சென்னையின் வரலாற்று காலவரிசை
சென்னையின் வரலாற்று காலவரிசை (Timeline of Chennai history) சென்னையின் வரலாற்று நிகழ்வுகளை காட்டும் கால வரிசை:
முன் வரலாறு
தொகு- பல்லாவரம் மலைப்பகுதிகளில் பொ.ஊ.மு. 2,50,000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்புக் கால குடியிருப்புகள் செழித்திருந்தது.
- பொ.ஊ.மு. 1000 : குன்றத்தூர் பகுதிகளில் பெருங்கற்கால குடியிருப்புகள்.
பொது ஊழிக்கு முன்
தொகு- பொ.ஊ.மு. 300 - பொ.ஊ. 300: சங்க காலம்
- பொ.ஊ.மு. 31: திருவள்ளுவர் காலமாக இறுதியாக மதிப்பிடப்பட்டுள்ளது. வள்ளுவரை சென்னையின் மைலாப்பூருடன் தொடர்புறுத்தப்படுகிறது.
பொது ஊழியின் முதல் ஆயிரமாண்டுகள்
தொகு- பொ.ஊ. 52 – 70: பன்னிரு தூதர்களில் ஒருவரான செயிண்ட் தாமஸ் சமயப் பிரசாரத்திற்கு வந்தார். தற்போது புனித தோமையார் மலை என அழைக்கப்படுமிடத்தில் கொல்லப்பட்டார்.[1][2][3]
- பொ.ஊ. 6ஆம் நூற்றாண்டு : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் கட்டப்பட்டது.
- பொ.ஊ. 7ஆம் நூற்றாண்டு : திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில், மாமல்லபுரம் பகீரத தபசு புடைப்புச் சிற்பம், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில், திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில் ஆகியவை கட்டப்பட்டன.
- பொ.ஊ. 806 : திருவல்லிக்கேணி பார்ததசாரதி கோயிலில், பல்லவ மன்னர் தந்திவர்மன் காலத்திய தமிழ்-சமசுகிருத மொழி கல்வெட்டு கிடைத்துள்ளது.
- பொ.ஊ. 820 : திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் கட்டப்பட்டது.
- பொ.ஊ. 957–970 : மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில் கட்டப்பட்டது.
- பொ.ஊ. 900–1200 : சென்னை, சோழப் பேரரசின் பகுதியானது.
- பொ.ஊ. 10ஆம் நூற்றாண்டு : திருப்போரூர் கந்தசாமி கோயில் கட்டப்பட்டது.
11ஆம் நூற்றாண்டு
தொகு- திரிசூலநாதர் கோயில், திருவலிதாயம் திருவல்லீசுவரர் கோயில், வேள்வீசுவரர் கோயில் ஆகியவை கட்டப்பட்டன.
12ஆம் நூற்றாண்டு
தொகு- மயிலை காரணீசுவரர் கோயில், குன்றத்தூர் முருகன் கோயில், குறுங்காலீசுவரர் கோயில் ஆகியவை கட்டப்பட்டன.
13ஆம் நூற்றாண்டு
தொகு- 1241: குன்றத்தூர் கந்தாலீசுவரர் கோயில் கட்டப்பட்டது.
16ஆம் நூற்றாண்டு
தொகு- 16ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் அல்லது அதற்கு முன்: மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் பழைய கோயிலின் மீது புதுப்பித்துக் கட்டப்பட்டது.
- 1516: சென்னையின் முதல் கிறித்தவ தேவாலயமான பிரகாச மாதா ஆலயம் கட்டப்பட்டது.
- 1522: போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனியினர் மைலாப்பூரைச் கைப்பற்றி மைலாப்பூர் சாந்தோம் எனும் பெயரில் குடியிருப்புகள் கட்டினர்.
- 1523: போர்த்துகேயர்கள் புனித தாமசை பெருமைப்படுத்த, சாந்தோம் தேவாலயத்தை நிறுவினர்.
17ஆம் நூற்றாண்டில்
தொகு- 1612: வட சென்னையின் பழவேற்காடு பகுதியில் டச்சு கிழக்கிந்திய கம்பெனியினர் வணிக மையத்தை நிறுவினர்.
