விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2013

இதை தொகுப்பவர்கள் [[சனவரி 2]], [[2013]] என்று தருவதற்கு பதிலாக [[விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சனவரி 2, 2013|ஜனவரி 2, 2013]] என்று தாருங்கள். அடுத்து வரும் குறுந்தட்டு திட்டங்களுக்கு இது உதவும்.

ஒரு மாதம் முடிந்தவுடன் முடிந்த மாதத்திற்கான தகவல்கள் இங்கு சேர்க்கப்படும்

 
 
  • விரைந்து ஊரும் தரைவாழ் நச்சுப் பாம்பினமான மாம்பா, பெரும்பாலும் மரத்தில் வாழும். பகலில் சுறுசுறுப்பாக இருக்கும்; இரவில் ஓய்வெடுக்கும்.
 
  • சிறுநீர் பெய்யும் சிறுவன் என்பது பெல்சிய நாட்டின் பிரசல்சு நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலை. ஆடையில்லாத நிலையில் சிறுவன் ஒருவன் சிறுநீர் கழிப்பது போன்ற ஒரு நீரூற்றினைக் கொண்ட சிறிய வெண்கலச் சிலை இது.
  • முதல் எரித மின்னஞ்சல் ஆர்பாநெட் எனும் கணினி வலைப்பின்னலில் அனுப்பப்பட்டது. மே 3ஆம் நாள் 1978 ஆம் ஆண்டில், கேரி துர்க் என்ற ஒருவர் தனது புதிய கணினிகளைப் பற்றி விளம்பரம் செய்வதற்காக, 393 நபர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.
 
  • தன்னுடல் தாக்குமை என்பது தனது உடலிலுள்ள சொந்த உயிரணுக்களையும், இழையங்களையும் தவறுதலாக வெளிக்காரணிகளாக அடையாளப்படுத்தி, நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்பாட்டை இயக்குவதால் தனது சொந்த உயிரணுக்கள், இழையங்களையே தாக்க முற்படல் ஆகும்.
  • சோவியத் ஒன்றியத்தினால் அனுப்பப்பட்ட ஸ்புட்னிக் 5 விண்கலமே விலங்குகளை விண்வெளிக்கு ஏற்றிச் சென்று மீண்டும் அவற்றைப் பாதுகாப்பாகத் திருப்பிக் கொண்டுவந்த முதல் விண் ஓடம் ஆகும்.
 
  • கணிமி (Plasmid) என்பது இவை பொதுவாக வட்ட வளைய வடிவமுடன் ஈரிழை கொண்டவையாக இருக்கும் ஒரு கூடுதலான நிறப்புரி ஆகும். இவை தாம் சார்ந்துள்ள உயிரினத்தின் நிறப்புரியைச் சாரமால் தன்னிச்சையாக பல்கிப் பெருகும் தன்மையை உடையவை.
 
 
  • தூக்க விறைப்பு அல்லது இரவுத் தூக்க ஆண்குறி விறைப்பு என்பது ஆண்கள் உறங்கும் வேளையில் இயல்பாகவே ஏற்படும் ஆண்குறி விறைப்பு ஆகும். உடலியக்க விறைப்புக் கோளாறு இல்லாத எல்லா ஆண்களுக்கும் பொதுவாக இரவில் இரண்டு அல்லது மூன்று முறை இது நேரும்.
 
 
  • ஹிக்கின்பாதம்ஸ் (படம்) என்பது ஏபெல் யோசுவா இக்கின்பாதம்சு என்ற ஆங்கிலேய நூலகரால் 1844 இல் நிறுவப்பட்ட இந்தியாவிலேயே மிகப் பழைமையான புத்தக நிலையம் ஆகும்.
  • பழுப்புக் கொழுப்பு திசுக்கள் பிறந்த குழந்தைகளிலும், குளிர்காலத் தூக்கம் மேற்கொள்ளும் விலங்குகளிலும் வெப்ப உற்பத்தியை செய்யும் திசுக்கள் ஆகும்.
  • உலகில் யூத மதத்தினை பின்பற்றுவோரின் சனத்தொகை 13.4 மில்லியன் அல்லது உலக சனத்தொகையில் ஏறக்குறைய 0.2% ஆகும். கிட்டத்தட்ட 42% யூதர் இசுரேலிலும், 42% யூதர் மக்கள் ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும், எஞ்சியோரில் பலர் ஐரோப்பாவிலும் வாழ்கின்றனர்.
 
  • மக்கா (படம்) சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் வரலாற்றுப் பழைமை வாய்ந்த ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ள இசுலாமியர்களது புனித நகரமாகும். வரலாற்றில் இந்நகரம் பெக்கா எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
  • முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளைக் கொண்டதே முருங்கை மரம் ஆகும்.
  • ஒரு பொருளின் வெண் எகிர்சிதறல் அல்லது எதிரொளித் திறன் என்பது அதன் ஒளி பிரதிபலிப்புத் தன்மையாகும். இஃது உள்வரு மின்காந்த கதிர்வீச்சு மற்றும் அதனினின்று பிரதிபலிக்கப்பட்ட கதிர்வீச்சின் விகிதம் எனக்கொள்ளப்படும்.
 
