சனவரி 2015
|
சனவரி 2015 (January 2015, ஜனவரி 2015), 2015 ஆம் ஆண்டின் முதலாம் மாதமாகும். இம்மாதம் ஒரு வியாழக்கிழமையில் துவங்கி 31 நாட்களின் பின்னர் சனிக்கிழமையில் முடிவடைகிறது. தமிழ் நாட்காட்டியின் படி தை மாதம் சனவரி 15 புதன்கிழமை தொடங்கி பெப்ரவரி 12 வியாழக்கிழமை முடிவடைகின்றது.
சிறப்பு நாட்கள்
தொகு- சனவரி 1 - ஆங்கிலப் புத்தாண்டு
- சனவரி 7 - கிறிஸ்துமஸ் (மரபுவழி)
- சனவரி 12 - விவேகானந்தர் பிறந்தநாள்
- சனவரி 14 - போகி பண்டிகை
- சனவரி 15 - தைப்பொங்கல்
- சனவரி 15 - திருவள்ளுவர் ஆண்டு (2042) பிறப்பு
- சனவரி 16 - மாட்டுப் பொங்கல்
- சனவரி 17 - காணும் பொங்கல்
- சனவரி 26 - இந்தியக் குடியரசு நாள்
- சனவரி 26 - உலக சுங்கத்துறை நாள்
- சனவரி 26 - ஆஸ்திரேலியா நாள்
- சனவரி 30 - மகாத்மா காந்தி நினைவு நாள்
நிகழ்வுகள்
தொகுசெய்திகள் |
- சனவரி 31:
- உக்ரைனும், உருசிய-சார்பு கிளர்ச்சியாளர்களும் புதிய அமைதிப் பேச்சுகளை ஆரம்பித்தனர். (ராய்ட்டர்சு)
- ஹூட்டு போராளிகள் மீது கொங்கோ போரை ஆரம்பித்தது. (ஏஃப்பி)
- இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்கள் சப்பானியப் பயணக் கைதி ஒருவரை சிரச்சேதம் செய்யும் காணொளியை வெளியிட்டனர். (அல்ஜசீரா)
- குயின்ஸ்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றது. (ஏபிசி)
- மாஸ்கோவில் உள்ள பொது நூலகம் ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் பல்லாயிரக்கணக்கான ஆவணங்கள் எரிந்தன. (டைம்சு ஒஃப் இந்தியா)
- வங்காளதேசம், டாக்காவில் உள்ள நெகிழித் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- 2015 ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று பெண்கள் இறுதிப் போட்டியில் அமெரிக்கர் செரீனா வில்லியம்ஸ் உருசியாவின் மரியா சரப்போவாவை 6–3, 7–6 (5) என்ற கணக்கில் வென்றார். (ஏஏபி)
- 2015 ஆசியக் கிண்ணம் (காற்பந்து): சிட்னியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆத்திரேலிய அணி தென்கொரியயாணியை 2–1 என்ற கணக்கில் வென்றது. (ஏபிசி)
- சனவரி 30:
- பாக்கித்தான், சிந்து மாகாணத்தில் சுணி போராளிகள் சியா பள்ளிவாசல் ஒன்றைத் தாக்கி குறைந்தது 40 பேரைக் கொன்றனர். (பிபிசி)
- ஈராக்கில் கிர்க்குக் மாகாணத்தில் இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்கள் குர்திய இராணுவத் தளபதி ஒருவரைக் கொன்றனர். (ஏஎஃப்பி)
- உக்ரைன், தோனெத்ஸ்க்கில் எறிகணைத் தாக்குதலில் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். (ஏபி)
- அதிர்வுப் பிணைப்பு என்ற புதிய வகை வேதியியற் பிணைப்பு ஒன்றைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக செருமனி வேதியியலாளர்கள் அறிவித்துள்ளனர். (சயன்டிஃபிக் அமெரிக்கன்)
- சனவரி 29:
- சியா இசுலாம் ஹௌத்தி போராளிகள் யெமன் தலைநகரில் உள்ள இராணுவத் தளம் ஒன்றைக் கைப்பற்றினர். (வால்ஸ்ட்ரீட் ஜர்னல்)
- பிலிப்பீன்சின் பொருளாதாரம் 2014 ஆம் ஆண்டில் 6% இற்கும் அதிகமாக உயந்தது. ஆசியாவில் சீனாவுக்கு அடுத்ததாக மிக விரைவாக வளர்ந்து வரும் நாடானது. (எக்கொனொமிக்சு டைம்சு)
- மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 காணாமல் போனமை ஒரு விபத்து என மலேசியா அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதன் மூலம், காணாமல் போனவர்களின் உறவினர்கள் நட்டஈடு கோர வழி ஏற்பட்டுள்ளது. (யூஎஸ்ஏ டுடே)
- சனவரி 28:
- இலங்கையின் தலைமை நீதிபதி மொகான் பீரிசை அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்து அகற்றி, சிராணி பண்டாரநாயக்காவை மீண்டும் தலைமை நீதிபதியாக நியமித்தார். (டெய்லிமிரர்)
- இலங்கையின் முன்னாள் இராணுவத் தலைவர் சரத் பொன்சேகாவின் குடியுரிமை, மற்றும் அவரது நான்கு நட்சத்திர ஜெனரல், பதக்கங்கள், ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது (தமிழ்மிரர்)
- சீனாவின் யுவான் உலகில் அதிகம் புழங்கும் 5வது நாணயமாக அறிவிக்கப்பட்டது. (ஏபி)
- ஆத்திரேலியக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்த 157 இலங்கை ஏதிலிகளை ஆத்திரேலிய அதிகாரிகள் தடுத்து வைத்தமை சட்டபூர்வமானது என அந்நாட்டின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. (ஏபிசி)
- வெனிசுவேலாவிற்கு அணு குண்டு தயாரிக்க உதவிய அமெரிக்காவின் இயற்பியலாளர் லியனார்டோ மாச்செரோனி என்பவருக்கு நியூ மெக்சிகோ நீதிம்ன்றம் ஒன்று 5-ஆண்டுகள் சிறைந்த்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. (ஏபி)
- சனவரி 27:
- சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைவு: இலங்கையின் வடக்கே சுன்னாகம் நொதெர்ன் பவர் நிறுவனத்தின் செயற்பாடுகளை மறு அறிவித்தல் வரும் வரை நிறுத்துமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டது. (பிபிசி)
- பூமிக்கு அருகே வந்த 2004 பிஎல்86 என்ற சிறுகோளுக்கென தனியானதொரு நிலவு இருப்பதை நாசா அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர். (பிபிசி)
- சனவரி 26:
- சிரியாவின் கோபானி நகரின் 90% பகுதிகளை குர்தியப் போராளிகள் கைப்பற்றினர். (சீஎனென்)
- இந்திய அரசு தமிழறிஞர் ஜோர்ஜ் எல். ஹார்ட்டிற்கு பத்மசிறீ விருதும், பில் கேட்ஸ், அவரது மனைவி மெலின்டா ஆகியோருக்கு பத்ம பூசன் விருதும் வழங்கியது. (ராய்ட்டர்சு),(இந்திய அரசு)
- கிரேக்க எப்-16 ஜெட் வானூர்தி தெற்கு எசுப்பானியாவில் வீழ்ந்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர். (ஏபி)
- வெள்ளை மாளிகையின் புற்தரைகளில் ஆளில்லாத வானூர்தி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. (ஏபி)
- இங்கிலாந்து திருச்சபை தனது முதலாவது பெண் ஆயராக லிபி லேயர் என்பவரை நியமித்தது. (ஏபி)
- சனவரி 25:
- பிலிப்பீன்சில் மோரோ போராளிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 30 முதல் 50 பேர் வரை கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- இந்தியாவிற்கு மூன்று-நாள் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார். (யூஎஸ்ஏ டுடே)
- நாசாவின் நியூ ஹரைசன்ஸ் விண்கலம் ஒன்பது ஆண்டுகள் 5 பில்லியன் கிமீ தூரன் பயணித்து புளூட்டோ குறுங்கோளை நெருங்கியுள்ளது. இது சூலை 17 இல் இது புளூட்டோவின் மிக அண்மைப் புள்ளையை அடையும். (பிபிசி)
- சனவரி 24:
