விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2014
இதை தொகுப்பவர்கள் [[சனவரி 2]], [[2013]] என்று தருவதற்கு பதிலாக [[விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சனவரி 2, 2013|ஜனவரி 2, 2013]] என்று தாருங்கள். அடுத்து வரும் குறுந்தட்டு திட்டங்களுக்கு இது உதவும்.
ஒரு மாதம் முடிந்தவுடன் முடிந்த மாதத்திற்கான தகவல்கள் இங்கு சேர்க்கப்படும்
அக்டோபர் 2014
தொகு- வேகத் தடுப்பான்கள் (படம்) சாலைகளில் ஏறி இறங்கிச் செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்துவதன் மூலம் வண்டிகளின் வேகத்தைக் குறைக்கின்றன.
- சோழ மன்னர்கள் ஆதுர சாலைகள் என்றழைக்கபப்ட்ட மருத்துவமனைகளுக்கு நிலங்களை அறக்கொடையாக வழங்கினர்.
- டை எத்தில் ஈதர் கரைப்பானாகவும், மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.
- சேரந்தீவம் என்பது மொழிபெயர்க்கக் கடினமான பத்து ஆங்கிலச்சொற்களில் ஒன்றாக கருதப்படும் Serendipity என்னும் சொல்லின் தமிழ் வடிவம் ஆகும்.
- இறைமையுள்ள நாடுகளுக்கிடையே ஆறுகள், மலைத் தொடர்கள், அல்லது பாலைவனங்கள் போன்ற இயற்கையான புவியியல் அமைப்பால் எழும் எல்லைக்கோடு இயற்கை எல்லை எனப்படும்.
- நச்சு அம்புத் தவளை (படம்) ஒரு வகையான கொழகொழப்பான, கொடிய நஞ்சைத் தன் முதுகுப்பகுதியில் சுரக்கின்றது.
- சதுரங்க விளையாட்டில் சதுரங்கப் பலகையில் சில காய்கள் மட்டும் எஞ்சி நிற்கும் நிலை சதுரங்க இறுதியாட்டம் எனப்படும்.
- 15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட யாழ்ப்பாணம் பிரதான வீதிக் கல்வெட்டு யாழ்ப்பாண நகரின் உணவு விடுதி ஒன்றின் கதவு நிலையின் படிக்கல்லாகப் பயன்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
- கற்பனை அலகு என்றழைக்கடும் மெய்யெண்களை (ℝ) சிக்கலெண்களுக்கு (ℂ) நீட்டிக்கும் ஒரு கணிதக் கருத்துரு.
- 969 இயக்கம் என்பது பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பர்மாவில் இசுலாமியப் பரம்பலை எதிர்க்க உருவாக்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய தேசியவாத அமைப்பு.
- புகழ்பெற்ற சீன இணையவழி வணிகத்தளங்களின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவர் ஜாக் மா (படம்).
- வார்ப்பிரும்பில் இருந்து திறந்த உலைக்கல அடுப்பில் குறைந்த செலவில் எஃகு தயாரிக்க முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட தொழிற்துறை செயல்முறை பெசிமர் செயல்முறை.
- சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, தஞ்சாவூரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜியைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட குறவஞ்சி நூல்.
- பாப்லோ பிக்காசோ வரைந்த 4,249 ஓவியங்கள் பார்செலோனாவில் உள்ள பிகாசோ அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
- குடும்பப் பெயர், உருசியா, சீனா, சப்பான், கொரியா, மடகாசுக்கர், வியட்நாம் போன்ற நாடுகளிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் சூட்டிய பெயருக்கு முன் சேர்க்கப்படுகிறது.
- வானியல் கடிகாரம் (படம்) சூரியன், நிலவு, விண்மீன் குழாம்கள், முக்கிய கோள்கள் போன்ற வானியல் பொருள்களின் தொடர்பு நிலைகளை தன்னுடைய முகப்பில் காண்பிக்கும்.
