விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2009
- மருத்துவம், ஆபத்துதவி, ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றில் ஈடுபடும் வங்காளதேசம் ஊர் முன்னேற்ற செயற்குழு அல்லது பிராக் அமைப்பே உலகில் அதிகம் ஊழியர்களைக் (100 000) கொண்ட அரச சார்பற்ற சமூக சேவை அமைப்பு ஆகும்.
- ஓர் ஆங்கில மாதத்தில் வரும் இரண்டாவது முழுநிலவு நீல நிலவு என வழங்கப்படுகிறது. அத்தகைய முழுநிலவு 2009 ஆண்டு திசம்பர் 31 அன்று நிகழ்கிறது.
- ஆங்கிலம் (37.8%), சீனம் (22.1%), எசுபானியம் (7.9%), யன்பானிசு (5.5%), பிரெஞ்சு (4.6%), போத்துக்கீசு ( 4.2%), யேர்மன் (3.7%), அரபு (2.9%), உருசியன் (2.6%), கொரியன் (2.2%) ஆகிய மொழியினர் இணையப் பயன்பாட்டில் முதல் 10 இடங்களில் உள்ளனர்.
- நிலாவுக்கு வெற்றிகரமாக விண் கலம் ஏவி, மனிதர்களை அல்லது தானியங்கிகளைத் தரையிறக்கி, நிலாவின் நிலப்பரப்பில் பயணிக்கும் முதல் அரச சார்பற்ற குழுவுக்கு 20 மில்லியன் டொலர்கள் கொண்ட கூகிள் லூனர் எக்சு பரிசு வழங்கப்படும் என கூகிள் 2007 இல் அறிவித்தது.
- மொழியொன்றின் இலக்கணத்தில், பேசுபவர், யாருக்குப் பேசப்படுகிறதோ அவர், இவர்கள் அல்லாத பிறர் ஆகியோர் தொடர்பில் வேறுபாடுகளைக் காட்டும் இலக்கணக் கூறு இடம் எனப்படுகிறது. இது தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூன்று வகைப்படும்.
- டிசம்பர் 5, 1969 இல் அமெரிக்க படைத்துறையின் உயர் ஆய்வு திட்டங்கள் நிறுவனத்தால் (DARPA) நான்கு கணினிகள் இணைககப்பட்டு முதன் முதலாக இணையம் உருவாக்கப்பட்டது.
- கடற்குதிரைக் குடும்பத்தைச் சேர்ந்த குழாய்மீன் இனத்தில் முட்டைகளை ஆண்கள் தம் உடலுள் சுமக்கின்றன. அவை அவ்வாறு கருவுற்றிருக்கையில் சில கருக்களை தம் உடலுள் உறிஞ்சிக் கொள்ளும் மாறுபட்ட தன்னின உண்ணும் நிகழ்வு அறியப்பட்டுள்ளது.
- 117,000 நபர்களால் பேசப்படும் கிறீ (Cree) மொழியே கனடாவில் அதிகம் பேசப்படும் முதற்குடிமக்கள் மொழி.
- அறிவியல் தமிழ் மன்றம் என்பது அறிவியல் தமிழை வளர்த்திடும் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகாணவும் என தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.
- காம சூத்திரம் (வடமொழி: कामसूत्र) என்பது காமம் தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும்.
- 1969 முதல் 1972 வரை ஐக்கிய அமெரிக்காவின் அப்பல்லோ திட்டங்கள் மூலம் ஆறு ஆளேறிய இறக்கங்கள் நிலாவில் இடம்பெற்றன. அதற்கு பின்பு யாரும் நிலாவில் தரையிறங்கவில்லை.
- ஓக்லோ என்னும் இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் என்று 1972-ல் பிரான்சிய அறிவியலாளர்கள் கண்டு பிடித்தனர்.