- 1626: பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியினர் பழவேற்காட்டிற்கு வடக்கே 35 மைல் தொலைவில் கிழக்கு கடற்கரை கிராமத்தில் தொழிற்சாலைகளை நிறுவினர்.
- 1637: பிரான்சிஸ் டே எனும் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் புதிய குடியிருப்புகளை நிறுவ புறப்பட்டார்.
- 1639: 22 ஆகஸ்டு அன்று, பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியினர், காளாத்தி நாயக்க மன்னர் தமர்லா வெங்கடாத்திரி நாயக்கரிடமிருந்து, சென்னை கடற்கரையை ஒட்டி மூன்று மைல் நீளம் கொண்ட பகுதியை விலைக்கு வாங்கி, சென்னையில் தங்கள் வணிக மையத்தை நிறுவினர்.[4] புனித ஜார்ஜ் கோட்டை நிறுவ அடிக்கல் நாட்டப்பட்டது. சென்னையில் போர்த்துகேயர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் பிரித்தானியர்களின் மக்கள்தொகை 10,000 ஆக உயர்ந்தது. உள்ளூர் மக்களின் தொகை குறைந்தது.
- 1640: புனித ஜார்ஜ் கோட்டை 23 ஏப்ரல் 1640ல் கட்டி முடிக்கப்பட்டது.
- 1646: சென்னை நகர மக்கள்தொகை 19,000 ஆக பதிவானது.அ[5]
- 1664: புனித ஜார்ஜ் கோட்டையில் முதல் மருத்துவ மனை, 16 நவம்பரில் திறக்கப்பட்டது. 1668: திருவல்லிக்கேணி பகுதி சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்டது.
- 1669: மக்களதொகை 40,000 ஆக உயர்ந்தது.[5]
- 1678: புனித ஜார்ஜ் கோட்டையின் தென்பகுதியில் புனித மேரி தேவாலயம் கட்ட அடிக்கல் நடப்பட்டது. தம்புச் செட்டித் தெருவில் காளிகாம்பாள் கோயில் கட்டப்பட்டது.[6]
- 1679: புனித மேரி தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டது. 1688:சென்னை மாநகராட்சி துவக்கப்பட்டது.
- 1693: எழும்பூர் மற்றும் புரசைவாக்கம் பகுதிகள் சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்டது.[6]
18ஆம் நூற்றாண்டு
தொகு- 1701: முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் படைத்தலைவர் தௌலத் கான் புனித ஜார்ஜ் கோட்டையை தாக்குதல். இருப்பினும் பிரித்தானியர்கள் கோட்டையை தற்காத்துக் கொண்டனர்.[7]
- 1708: திருவெற்றியூர், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, கொட்டிவாக்கம் மற்றும் சாத்தன்காடு ஆகிய ஐந்து கிராமங்கள் சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்டது. ஜார்ஜ் டவுனைச் சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்டது.
- 1711: முதல் அச்சகம் நிறுவப்பட்டது.
- 1751: கிழக்கிந்திய கம்பெனிப் படைகள் தண்டையார் பேட்டையை கைப்பற்றினர்.[7]
- 1721: நவம்பர் 13 14 நாட்களில் சென்னையைப் பெரும் புயல் தாக்கியது.
- 1726: 300 அடி உயர புனித தோமையார் மலைக்குச் செல்ல 134 படிக்கட்டுகள் கட்டப்பட்டது.[7]
- 1735:சிந்தாதிரிப்பேட்டை குடியிருப்புப் பகுதி நிறுவப்பட்டது.
- 1742:வேப்பேரி, பெரியமேடு, பெரம்பூர் மற்றும் புதூர்பாக்கம் பகுதிகள் சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்டது.
- 1744: கர்நாடகப் போர்களுக்கு தலைமை தாங்கிய இராபர்ட் கிளைவ், புனித ஜார்ஜ் கோட்டையில் கிழக்கிந்திய கம்பெனி எழுத்தராக பணியில் சேர்ந்தார்.[7]
- 1746: பிரான்சு கடற்படை அதிகாரி பெட்ராண்ட் பிரான்காய்ஸ் சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றினார்.[7]
- 1749: ஆக்ஸ்-லா-சாப்பெல்லா ஒப்பந்தப்படி, சென்னையை மீண்டும் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டது.[7] சாந்தோம் மற்றும் மைலாப்பூர் பகுதிகள் சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்டது
- 1758: பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி படைத்தலைவர் சென்னையை முற்றுகையிட்டார்.