- உக்ரைனின் மரியுபோல் நகர சந்தை ஒன்றில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 27 பேர் உயிரிழந்தனர், 90 பேர் காயமடைந்தனர். உருசிய-சார்பு கிளர்ச்சியாளர்கள் உரிமை கோரினர். (ஏபி)
- இசுலாமிய தேச கிளர்ச்சியாளர்கள் தாம் பிடித்து வைத்திருந்த சப்பானியப் பணயக் கைதி ஒருவரைக் கொன்று விட்டதாக அறிவித்தனர். (பிபிசி)
- சாம்பியா அரசுத்தலைவர் தேர்தலில் ஆளும் கட்சியின் வேட்பாளர் எட்கார் லுங்கு வெற்றி பெற்றார். (ஏபிசி)
- சனவரி 23:
- ஊழிநாள் கடிகாரம் இரண்டு நிமிடங்கள் முன்னோக்கி நகர்த்தப்பட்டது. (கார்டியன்) (இன்டிபென்டென்ட்)
- சவூதி மன்னர் அப்துல்லா 90வது அகவையில் காலமானார். இவரது உடன்பிறவா சகோதரர் அப்துல் அசீசு மன்னரானார். (சீஎனென்)
- சனவரி 22:
- உக்ரைனின் கிழக்கே தோனெத்ஸ்க் ந்கரில் பேருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- யெமன் அரசுத்தலைவர், பிரதமர் உட்பட யெமனிய அமைச்சரவை உறுப்பினர்கள் பதவி விலகினர். (சீனென்)
- சனவரி 21:
- இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு அரசியலமைப்பின் 34வது பிரிவுக்கு அமைய அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கினார். வாக்குரிமையுடன் இழந்த அனைத்தையும் அவர் பெறுகிறார். (தினகரன்)
- இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் பேருந்து ஒன்றில் 13 பேர் மீது மேற்குக் கரையைச் சேர்ந்த பலத்தீனர் ஒருவர் கத்தியால் குத்திக் காயப்படுத்தினார். (நியூயோர்க் டைம்சு)
- மெக்சிக்கோவின் கொலிமா எரிமலை வெடித்தது. (ஏபிசி)
- சனவரி 20:
- யெமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அரசுத்தலைவரின் மாளிகையைக் கைப்பற்றினர். (வாசிங்டன் போஸ்D)
- இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்கள் $200 மில்லியன்களைத் தராவிட்டால் தாம் பிடித்து வைத்திருக்கும் இரண்டு யப்பானியர்களைக் கொல்லப்போவதாக எச்சரித்துள்ளனர். (ராய்ட்டர்சு)
- சாம்பியாவில் அரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. (ஏஎஃப்பி)
- சனவரி 19:
- சிரியாவின் கோபானி நகரில் குர்தியப் போராளிகள் இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்கள் 11 பேரைக் கொன்று மெஷ்டெனு மலைப் பகுதியைக் கைப்பற்றினர். (பிபிசி)
- யெமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பிரதமரின் இல்லத்தைச் சுற்றி வளைத்தனர். (ஆர்டி)
- டோன் விண்கலம் சிரிசு குறுங்கோளில் இருந்து 238,000 மைல்களில் அதனை அணுகும் புதிய புகைப்படங்களை நாசா வெளியிட்டது. சிறுகோள் படை between செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் உள்ள சிறுகோள் படைகளில் மிகப் பெரும் குறுங்கோள் சிரிசு ஆகும். 2015 மார்ச் 6 இல் டோன் சிரிசுவின் சுற்றுவட்டத்திற்குள் வரும். (BBC),(NASA)
- சனவரி 18:
- திருத்தந்தை பிரான்சிசு மணிலா நகரில் நடத்திய திருப்பலி பூசையில் 3 மில்லியன் மக்கள் பெரும் மழையையும் பொருட்படுத்தாது கூடினர். (சீஎனென்)
- இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக இந்தோனேசியப் பெண் ஒருவருக்கும், மற்றும் பிரேசில், நெதர்லாந்து, வியட்நாம், மலாவி, நைஜீரியா நாடுகளை சேர்ந்த 5 பேருக்கும் சுட்டுக் கொல்லப்படும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. (நியூஸ்.கொம்)
