வெள்ளீயம்(IV) குளோரைடு

வெள்ளீயம்(IV) குளோரைடு (Tin(IV) chloride), வெள்ளீயம் டெட்ராகுளோரைடு (tin tetrachloride) அல்லது இசிட்டானிக் குளோரைடு (stannic chloride) என்பது SnCl4 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட ஒஉ கனிமச் சேர்மம் ஆகும். இது நிறமற்ற ஒரு நீர் உறிஞ்சும் திறன் கொண்ட திரவமாகும். காற்றுடன் கலக்கும் போது இது தீப்பற்றக்கூடியது. பிற வெள்ளீயச் சேர்மங்கள் தயாரிப்பதற்கு முன்னோடிப் பொருளாகவும் உள்ளது.[1] இதனை முதன் முதலில் ஆண்ட்ரியாசு லிபாவியசு (1550–1616) என்பவர் கண்டுபிடித்தார்.

வெள்ளீயம்(IV) குளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
Tetrachlorostannane
Tin tetrachloride
Tin(IV) chloride
வேறு பெயர்கள்
சிடானிக் குளோரைடு
இனங்காட்டிகள்
7646-78-8 Y
10026-06-9 (pentahydrate) N
ChemSpider 22707 Y
EC number 231-588-9
InChI
  • InChI=1S/4ClH.Sn/h4*1H;/q;;;;+4/p-4 Y
    Key: HPGGPRDJHPYFRM-UHFFFAOYSA-J Y
  • InChI=1/4ClH.Sn/h4*1H;/q;;;;+4/p-4
    Key: HPGGPRDJHPYFRM-XBHQNQODAC
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24287
வே.ந.வி.ப எண் XP8750000
  • Cl[Sn](Cl)(Cl)Cl
UN number 1827
பண்புகள்
SnCl4
வாய்ப்பாட்டு எடை 260.50 g/mol (anhydrous)
350.60 g/mol (pentahydrate)
தோற்றம் colorless to slightly yellow fuming liquid
மணம் acrid
அடர்த்தி 2.226 g/cm3 (anhydrous)
2.04 g/cm3 (pentahydrate)
உருகுநிலை −34.07 °C (−29.33 °F; 239.08 K) (anhydrous)
56 °C (133 °F; 329 K) (pentahydrate)
கொதிநிலை 114.15 °C (237.47 °F; 387.30 K)
decomposes (anhydrous)
very soluble (pentahydrate)
கரைதிறன் ஆல்ககால், பென்சீன், டொலுயீன், குளோரோபார்ம், அசிட்டோன், மண்ணெண்ணெய், CCl4, மெத்தனால், கல்நெய், CS2 இவற்றில் கரைகிறது.
ஆவியமுக்கம் 2.4 kPa
−115·10−6 cm3/mol
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.512
கட்டமைப்பு
படிக அமைப்பு monoclinic (P21/c)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0953
ஈயூ வகைப்பாடு Corrosive (C)
R-சொற்றொடர்கள் R34, R52/53
S-சொற்றொடர்கள் (S1/2), S7/8, S26, S45, S61
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் டின்(IV) புளுரைடு
டின்(IV) புரோமைடு
டின்(IV) அயாேடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் கார்பன் டெட்ராகுளோரைடு
சிலிக்கான் டெட்ராகுளோரைடு
செர்மானியம் டெட்ராகுளோரைடு
டின்(II) குளோரைடு
காரியம்(IV) குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

இது 115 °C (239 °F) வெப்பநிலையில் வெள்ளீயத்துடன் குளோரின் வளிமம் வினைபுரிந்து உருவாகிறது.