- 1759: சென்னை முற்றுகை முடிவுற்றது.
- 1760:ஜார்ஜ்டவுன் பகுதிகள் சீரமைக்கப்பட்டது.[8]
- 1767: ஐதர் அலி சென்னை முற்றுகையிட்டார்.
- 1768:ஆற்காடு நவாப் சேப்பாக்கத்தில், கலச மஹால் கட்டினார்.
- 1769: இரண்டாம் முறையாக ஐதர் அலி சென்னைய முற்றுகையிட்டார்
- 1772: புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்ட மருத்துவமனை, இராயப்பேட்டை பகுதிக்கு மாற்றப்பட்டது.[6] ஏழு குளங்கள் நிறுவி, சென்னை நகரத்திற்கு குடிநீர் வழங்கப்பட்டது.[8]
- 1777: வீரப்பப் பிள்ளை புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தவாலாக நியமிக்கப்பட்டார்.
- 1783:புனித ஜார்ஜ் கோட்டை செப்பனிடப்பட்டது.
- 1784: சென்னையின் முதல் செய்தித்தாள் மெட்ராஸ் கூரியர் நிறுவப்பட்டது.
- 1785: முதல் அஞ்சலகம் துவக்கப்பட்டது.
- 1786: வில்லியர் பெர்ட்ரி என்பவர் தனியார் வானிலை ஆய்வு மையத்தை நிறுவினார்.[9]
- 1788: தாமஸ் பாரி என்பவர் சென்னை பாரிமுனை பகுதியில் வணிக மையத்தை நிறுவினார்.[8] 1792:பிரித்தானிய கம்பெனியினர் வானிலை மையத்தை நிறுவினர். பின்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் எனப் பெயராயிற்று.[9]
- 1794: கிண்டியில் நில அளவை பயிற்சிப் பள்ளியை நிறுவினர். பின்னர் இவ்வளாகம் அண்ணா பல்கலைக்கழகம் ஆயிற்று.[8] ஐக்கிய அமெரிக்காவின் வணிகர் வில்லியம் அப்பேட் சென்னை அமெரிக்கா தூதரகத்தின் முதல் தூதராக நியமிக்கப்பட்டார்.[10]
- 1795: திருவல்லிக்கேணியில் வாலாஜா மசூதி கட்டப்பட்டது.[8]
- 1798:16 குடியிருப்புகள் கொண்ட புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் 69 சதுர கிலோ மீட்டர் பரப்பிற்கு சென்னை நகரம் விரிவானது.[5]
19ஆம் நூற்றாண்டு
தொகு- 1817: சென்னை இலக்கியச் சங்கம் நிறுவப்பட்டது. 1819: சென்னை அரசு கண் மருத்துவ மனை நிறுவப்பட்டது.
- 1826: பொது அறிவுறுத்தல் வாரியம் அமைக்கப்பட்டது. (Board of Public Instructions) 1831: முதல் வணிக வங்கியான சென்னை வங்கி அமைக்கப்பட்டது. முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது (சென்னை மக்கள்தொகை:39,785).
- 1832 சென்னை கிளப் நிறுவப்பட்டது.
- 1834: கிண்டியில் முதல் நிலஅளவைப் பள்ளி துவக்கப்பட்டது. பின்னர் இப்பள்ளி கிண்டி பொறியியல் கல்லூரியாக மாறியது.
- 1835: முதல் மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டது. பின்னர் இக்கல்லூரி சென்னை கிறித்துவக் கல்லூரியாக மாறியது.
- 1840: கேப்டன் எஸ். ஒ. இ. லுட்லோவ் என்பவர் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வானிலை குறிப்புகளை ஆவணப்படுத்தினார்.[9]
- 1841: ஐஸ் ஹவுஸ் கட்டப்பட்டது. அமெரிக்காவிலிருந்து கப்பலில் கொண்டு வரப்பட்ட பனிக்கட்டிகளை இங்கு இறக்கிவைக்கப்படது.