- இணைச் சிக்கலெண்கள் சமமான மெய்ப்பகுதிகளையும், குறியில் மட்டும் எதிராகவும் அளவில் சமமாகவும் உள்ள கற்பனைப் பகுதிகளையும் கொண்டிருக்கும்.
- வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இராசகோபாலாச்சாரி தமிழில் எழுதிய இராமாயணம் சக்கரவர்த்தித் திருமகன்.
- ஜினி குறியீடு என்பது ஒருநாட்டு குடிமக்களின் வருமான முரண்பாட்டை அளக்க உதவும் ஒரு குறியீடு.
- போதிய அளவு ஒளி கிடைக்காத பூக்கும் தாவரங்கள் தாவரத் தண்டு பலவீனமாகி நீட்சியடைந்தும், அடர்த்தியில்லாத சிறிய இலைகளைக் கொண்டும் வெளிறிய மஞ்சள் நிறமாகவும் காணப்படுவது வைநிறமாதல் எனப்படுகிறது.
செப்டம்பர் 2014
தொகு- பலாங்கொடை மனிதன் எனப்படுவது இக்காலத்துக்கு 34,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவதாக இலங்கையிற் காணப்பட்ட உடற்கூற்றியல் அடிப்படையில் புது மனித இனத்தினன் ஆவான்.
- உலகின் முதன் முதலில் இருக்கை பட்டை (படம்) கட்டாயமாகப் பயன்படுத்துவதைப் பற்றிய சட்டம் ஆத்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில், 1970ல் துவக்கப்பட்டது.
- 1954 இல் வெளிவந்த அந்த நாள் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.
- மோகிசம் அல்லது மோகியியல் சீனாவில் போர்க் காலத்தில் உருவாகிய ஒரு முக்கிய சமூக, சமய, மெய்யியல் இயக்கம் ஆகும்.
- கிறித்தவத்தை அதிகாரபூர்வ சமயமாக அறிவித்த (கிபி 4ம் நூற்றாண்டில்) உலகின் முதல் நாடு ஆர்மீனியா ஆகும்.
சூன் 2014
தொகு- மொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத டோடோ (படம்) பறவையினம் பதினாறாம் நூற்றாண்டில் குடியேற்றக்காரர்களால் வேட்டையாடி அழிக்கப்பட்டுவிட்டது.
- இயேசுவின் தாய் மரியாவைப் பற்றிய இறையியல் கண்ணோட்டம் மரியாளியல் என்று அழைக்கப்படுகிறது.
- தி பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ் அல்ஜீரியா நாட்டில் பிரெஞ்சு காலனி ஆட்சியை எதிர்த்து நடந்த கிளர்ச்சியைப் பற்றிய திரைப்படம்.
- இந்து தொன்மவியலில் திரிசங்கு மன்னனுக்காக விசுவாமித்திரர் பூமிக்கும் சொர்க்கத்திற்கும் நடுவில் தனி சொர்க்கம் அமைத்துக் கொடுத்தார்.
- வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதியவர் சக்தி கிருஷ்ணசாமி.
- உழைப்பாளர் சிலை (படம்) மே தின நினைவாகவும் உழைப்பாளர்களைப் போற்றும் விதத்திலும் சென்னை மெரீனா கடற்கரை எழுப்பப்பட்டுள்ளது.
- பி உயிரணுக்கள் மாறும் நோயெதிர்ப்புத் அமைப்பின் தாதுசார் நோயெதிர்ப்புத் திறன் பணிகளில் மையமாகப் பணியாற்றும் நிணநீர்க் குழிய வகைகளுள் ஒன்றாகும்.
- தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பகத் சிங் தனது இறைமறுப்பு நிலைப்பாட்டை விளக்கி எழுதிய கட்டுரையின் பெயர் நான் ஏன் நாத்திகன் ஆனேன்.
- நாட்காட்டிச் சட்டம், 1750 இன் மூலம் பிரித்தானியப் பேரரசு கிரெகொரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது.
- நேரடி நடவடிக்கை நாள் 1946 இல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்து மற்றும் முஸ்லீம் கலவரப் படுகொலைகளைக் குறிப்பதாகும்.