- சுவிட்சர்லாந்தில் இருக்கும் டிரிஃப்ட் கயிற்றுப் பாலம் (Trift Bridge) பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய, உயர்வான பகுதியில் இருக்கும் உலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம்.
- முதனிப் பேரினத்தில் மிகப் பெரிய விலங்கு கொரில்லா ஆகும்.
- இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட மலேசியத் தமிழர்களில் பெரும்பான்மையானோர் தமது அடிப்படைக் கல்வியைத் தமிழ் மொழியிலேயே பெறுகின்றார்கள்.
- மீவுமனிதத்துவம் என்பது மனிதரின் உடல் உள ஆற்றலை விருத்தி செய்ய உதவும் அறிவியல் தொழில்நுட்ப துறைகளுக்கு ஆதரவான ஒரு பன்னாட்டு இயக்கமாகும்.
- ஆண்களின் தேவையின்றி ஒரு பெண்ணின் குருத்தணுவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் செயற்கை விந்தின் ஊடாக ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அண்மைய ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
- 1973 ம் ஆண்டு எக்சிரோக்சு பலோ அல்டோ ஆராய்சி மையத்தால் உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்ட எக்சிரோக்சு அல்ரோ கணினியே முதன்முதலாக வரைகலை பயனர் இடைமுகத்தைக் கொண்டிருந்தது.
- அண்டம் 13.73 (± 0.12) பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும், இப் பூமி 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும் தோன்றியதாக அறிவியல் கூறுகிறது.
- "மக்களின் நலனுக்காக ஆட்சிபுரியும் அரசு நிர்வாகம், மக்கள் மொழியில் நடைபெறுவதே முறை என்று தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்டது."
- ஓசனிச்சிட்டு உலகில் உள்ள பறவைகள் யாவற்றினும் மிகமிகச் சிறிய பறவை ஆகும். இப்பறவை 5 செ.மீ நீளமும் 1.8 கிராம் எடையும் கொண்டுள்ளது.
- பெரு வெடிப்புக் கோட்பாடு (Big-Bang Theory) என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடாகும்.
- சூனியம் அல்லது சுழி (zero) என்ற எண் இந்தியர்களால் 3ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது
- தமிழ் நாட்டில் பல இடங்களில் சமணர் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.
- சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறித்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்களை ஆகும், இவை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களை கொண்டுள்ளது
- உனுன்பியம் (Ununbium) என்ற புதிதாகக் கண்டறியப்பட்ட தனிமம் அண்மையில் தனிம அட்டவணையில் சேக்கப்பட்டது.
- பூமியைப் போல் அல்லாது நிலாவில் வளி மண்டலம் இல்லை
- ஜி.இ குளோபல் ஆய்வு என இன்று அறியப்படும், 1900 இல் தொடங்கப்பட்ட ஆய்வு நிறுவனமே முதலாவது அமெரிக்க வணிக தொழிற்துறை ஆய்வு நிறுவனம் ஆகும்.
- உலகில் 7 - 10 % ஆனோர் இடதுகைப் பழக்கம் உடையவர்கள்.
- மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையார் அவரது தந்தை வழி நின்று தமிழ் மொழி தனது தனித்துவத்தை, ஆழுமையை இழக்காமல் இருக்க பிறமொழிச் சொற்கள், நடை, எழுத்துக்கள் தமிழில் மிகுந்து கலைப்பதை எதிர்த்துத் தனித்தமிழைப் பரப்பினார்.
- மனிதர்களை விட பல மடங்கு கூடிய செவிப் புலன், மோப்பப் புலன், இருளிலும் பார்க்கும் திறன் ஆகியவை நாய்களுக்கு உண்டு.
- உலகில் அதிக வருமானம் (2008) ஈட்டும் முதல் 500 (Fortune Global 500) வணிக நிறுவனங்களில் 170 ஐரோப்பிய ஒன்றியத்திலும், 153 ஐக்கிய அமெரிக்காவிலும், 64 யப்பானிலும் உள்ளன.
