது கட்டுரையின் நடு நிலைமையைப் பாதிக்கும்.
  2. தாங்கள் அங்கே இணைப் பேராசிரியராகவே இருப்பதால், அக்கட்டுரையை தாங்கள் எழுதலாமா முடியாதா என எனக்குத் தெரியவில்லை.

உதவி...தொகு

வணக்கம்! இல்லற ஜோதி, இல்லற ஜோதி (திரைப்படம்) - இந்தக் கட்டுரைகளை ஒருங்கிணைத்து உதவுங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:25, 12 திசம்பர் 2014 (UTC)

 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 18:23, 12 திசம்பர் 2014 (UTC)

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:13, 13 திசம்பர் 2014 (UTC)

சிகரம்:பிலிப்பீன்சுதொகு

சிகரம் என்ற ஒரு புதிய திட்டத்தினூடாக பிலிப்பீன்சு கட்டுரையை முழுமையாக விரிவாக்கியுள்ளேன். இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக்க முன்மொழிவதற்காகச் சில உதவிகளை உங்களிடத்தில் நாடி நிற்கின்றேன். உங்களுக்கு நேரமிருப்பின் பிலிப்பீன்சு கட்டுரையைச் சரிபார்த்து பிழைகள் இருப்பின் திருத்தி உதவுங்கள். மேலதிக தகவல்களுக்கு திட்டத்தின் பக்கத்தைப் பாருங்கள்.

--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:14, 28 திசம்பர் 2014 (UTC)

நந்தகுமார் அவர்களே பிலிப்பீன்சு கட்டுரையை உரைதிருத்தி உதவியமைக்கு நன்றி. கட்டுரையின் பராமரிப்புப் பணிக்காக இப்பக்கத்தை உருவாக்கியுள்ளேன். இங்குள்ள தகவல்களை வாசித்து ஆவன செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். --{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:25, 1 சனவரி 2015 (UTC)

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்புதொகு

வணக்கம் Nan/தொகுப்பு02!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:07, 30 திசம்பர் 2014 (UTC)

மலாக்கா வார்ப்புருதொகு

மலாக்கா மாநிலத்தின் நகரங்கள் சிறுநகரங்களைப் பற்றிய வார்ப்புருவை, விக்கிப்பீடியா மலாய்ப் பகுதியில் இருந்து மாற்றம் செய்து இருக்கிறேன்.இதை எப்படி ஒரே வரியில் தமிழுக்கு கொண்டு வருவது. கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது

மலாய் மொழியில் அந்த வார்ப்புரு வார்ப்புரு:Melaka என இருக்கிறது.

தயவுசெய்து விளக்கப்படுத்துங்கள். நன்றி.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு--ksmuthukrishnan 06:41, 7 சனவரி 2015 (UTC)

வணக்கம் மலாக்கா முத்துக்கிருஷ்ணன்! நீங்கள் கேட்டதை கனக்ஸ் ஏற்கனவே செய்துவிட்டார். இன்று முதல் விடுமுறை முடிந்து மீண்டும் ஆய்வகம் வந்ததால் என்னால் உங்கள் செய்தியை உடனேப் பார்க்க முடியவில்லை.--நந்தகுமார் (பேச்சு) 12:23, 7 சனவரி 2015 (UTC)

மலாக்கா வார்ப்புரு விளக்கம்தொகு

வணக்கம் நந்தக்குமார். நண்பர் கனக்ஸ் அதைப் பற்றி விளக்கப்படுத்தி விட்டார். தங்களைச் சிரமப்படுத்தவில்லையே. நன்றி.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு--ksmuthukrishnan 14:16, 7 சனவரி 2015 (UTC)--ksmuthukrishnan 14:17, 7 சனவரி 2015 (UTC)

வார்ப்புரு:பேராக்தொகு

வணக்கம் நந்தக்குமார். இந்த வார்ப்புருக்களை உருவாக்குவதில் சிக்கலாகவே இருக்கிறது. கீழே பேராக் மாநிலத்தின் வார்ப்புரு. சேமித்துப் பார்த்தால் சரியாக வரவில்லை.