- செலுத்து வாகனம் (படம்) என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்
- ஆரிய மாயை நூலை எழுதியமைக்காக கா. ந. அண்ணாதுரைக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை தரப்பட்டது.
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு சம்மு காசுமீர் மாநிலத்துக்கு வேறெந்த இந்திய மாநிலத்துக்கும் இல்லாத சில சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.
- அகிரா குரோசாவா இயக்கிய ஏழு சாமுராய்கள் உலகின் தலைசிறந்த திரைப்படங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
- உலகில் அதிகம் உற்பத்தி செய்யப்பட்ட உலங்கு வானூர்தி மில் எம்.ஐ.-8.
மே 2014
தொகு- தேர்தல்களில் மோசடியான வாக்குகளை தடுப்பதற்காக வாக்காளர்களின் விரலில் தேர்தல் மை (படம்) பூசப்படுகிறது.
- பேரண்டத்தின் மாந்தர் வாழ்வதை வேற்றுலக உயிரிகளுக்கு அறிவிக்க 1974 இல் ஆரசீபோ தகவல் அனுப்பப்பட்டது.
- உலகின் மிகப்பெரிய சிவன் சிலை நேபாளத்தின் கயிலாசநாத மகாதேவர் சிலை ஆகும்.
- பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களுக்கு அளிக்கப்படும் விருதின் பெயர் ”தங்கக் கரடி”.
- தமிழ்நாடு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்றுகளால் மழை பெறுகிறது.
- புதிர்வழி (படம்) என்பது, சிக்கலான முறையில் ஆங்காங்கே கிளைத்துச் செல்லுகின்ற ஒரு வழி அமைப்பு ஆகும்.
- சென்னை நகரில் உள்ள ஒரே சதுப்புநிலப்பகுதி பள்ளிக்கரணை சதுப்புநிலம்
- புது தில்லியில் அமைந்த இந்தியக் குடியரசுத் தலைவர்களின் வாழிடத்தின் பெயர் ராஷ்டிரபதி பவன்.
- பெலூகா காவியா எனும் உணவு கிலோ ஒன்றுக்கு 25,000 அமெரிக்க டாலர்கள் விலை கொண்டது.
- மோக்சகுண்டம் விசுவேசுவரய்யாவின் பிறந்த நாள் இந்தியாவில் பொறியாளர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
- யூடியூப் இணையத்தளத்தில் மிக அதிகமாகப் பார்வையிடப்பட்ட கங்னம் ஸ்டைல் பாடலைப் பாடியவர் தென்கொரியக் கலைஞர் சை (படம்)
- இலத்தீன் அமெரிக்க நாடொன்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது மார்க்சிய அரசுத்தலைவர் சல்வாதார் அயிந்தே.
- ஷோபா தனது 17வது வயதில் பசி தமிழ்த் திரைப்படத்தில் நடித்தமைக்காக இந்திய தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.
- தல்மூத் யூத சமயத்தின் மைய சமய நூல்களில் ஒன்று.
- ராலேகாண் சித்தி இந்திய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவால் இந்தியாவின் முன்மாதிரி கிராமங்களில் ஒன்றாக மாற்றப்பட்டது.
ஏப்ரல் 2014
தொகு- அங்கம்பொர (படம்) ஒரு சிங்கள தற்காப்பு அல்லது சண்டைக் கலையாயாகும்.
- ஐசன்பர்க்கின் அறுதியின்மைக் கொள்கை பின்வருமாறு கூறுகிறது: "ஒரு சிறிய இடப்பகுதியில் ஒரு துகளின் அமைவிடத்தைச் சரியாகக் கண்டுகொள்வது அதன் உந்தத்தை ஐயப்பாடுக்கு உரியதாக்குகின்றது. மறுதலையாக, ஒரு துகளின் உந்தத்தைச் சரியாக அளக்கமுடியுமானால் அதன் இடம் ஐயத்துக்கு உரியதாகின்றது".