- ஒருவரின் பெயருடன் தாயின் பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம் என 2003 இல் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.
- வைரம், மரகதம், நீலம், கோமேதகம், பவளம், மாணிக்கம், முத்து, புட்பராகம் வைடூரியம் ஆகியவை நவமணிகள் எனப்படும்.
- ஓரு தமிழ் மாணவன் உறங்குகிறான் என்று தன் கல்லறையில் எழுதும்படி வேண்டிக் கொண்டவர் தமிழறிஞர் ஜி. யு. போப் ஆவார்.
- ஐக்கிய அமெரிக்காவில் 32% மக்கள் உடற் பருமன் கூடியவர்கள், இந்தியாவில் 5% மக்களும், தமிழ்நாட்டில் 22% மக்களும் உடற்பருமன் கூடியவர்கள்.
- உலகில் 4% மொழிகள் 96% மக்களால் பேசப்படுகின்றன, முதல் 20 மொழிகளை 3.2 பில்லியன் மக்கள் அல்லது அரைவாசி மக்கள் பேசுகின்றனர்.
- வொல்பிராம் அல்பா என்பது பல கணிதவியல், அறிவியல், நுட்ப கேள்விகளுக்கு துல்லியமாக (ஆங்கிலத்தில் மட்டும்) பதிலளிக்க கூடிய ஒர் இணைய கேள்வி-பதிலளி இயந்திரம் ஆகும்.
- இந்தியாவில் ஏப்ரல் 2009 இல் 403 மில்லியன் கைபேசி பயனர்களும், 37 மில்லியன் நில இணைப்பு பயனர்களும் இருக்கிறார்கள்.
- உரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் என்பது சென்னை தரமணியில் அமைதுள்ள 120,00 மேற்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், துண்டறிக்கைகள், விளம்பரங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு நூலகம் ஆகும்.
- உலகில் புத்தாக்கத்தில் ஆப்பிள், கூகிள் நிறுவனங்கள் முதல் இரு நிலைகளில் இருக்கின்றன (பிசினசுவீக், ஃபாசுட்கம்பனி 2009 கருத்தாய்வுகள்).
- இதுவரை 1500 மேறப்பட்ட விலங்குகள் இயற்கையாக தற்பால்சேர்க்கையில் ஈடுபடுவதாக அறியப்பட்டுள்ளது.
- ஒளி சூரியனில் இருந்து பூமிக்கு வர ஏறத்தாழ 8 நிமிடம் எடுக்கிறது.
- உலகின் 0.2% மக்கள் தொகையைக் (13 மில்லியன்) கொண்ட யூத சமூகம், 1901 இருந்து 2008 வரை வழங்கப்பட்ட நோபல் பரிசுகளில் 23% (178 யூத நபர்கள்) பெற்றுள்ளார்கள்.
- கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார் வாய்மொழி இலக்கியம் சொலவடை எனப்படுகிறது.
இடம்பெறவில்லை
- மனித உரிமைகளுக்கான ஆசிய மையத்தின் 2008 தெற்காசியா மனித உரிமைகள் மீறல்கள் சுட்டெண் அடிப்படையில் தெற்காசியாவில் இலங்கையே மிக மோசமான அதிகமான மனித உரிமை மீறல்கள் நடைபெறும் நாடு.
- உடலின் 2% நிறை உடைய மூளை ஒருவரின் 20% ஆற்றலையும், ஆக்சினையும் பயன்படுத்துகிறது.
- உலக நாடுகளின் மக்கள் தொகையில் அதிக விழுக்காடு (21% - 27.4/127.8 மில்லியன்) முதியோரைக் கொண்ட நாடு யப்பான் ஆகும்.