- இசுரேலிய உலங்குவானூர்தி சிரியாவில் நடத்திய தாக்குதலில் ஆறு ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- இந்தியாவின் பீகார் மாநிலத்தில் சராயன் என்ற கிராமத்தில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இடம்பெற்ற வன்முறைகளில் மூன்று முசுலிம்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். (ஏபி)
- தென்னாப்பிரிக்காவின் ஏ பி டி வில்லியர்ஸ் ஒருநாள் துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய அணிகளுக்கு எதிராக விளையாடி 31 பந்துகளில் 100 ஓட்டங்களை எடுத்து வரலாற்றில் மிக விரைவான ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். (பிபிசி)
- சனவரி 17:
- யெமன் அரசுத்தலைவரின் தலைமை அதிகாரி தலைநகர் சனாவில் கடத்தப்பட்டார். (ஏபி)
- சார்லி எப்டோவிற்கு எதிராக நைஜரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது ஐந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். சில கிறித்தவ ஆலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. (பிபிசி)
- சனவரி 16:
- போகோ அராம் தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிடுவதற்காக சாட் இராணுவத்தினர் கமரூன் சென்றனர். (ராய்ட்டர்சு)
- கியூபாவில் உள்ள தனியார் நிறுவனங்களுக்குத் தேவையான உபகரணங்களை ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை ஐக்கிய அமெரிக்கா தளர்த்தியது. (யூஎஸ்ஏ டுடே)
- 1880 இல் டரவுகள் சேர்க்கப்படுவது ஆரம்பமாகியதில் இருந்து 2014 ஆம் ஆண்டே அதி கூடிய வெப்பநிலை கொண்ட ஆண்டு என நாசா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். (சின்குவா)(நாசா)
- 2003 ஆம் ஆண்டில் காணாமல் போன நாசாவின் பீகில் 2 விண்கலம் செவ்வாய் கோளில் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறித்துள்ளனர். (டைம்சு ஒஃப் இந்தியா)
- இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தார். (தி ஐலண்டு)(தி ஐலண்டு)
- சனவரி 15:
- கிழக்கு பெல்ஜியத்தில் இரண்டு தீவிரவாத சந்தேக நபர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- திருத்தந்தை பிரான்சிசு மணிலா வந்து சேர்ந்தார். (நியூயோர்க் டைம்சு)
- மலேசியாவின் தாப்பா நகரில் வட-தெற்கு விரைவுசாலயில் பேருந்து ஒன்று கவிழ்ந்து தீப்பிடித்ததில் எட்டு பேர் உயிரிழந்தனர். (ஸ்ட்ரெயிட் டைம்சு)
- சனவரி 14:
- யோசேப்பு வாஸ் அடிகள் கொழும்பு நகரில் திருத்தந்தை பிரான்சிசுவினால் புனிதராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். (ஃபெர்ஸ்ட்போஸ்ட்)
- திருத்தந்தை பிரான்சிசு இலங்கையின் வடக்கேயுள்ள மடு அன்னை ஆலயத்திற்குப் பயணம் செய்தார். (கத்தோலிக்கசெய்திகள்) (தமிழ்வின்)
- இலங்கையின் ஊவா மாகாணசபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியது. ஹரின் பெர்னாண்டோ முதலமைச்சரானார். (தினகரன்)
- அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் கைதிகளைக் கொண்டு செல்லும் பேருந்து ஒன்று தொடருந்துடன் மோதியதில் எட்டு கைதிகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். (பிபிசி)