 
 
 
 
 
 
  • கருங்கடல் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல் ஆகும். இது நடுநிலக் கடலூடாக அத்திலாந்திக் பெருங்கடலுடன் தொடர்பு உடையது.
  • திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரை 200க்கும் மேற்பட்ட பதிப்புகளாகப் பல வடிவங்களில், முப்பதுக்கும் அதிகமான பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.
  • பிபிசி என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் மிகப் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும்.
  • கோட்பாடு என்பது ஆழ்ந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதும், அறிவு சார்ந்ததுமான ஒரு பொதுமைப்படுத்தும் சிந்தனையை அல்லது அச்சிந்தனையின் பெறுபேறுகளைக் குறிக்கும்.
  • நடிகர் சிவாஜி கணேசன் 1962ல் அமெரிக்காவின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ஒரு நாள் நகரத்தந்தையாகச் சிறப்பிக்கப்பட்டார்.
 
 
 
  • காரைக்கால் அம்மையார் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.
  • சிவபெருமான் பிநாகம் எனும் வில்லாயுதத்தினை கொண்டிருப்பதால் பிநாகபாணி என்று அறியப்பெறுகிறார்.
 
 
  • 1946 இல் முடிசூடிய ஒன்பதாம் இராமா மன்னர் உலகில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் ஒரு நாட்டுத்தலைவரும், தாய்லாந்து வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் மன்னரும் ஆவார்.
  • ஒரே மூலக்கூற்றுச் சூத்திரத்தையும் வேறுபட்ட கட்டமைப்புச் சூத்திரங்களையும் கொண்ட இரசாயனச் சேர்வைகள் சமபகுதியங்கள் எனப்படும்.
  • நர்கிசை (படம்) கௌரவிக்கும் பொருட்டு இந்திய அரசாங்கம் "சிறந்த ஒருமைப்பாட்டிற்கான" தேசிய திரைப்பட விருதினை அவர் பெயரில் வழங்கி வருகிறது.
 
  • சிங்கத்தை காட்டுக்கு அரசன் எனக் கூறினாலும் புலியே சிங்கத்தை விட வலிமை வாய்ந்தது. புலியால் ஒரே அடியில் சிங்கத்தை கொன்று விட முடியும்.
 
  • லட்சியா(படம்) என்பது இந்திய பாதுகாப்பாய்வு மற்றும் மேம்பாட்டமைப்பால் உருவாக்கப்பட்ட ஆளிலாத, தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு போரிடு விமானமாகும்.
 
  • 5 அடி உயரமுள்ள சாரசு கொக்கு, (படம்) வாழ்நாள் முழுவதும் ஒரே இணையுடனே வாழ்கின்றன. இவ்வகையான கொக்குகள் ஆண், பெண் என இருபறவைகளுமே முட்டைகளை அடைகாக்கும்.
  • வாரத்திற்கு 7 நாட்கள், ஒரு நாளைக்கு 12 இரட்டை மணிநேரங்கள், ஒவ்வோரு இரட்டை மணி நேரத்துக்கும் 120 நிமிடங்கள் என்று உலகத்துக்கு அறிவித்தவர்கள் சாலடியர்களே.
 
  • யோவான் 3:16 என்பது விவிலியத்தில் மிகவும் அதிகமாகக் கையாளப்படும், மிகவும் புகழ்பெற்ற வசனமாகும். இது கிறித்தவத்தின் கருப்பொருளைச் சுருக்கமாக எடுத்தியம்புவதால் நற்செய்தியின் சுருக்கம் என அழைக்கப்படுகின்றது.
  • இந்திய விடுதலைப் போராளி சந்திரசேகர ஆசாத் கொல்லப்பட்ட இடமான அலகாபாத் அல்ஃப்ரெட் பூங்கா (படம்) அதன் பிறகு சந்திரசேகர ஆசாத் பூங்கா என்றே அழைக்கப்பட்டது.
 
 
 
 
 
 
  • ஆவுரோஞ்சிக் கல் என்பது பழங்காலத்தில் மாடுகள் நீரருந்த அமைக்கப்பட்ட நீர்த்தொட்டிக்கு அருகாக அவற்றின் சுனைப்பை நீக்க அமைக்கப்பட்ட கல் ஆகும்.
  • ஒடியல் என்பது பனங்கிழங்கை நெடுக்கு வாட்டில் கிழித்து வெயிலில் காயவிடும்போது கிடைக்கும் உலர்ந்த கிழங்காகும்.
 
  • கத்தூரி மானில் இருந்து பெறப்படும் வாசனைப் பொருளான கத்தூரியில் கரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை என ஐந்து வகைகள் உள்ளன.
 
 
 
 
 
 
 
 
  • மஞ்சட் கோட்டுச் சருகுமான் இலங்கைக்குத் தனிச் சிறப்பானதும், மிக அண்மையில் தனியான உயிரினமாகக் கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டதுமான ஒரு சருகுமான் இனமாகும்.
 
 
  • உமாமி சுவை என்பது குளூட்டாமேட் என்னும் வேதியியல் பொருளை நாவில் உள்ள சுவைமொட்டுகள் உணர்வதால் ஏற்படும் சுவை என்று 1908 இல் கிக்குனே இக்கேடா கண்டுபிடித்தார்.
  • ஏபெல் பரிசு 2003ம் ஆண்டிலிருந்து நார்வே நாட்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் விளங்கிய நீல்ஸ் ஹென்றிக் ஏபெல் என்பவரின் நினைவாக நார்வே அரசினரால் வழங்கப்படும் ஒரு சிறப்பு விருதாகும்.
  • கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த பல்கலைத்திறனாளரான மயன் கணிதத்திலும் திறமையாயிருந்தார்.