- முதன்முதலில் ஒலி ஒலிப்பதிவு உருளையில் (1888) பதிவு செய்யப்பட்டது, பின்னர் வெள்ளீயத் தகட்டிலும் (1894), ஒலி நாடாவிலும் (1983), இறுவட்டிலும் (1982) பதியப்பட்டு, தற்போது எம்.பி.3 போன்ற எண்மிய முறையில் பதியப்படுகிறது.
- 1931 ம் ஆண்டில் வெளிவந்த காளிதாசு தமிழில் வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் ஆகும்.
- உலக வைப்பகத்தின் கணக்கீட்டின் படி உலகில் 1.4 பில்லியன் மக்கள் உணவு, நீர், உறையுள், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் மிகமோசமான வறுமை நிலையில் உள்ளார்கள்.
- கூகிளின் புள்ளியியல் பொறிமுறை மொழிபெயர்ப்பு மூலம் இந்தி உட்பட 42 மொழிகளுக்கிடையே இலவசமாக மொழிபெயர்ப்பு செய்யலாம்.
- பொதுவுடமை கொள்கையாக அறிவிக்கப்பட்ட நாடுகளான சீனா, கியூபா, வட கொரியா, வியட்நாம், லாவோசு ஆகியவை எல்லாம் சர்வாதிகார அல்லது ஒரு கட்சி ஆட்சி நடைபெறும் நாடுகள் ஆகும்.
- 1957ம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றும் பயன்பாட்டில் இருக்கும் போர்ட்ரான் நிரல் மொழியே முதலாவது உயர்நிலை நிரல் மொழியாகும்.
- சிவஞானபோதம் என்பது மெய்கண்ட தேவரால் 13ம் நூற்றாண்டில் தமிழில் எழுதப்பட்ட ஒரு முக்கிய சைவ சிந்தாந்த கோட்பாட்டு நூல்.
- ஓவ்வொரு ஆண்டும் 11 மில்லியன் சிறுவர்கள் தவர்க்கப்படக்கூடிய காரணங்களால் அவர்களின் 5 வது அகவை முடியும் முன்னரே இறுக்கின்றனர் (படம்).
- ஊழல் மலிவுச் சுட்டெண் அடிப்படையில் டென்மார்க், நியுசிலாந்து, சுவீடன், சிங்கப்பூர், பின்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஊழல் மிகவும் குறைவாக நடைபெறுகிறது.
- மது அருந்துதலுக்கும் குற்றச் செயல்களுக்கும் (வாகன விபத்து, வன்கலவி, கொலை, தற்கொலை) மிக நெருக்கமான இயைபுத்தொடர்பு (correlation) உண்டு.
- உலகின் மக்கள்தொகை 1999 இல் 6 பில்லியனாக இருந்தது, ஏப்ரல் 2009 இல் 6.77 பில்லியனாக இருக்கின்றது என மதிப்பிடப்பட்டுள்ளது.
- தமிழ்நூல் காப்பகம் என்பது திருமுதுகுன்றத்தில் சுமார் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், ஆவணங்கள், ஆய்வேடுகள் அகியவற்றைக் கொண்ட தமிழ் நூலகம் ஆகும்.
- உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களான வாரன் பஃபெட், பில் கேட்சு (படம்) ஆகியோரே மிகப் பெரும் கொடையாளிகளும் ஆவர், இவர்கள் இதுவரை முறையே 40, 28 பில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடை செய்துள்ளார்கள்.
- உலகில் அதிக விழுக்காடு மக்கள் உயர் கல்வி பெற்ற நாடு கனடா ஆகும். இங்கு 44.6 விழுக்காட்டினர் (2004) பல்கலைக்கழக அல்லது தொழில் கல்லூரிப் படிப்பு முடித்தவர்கள்.
- திமிங்கிலச்சுறாமீன் என்பது உலகில் உள்ள மீன்கள் யாவற்றினும் மிகப்பெரிய வகை மீன் ஆகும்.