- சனவரி 13:
- கிழக்கு உக்ரைனில் பயணிகள் பேருந்து ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். (ஏபிசி)
- திருத்தந்தை பிரான்சிசு 6 நாட்கள் ஆசியப் பயணம் மேற்கொண்டு இலங்கை வந்து சேர்ந்தார். (பிபிசி)
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: நோய்த் தடுப்புக்காக சீனா மேலும் 232 இராணுவ மருத்துவப் பணியாளர்களை மேற்கு ஆப்பிரிக்காவிற்கு அனுப்பியது (ஏபி)
- ஐரோப்பிய ஒன்றியத்தின் 5,000 இற்கும் மேற்பட்ட குடிமக்கள் மத்திய கிழக்கில் ஜிகாத் குழுக்களில் இணைந்துள்ளனர் என ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. (நியூடெய்லி)
- சனவரி 12:
- தொங்காவில் உங்கா தொங்கா எரிமலை வெடித்தது. (நியூசிலாந்து வானொலி)
- ஆர்மீனியாவில் உருசிய இராணுவத் தளத்தைச் சேர்ந்த இராணுவத்தினன் ஆர்மீனியக் குடும்பம் ஒன்றின் இரண்டு-வயதுக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரை சுட்டுக் கொன்றான். (ArmeniaNow),(அமெரிக்காநியூஸ்)
- மொசாம்பிக்கில் நஞ்சு கலந்த பியர் அருந்திய 69 பேர் உயிரிழந்தனர். 169 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். (ஏபிசி)
- எசுபேசுஎக்சு சிஆர்எஸ்-5 சரக்கு விண்கலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்தை அடைந்தது. (ஏபி)
- இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015: இலங்கையில் 27 பேர் கொண்ட புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது. (தமிழ்மிரர்)(தமிழ்மிரர்)(தமிழ்மிரர்)
- சனவரி 11:
- சார்லி ஹெப்டோ துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களை நினைவுகூர்ந்து பாரிசு நகரில் பல உலகத் தலைவர்கள் உட்பட ஒரு மில்லியன் மக்கள் வரை கூடினர். (டெய்லிமெயில்)
- சார்லி எப்டோவின் கார்ட்டூன்களை வெளியிடும் செருமானியப் பத்திரிகை மீது தாக்குதல் நடத்தப்பட்ட்டது. (ராய்ட்டர்சு)
- நைஜீரியாவின் பொட்டிஸ்கம் நகரில் இரண்டு 10-வயது போகோ அராம் பெண்கள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் இரு பெண்களும் உட்பட ஐவர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- இந்தோனேசியா ஏர்ஏசியா விமானம் 8501: விமான கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தோனேசியா அறிவித்தது. (ஏபி)
- குரோவாசியாவில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் வெளியுறவுத்துறை அமைச்சர் கொலின்டா கிராபர்-கித்தரோவிச் தற்போதைய தலைவர் ஈவோ யொசிப்போவிச்சை வென்றார். (பிபிசி)
- இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015: முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயற்சி செய்தார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கையின் புதிய அரசு விசாரணை செய்யும் என அறிவித்தது. (டொச்செவெல்லா)
- சனவரி 10:
- பாக்கித்தான், ராவல்பிண்டி நகரில் சியா இசுலாம் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். (எஸ்பிஎஸ்)
- நைஜீரியாவின் மைதுகிரி நகர சந்தையில் இடம்பெற்ற பெண் தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் 19 பேர் கொல்லப்பட்டனர். (வால்ஸ்ட்ரீட் ஜர்னல்)