{{Navbox | name = பேராக் | state = autocollapse | titlestyle = background:lightsteelblue | title =   பேராக் மாநிலம் | group1 = மாவட்டங்கள் | list1 = கிந்தாலாருட், மாத்தாங், செலாமாஹீலிர் பேராக்மஞ்சோங்பத்தாங் பாடாங்கெரியான்கோலகங்சார்உலு பேராக்பேராக் தெங்ஙாகம்பார்

|group2 = துணை மாவட்டங்கள் | list2 = பத்து காஜாகிரிக்ஈப்போலெங்கோங்பெங்காலான் உலுசெலாமாதைப்பிங்

|group3 = நகரங்களும் சிறுநகரங்களும் | list3 = அலோர் பொங்சுஆயர் தாவார்பாகான் டத்தோபாகான் செராய்பாகான் சுங்கை பூரோங்பானீர்பாத்தாக் ராபிட்பத்து காஜாபேராங்பெர்ச்சாம்புருவாஸ்பீடோர்பீக்காம்போத்தாபுக்கிட் கந்தாங்புக்கிட் மேராசங்காட் ஜெரிங்சங்காட் கெருயிங்சிம்மோர்செண்டிரியாங்செண்டரோங் பாலாய்சிக்குஸ்டாமார் லாவுட்கிரிக்கோப்பேங்குவா தெம்புரோங்ஊத்தான் மெலிந்தாங்ஜெலாப்பாங்ஜெர்லுன்கமுந்திங்கம்பார்கம்போங் காஜாகாரைகோத்தா பாரு (பேராக்)கோத்தா செத்தியாகோலாகங்சார்கோலா குராவ்கோலா செபத்தாங்குபு காஜாலங்காப்லெக்கீர்லெங்கோங்லூமுட்மஞ்சோய்மாலிம் நாவார்மம்பாங் டி அவான்மானோங்மெங்லெம்புபாடாங் ரெங்காஸ்பந்தாய் ரெமிஸ்பாரிட்பாரிட் புந்தார்பாசீர் சாலாக் பெக்கான் கர்னி • [[பெங்காலான் உலு (குரோ) • புரோட்டோன் சிட்டிபூசிங்லாருட், மாத்தாங், செலாமாசெலெக்கோசெமாங்கோல்ஸ்ரீ இஸ்கந்தர்ஸ்ரீ மஞ்சோங்சிம்பாங் தீகாசித்தியவான்சிம்மோர்சிலிம்சிலிம் ரிவர்சுங்கை சிப்புட்சுங்கைதைப்பிங்தம்பூன்தஞ்சோங் பெலாஞ்சாதஞ்சோங் மாலிம்தஞ்சோங் பியாண்டாங்தஞ்சோங் ரம்புத்தான்தஞ்சோங் துவாலாங்தாப்பாதாப்பா ரோட்தெலுக் பாத்திக்தெலுக் இந்தான்தெலுக் ரூபியாதீமோதீமோ ஸ்டேசன்துரோலாக்தெரோங்துரோனோஉலு பெர்ணம்

|group4 = புது நகரங்கள் | list4 = பண்டார் மேரு ராயாபேராங் 2020சன்வே சிட்டி ஈப்போ

|group5 = கிராமங்கள் | list5 = பெல்டா பெசாவுட்பாடாங் காஜாசாயோங்கம்போங் கோலா சிலிம்கம்போங் பிந்து கெர்பாங்

|group6 = தீவுகள் | list6 = பங்கோர் தீவுபங்கோர் லாவுட் தீவுபாண்டிங் தீவு }}


என்ன பிரச்னை என்று பாருங்கள். நன்றி.மலாக்கா முத்துக்கிருஷ்ணன் பேச்சு--ksmuthukrishnan 09:33, 8 சனவரி 2015 (UTC)

Return to the user page of "Nan/தொகுப்பு02".