- உலகில் அதிகம் தானுந்து உற்பத்தி செய்யும் நாடு நிப்பான் ஆகும். 2007 இல் இங்கு 11,596,000 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
- கலிங்கத்துப்பரணி என்பது செயங்கொண்டார் என்னும் புலவரால் அனந்தவன்மன் என்னும் வட கலிங்க மன்னனை முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் கிபி 1112 ஆம் ஆண்டில் போரில் வென்றதை புகழ்ந்து பாடப்பட்ட பரணி ஆகும்.
- இந்தியாவில் பசுக்களைக் கொல்வது மேற்கு வங்காளம், கேரளம் தவிர்த்து மற்றா எல்லா இடங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
- 2006 இல் 68%, 2009 இல் 46% (சுமார் 100 மில்லியனுக்கு மேல்) வலைத்தளங்கள் கட்டற்ற மென்பொருளான அப்பாச்சி இணைய வழங்கியைப் பயன்படுத்துகின்றன.
- உலகின் செம்மொழிகளில் ஒன்றாகிய எபிரேய மொழி 2ம் நூற்றாண்டில் இருந்து வழக்கற்று இருந்து, 19ம் நூற்றாண்டில் புத்துயிர்ப்பு செய்யப்பட்டு, இசுரேல் நாட்டின் அலுவல் மொழியாக ஆக்கப்பட்டது.
- ஆபிரிக்கா உலகின் 20.4% (30,221,532 சதுர கிமீ) நிலப்பரப்பையும், 14% மக்கள் தொகையையும் (1,001,320,281), 0.021% (1.15/54.63 டிரில்லியன்) மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் கொண்டுள்ளது.
- நாலடியார் எனப்படுவது சமண முனிவர்களால் தமிழில் எழுதப்பட்ட நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆன நானூறு நீதிப் பாடல்களின் தொகுப்பு ஆகும்.
- உலகின் மேல் பரப்பில் இருந்து அதன் உள் அகட்டு மையப் பகுதிக்கான (படம்) தூரம் 6,360 கிமீ ஆகும், மனிதர் இதுவரை தோண்டிய அதி கூடிய தூரம் 12 கிமீ ஆகும்.
- 1946 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட எனியாக் உலகின் முதல் இலத்திரனிய, பொதுப் பயன்பாட்டு, எண்மியக் கணினி ஆகும்.
- உலகின் மேல்பரப்பு 70% நீரால் (1.4 மில்லியன் கிமீ3) ஆனது, இதில் 2.5% மட்டுமே நன்னீர்.
- உலகில் 5% மக்கள்தொகையைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கா 25% ஆற்றலை நுகர்கிறது.
- நாலாயிரத்திவ்ய பிரபந்தம் என்பது தமிழில் கிபி 6ம் நூற்றாண்டு முதல் கிபி 9ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட வைணவ சமயப் பக்திப் பாடல்களின் தொகுப்பு ஆகும்.
- தற்கால அறிவியல் வகைப்பாட்டின் படி உயிரினங்களை எட்டு நிலைகளாக வகுப்பர் (படம்), அவை: ஆட்களம், இராச்சியம், தொகுதி, வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம், இனம் ஆகும்.
- 1849 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பின்லாந்தின் தேசிய காவியமான கலேவலாவை, உதயணன் 1994 ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்தார்.
- உலகில் பழங்கள், பருப்புகள், சுவைப்பொருட்கள் ஆகியவற்றை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும்.
- இணை அறுவடை இயந்திரம் என்பது அறுவடை, கதிர் அடித்தல், உமி நீக்கல் ஆகிய எல்லா செயல்களையும் ஒருங்கே செய்யக்கூடிய ஒரு வேளாண் இயந்திரம் ஆகும்.
- மார்ச் 16, 2009 இல் ஐக்கிய அமெரிக்காவின் மொத்த தேசிய கடன் $11,042,553,971,450 ($11 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள், மொ.உ.உ இல் 65%) ஆகவும், வீடுகளின் கடன் (US household debt) 11.4 டிரில்லியனாகவும் (2005) உள்ளது.