- பாக்கித்தான், கராச்சியில் பயணிகள் பேருந்து ஒன்று எண்ணெய்த் தாங்கி ஒன்றுடன் மோதியதில் 30 பேர் கொல்லப்பட்டனர். (டோன்)
- ஆத்திரேலியா, மெல்பேர்ன் விமான நிலையத்தில் டைகர் ஏர்வேஸ் விமானத்தில் குண்டு வைக்கப்பட்டிருந்ததாக வதந்தி பரவியதை அடுத்து அங்கு விமான சேவைகள் பாதிப்படைந்தன. (நியூஸ்.கொம்)
- சனவரி 9:
- இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015: பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 51.28% வாக்குகள் பெற்று புதிய அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றார். பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார். (கார்டியன்)(பிபிசி)(பிபிசி)
- இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015: வட, கிழக்கு, மற்றும் மலையக மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகளிலேயே தான் தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச தெரிவித்தார். (பிபிசி)
- பிரான்சின் டம்மார்ட்டின்-என்-கொயெல் நகரில் இரண்டு நபர்கள் அச்சுக்கூடம் ஒன்றைக் கைப்பற்றி பலரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். இரு நபர்களும் சுட்டுக் கொல்லப்பட்டு, பணயக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். (எஸ்பிஎஸ்) (பிபிசி) (சிஎனென்)
- பாரிஸ் நகரின் கிழக்கே யூதர்களின் அங்காடி ஒன்றில் நுழைந்த இருவர் குறைந்தது 16 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிதாரியும், 4 பணயக்கைதிகளும் கொல்லப்பட்டனர். (எரால்டுசன்) (எம்எஸ்என்) (பிபிசி)
- 2015 பாகாப் படுகொலை: போகோ அராம் தீவிரவாதிகளின் தாக்குதல்களை அடுத்து நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் அயல்நாடான சாட்டினுள் சென்றனர். கங்காலா தீவில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிக்குண்டுள்ளனர். நைஜர், சாட் அமைதிப் படையினர் அங்கிருந்து வெளியேறினர். (யூஎன்எச்சிஆர்) (பிபிசி)
- இசுலாமைக் கேலி செய்த குற்றத்திற்காக மனித உரிமைப் பதிவரான ராயிஃப் படாவி என்பவருக்கு சவூதி அரேபியா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 1000 கசையடிகளும் வழங்கியது. (பல்சு நைஜீரியா)
- சனவரி 8:
- சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் ஒருவர் காவல்துறையினரிடம் சரணடைந்தார். (சீஎனென்)
- பிலிப்பீன்சில் அபாண்டே என்ற இதழின் பெண் செய்தியாளர் ஒருவர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அரசுத்தலைவர் பெனிக்னோ அக்கீனோ III பதவியேற்ற பின்னர் இடம்பெற்ற 31வது ஊடகவியலாளர் கொலை இதுவாகும். (ராப்லர்)
- இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015: சராசரியாக 70 வீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் திணைக்களம் அறிவித்தது. (பிபிசி)(டெய்லிமிரர்)
- நைஜீரியாவின் வட-கிழக்கே பாகா நகரைத் தாக்கிய போகோ அராம் தீவிரவாதிகள் 2,000 அதிகமான நகர மக்களைக் கொன்று வீதிகளில் போட்டனர். (பிபிசி)
- இசுலாமியச் சட்டத்தின் அடிப்படையில் கிறித்துமசு பண்டிகைக் கொண்டாட்டங்கள அனைத்தையும் புரூணை தடை செய்டஹ்து. (ஐபிடி)