- 1842: முதல் கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. ஆங்கிலேயர்களுக்காக கட்டப்பட்ட முதல் பொது மருத்துவமனை, இந்தியர்களுக்கும் திறந்துவிடப்பட்டது.[6] 1844: ஹிக்கின்பாதம்ஸ் நூல் விற்பனை நிலையம் திறக்கப்பட்டது.
- 1846: பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளி நிறுவப்பட்டது. பின்னர் இது பச்சையப்பன் கல்லூரியாக மாற்றப்பட்டது.
- 1851 எழும்பூரில் அரசு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.
- 1853: முதல் உயரியல் பூங்கா உயரியல் பூங்கா நிறுவப்பட்டது.
- 1854: முதலில் இம்பீரியல் விடுதியும், பின்னர் தாஜ் கன்னிமரா விடுதியும் துவங்கப்பட்டது.[11]
- 1855: பல்கலைக்கழக வாரியம் அமைக்கப்பட்டது.
- 1856: இராயபுரத்திற்கும் - ஆற்காட்டிற்கிடையே முதல் இருப்புப் பாதை அமைக்கப்பட்டது.
- 1857: சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
- 1862: சென்னை துறைமுகத்தில் முதல் கப்பல் தளம் நிறுவப்பட்டது.[5]
- 1864–[[1865]: மாநிலக் கல்லூரி கட்டப்பட்டது.
- 1868: பாதுகாக்கப்பட்ட குடிநீர் [வழங்கல் முயற்சி துவக்கப்பட்டது. சென்னை துறைமுகத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது.[5]
- 1873:குழந்தைகள் பிறப்பு பதிவு செய்யும் முறை துவங்கியது. மெட்ராஸ் மெயில் எனும் ஆங்கிலச் செய்தித்தாள் நிறுவனம் துவக்கப்பட்டது. காஸ்மாபாலிட்டன் கிளப் நிறுவப்பட்டது.
- 1874: பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு கட்டிடம் கட்டப்பட்டது.
- 1875: சென்னை வானிலை மையம் அன்றாட வானிலை அறிக்கை வெளியிட்டது.[9]
- 1876–1878:சென்னை மாகாணப் பெரும் பஞ்சம், நகர மக்களை வாட்டி வதைத்ததது. வேளாண்மை மற்றும் குடிநீர் தேவைக்கு பக்கிங்காம் கால்வாய் அமைக்கப்பட்டது.
- 1878: தி இந்து ஆங்கிலச் செய்தி நாளிதழ் வெளியிடப்பட்டது.
- 1882: முதலாவது தொலைபேசி இணைப்பு வழங்கப்பட்டது.
- 1885: மெரீனா கடற்கரை ஒட்டி சாலை அமைக்கப்பட்டது.
- 1886: இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மாநாடு சென்னையில் நடைபெற்றது. கன்னிமாரா பொது நூலகம் நூலகம் அமைக்கப்பட்டது.
- 1889: சென்னை உயர் நீதிமன்றக் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
- 1891:சென்னைச் சட்டக் கல்லூரி நிறுவப்பட்டது.
- 1893: சாந்தோம் தேவாலயம் இடித்துக் கட்டப்பட்டது.[12]
- 1894: முதல் கார் விற்பனை செய்யப்பட்டது.
- 1895: சாலைகளின் நடுவில் டிராம் வண்டி இயக்கப்பட்டது.
- 1899:முதல் தமிழ் நாளிதழ் சுதேசமித்திரன் வெளியிடப்பட்டது.
20ஆம் நூற்றாண்டு
தொகு- 1901: சென்னை நகரம் 70 சதுர கிலோ மீட்டர் பரப்பும்; 5,40,000 மக்கள்தொகையும் கொண்டிருந்தது.[5] 1905: சென்னை துறைமுக அறக்கட்டளை அமைக்கப்பட்டது.
- 1906: இந்தியன் வங்கி நிறுவப்பட்டது. தடுப்பு ஊசி மருந்துகள் தயாரிக்கும் கிங் நிறுவனம், கிண்டியில் அமைக்கப்பட்டது.
- 1910: பார்சி மக்கள் இராயபுரத்தில் தீ கோவில் கட்டினர்.[13]
- 1911: அரசு இராயப்பேட்டை மருத்துவமனை நிறுவப்பட்டது.