- கணவாய்க்கு (படம்) மூன்று இதயங்கள் உண்டு. இதன் குருதி நீல நிறத்தில் இருக்கும்.
- அண்டத்தின் முழுமையான ஆற்றல் அடர்த்தியில் நாம் இதுவரை அண்டம் என்று எண்ணியிருந்தது 4% மட்டுமே. இன்றுவரை 22% நேரடியாக அறிய இயலாத கரும் பொருளாலும் (dark matter), 74% நேரடியாக இன்றுவரை அறிய இயலாத கருமை ஆற்றலாலும் (dark energy) ஆனது என தற்போது இயற்பியலாளர்களால் கருதப்படுகிறது.
- தற்போது தனிம அட்டவணையில் உள்ள 117 தனிமங்களில் 18 மட்டுமே மாழையிலி (உலோகம் அல்லாதவை), இவையும் மிகக் கூடிய அழுத்தத்தில் மாழைகளாக (உலோகங்களாக) மாறும்.
- உலகில் வழங்கிவந்த பல்வேறு மருத்துவ முறைகளில் அலோபதி என்ற மேற்குநாட்டு மருத்துவ முறையே அறிவியல் முறையை உள்வாங்கி தற்கால மருத்துவமாக மருபியது.
- தேவாரங்கள் எனப்படுபவை 7 ம், 8 ம் நூற்றாண்டுகளில் மூன்று நாயன்மார்களால் (சம்பந்தர், அப்பர், சுந்தரர்) தமிழில் எழுதப்பட்ட 8227 சைவ சமயப் பாடல்கள் ஆகும்.
- ஐக்கிய அமெரிக்க அரசு புகையிலை (சிக்கிரட்) உற்பத்தியாளர்களருக்கு எதிராக நுகர்வோர் உடல் நலக் கேடு தொடர்பாக தொடுத்த வழக்கின் ஏற்பாடாக 245 பில்லியன் டொலர்களை நிறுவனங்கள் செலுத்தின.
- சராசரியாக ஆணுடைய மூளைக்கு பெண்ணுடையதை விட 6.5 மடங்கு அதிக சாம்பல் பொருள் (gray matter) உண்டு, பெண்ணுடைய மூளைக்கு 10 மடங்கு அதிக வெள்ளைப் பொருள் (white matter) உண்டு.
- உலகில் அதிகம் உண்ணப்படும் இறைச்சி கோழி ஆகும், 2004 ம் ஆண்டில் 16,194,925,000 கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டன.
- உலகின் மிகப் பெரும் தீவு கிறீன்லாந்து ஆகும்.
- 2008 இல் இணையத்தில் உள்ள இந்திய மொழி உள்ளடக்கத்தில் 19% தமிழில் உள்ளது.
- மின் விலாங்குமீன் தற்காத்துக் கொள்வதற்காகவும் பிற உயிர்களை வேட்டையாடுவாதற்காகவும், 500 வோல்ட்டு மின்னழுத்தமும் 1 ஆம்பியர் மின்னோட்டம் (500 வாட்) திறனுள்ள மின் அதிர்வுகளை உற்பத்தி செய்யவல்லது
- உருசியாவில் ஆயுள் எதிர்பார்ப்பு ஆண்களுக்கு 61.5 ஆண்டுகள் ஆகவும், பெண்களுக்கு 73.9 ஆண்டுகளாகவும் பெரிய வேறுபாடுடன் அமைகிறது.
- உலகில் சிறைப்பட்டவர்களில் 25% (2.5 மில்லியன்) ஆனோர் ஐக்கிய அமெரிக்கச் சிறைகளில் உள்ளனர்.
- 2008 ம் ஆண்டில் சீனா, அமெரிக்கா, நிப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் முறையே 253, 220, 94, 60 மில்லியன் இணையப் பயனர்கள் உள்ளார்கள்.