- மற்ற காரணிகள் மாறிலியாக உள்ளபோது, ஒரு பண்டம் அல்லது சேவையின் விலை உயர்ந்தால் அளிப்பு உயரும். மாறாக விலை குறைந்தால் அளிப்பு குறையும். இது பொருளியலில் அளிப்பு விதி எனப்படும்.
- இசுரேலிய சுதந்திரப் பிரகடனம் என்பது இசுரேல் தனி யூத நாடாக 14 மே 1948 அன்று டேவிட் பென்-குரியனால் பிரகடனத்தப்பட்டதைக் குறிக்கும்.
- தமிழ்நாட்டு இசை நிகழ்ச்சிகளில் தமிழில் பாடல்கள் இடம்பெற வேண்டும் என்று வேண்டி, முதலாவது தமிழிசை மாநாடு சிதம்பரத்தில் 1941 ஆம் ஆண்டு நடைபெற்றது.
- காலிஸ்தான் இயக்கம் (படம்) சீக்கிய மதம் சார்ந்த தேசியத்தை வலியுறுத்தும், காலிஸ்தான் என்ற பெயரில் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் ஆகிய சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களை இணைத்து தனிநாடு வேண்டும் என்ற நோக்கத்தையும் கொண்ட ஓர் இயக்கம் ஆகும்.
- எந்த ஐரோப்பிய, குடியேற்றவாத, கிறித்தவ அரனைச் கொண்ட நாடுகள் அமெரிக்க நிலப்பரப்புக்களைக் "கண்டுபிடித்தனவோ", அவற்றுக்கே அந்த நிலங்கள் அல்லது நாடுகள் சொந்தம் என்று நிலைநாட்டுகின்ற கண்டுபிடிப்புச் சித்தாந்தம் (Discovery doctrine), இன்றும் ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றத்தினால் முன்னிறுத்தப்படும் ஒர் அனைத்துலகச் சட்டக் கருத்துரு ஆகும்.
- பெரிப்ளசு என்ற கிரேக்க கடல் வழிப்பயண நூலில், தமிழகம், முசிறி, தொண்டி, நறவு, பந்தர், கொற்கை, எயிற்பட்டினம், பாண்டியர், சேரர், சோழ-மண்டலம் முதலான பெயர்களும் அவற்றைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன.
- செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம் (Mars Science Laboratory, MSL) என்பது செவ்வாய்க் கோளில் தரையிறங்கி அதன் மேற்பரப்பை ஆராயவென ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஒரு விண்வெளித் தரையுளவித் திட்டம் ஆகும்
- உலகத் தெலுங்கு மாநாட்டின் (ప్రపంచ తెలుగు మహాసభలు) (படம்) முதல் மாநாடு 1975 இல் ஐதராபாத்திலும், இரண்டாவது மாநாடு 1981 இல் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும், மூன்றாம் மாநாடு 1990 ஆம் ஆண்டு மொரீசியசிலும், நான்காவது மாநாடு 2012 ஆம் ஆண்டு திருப்பதியிலும் நடைபெற்றன.
- இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளில், அலை-துகள் இருமை அல்லது அலைகளின் இருமை நிலை (Wave Particle Duality ) என்றால் எல்லாப் பொருட்களும் (அதாவது அந்த பொருட்களில் உள்ள எல்லா எதிர்மின்னிகளும்) அலை போன்ற தன்மையும், துகள் போன்ற தன்மையும் கொண்டிருப்பன என்ற கருத்துரு ஆகும்
- இருபாலுயிரி (hermaphrodite) அல்லது இருபால் உடலி என உயிரியலில் விவரிக்கப்படுவது இருபால் உறுப்புகள் ஒருங்கே/ஒரே உடலில் அமையப் பெற்ற ஓர் உயிரினம்.
- உலகில் 5% மக்கள் தொகையைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கா, உலகின் 25% கைதிகளைக் கொண்டு, அதிக நபர்கள் சிறையில் இருக்கும் நாடாக விளங்குகிறது.