- 1914: குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புகள் நிறுவப்பட்டது. தெரு விளக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டது. கீழ்பாக்கம் குடிநீர் பணிகள் துவக்கப்பட்டது. முதலாம் உலகப் போரின் போது ஜெர்மானிய போர்க்கப்பல் எம்டன், சென்னை மீது குண்டு வீசி தாக்கியது.
- 1917: சிம்சன் நிறுவனத்தினர் முதல் வானூர்தியை சோதனை முறையில் பறக்கவிட்டது.
- 1923: சென்னை நகரம் 80 கிமீ பரப்பளவிற்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.[5]
- 1924: இந்திய மருத்துவப்பள்ளி அமைக்கப்பட்டது.
- 1925: இலயோலாக் கல்லூரி நிறுவப்பட்டது. முதல் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்பட்டது.
- 1928: அரசு காசநோய் மருத்துவமனை துவக்கப்பட்டது.
- 1930:ரிப்பன் கட்டிட வளாகத்தில் வானொலி ஒலிபரப்பு நிலையம் துவக்கப்பட்டது.
- 1931: சென்னைக் கடற்கரை - தாம்பரத்திற்கிடையே சென்னை புறநகர் இருப்புவழிகள் அமைக்கப்பட்டது.
- 1934: மு. அ. முத்தையா செட்டியார் சென்னை நகர மேயராக நியமனம் செய்யப்பட்டார்.
- 1938: அனைத்திந்திய வானொலி நிலையம் அமைக்கப்பட்டது. இசுடான்லி மருத்துவக் கல்லூரி நிறுவப்பாட்டது.
- 1942: இரண்டாம் உலகப் போரின் போது சென்னையை விட்டு மக்கள் வெளியேறினர்.
- 1943: ஜப்பானிய போர் விமானங்கள் சென்னை மீது குண்டு வீசித் தாக்கியது. சென்னை மக்கள்தொகை பத்து இலட்சத்தைத் தாண்டியது.[5]
- 1945: சென்னை வானிலை ஆய்வு மையம் நிறுவப்பட்டது.[9]
- 1946: சைதாப்பேட்டை நகராட்சியில் இருந்த மாம்பழம், சைதாப்பேட்டை, கிண்டி, புலியூர், கோடம்பாக்கம், சாலிக்கிராமம், அடையாறு மற்றும் ஆலந்தூர் பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. பின்னர் அமைந்தகரை, செம்பியம், அயனாவரம், வேளச்சேரி சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
- 1947: புனித ஜார்ஜ் கோட்டையில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. சென்னை மாகாணத்தின் தலைநகராக சென்னை நகரம் அறிவிக்கப்பட்டது.
- 1950: சென்னை நகரத்தின் பரப்பளவு 129 சதுர கிலோ மீட்டருக்கு விரிவுபடுத்தப்பட்டது.[5]
- 1952: ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் கட்டப்பட்டது. இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை பணியைத் துவக்கியது.
- 1953: அரசு பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை நிறுவப்பட்டது.
- 1954: அடையாறு புற்றுநோய் மையம் அமைக்கப்பட்டது.
- 1956: காந்தி மண்டபம் கட்டப்பட்டது.
- 1957: இலங்கை தனது துணைத் தூதரகத்தை நிறுவியது.[14]
- 1959: கிண்டி சிறுவர் பூங்கா நிறுவப்பட்டது. தற்போது அதனை கிண்டி தேசியப் பூங்காவாக விரிவுபடுததப்பட்டது. எல். ஐ. சி. கட்டிடம் கட்டப்பட்டது.
- 1960: கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி தனது பணியைத் துவக்கியது.
- 1961: மலேசியா தனது துணைத்தூதரகத்தை திறந்தது.[15]
- 1965:ஆவடியில் கன ஊர்தி தொழிற்சாலை நிறுவப்பட்டது.
- 1966: ஜப்பான் தனது துணைத்தூதரகத்தை திறந்தது.[16]
- 1967: சர் இவான் ஸ்டெட்போர்டு மருத்துவமனை நிறுவப்பட்டது.
- 1968: இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப்பெயர் சூட்டப்பட்டது.
- 1971: கிண்டி பாம்புப் பூங்கா துவக்கப்பட்டது.
- 1972: சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அமைக்கப்பட்டது.