Sn + 2 Cl2 → SnCl4

அமைப்பு

தொகு
 
 திட SnCl4, கட்டமைப்பு

நீரேற்றம் பெற்ற டின் டெட்ராகுளோரைடின் பல வடிவங்கள் அறியப்பட்டுள்ளன.  படிகமாக்கப்பட்ட பல்வேறு அளவுள்ள நீர் மூலக்வகூறுகளுடன் அனைத்து [SnCl4(H2O)2] மூலக்கூறுகளும் ஒன்றாக இணைந்துள்ளன. கூடுதல் நீர் மூலக்கூறுகள் [SnCl4(H2O)2] உடன் ஐதரசன் பிணைப்பு [2] மூலம் இணைந்துள்ளன. பென்டாஐதரேட்டுகள் பொதுவான ஐதரேட்டாகும்.[3]

வினைகள்

தொகு

நீரற்ற டின்(IV) குளோரைடு ஒரு லூயிஸ் அமிலம். அது அம்மோனியா, ஆர்கனோபாசுபீன்சு, மற்றும் பிற லூயிசு காரங்களுடன் கூட்டு விளைபொருட்களைத் தருகிறது. சிறிதளவு நீருடன் இதனைச் சேர்க்கும் போது அரைதிண்ம நிலை படிகமான பென்டாஐதரேட்டினைத் SnCl4·5H2O தருகிறது. இந்த திடப்பொருள்  வெண்ணெய் டின் என்று அழைக்கப்படுகிறது. ஐதரோகுளோரிக் அமிலத்துடன் சிக்கலான [SnCl6]2− இணைந்து உருவாகும் பொருள் எக்சாகுளோரோசிடானிக் அமிலம் என்று அழைக்கப்படுகிறது.

பயன்கள்

தொகு

SnCl4ன் முக்கியமான பயன்பாடு ஆர்கனோடின் சேர்மங்கள் தயாரிப்பதற்கு முன்னோடிப் பொருளாக உள்ளதாகும். மேலும் அவை வினையூக்கிகள் மற்றும் பாலிமர் நிலைப்படுத்திகளாகவும்[4] பயன்படுகின்றன. சால் ஜெல் செயல்முறை (குழைமக் கரிக்கண்ணாடி) மூலம் SnO2 பூச்சுகளை தயாரிப்பதற்கு பயன்படுகிறது. SnO2 இன் நுண்ணுட்பம் வாய்ந்த படிகங்கள் இந்த முறையின் மூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்டு தயாரிக்கப்படுகிறது. 

பாதுகாப்பு

தொகு

உலக போரில் இரசாயண ஆயுத மாக சிடானிக் குளோரைடு பயன்படுத்தப்பட்டது. காற்றுடன் தொடர்பு ஏற்படும்போது ஒருவித எரிச்சலை உண்டாக்கக்கூடிய அடர்ந்த புகையை (ஆனால் இறப்பினை ஏற்படுத்தாத) உண்டாக்குகிறது. உலகப்போரில் டின்[5] பற்றாக்குறை ஏற்பட்டபோது சிலிக்கான் டெட்ராகுளோரைடு மற்றும் தைட்டானியம் டெட்ராகுளோரைடு கலவைகள் பதிலிப்பொருளாக பயன்படுத்தப்பட்டன.

மேற்கோள்கள்

தொகு
  1. Egon Wiberg, Arnold Frederick Holleman (2001). Inorganic Chemistry. Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
  2. Barnes, John C.; Sampson, Hazel A.; Weakley, Timothy J. R. (1980). "Structures of di-μ-hydroxobis[aquatrichlorotin(IV)]-1,4-dioxane(1/3), di-μ-hydroxobis[aquatrichlorotin(IV)]-1,8-epoxy-p-menthane(1/4), di-m-hydroxobis[aquatribromotin(IV)]-1,8-epoxy-p-menthane(1/4), di-μ-hydroxobis[aquatrichlorotin(IV)], and cis-diaquatetrachlorotin(IV)". J. Chem. Soc., Dalton Trans. (6): 949. doi:10.1039/DT9800000949. 
  3. Genge, Anthony R. J.; Levason, William; Patel, Rina; Reid, Gillian; Webster, Michael (2004). "Hydrates of tin tetrachloride". Acta Crystallographica Section C 60 (4): i47–i49. doi:10.1107/S0108270104005633. 
  4. G. G. Graf "Tin, Tin Alloys, and Tin Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2005 Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a27_049
  5. Fries, Amos A. (2008). Chemical Warfare. Read. pp. 148–49, 407. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4437-3840-9. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளீயம்(IV)_குளோரைடு&oldid=3942448" இலிருந்து மீள்விக்கப்பட்டது