- சனவரி 7:
- சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு: பாரிசு நகரில் உள்ள சார்லி எப்டோ இதழின் அலுவலகம் மீது இசுலாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 10 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- சீனாவின் கூபெய் மாகாணத்தில் 2,800-ஆண்டுகள் பழமையான கல்லறை ஒன்றை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். (ஏன்சென்ட் ஒரிஜின்சு)
- இந்தோனேசியா ஏர்ஏசியா விமானம் 8501 இன் வால் பகுதியைக் கண்டுபிடித்திருப்பதாக இந்தோனேசியா அறிவித்துள்ளது. (பிபிசி)
- யெமன் தலைநகரில் காவல்துறைக் கல்வி நிலையம் ஒன்றின் முன்னால் வாகனக் குண்டு ஒன்று வெடித்ததில் 38 பேர் உயிரிழந்தனர், 50 பேர் காயமடைந்தனர். (ராய்ட்டர்சு)
- ஆந்திரப் பிரதேசத்தில் பெனுக்கொண்டா என்ற இடத்தில் அரசுப் பேருந்து ஒன்று பள்ளம் ஒன்றில் வீழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்தனர். (டிஎன்ஏ)
- பூமியைப் போன்ற தன்மைகள் கொண்ட எட்டு கோள்களை நாசாவின் கெப்லர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது. (பிபிசி)
- சனவரி 6:
- காஷ்மீரில் இந்திய, பாக்கித்தான் படையினருக்கிடையே இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர், ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்தனர். (என்டிரிவி), (பிபிசி)
- புருண்டி தலைநகர் புசும்புராவில் ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் மூவர் இராணுவ உடை அணிந்த துப்பாக்கி நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- 1995 இல் இந்தியாவின் சண்டிகரில் 18 பேர் உயிரிழந்த குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட குர்மீத் சிங் என்பவரை தாய்லாந்து காவல்துறையினர் கைது செய்தனர். (ராய்ட்டர்சு)
- ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்களுடன் இடம்பெற்ற மோதலில் 23 ஈராக்கிய இராணுவத்தினரும், சுன்னி இசுலாம் போராளிகளும் கொல்லப்பட்டனர். (தி இந்து)
- பாறை எண்ணெயின் விலை பாரல் ஒன்றுக்கு $48 ஆக விலை குறைந்தது. இது 2009 ஏப்ரலுக்குப் பின்னர் இதுவே மிகக் குறைந்த விலையாகும். (கேஜிஓ)
- ஆக்சுபோர்டு அறிவியலாளர்கள் எபோலா தடுப்பூசியை 72 தன்னார்வலர்களுக்கு அறிமுகப்படுத்தியது. (பிபிசி)
- கியூபாவும் ஐக்கிய அமெரிக்காவும் டிசம்பர் 2014 இல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கியூபா அரசியல் கைதிகள் சிலரை விடுவித்தது. (கார்டியன்)
- நாசாவின் கெப்லர் விண்கலம் உயிர் வாழத்தக்க மூன்று புதிய கோள்களைக் கண்டுபிடித்தது. (நியூஸ் லிமிட்டெட்)
- சனவரி 5:
- வங்காளதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சி ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற மோதலில் இரண்டு எதிர்க்கட்சியினர் உயிரிழந்தனர். (பிபிசி)
- சைப்பிரசைச் சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்று இசுக்கொட்லாந்து அருகே மூழ்கியதில் 8 பேர் உயிரிழந்தனர். (ஏபி)