- 1973: சென்னை மாநகராட்சி மன்றக் குழு கலைக்கப்பட்டது.
- 1974:கிண்டியில் இராஜாஜி மண்டபம் கட்டப்படடது. இந்திய அரசின் சென்னை தொலைக்காட்சி மையம் அமைக்கப்பட்டது. தாஜ் கோரமண்டல் விடுதி (14 ஏப்ரல்) கட்டப்பட்டது. தாஜ் குழுமத்தின் இரண்டாவது ஃபிஷர்மேன்ஸ் கோவ் விடுதி கட்டப்பட்டது.
- 1975: கிண்டியில் காமராசர் மண்டபம் கட்டப்பட்டது. வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது. ஐடிசி கிரான்ட் சோழா ஹோட்டல் (18 அக்டோபர்) கட்டப்பட்டது.
- 1976: தற்போதைய கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது.
- 1977: சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் அமைக்கப்பட்டது. கானகம், தரமணி, திருவான்மியூர், வேளச்சேரி, கோயம்பேடு, திருமங்கலம், வில்லிவாக்கம், எருக்கஞ்சேரி, கொளத்தூர், கொடுங்கையூர் ஊரகப் பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
- 1978: சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை (6 செப்டம்பர்) நிறுவப்பட்டது.
- 1981: அடையார் கேட் ஹோட்டல் கட்டப்பட்டது.
- 1982: இந்து மிசன் மருத்துவமனை (5 டிசம்பர்) கட்டப்பட்டது.
- 1983: அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா, வண்டலூருக்கு மாற்றப்பட்டது. தனியார்துறையில் அப்போலோ மருத்துவமனை நிறுவனம் (செப்டம்பர், 11) திறக்கப்பட்டது.
- 1985: ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனை (11 செப்டம்பர்) திறக்கப்பட்டது.
- 1987: சிங்கப்பூர் தனது துணை தூரதகத்தை திறந்தது.[17] மெட்ராஸ் மிசன் மருத்துவமனை நிறுவப்பட்டது.
- 1988: பிர்லா கோளரங்கம் கட்டப்பட்டது. சென்னை மாநகராட்சி தனது முந்நுற்றாண்டு நிறைவுவிழாவைக் கொண்டாடியது. சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களை அமைத்து அதிகாரப் பரவல் செய்தது. நகரத்தில் பத்து சதுக்கங்கள் அமைக்கப்பட்டது.
- 1990: அண்னாநகரில் சுந்தரம் மருத்துவமனை அறக்கட்டளை நிறுவப்பட்டது.
- 1995: ஆஸ்திரேலிய தனது துணை தூதரகத்தை நிறுவியது.[18] 1996:மெட்ராஸ் நகரத்தின் பெயர் சென்னை என மாற்றப்பட்டது. 1998: கட்டிடத்தின் உச்சபட்ச உயரம் 40 மீட்டரிலிருந்து 60 மீட்டராக உயர்த்தப்பட்டது. 1999: மியாட் மருத்துவமனை நிறுவபப்ட்டது.
21ஆம் நூற்றாண்டு
தொகு- 2004: 26 டிசம்பரில் ஆழிப்பேரலையால் சென்னை நகரக் கடற்கரைப் பகுதிகள் பலத்த சேதமடைந்தது.[19]
- 2005: தாய்லாந்து தனது துணைத்தூதரகத்தை திறந்தது.[20]
- 2011: சென்னை நகர்புறத்தின் ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள் மற்றும் 25 ஊராட்சிகளை, சென்னை மாநகராட்சி]]யுடன் இணைக்கப்பட்டதால், சென்னை மாநகரத்தின் பரப்பளவு 174 சதுர கிலோ மீட்டரிலிருந்து 426 சதுர கிலோ மீட்டராக உயர்ந்தது.
- 2015: சென்னை மெட்ரோ இரயில் சேவைப் பணிகள் துவங்கியது.
- சென்னை மழை வெள்ளப் பெருக்கால், நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தனர். பல பில்லியன் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையாத் சொத்துக்கள் சேதமுற்றது.