- தற்காலம்வரை செந்தமிழுக்கான இலக்கணம் பெரும்பாலும் நன்னூலைப் பின்பற்றி உள்ளது.
- ஓசனிச்சிட்டுப் பறவைகள் மட்டுமே பறந்துகொண்டு பின்நோக்கி நகரவும், அந்தரத்தில் சிறகடித்துக் கொண்டே ஓரிடத்தில் நிலையாக இருக்கவும் வல்லவை.
- மனிதரின் வழக்கமான உடல் வெப்பநிலை 37 பாகை செல்சியசு ஆகும்.
- வெற்றிடத்தில் ஒளி வேகம் மாறா 299 792 458 மீட்டர்/நொடி ஆகும்.
- 32 மில்லியன் நூல்கள் உட்பட அதிக உருப்படிகளைக் வைத்திருக்கும் ஐக்கிய அமெரிக்க காங்கிரசு நூலகமே உலகின் மிகப் பெரும் நூலகம்.
- ஐம்பெருங்காப்பியங்களாக அறியப்படுபவை சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி ஆகியன.
- சூரியனின் திணிவு சூரிய மண்டலத் திணிவின் 98.6% விழுக்காடு ஆகும்.
- ஆண்டுதோறும் உலகெங்கும் வெளியிடப்படும் ஒரு மில்லியன் வரையான நூல்களில் ஏறத்தாள 12,000 மட்டுமே இந்தியாவில் இருந்து வெளிவருகின்றன.
- 2008 இல் உலகில் அதிகம் வருவாய் ஈட்டும் 500 வணிக நிறுவனங்களில் 153 ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்தவை.
- இதயகுழலிய நோய்களே உலகில் அதிகப் பேரின் இறுப்புக்கு காரணமாக அமைகிறன.
- இந்திய மொழிகளில் தமிழை முதலில் நா. கோவிந்தசாமி 1995 ஆம் ஆண்டு இணையத்தில் ஏற்றிவைத்தார்.
- கல்லீரல் மனித உடலின் மிகப்பெரும் உள்ளுறுப்பு ஆகும்.
- 2008 தவறிய அல்லது தோற்ற நாடுகள் சுட்டெண் அடிப்படையில் இலங்கை 20 இடத்தில் நிலையற்ற நாடாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
- பெரும் தடுப்புப் பவளத்திட்டு உயிரினங்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய ஒற்றை அமைப்பாகும்.
- மனித வரலாற்றில் முதல் முறையாக 2008 இல் இருந்து அரைவாசிக்கும் மேற்பட்ட மக்கள் நகரங்களில் வாழ்வர்கள் என ஐநா அறிக்கை கூறுகிறது.
- லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் என பல தமிழ் வரைகதைகள் 1970 களில் இருந்து 1990 களின் முற்பகுதி வரை மிகப் பரவலாக வாசிக்கப்பட்டன.
- சோவியத் ஒன்றியம் (படத்தில் அதன் கொடி) 1945 ஆம் ஆண்டில் இருந்து 1991 ஆம் ஆண்டில் இல் கலைக்கப்படும்வரை உலகின் இரண்டு வல்லரசுகளில் (மற்றது ஐக்கிய அமெரிக்கா) ஒன்றாக திகழ்ந்தது.
- புளூட்டோ 1930 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டுவரை ஒரு கோளாக கருதப்பட்டு வந்து, அதன் பின் ஒரு சிறுங்கோளாக வரையறுக்கப்பட்டது.
- இலங்கை அரசின் சிறப்பு ஆதரவைப் பெற்று இலங்கையின் அரச சமயமாக அமைவது பெளத்தம் ஆகும்.
- இந்திய இரயில்வே உலகிலேயே அதிக ஊழியர்கள் (14 இலட்சம்) பணிபுரியும் நிறுவனம் ஆகும்.
- 17 ம் நூற்றாண்டில் தமிழின் முதல் அகராதி சதுரகராதி வெளிவர முன்னரே சொற்களுக்கு பொருள் தரும் நிகண்டுகள் 8ம் நூற்றாண்டு முதற்கொண்டே வெளிவந்தன.
- பூமி இருக்கும் நாள்மீன்பேரடையான பால்வழியில் (படம்) 200 முதல் 400 பில்லியன் வரையான விண்மீன்கள் உண்டு.
- வேதியிலுக்கு அடிப்படையாக கருதப்படும் தனிம அட்டவணையை அதன் தற்கால வடிவத்தில் திமீத்ரி மென்டெலீவ் அவர்களால் 1869 ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
- ஐஞ்சிறுகாப்பியங்களாக அறியப்படுபவை உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், நீலகேசி, சூளாமணி ஆகியவை ஆகும்.
- உலகின் அதி உயர் மலை உச்சியான எவரெஸ்டை டென்சிங் நோர்கே, எட்மண்ட் ஹில்லரி ஆகியோர் 1953 ம் ஆண்டு முதன்முதலாக வெற்றிகரமாக மலையேறினர்.
- தற்பால்சேர்க்கை பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஈரான், சூடான், யெமென் உட்பட பல இசுலாமிய நாடுகளில் மரணதண்டனைக்குரிய குற்றமாகும்.
- காற்பந்தாட்டம் உலகில் அதிகப் பேரால் விளையாடப்படும் விளையாட்டு.
- ஒரு குழந்தை பிறக்கும் பொழுது 270 எலும்புகளும், ஒரு வயது வந்தவருக்கு சராசரியாக 206 எலும்புகளும் இருக்கும்.
- மக்கள் தொகை அடிப்படையில் சீனாவின் மிகப் பெரும் நகரம் சாங்காய் ஆகும்.
- ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், சீனம், அரபு ஆகிய மொழிகள் ஐக்கிய நாடுகளில் சபையின் உத்யோகபூர்வ மொழிகள்.
- ஒரு இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விபரிக்காமல்) விபரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே விடுகதை.
- மூளை 100 பில்லியன் நரம்பணுக்களையும், அவை ஒவ்வொன்றுக்கும் இடையே 10 000 வரையான நரம்பிணைப்புகளையும் கொண்டது
- முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை ஆகியோர் தமிழிசையின் ஆதி மும்மூர்த்திகள் என அறியப்படுகிறார்கள்.
- அண்டத்தின் 75% தனிம திணிவு ஐதரசனால் ஆனது.
- ஊனுண்ணித் தாவரங்கள் நுண்ணுயிர்கள், பூச்சிகள், சிறு விலங்குகள் ஆகியவற்றை உண்பன.
- மாயச் சதுரம் என்பது n2 சதுர கட்டங்களில் உள்ள இயல் எண்களை நிரை, நிரல், மூலைவிட்டம் என எந்த வாரியாக கூட்டினாலும் ஒரே கூட்டுத்தொகையை தரும் ஒர் எண் அமைப்பு.
- செயற்கை அறிவாண்மை என்பது கணினி அல்லது இயந்திரங்கள் கொண்டிருக்கும் அறிவுத் திறனைக் குறிக்கிறது (படத்தில் படியிறங்கும் தானியங்கி).
- மணிக்கு 290 கிமீ பறக்க வல்ல வல்லூறு உலகிலேயே அதிக விரைவில் பறக்க வல்ல பறவை.
- பன்னாட்டு சீன வானொலியின் ஒலிபரப்புச் சேவை தமிழிலும் இடம்பெறுகிறது.
- புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 வீதமானது அண்டார்க்டிக்காவில் உள்ளது.
- தமிழ்ப் புத்தாண்டு தைப்பொங்கல் நாளான தை 1 அமையும் என தமிழ்நாடு அரசு 2008 ஆம் ஆண்டில் அறிவித்தது.