- லிபியப் போர் விமானம் ஒன்று கிரேக்க எண்ணெய்க் கப்பல் ஒன்றைத் தாக்கியதில் இரு மாலுமிகள் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- போகோ அராம் கிளர்ச்சியாளர்கள் நைஜீரியாவின் வடகிழக்கே பல நகரங்களையும், பாகா இராணுவ முகாமையும் கைப்பற்றினர். (வால்ஸ்ட்ட்ரீட் ஜர்னல்)
- செக் தொல்லியலாளர்கள் கிமு 2300களில் வாழ்ந்த பண்டைய எகிப்திய அரசி மூன்றாம் கென்டகாவெசுவின் கல்லறையைக் கண்டுபிடித்தனர். (சீஎனென்)
- கொரியப் போரின் போது இறந்த சீன மக்கள் விடுதலை இராணுவத்தினரின் உடல்களை சீனாவுக்கு அனுப்பும் என அந்நாடு அறிவித்தது. (யொன்ஹாப்)
- சனவரி 4:
- பாக்கித்தானில் அல் காயிதாவுடன் தொடர்பு கொண்டுள்ளதாகக் கருதப்படும் எட்டு உசுபெக்குகள் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். (சேனல் 9)
- பாக்கித்தான் வான்படையினரின் தாக்குதலில் 31 தாலிபான்கள் கொல்லப்பட்டனர். (சேனல் 9)
- 20 புதிய கர்தினால்களை திருத்தந்தை பிரான்சிசு நியமித்துள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பாவிற்கு வெளியே இருந்து வந்தவர்கள் ஆவர். (ராய்ட்டர்சு)
- சனவரி 3:
- இத்தாலிக் கரைக்கப்பால் மாலுமிகளால் கைவிடப்பட்ட கப்பல் ஒன்றில் வந்த 360 குடியேறிகள் இத்தாலி வந்து சேர்ந்தனர். (பிபிசி)
- தேர்வுத் துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் குமார் சங்கக்கார அதிவிரைவான 12,000 ஓட்டங்களை எடுத்த முதல் துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையைப் பெற்றார். (பிபிசி)
- ஆத்திரேலியாவின் தெற்கு ஆஸ்திரேலியாவிலும், விக்டோரியாவிலும் கடும் காட்டுத்தீ பரவி வருகின்றது. (பிபிசி)
- சனவரி 2:
- இலங்கையின் வடக்கே தொடருந்து சேவை காங்கேசன்துறை வரை நீடிக்கப்பட்டது. (தமிழ்மிரர்)
- சோமாலி அல் சபாப் தீவிரவாதிகள் இராணுவத் தளம் ஒன்றைத் தாக்கி ஏழு இராணுவத்தினரைக் கொன்றனர். (ராய்ட்டர்சு)
- போகோ அராம் தீவிரவாதிகள் கமரூனில் பேருந்து ஒன்றைத் தாக்கி 11 பேரைக் கொன்றனர். (சீஎனென்)
- சனவரி 1:
- சீனாவின் சங்காய் நகரில் இடம்பெற்ற புத்தாண்டுக் களியாட்ட விழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- யெமன் இப் நகரில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)(ஏஎஃப்பி)
- பலத்தீன் நாடு அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்து செயலாற்ற ஒப்பந்தம் செய்தது. (வால்ஸ்ட்ரீட் ஜர்னல்)
- லித்துவேனியா யூரோ நாணயத்தை தனது அதிகாரபூர்வ நாணயமாக ஏற்று, யூரோ வலயத்தின் 19வது உறுப்பு நாடாக இணைந்தது. (சீஎனென்)
- உருசியா, கசக்ஸ்தான், பெலருஸ், ஆர்மீனியா ஆகிய நாடுகளுக்கிடையேயான யூரேசிய பொருளாதார ஒன்றியம் நடைமுறைக்கு வந்தது. (நொவினைட்)
- செவ்வாயில் 10-ஆண்டுகளுக்கும் மேலாக உளவும் ஆப்பர்சூனிட்டி தளவுளவி ஞாபக ஆற்றலை இழந்துவருவதாக நாசா அறிவித்துள்ளது. (பிபிசி)
இறப்புகள்
தொகு- சனவரி 19 - ரஜ்னி கோத்தாரி, அரசியல் அறிஞர் (பி. 1928)
- சனவரி 23 - அப்துல்ல்லா, சவூதி அரேபிய மன்னர் (பி. 1924)
- சனவரி 24 - வி. எஸ். ராகவன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1925)
- சனவரி 26 - ஆர். கே. லட்சுமண், கேலிச் சித்திர ஓவியர் (பி. 1921)
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்