- யூசுப் சுலைகா காப்பியம் என்பது 1957 ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்ட, திருக்குர்ஆனில் இடம்பெறும் யூசுப் நபியின் கதையை மையமாகக் கொண்ட ஓர் இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும்.
- புளியம்கொம்பை கல்வெட்டுகள் (படம்) என்பது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள புளியம்கொம்பையில் காணப்படும் கிமு 300 ஆண்டுகள் காலப்பகுதியைச் சார்ந்த பழந்தமிழ் மொழியில் எழுதப்பட்ட நடுகல் கல்வெட்டுகளின் தொகுதியாகும்.
- மூடிய தொகுதி ஒன்றில் நடைபெறும் வேதியியல் தாக்கங்களில் பங்குகொள்ளும் தாக்கிகளின் மொத்த திணிவானது தாக்கத்தின் போது கிடைக்கும் விளைவுகளின் மொத்த திணிவுக்கு சமனாகக் காணப்படும் என்பது திணிவு மாறா விதி அல்லது திணிவுக் காப்பு விதி எனப்படும்.
- பிறக்கும் போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் தம்மை ஆணாக உணர்ந்து, அடையாளப்படுத்தி, ஆண்களாக வாழ்பவர்கள் திருநம்பிகள் (Transmen) என்று அழைக்கப்படுகின்றனர்.
- கடல் அல்லது ஏரியின் எந்த அளவு ஆழம் வரை ஒளிச்சேர்க்கை செய்ய சூரிய ஒளி கிடைக்கிறதோ அந்த ஆழம் வரை உள்ள பகுதியை சூரிய ஒளி மண்டலம் (Sun light Zone) அல்லது ஒளி நிரம்பிய மண்டலம் (Photic zone) என்று அழைக்கிறார்கள்.
- ஆவுடை அக்காள் என்பவர் 15 - 19 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் வாழ்ந்து, 1000 மேற்பட்ட பெண்ணிய, சாதிய எதிர்ப்பு, மெய்யியல், ஆன்மீகப் பாடல்களை இயற்றிய பெண் தமிழ்க் கவிஞர் ஆவார்.
மார்ச்சு 2014
தொகு- மல்லர் கம்பம் (படம்) என்பது மகாராட்டிரத்தில் தோன்றி, இன்று தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் பயிலப்படும் ஒரு உடல்வித்தை, சீருடற்பயிற்சிக் கலை ஆகும்.
- நூறு சிந்தனைப் பள்ளிகள் என்பது கிமு 770 - 221 காலப் பகுதியில் சீனாவில் இருந்த மெய்யிலாளர்கள், அவர்களின் சிந்தனைப் போக்குகள், பள்ளிகள், படைப்புகள் ஆகியவற்றைச் சுட்டுகிறது.
- செலுத்து வாகனம் என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்.
- சிந்தாமணி நிகண்டு 1876 இல் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் வாழ்ந்த ச. வைத்தியலிங்கம்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டு, 2013 இல் தமிழ்நாட்டில் மறுபதிப்புச் செய்யப்பட்ட சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல் ஆகும்.
- ஓரா, புவாஜா தராத் (நில முதலை) எனவும் அழைக்கப்படும் கொமோடோ டிராகன் உலகிலேயே அதிக எடை கொண்ட பல்லி ஆகும்.
- கடுங்குளிர் ஏவூர்தி இயந்திரம் (படம்) என்பது செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் பயன்படுத்தப்படும் இயந்திரம் ஆகும்.
- உலக சனத்தொகையில் 36% வீதமானோர் சமயப் பற்றின்மை அல்லது சமயப் புறக்கணிப்பு ஆகிய சமயமின்மை எனும் நிலையில் காணப்படுகின்றனர் (2012 ஆண்டு மதிப்பீடு).
- தமிழகத்தின் நாமக்கல் நகராட்சியானது ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழைப் பெற்றது. இது குப்பை இல்லா நகரம் என்னும் சிறப்பையும் பெற்றதாகும்.
பெப்ரவரி 2014
தொகு- ஈழத்து அறிஞர் மு. கா. சித்திலெப்பை 1885 இல் எழுதிய அசன்பே சரித்திரம் தமிழில் வெளிவந்த இரண்டாவது புதினமும், ஈழத்தில் வெளிவந்த முதலாவது தமிழ்ப் புதின நூலும் ஆகும்.
- பௌவென் முடிச்சு (படம்) என்பது உண்மையில் தொடர்ச்சியான தட வடிவில் அமைந்த ஒரு கயிறு ஆகும்.
- இந்தியாவில் 42 மில்லியன் மக்கள் கணினிக் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- 2009 ஆம் ஆண்டின் விண்வெளி மோதல் விண்வெளியில் பூமியின் வட்டப்பாதையில் காசுமசு-2251, இரிடியம் 33 ஆகிய இரண்டு செயற்கைக் கோள்கள் மோதியதைக் குறிக்கிறது.
- பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்கும் மதுரைக் காஞ்சி இத்தொகுப்பிலுள்ள நூல்களுள் மிகவும் நீளமானது ஆகும்.
- பொறியியலில் பொருட்களின் வலிமையை பற்றி அறிவதில் மோர் வட்டத்தின் பங்கு இன்றியமையாதது.
- முயல் காதுகள் அவற்றைக் குளிர்மையாக வைத்திருக்க உதவுகின்றன.
- தைமூரிய வம்சம் 14ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற நாடுபிடிப்பாளரான தைமூரினால் நிறுவப்பட்டது.
- பூச்சிகளே (படம்) அதிகளவான தனியன்களையும், இனங்களையும் கொண்ட விலங்குகள் ஆகும்.
- கணக்கதிகாரம் 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ்க் கணித நூல் ஆகும்.
- அனைத்துலக ஆண்கள் நாள் என்பது 19 நவம்பர் அன்று கொண்டாடப்படும் வருடாந்த பன்னாட்டு நிகழ்வாகும்.
- கணிதத்தில் லாபிதாலின் விதி தேரப்பெறா வடிவங்களைக் கொண்டுள்ள சார்புகளின் எல்லை மதிப்புகளைக் காணப் பயன்படுகிறது.
- கோதாபயன் உருகுணை அரசை ஆண்ட தமிழர் அரசை அழித்து அதில் இருந்த பத்து சகோதர அரசர்களைக் கொன்று ஆட்சியைப் பிடித்த சிங்கள அரசன்.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மொத்தம் 33,000 சிற்பங்கள் உள்ளன.
- சிவப்புக் கங்காரு (படம்) கங்காரு இனத்திலேயே பெரிய விலங்கு ஆகும். இதுவே ஆஸ்திரேலியாவிலேயே உள்ள மிகப் பெரிய முலையூட்டி ஆகும்.
- மில்லோ பாலம் உலகிலுள்ள உயரமிக்க பாலம் ஆகும்.
- செஸ்னா 172 எனும் வானூர்தி அதிகளவில் (43,000+) தயாரிக்கப்பட்ட வானூர்தியாகும்.
சனவரி 2014
தொகு- பிரபலங்கள் தங்கியிருந்த இல்லங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதிகளில் அந்நபர்களை அல்லது நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் ஐக்கிய இராச்சியத்தில் நிறுவப்படும் நினைவுச் சின்னம் நீலப் பலகை எனப்படும்.
- பெருந்தலைவர் காமராசர் பிள்ளைத் தமிழ் என்பது தமிழறிஞர் நூ. பாதர்சமால் அவர்களால் இயற்றப்பட்ட காமராசரைப் பற்றி எழுதப்பட்ட முதல் பிள்ளைத் தமிழ் நூலாகும்.
- சிற்றம்பலநாடிகள் பரம்பரை என்பது 14 ஆம் நூற்றாண்டில் தலைதூக்கி நின்ற சிற்றம்பல நாடிகளையும் அவரது மாணாக்கர்கள் 66 பேரையும் உள்ளடக்கிய சைவப் பரம்பரையாகும்.
- ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் உலகிலுள்ள போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையமாக இருக்கிறது.
- நாடுகளின் அரண்மனை (படம்) என்பது ஐக்கிய நாடுகள் தலைமையகம் இயங்கும் கட்டிடமாகும். இது 2800 அலுவலகங்களுடன் 34 மாநாட்டரங்குகளையும் உள்ளடக்கியது.
- பாண்டியர்களில் மாறவர்மன், சடையவர்மன் போன்ற பட்டங்களை முதன்முதலில் அவனி சூளாமணியும், செழியன் சேந்தனும் முறையே சூடிக்கொண்டனர்.
- புவியின் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்குமான எல்லைக்கோடாகக் கொள்ளப்படும் கார்மன் கோடு புவியின் கடல் மட்டத்திலிருந்து 100 கிமீ உயரத்தில் உள்ளது.
- மண்மேளம் என்பது பானை வடிவில் மண்ணால் செய்யப்பட்டு இரு பக்கமும் மாட்டுத் தோல் வார்க்கப்பட்ட தமிழர் இசைக்கருவி ஆகும்.
- தமிழ் நாட்டில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவரான தோடர்கள் (படம்) தம் வாழிடத்தை மந்து என்று கூறுகின்றனர்.
- மலேசிய அரசாங்கம் வழங்கும் 'பாங்லிமா மாங்கு நெகாரா' மற்றும் 'பாங்லிமா செத்தியா மக்கோத்தா' ஆகியவை டான் ஸ்ரீ விருது என்று அழைக்கப்படுகின்றன.
- ஹெப்பஸ்தஸ் (/hɪˈfεstəs/) நுட்பம், நெருப்பு, மாழைகள், மாழையியல் ஆகியவற்றுக்கான கிரேக்கக் கடவுள் ஆவார்.
- நிதாகத் சட்டம் என்பது சவூதி தொழிலாளர் அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்ட சவூதிய உள்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதை உறுதிப்படுத்தும் சட்டமாகும்.
- இக்சிதிகர்பர் (படம்), அனைத்து நரகங்களும் வெற்றிடமாகும் வரை தான் புத்தநிலை அடைவதில்லை என்ற உறுதிமொழி பூண்ட புகழ்பெற்ற மகாயான பௌத்த போதிசத்துவர் ஆவார்.
- கோபெ செயற்கைமதி பேரண்டத்தின் பின்புலத் தேடி என்னும் பொருள்படும். இச் செயற்கைமதி பேரண்டத்தில் பின்புலமாய் இருக்கும் நுண்ணலைக் கதிர்வீச்சைப் பற்றி துல்லியமாய் ஆய்வதை நோக்கமாகக் கொண்டது.
- புலிட்சர் பரிசு என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசையமைப்பு என்பவற்றுக்காக ஐக்கிய அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மிக உயரிய விருது ஆகும்.
- பஞ்சமரபு என்பது வெண்பாக்களால் அமைந்த ஓர் இசை மற்றும் நாட்டிய இலக்கணத்தமிழ் நூல் ஆகும்.
- பவசக்கரம் (படம்) என்பது பிறப்பு இறப்புச் சுழற்சியின் சிக்கல்களை விவரிக்கும் வட்டவடிவான சித்தரிப்பாகும்.
- தேசவழமைச் சட்டம் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வழங்கிய வழக்கங்களை அடிப்படையாக வைத்து 1707 ஆம் ஆண்டு எழுத்து மூலமாக ஒல்லாந்தரால் தொகுக்கப்பட்டு பின்னர் ஆங்கிலேயரால் 1806 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது.
- பழுப்புக் குறுமீன் என்பது விண்மீன் ஆவதற்கு தேவையான எடையை அடையாமல் போனதால் எரியாமல் போன விண்மீன் வகையைச் சேர்ந்த வான்பொருளாகும். இது சூரியனின் எடையினைக்காட்டிலும் 8% குறைந்த எடையைக் கொண்டிருக்கும்.