- 2020: தமிழ்நாட்டின் முதல் கொரோனாவைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது (7 மார்சு)
- 2021: உலக வர்த்தக மையம் செயல்படத் துவங்குகிறது. (செப்டம்பர்)[21][22]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ The Encyclopedia of Christianity, Volume 5 by Erwin Fahlbusch. Wm. B. Eerdmans Publishing – 2008, Page 285. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8028-2417-2.
- ↑ A. E. Medlycott, (1905) "India and the Apostle Thomas"; Gorgias Press LLC; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59333-180-0.
- ↑ Thomas Puthiakunnel, (1973) "Jewish colonies of India paved the way for St. Thomas", The Saint Thomas Christian Encyclopedia of India, ed. George Menachery, Vol. II.
- ↑ S. Muthiah (21 August 2006). "Founders' Day, Madras". Hindu Times. Archived from the original on 27 பிப்ரவரி 2007. பார்க்கப்பட்ட நாள் 28 Jan 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 5.8 "Structure of Chennai" (PDF). Chapter 1. CMDA. Archived from the original (PDF) on 26 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 24 Feb 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ 6.0 6.1 6.2 6.3 "1639 a.d. to 1700 a.d." History of Chennai. ChennaiBest.com. Archived from the original on 9 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 20 Jan 2013.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 "1701 A.D. to 1750 A.D." History of Chennai. ChennaiBest.com. Archived from the original on 6 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 20 Jan 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ 8.0 8.1 8.2 8.3 8.4 "1751 A.D. to 1800 A.D." History of Chennai. ChennaiBest.com. Archived from the original on 6 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 20 Jan 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ 9.0 9.1 9.2 9.3 9.4 "History of Old Madras Observatory". Archived from the original on 13 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 16 Oct 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ "History". US Consulate Chennai. Archived from the original on 13 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 15 Jan 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Haripriya, V. (25 August 2008). "Tracing its roots". Ergo 360° இம் மூலத்தில் இருந்து 8 மார்ச் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120308033209/http://www.goergo.in/?p=2212. பார்த்த நாள்: 3 Dec 2011.
- ↑ "A day in Chennai". Chennai Magic. Archived from the original on July 8, 2013. பார்க்கப்பட்ட நாள் 30 Sep 2012.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Muthiah, S. (4 July 2010). "Madras Miscellany: The century-old Parsi temple". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/features/metroplus/madras-miscellany-the-centuryold-parsi-temple/article499975.ece. பார்த்த நாள்: 27 Apr 2014.
- ↑ "About Us". Sri Lanka Deputy High Commission in Southern India. Archived from the original on 11 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 12 Feb 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ "Corporate Information—History". Ministry of Foreign Affairs, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 5 Feb 2012.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ "Greetings from the Consul-General, Mr. Kazuo Minagawa". Consulate-General of Japan in Chennai. பார்க்கப்பட்ட நாள் 1 Mar 2012.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ "History of Singapore Immigration". Immigration & Checkpoints Authority, Government of Singapore. பார்க்கப்பட்ட நாள் 5 May 2012.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ "Australian Minister for Trade opens Australian Consulate-General in Chennai". UTSAV Australia: Australian Trade Commission—India. 26 February 2007. Archived from the original on 12 ஜூலை 2021. பார்க்கப்பட்ட நாள் 19 Jul 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ "Asia's Deadly Waves". The New York Times (The New York Times). https://www.nytimes.com/packages/khtml/2004/12/26/international/20041227_QUAKE_FEATURE.html. பார்த்த நாள்: 26 Oct 2011.
- ↑ "60 Years of Friendship, Thailand–India" (PDF). Archived from the original (PDF) on 16 பிப்ரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 14 Feb 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ "SaaS company Kissflow Inc moves into WTC Chennai". Business Line (Chennai: Kasturi & Sons). 6 September 2021. https://www.thehindubusinessline.com/info-tech/saas-company-kissflow-inc-moves-into-wtc-chennai/article36321004.ece.
- ↑ Hariharan, Sindhu (18 October 2021). "Your office wants you back: Corporate Tamil Nadu is reopening doors to employees". The Times of India (Chennai: The Times Group). https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadu-your-office-wants-you-back/articleshow/87098949.cms.
- "History". ChennaiBest.com. Archived from the original on 9 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 19 Sep 2012.
- "Chennai Historical Timeline". ExploCity. Archived from the original on 22 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 19 Sep 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- Chennai District Profile பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம்