விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்
ஆண்டு நிறைவுகள்/இந்தநாளில் தொகுப்பு
சனவரி - பெப்பிரவரி - மார்ச் - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - திசம்பர்
இப்போது 05:25 மணி திங்கள், நவம்பர் 18, 2024 (UTC) - இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்க
மார்ச் 1: பொசுனியா எர்செகோவினா - விடுதலை நாள் (1992)
- 1562 – பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டஸ்தாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது.
- 1873 – முதலாவது பயன்படத்தகுந்த தட்டச்சுப் பொறியை ரெமிங்டன் சகோதரர்கள் நியூ யோர்க்கில் தயாரித்தனர்.
- 1896 – என்றி பெக்கெரல் (படம்) கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.
- 1901 – இலங்கையில் நான்காவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. மொத்த தொகையான 3,565,954 இல் யாழ்ப்பாணத்தில் 33,879 பேர் பதிவாயினர்.
- 1910 – வாசிங்டனில் இடம்பெற்ற பனிச்சரிவில் கிங் கவுண்டி என்ற இடத்தில் தொடருந்து ஒன்று புதையுண்டதில் 96 பேர் உயிரிழந்தனர்.
- 1966 – சோவியத்தின் வெனேரா 3 விண்கலம் வெள்ளி கோளில் மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
- 1981 – ஐரியக் குடியரசுப் படை உறுப்பினர் பொபி சான்ட்ஸ் வட அயர்லாந்து சிறையில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
ஆ. நா. சிவராமன் (பி. 1904, இ. 2001) · தியாகராஜ பாகவதர் (பி. 1910) · சூலமங்கலம் ராஜலட்சுமி (இ. 1992)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 29 – மார்ச்சு 2 – மார்ச்சு 3
- 1657 – தோக்கியோ நகரில் ஏடோ என்ற இடத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று நாட்களில் 10,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- 1815 – கண்டி ஒப்பந்தத்தின் மூலம் கண்டி இராச்சியம் பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. சிறை பிடிக்கப்பட்ட கண்டி மன்னர் விக்கிரம ராஜசிங்கன் (படம்) என்ற கண்ணுச்சாமி தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டார்.
- 1917 – புவேர்ட்டோ ரிக்கோ மக்களுக்கு ஐக்கிய அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.
- 1989 – அனைத்து குளோரோபுளோரோகார்பன்களின் தயாரிப்பையும் இந்நூற்றாண்டுக்குள் தடை விதிக்க 12 ஐரோப்பிய சமூக நாஅடுகள் உடன்பாட்டுக்கு வந்தன.
- 1991 – இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன தொலைவில் இருந்து இயக்கப்பட்ட தானுந்துக் குண்டு ஒன்றின் மூலம் கொல்லப்பட்டார்.
- 1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது.
ரா. பி. சேதுப்பிள்ளை (பி. 1896) · குன்னக்குடி வைத்தியநாதன் (பி. 1935) · இரா. செல்வக்கணபதி (இ. 2016)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 1 – மார்ச்சு 3 – மார்ச்சு 4
மார்ச் 3: உலகக் காட்டுயிர் நாள்
- 1859 – ஐக்கிய அமெரிக்காவில் மாபெரும் இரண்டு-நாள் அடிமை ஏலம் நிறைவடைந்தது.
- 1861 – உருசியப் பேரரசர் இரண்டாம் அலெக்சாந்தர் (படம்) பண்ணையடிமைகளை விடுவித்தார்.
- 1913 – பெண்களுக்கான வாக்குரிமை கோரி அமெரிக்காவில், வாசிங்டன் நகரில் பெண்களின் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்ரது.
- 1931 – ஐக்கிய அமெரிக்கா த ஸ்டார்-ஸ்பாங்கிள்ட் பானர் என்ற பாடலை தனது நாட்டுப்பண்ணாக ஏற்றுக் கொண்டது.
- 1938 – சவூதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: லண்டனில் விமானக் குண்டுத்தாக்குதலின் போது சுரங்கத் தொடருந்து நிலையத்தில் ஒதுங்கிய 173 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.
- 1986 – ஆத்திரேலியா ஐக்கிய இராச்சியத்தில் இருந்து முழுமையான விடுதலை பெற்றதற்கான "ஆத்திரேலியா சட்டம் 1986" நடைமுறைக்கு வந்தது.
சி. சிவஞானசுந்தரம் (பி. 1924, இ. 1996) · பங்காரு அடிகளார் (பி. 1941) · வெ. இராதாகிருட்டிணன் (இ. 2011)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 2 – மார்ச்சு 4 – மார்ச்சு 5
- 1789 – நியூயார்க்கில் அமெரிக்க சட்டமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றது. அமெரிக்க அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 1791 – பிரித்தானிய மக்களவையில் கனடாவை கீழ் கனடா, மேல் கனடா என இரண்டாகப் பிரிக்கும் சட்டமூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 1931 – இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியாவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
- 1976 – வடக்கு அயர்லாந்தின் அரசியலமைப்பு சபை கலைக்கப்பட்டது. வட அயர்லாந்து இலண்டன் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் நேரடியாக நிர்வாகத்தின்கீழ் வந்தது.
- 1980 – தேசியவாதி ராபர்ட் முகாபே (படம்) சிம்பாப்வேயின் முதலாவது கருப்பினப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட்டார்.
- 2009 – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் சூடான் அரசுத்தலைவர் உமர் அல்-பசீர் மீது போர்க்குற்றங்களும், மானுடத்துக்கு எதிரான குற்றங்களும் சுமத்தி பிடி ஆணை பிறப்பித்தது.
நீ. வ. அந்தோனி (பி. 1902) · கு. கலியபெருமாள் (பி. 1924) · அன்ரன் பாலசிங்கம் (பி. 1938)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 3 – மார்ச்சு 5 – மார்ச்சு 6
- 1496 – இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி அறியப்படாத நிலங்களைக் கண்டறிவதற்கான உரிமையை ஜான் கபோட்டுக்கும் அவரது மகன்களுக்கும் வழங்கினார்.
- 1770 – பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையில் கிளம்பிய கலவரத்தை அடுத்து ஐந்து அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவே அமெரிக்கப் புரட்சிப் போர் வெடிக்கக் காரணமானது.
- 1824 – முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர்: பிரித்தானியா அதிகாரபூர்வமாக பர்மா மீது போர் தொடுத்தது.
- 1931 – காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- 1933 – பெரும் பொருளியல் வீழ்ச்சி: அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் வங்கி விடுமுறையை அறிவித்து, அனைத்து வங்கிகளையும் மூடி, அவற்றின் நிதிப் பரிமாற்றங்களைத் தடை செய்தார்.
- 1940 – காத்தின் படுகொலைகள்: யோசப் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் உயர்பீடம் 14,700 போலந்து போர்க்கைதிகள் உட்பட 25,700 போலந்து மக்களுக்கு மரணதண்டனை அளித்து கையொப்பமிட்டது.
- 1953 – சோவியத் ஒன்றியத்தின் நீண்டகாலத் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் (படம்) மாஸ்கோவில் மூளை இரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்தார்.
வ. பொன்னம்பலம் (இ. 1994) · ம. பார்வதிநாதசிவம் (இ. 2013) · ராஜசுலோசனா (இ. 2013)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 4 – மார்ச்சு 6 – மார்ச்சு 7
மார்ச் 6: கானா - விடுதலை நாள் (1957)
- 1665 – பிரித்தானிய அரச கழகத்தின் அரச கழகத்தின் மெய்யியல் இதழின் முதல் இதழ் வெளியிடப்பட்டது.
- 1788 – கைதிகளைக் குடியமர்த்தும் திட்டத்தில் முதற்படியாக முதலாவது தொகுதி பிரித்தானியக் கைதிகள் அடங்கிய கப்பல் நோர்போக் தீவை அடைந்தது.
- 1790 – மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
- 1869 – திமீத்ரி மென்டெலீவ் (படம்) தனது முதலாவது தனிம அட்டவணையை உருசிய வேதியியல் கழகத்தில் சமர்ப்பித்தார்.
- 1946 – வியட்நாம் போர்: ஹோ சி மின் பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பிரான்சு வியட்நாமை பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோ-சீனக் கூட்டமைப்பினுள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஏற்றுக் கொண்டது.
- 1967 – திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.
ம. சா. அறிவுடைநம்பி (பி. 1954) · ச. ஆறுமுகம் (இ. 2000) · டைப்பிஸ்ட் கோபு (இ. 2019)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 5 – மார்ச்சு 7 – மார்ச்சு 8
- 1573 – உதுமானியப் பேரரசுக்கும் வெனிசுக் குடியரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. உதுமானிய-வெனிசியப் போர் முடிவுக்கு வந்தது. சைப்பிரசு உதுமானியரின் ஆளுமைக்குக் கீழ் வந்தது.
- 1799 – நெப்போலியன் பொனபார்ட் பாலத்தீனத்தின் யோப்பா பகுதியைக் கைப்பற்றினான். நெப்போலியனின் படையினர் 2,000 அல்பேனியக் கைதிகளைக் கொலை செய்தனர்.
- 1876 – அலெக்சாண்டர் கிரகம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1912 – தென் முனையைத் தாம் 1911 டிசம்பர் 14 இல் அடைந்ததாக ருவால் அமுன்சென் அறிவித்தார்.
- 1936 – இரண்டாம் உலகப் போர்: லுக்கார்னோ, வெர்சாய் ஒப்பந்த மீறல்களாக, செருமனி ரைன்லாந்து பகுதியை ஆக்கிரமித்தது.
- 1971 – கிழக்குப் பாக்கித்தான் அரசியல் தலைவர் சேக் முஜிபுர் ரகுமான் (படம்) டாக்காவில் நிகழ்த்திய தனது வரலாற்றுப் புகழ் மிக்க உரையில், "இந்த முறை போராட்டம் நமது விடுதலைக்கானது," என அறிவித்தார்.
- 1986 – சாலஞ்சர் விண்ணோட விபத்து: பிரிசர்வர் கப்பலின் சுழியோடிகள் சாலஞ்சர் விண்ணோடத்தின் பயணியர் அறையைக் கண்டுபிடித்தனர்.
கல்லடி வேலுப்பிள்ளை (பி. 1860) · மா. நா. நம்பியார் (பி. 1919) · சுத்தானந்த பாரதியார் (இ. 1990)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 6 – மார்ச்சு 8 – மார்ச்சு 9
மார்ச் 8: அனைத்துலக பெண்கள் நாள்
- 1618 – யோகான்னசு கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.
- 1702 – ஆன் (படம்) இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய இராச்சியங்களின் அரசியாக முடிசூடினார்.
- 1782 – ஐக்கிய அமெரிக்காவின் ஒகைய்யோ மாநிலத்தில் கிறித்தவத்துக்கு மதம் மாறிய 96 அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் பென்சில்வேனியாவின் துணை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகளும் பெண்களுமாவர்.
- 1949 – வியெட்நாமிற்கு பிரான்சிடம் இருந்து அதிக சுயாட்சி வழங்குவதற்கும், வியட் மின்-தலைமையிலான வியட்நாம் சனநாயகக் குடியரசிற்கு எதிராக வியட்நாம் நாட்டை உருவாக்குவதற்கும் பிரெஞ்சு அரசுத்தலைவர் வின்சென்ட் ஓரியோலிற்கும், முன்னாள் வியட்நாம் பேரரசர் பாவோ டாயிற்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது.
- 1979 – பிலிப்சு நிறுவனம் குறுவட்டை முதற்தடவையாக அறிமுகம் செய்தது.
- 2014 – 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கிச் சென்ற மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 மாயமாக மறைந்தது.
ம. லெ. தங்கப்பா (பி. 1934) · ஜே. பி. சந்திரபாபு (இ. 1974)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 7 – மார்ச்சு 9 – மார்ச்சு 10
- 1500 – பெத்ரோ கப்ரால் (படம்) தனது கடற்படையுடன் லிசுபனில் இருந்து கிழக்கிந்தியத் தீவுகள் நோக்கிப் புறப்பட்டார். இவர்கள் பின்னர் பிரேசிலைக் கண்டுபிடித்தனர்.
- 1815 – மின்கலத்தால் இயக்கப்படும் மணிக்கூடு பற்றி முதன்முதலாக ஆங்கிலேயப் பொறியியலாளர் பிரான்சிசு ரொனால்ட்சு எழுதினார்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: இடச்சு கிழக்கிந்திய இராணுவம் மேற்கு சாவகத்தில் நிபந்தனை எதுவுமின்றி சப்பானியப் படைகளிடம் சரணடைந்தது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க பி-29 போர் விமானங்கள் டோக்கியோவில் குண்டுகளை வீசியதில் ஏற்பட்ட தீச்சூறாவளியினால் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1956 – நிக்கித்தா குருசேவின் ஸ்டாலினுக்கு எதிரான கொள்கைக்கு எதிராக ஜோர்ஜியாவில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.
- 1959 – பார்பி பொம்மை நியூ யோர்க் நகரில் அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சியில் முதன் முதலாகக் காட்சிக்கு வைக்கப்பட்டது.
- 2006 – சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது.
எஸ். இராமநாதன் (இ. 1970) · எம். பி. சீனிவாசன் (இ. 1988) · வீ. ப. கா. சுந்தரம் (இ. 2003)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 8 – மார்ச்சு 10 – மார்ச்சு 11
- 1629 – முதலாம் சார்லசு மன்னர் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை.
- 1876 – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் வெற்றிகரமான தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார்.
- 1909 – மலேசியத் தீபகற்பத்தின் கடாரம், கிளாந்தான், பெர்லிஸ், திராங்கானு உள்ளடங்கிய இறைமையை ஆங்கிலோ-சியாம் உடன்படிக்கையின் படி தாய்லாந்து பிரித்தானியாவுக்கு விட்டுக் கொடுத்தது.
- 1911 – இலங்கையில் ஐந்தாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் மொத்தத் தொகையான 4,092,973 இல் யாழ்ப்பாணத்தில் 40,441 பேர் பதிவாயினர்.
- 1959 – திபெத்திய எழுச்சி: சீனாவினால் கடத்தப்படலாம் என்ற அச்சத்தினால் பல்லாயிரக்கணக்கான திபெத்தியர் தலாய் லாமாவின் மாளிகையைச் சூழ்ந்து கொண்டு அவருக்குப் பாதுகாப்பளித்தனர்.
- 1977 – யுரேனசு கோளைச் சுற்றி வளையங்களை (படம்) வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.
- 2011 – சப்பானின் ஒன்சூ தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 புள்ளிகள் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆழிப்பேரலையாக (படம்) உருவெடுத்தது. பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்தனர்.
மா. மங்களம்மாள் (பி. 1884) · பாவலரேறு பெருஞ்சித்திரனார் (பி. 1933) · எஸ். டி. சுந்தரம் (இ. 1979)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 9 – மார்ச்சு 11 – மார்ச்சு 12
மார்ச் 11: லித்துவேனியா - விடுதலை நாள் (1990)
- 222 – உரோமைப் பேரரசர் எலகபாலுசு கிளர்ச்சி ஒன்றின் போது அவரது தாயாருடன் சேர்த்து பிரடோரியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர்களது உடல்கள் உரோமை நகர வீதிகளால் கொண்டு செல்லப்பட்டு டைபர் ஆற்றில் வீசப்பட்டன.
- 1784 – மங்களூர் உடன்படிக்கை எட்டப்பட்டதை அடுத்து இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்தது.
- 1864 – இங்கிலாந்து செபீல்டு நகரில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கினால் 238 பேர் உயிரிழந்தனர்.
- 1931 – சோவியத் ஒன்றியத்தில் "வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு" என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1983 – பாக்கித்தான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக சோதித்தது.
- 2011 – சப்பானின் ஒன்சூ தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 புள்ளிகள் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு (படம்) ஆழிப்பேரலையாக உருவெடுத்தது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உலகின் இரண்டாவது பெரிய அணுவுலைப் பேரழிவு இடம்பெற்றது.
சக்தி கிருஷ்ணசாமி (பி. 1913) · வெ. அ. சுந்தரம் (இ. 1967) · வே. தில்லைநாயகம் (இ. 1913)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 10 – மார்ச்சு 12 – மார்ச்சு 13
- 1622 – இயேசு சபை நிறுவனர்கள் லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார் ஆகியோருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர்களாக அறிவித்தது.
- 1894 – முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.
- 1918 – 215 ஆண்டுகளாக உருசியாவின் தலைநகராக இருந்த சென் பீட்டர்ஸ்பேர்க் தலைநகர் அந்தஸ்து மாற்றப்பட்டு மாஸ்கோ தலைநகராக்கப்பட்டது.
- 1928 – கலிபோர்னியாவில் சென் பிரான்சிசு அணைக்கட்டு உடைந்ததில் 431 பேர் உயிரிழந்தனர்.
- 1930 – மகாத்மா காந்தி பிரித்தானிய ஆட்சியாளரின் உப்பு ஆதிக்கத்துக்கு எதிராக 200 மைல் நீள தண்டி யாத்திரையை (படம்) ஆரம்பித்தார்.
- 1940 – பனிக்காலப் போர்: பின்லாந்து மாஸ்கோவுடன் அமைதி உடன்பாட்டிற்கு வந்தது. கரேலியாப் பகுதி முழுவதும் சோவியத் ஒன்றியம் பெற்றுக் கொண்டது. பின்லாந்துப் படைகளும் மீதமிருந்த மக்களும் உடனடியாக வெளியேறினர்.
- 1993 – மும்பையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
மா. இராசமாணிக்கனார் (பி. 1907) · சுந்தரிபாய் (இ. 2006) · ஓமக்குச்சி நரசிம்மன் (இ. 2009)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 11 – மார்ச்சு 13 – மார்ச்சு 14
- 1640 – இலங்கையில் காலிக் கோட்டை ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது. கோசுட்டர் இலங்கையின் இடச்சு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
- 1781 – செருமானிய வானியலாளர் வில்லியம் எர்செல் யுரேனசு கோளைக் கண்டுபிடித்தார்.
- 1881 – உருசியப் பேரசர் இரண்டாம் அலெக்சாந்தர் (படம்) அவரது அரண்மனைக்கு அருகே நடந்த குண்டுத் தாக்குதலில் கொலை செய்யப்பட்டார்.
- 1908 – நெல்லைக்கு வந்த வ.உ.சி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டதை அடுத்து திருநெல்வேலியில் எழுச்சி ஏற்பட்டது. நால்வர் கொல்லப்பட்டனர்.
- 1940 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உதம் சிங் லண்டனில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து பஞ்சாபின் முன்னாள் துணைநிலை ஆளுநர் மைக்கேல் ஒ'டுவையர் என்பவரை சுட்டுக் கொன்றார்.
- 1988 – உலகின் மிக நீளமான கடலடி சுரங்கம், செய்க்கான் சுரங்கம், சப்பானில் கட்டி முடிக்கப்பட்டது.
கா. நமச்சிவாய முதலியார் (இ. 1936) · ம. வே. மகாலிங்கசிவம் (இ. 1941) · சி. கணபதிப்பிள்ளை (இ. 1986)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 12 – மார்ச்சு 14 – மார்ச்சு 15
- 1674 – மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் வாப்பென் வான் உரொட்டர்டாம் என்ற கப்பல் கைப்பற்றப்பட்டது. 300 டச்சுக் கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
- 1794 – அமெரிக்கர் எலி விட்னி பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் பருத்தி அரவை ஆலைக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
- 1898 – மருத்துவர் வில்லியம் கேப்ரியல் ரொக்வூட் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
- 1931 – இந்தியாவின் முதலாவது பேசும் படம் ஆலம் ஆரா (படம்) வெளியிடப்பட்டது.
- 1942 – அமெரிக்காவில் முதல் தடவையாக சிகிச்சை ஒன்றில் பென்சிலின் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.
- 1980 – போலந்தில் வானூர்தி ஒன்று வார்சாவாக்கு அருகில் வீழ்ந்ததில், 14 அமெரிக்க குத்துச்சண்டை வீரர்கள் உட்பட 87 பேர் உயிரிழந்தனர்.
கே. வி. மகாதேவன் (பி. 1918) · வசந்தா வைத்தியநாதன் (இ. 2018)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 13 – மார்ச்சு 15 – மார்ச்சு 16
மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமைகள் நாள்
- கிமு 44 – உரோமைப் பேரரசர் யூலியசு சீசர் (படம்) மார்க்கசு புரூட்டசு மற்றும் உரோமை மேலவை உறுப்பினர்களால் நட்ட நடு மார்ச்சு நாளில் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
- 1564 – முகலாயப் பேரசர் அக்பர் "ஜிஸ்யா" எனப்படும் தலைவரியை நீக்கினார்.
- 1819 – பிரான்சிய இயற்பியலாளர் பிரெனெல் ஒளி ஓர் அலை போல் செயல்படுகிறது என நிறுவினார்.
- 1877 – முதலாவது தேர்வுத் துடுப்பாட்டம் இங்கிலாந்துக்கும் ஆத்திரேலியாவுக்கும் இடையில் மெல்பேர்ண் துடுப்பாட்ட அரங்கில் ஆரம்பமானது.
- 1917 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசு முடி துறந்தார். 304-ஆண்டுகால ரொமானொவ் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது.
- 1951 – ஈரானில் எண்ணெய் உற்பத்தி தேசியமயமாக்கப்பட்டது.
- 1991 – பனிப்போர்: இரண்டாம் உலகப் போரின் பின்னர் செருமனியின் ஆதிக்க நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து செருமனி முழுமையான விடுதலையைப் பெற்றது.
எஸ். எம். சுப்பையா நாயுடு (பி. 1914) · அழகு சுப்பிரமணியம் (பி. 1915) · தி. சு. சதாசிவம் (பி. 1938)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 14 – மார்ச்சு 16 – மார்ச்சு 17
- 1898 – மெல்பேர்ண் நகரில் ஐந்து குடியேற்ற நாடுகள் இணைந்து அரசியலமைப்பை உருவாக்கின. இதுவே ஆத்திரேலியாவின் உருவாக்கத்திற்கு முதலாவது காரணியாக அமைந்தது.
- 1926 – முதலாவது திரவ-எரிபொருளினால் உந்தும் ஏவூர்தியை மசாசுசெட்சில் இராபர்ட் காடர்ட் என்பவர் செலுத்தினார்.
- 1939 – பிராக் அரண்மனையில் இருந்து இட்லர் பெகேமியா, மொராவியாவை செருமனியின் ஒரு பகுதியாக அறிவித்தார்.
- 1962 – மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க விமானம் 107 பயணிகளுடன் காணாமல் போனது.
- 1968 – வியட்நாம் போர்: மை லாய் படுகொலைகள் (படம்) இடம்பெற்றன. பெண்கள், குழந்தைகள் உட்பட 350 முதல் 500 வரையிலான வியட்நாமியர்கள் அமெரிக்கப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1988 – ஈராக்கில் குருதிய நகரான அலப்ஜாவில் நச்சு வாயுத் தாக்குதலில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
- 1989 – எகிப்தில் 4,400-ஆண்டு பழமையான மம்மி கிசாவின் பெரிய பிரமிடு அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
இராஜேஸ்வரி சண்முகம் (பி. 1940) · கோ. சாரங்கபாணி (இ. 1974) · அழ. வள்ளியப்பா (இ. 1989)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 15 – மார்ச்சு 17 – மார்ச்சு 18
மார்ச் 17: புனித பேட்ரிக்கின் நாள்
- 1824 – இலண்டனில் கையெழுத்திடப்பட்ட ஆங்கிலோ-இடச்சு உடன்பாட்டை அடுத்து மலாய் தீவுக் கூட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மலாய் தீபகற்பம் பிரித்தானியரின் கீழும், சுமாத்திரா, சாவகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் இடச்சின் கீழும் வநதன.
- 1942 – பெரும் இன அழிப்பு: மேற்கு உக்ரேனின் லிவிவ் என்ற இடத்தைச் சேர்ந்த யூதர்கள் கிழக்கு போலந்தில் பெல்செக் என்ற இடத்தில் வைத்து நாட்சி செருமனியரினால் நச்சு வாயு செலுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1957 – பிலிப்பீன்சில் வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில், பிலிப்பீன்சு அரசுத்தலைவர் ரமோன் மக்சேசே (படம்) உட்பட 24 பேர் உயிரிழந்தனர்.
- 1959 – 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ, திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார்.
- 1992 – தென்னாப்பிரிக்காவில் இனவொதுக்கலை முடிவுக்குக் கொண்டுவர நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 68.7% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
- 1996 – இலங்கை அணி ஆத்திரேலியாவைத் தோற்கடித்து துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.
கே. சங்கர் (பி. 1940) · டானியல் அன்ரனி (இ. 1993)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 16 – மார்ச்சு 18 – மார்ச்சு 19
- 1834 – இங்கிலாந்தின் டோர்செட் நகரில் ஆறு பண்ணைத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆத்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
- 1915 – முதலாம் உலகப் போர்: கலிப்பொலி சமரில் பெரும் கடற்படைத் தாக்குதல் இடம்பெற்றது. பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுக் கப்பல்கள் மூன்று மூழ்கடிக்கப்பட்டன.
- 1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி ஆறு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். இரண்டு ஆண்டுகளில் விடுதலை ஆனார்.
- 1937 – அமெரிக்காவின் டெக்சசு மாநிலத்தில் நியூ லண்டன் நகரப் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட இயற்கை வாயு வெடிப்பில் 295 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்தனர்.
- 1965 – சோவியத் விண்ணோடி அலெக்சி லியோனொவ் (படம்) வஸ்கோத் 2 விண்கலத்தின் வெளியே 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
- 1980 – உருசியாவில் வஸ்தோக்-2எம் ஏவூர்தி ஏவப்படுகையில் வெடித்ததில் 48 பேர் உயிரிழந்தனர்.
- 2003 – விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஆறாம் சுற்றுப் பேச்சுக்கள் சப்பான் ஆக்கோன் நகரில் ஆரம்பமாயின.
அண்மைய நாட்கள்: மார்ச்சு 17 – மார்ச்சு 19 – மார்ச்சு 20
மார்ச் 19: புனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா (மேற்கு கிறித்தவம்)
- 1649 – இங்கிலாந்தில் பிரபுக்கள் அவையை மக்களுக்கு பயனற்றதும், ஆபத்தானதும் எனத் தெரிவித்து அதனை ஒழிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
- 1932 – சிட்னி துறைமுகப் பாலம் (படம்) திறந்து வைக்கப்பட்டது.
- 1946 – பிரெஞ்சு கயானா, குவாதலூப்பு, மர்தினிக்கு, ரீயூனியன் ஆகியன பிரான்சின் வெளிநாட்டு மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன.
- 1988 – இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்பிரல் 19 இல் சாவைத் தழுவினார்.
- 2002 – சிம்பாப்வே மனித உரிமை மீறல்கள், தேர்தல் மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக பொதுநலவாயத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டது.
- 2004 – பால்ட்டிக் கடலில் 1952 இல் உருசிய மிக்-15 விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட சுவீடனின் டிசி-3 விமானத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
- 2018 – சூடான் என அழைக்கப்படும் கடைசி ஆண் வடக்கு வெள்ளை காண்டாமிருகம் இறந்தது.
டி. கே. பட்டம்மாள் (பி. 1919) · விக்கிரமன் (பி. 1928) · ஆ. கந்தையா (பி. 1928)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 18 – மார்ச்சு 20 – மார்ச்சு 21
மார்ச் 20: உலக வீட்டுக்குருவிகள் நாள்
- 1602 – டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.
- 1616 – சேர் வால்ட்டர் ரேலி 13 ஆண்டுகள் இலண்டன் கோபுரத்தில் சிறைவாசத்திற்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
- 1739 – நாதிர் ஷா தில்லியை கைப்பற்றி நகரைச் சூறையாடினான்.
- 1815 – எல்பா தீவில் இருந்து தப்பிய நெப்போலியன் பொனபார்ட் 140,000 இராணுவப் படைகளுடனும் 200,000 தன்னார்வப் படைகளுடனும் பாரிசை மீண்டும் கைப்பற்றி "நூறு நாட்கள்" ஆட்சியை ஆரம்பித்தான்.
- 1915 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (படம்) தனது பொதுச் சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.
- 1993 – இங்கிலாந்து, வெரிங்டன் நகரில் ஐரியக் குடியரசுப் படையின் குண்டுத்தாக்குதலில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
- 2003 – ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால் ஈராக் மீதான படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: மார்ச்சு 19 – மார்ச்சு 21 – மார்ச்சு 22
மார்ச் 21: உலகக் கவிதை நாள், சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு நாள்
- 1556 – கண்டர்பரி பேராயர் தாமஸ் கிரான்மர் (படம்) ஆக்சுபோர்டு நகரில் எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
- 1844 – பகாய் நாள்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி இந்நாள் முதலாம் ஆண்டு முதலாம் நாள் ஆகும். ஆண்டுதோறும் இந்நாள் பகாய் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.
- 1919 – அங்கேரிய சோவியத் குடியரசு நிறுவப்பட்டது. உருசியாவில் நிகழ்ந்த அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் ஐரோப்பாவில் உருவான முதலாவது பொதுவுடைமை அரசு இதுவாகும்.
- 1935 – பாரசீக நாட்டை ஈரான் (ஆரியரின் நாடு) என அழைக்கும்படி அதன் தலைவர் ரெசா ஷா வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
- 1948 – முகமது அலி ஜின்னா உருது மட்டுமே பாக்கித்தானின் அரசு மொழியாக இருக்கும் என டாக்காவில் வைத்து அறிவித்தார்.
- 1984 – மணலாறு பிரதேசத்தைத் தடைவலயமாக்கி இலங்கை அரசு அங்கு வாழ்ந்து வந்த தமிழர்களை அடித்து விரட்டினர்.
சைமன் காசிச்செட்டி (பி. 1807) · பாண்டித்துரைத் தேவர் (பி. 1867) · க. சச்சிதானந்தன் (இ. 2008)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 20 – மார்ச்சு 22 – மார்ச்சு 23
- 1622 – அமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்தில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347 ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர்.
- 1739 – நாதிர் ஷா தில்லியைக் கைப்பற்றி நகரை சூறையாடி, மயிலாசனத்தின் (படம்) நகைகளைக் கைப்பற்றினான்.
- 1784 – மரகத புத்தர் சிலை தாய்லாந்தில் இன்றைய இருப்பிடமான வாட் பிரசிறீ ரத்தின சசாதரத்திற்கு பெரும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: பெலருசின் காத்தின் கிராம மக்கள் அனைவரும் நாட்சிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
- 1995 – சோவியத் விண்வெளிவீரர் வலேரி பொல்யாக்கொவ் விண்ணில் 438 நாட்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார்.
- 2017 – இலண்டனில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.
தி. வே. சுந்தரம் (பி. 1877) · கோவை மகேசன் (பி. 1938) · ஜெமினி கணேசன் (இ. 2005)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 21 – மார்ச்சு 23 – மார்ச்சு 24
மார்ச் 23: பாக்கித்தான் – குடியரசு நாள் (1956)
- 1801 – உருசியப் பேரரசர் முதலாம் பவுல் புனித மைக்கேல் அரண்மனையில் அவரது படுக்கையறையில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார்.
- 1816 – அமெரிக்க மதப் பரப்புனர்கள் கொழும்பு வந்தடைந்தனர்.
- 1857 – எலிசா ஒட்டிஸ் முதலாவது பயணிகளுக்கான உயர்த்தியை நியூயார்க் நகரில் அமைத்தார்.
- 1931 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத் சிங் (படம்), சிவராம் ராஜகுரு, சுக்தேவ் தபார் ஆகியோர் காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டனர்.
- 1940 – அகில இந்திய முசுலிம் லீக்கின் மாநாட்டில் இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கை வெளியிடப்பட்டது.
- 2001 – உருசியாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து, பீஜியின் அருகில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது.
லட்சுமி (பி. 1921) · குமாரசாமிப் புலவர் (இ. 1922) · பி. வி. நரசிம்மபாரதி (பி. 1924)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 22 – மார்ச்சு 24 – மார்ச்சு 25
- 1882 – காச நோயை உருவாக்கும் நோய்க்கிருமியைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் அறிவித்தார்.
- 1896 – வரலாற்றில் முதன் முதலாக வானொலி சமிக்கையை உருசிய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் (படம்) உருவாக்கினார்.
- 1946 – பிரித்தானிய அமைச்சரவைத் தூதுக்குழு பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியை இந்தியத் தலைமையிடம் ஒப்படைப்பதற்கான பேச்சுவார்த்தைக்காக இந்தியா வந்தது.
- 1965 – இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழ் மொழிப் பயன்பாட்டிற்கு முன்னுரிமை வழங்கவும், அங்கு அரச நில பகிர்ந்தளிப்பில் தமிழ் மொழி பேசுவோருக்கு முன்னுரிமை வழங்கவும் டட்லி-செல்வா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- 1965 – நாசாவின் ரேஞ்சர் 9 விண்கலம், சந்திரனில் மோதும் முன்னர் சந்திரனின் புகைப்படங்களை வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் பார்க்கக்கூடிய படங்களாக மாற்றி பூமிக்கு அனுப்பியது.
- 1977 – இந்திய தேசிய காங்கிரசு கட்சி உறுப்பினரல்லாத முதலாவது பிரதமராக மொரார்ஜி தேசாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பி. எஸ். இராமையா (பி. 1905) · டி. எம். சௌந்தரராஜன் (பி. 1922) · சீர்காழி கோவிந்தராஜன் (இ. 1988)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 23 – மார்ச்சு 25 – மார்ச்சு 26
மார்ச் 25: சர்வதேச தடுத்து வைக்கப்பட்ட, காணாமற்போன பணியாளர்களுடன் கூட்டு ஒருமைப்பாடு நாள், அடிமை வணிகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன்னாட்டு நாள்
- 1655 – டைட்டன் (படம்) என்ற சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனை கிறித்தியான் ஐகன்சு கண்டுபிடித்தார்.
- 1807 – சுவான்சி-மம்பில்சு ரெயில்வே என்ற உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பிரித்தானியாவில் ஆரம்பமாகியது.
- 1811 – இறைமறுப்பின் தேவை என்ற பிரசுரத்தை வெளியிட்டமைக்காக பெர்சி பைச்சு செல்லி ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
- 1949 – எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகியவற்றைச் சேர்ந்த 92,000 குலாக்குகள் சோவியத் அதிகாரிகளினால் சோவியத் ஒன்றியத்தின் பல ஒதுக்கமான இடங்களுக்கு கட்டாய வேலைக்காக அனுப்பப்பட்டனர்.
- 1953 – ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை ஜவகர்லால் நேரு நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார்.
- 1954 – இலங்கையைச் சேர்ந்த மு. நவரத்தினசாமி பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தார்.
முசிரி சுப்பிரமணிய ஐயர் (இ. 1975) · ம. மு. உவைஸ் (இ. 1996) · தி. க. சிவசங்கரன் (இ. 2014)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 24 – மார்ச்சு 26 – மார்ச்சு 27
மார்ச் 26: வங்காள தேசம் - விடுதலை நாள் (1971)
- 1871 – இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் அவுசுவிட்சு வதை முகாமிற்கு முதற்தடவையாக பெண் சிறைக்கைதிகள் கொண்டு செல்லப்பட்டனர்.
- 1954 – மார்சல் தீவுகளில் உள்ள பிக்கினி திட்டில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
- 1971 – கிழக்குப் பாக்கித்தான் பாக்கித்தானிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. வங்காளதேச விடுதலைப் போர் ஆரம்பமானது.
- 1979 – அன்வர் சாதாத், மெனசெம் பெகின், ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் வாசிங்டனில் எகிப்திய-இசுரேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் (படம்).
- 2007 – கொழும்பில் கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
நா. கதிரைவேற்பிள்ளை (இ. 1907) · ஆர். சுதர்சனம் (இ. 1991) · நீர்வை பொன்னையன் (இ. 2020)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 25 – மார்ச்சு 27 – மார்ச்சு 28
மார்ச் 27: உலக நாடக அரங்க நாள்
- 1915 – குடற்காய்ச்சல் நோய்க்கிருமிகள் தொற்றிய டைஃபாய்டு மேரி என்பவர் அமெரிக்காவில் தனிமைப்படுத்தப்பட்டார். இவர் தனது வாழ்நாள் முழுவதையும் தனிமையில் கழித்தார்.
- 1964 – வட அமெரிக்காவின் வரலாற்றில் அதி ஆற்றல் வாய்ந்த 9.2 ரிக்டர் நிலநடுக்கம் அலாஸ்காவில் இடம்பெற்றதில் 125 பேர் உயிரிழந்தனர். ஏங்கரெஜ் நகரத்தின் பெரும் பகுதி சேதமுற்றது.
- 1968 – விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் (படம்) வானூர்தி விபத்தொன்றில் உயிரிழந்தார்.
- 1977 – அமெரிக்காவின் இரண்டு போயிங் 747 பயணிகள் விமானங்கள் கேனரி தீவுகளில் மோதிக் கொண்டதில் 583 பயணிகள் உயிரிழந்தனர். 61 பேர் மீட்கப்பட்டனர்.
- 1999 – அமெரிக்க லொக்கீட் எப்-117 நைட்கோக் விமானத்தை யுகோசுலாவியா சாம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியது.
- 2016 – லாகூர், குல்சன்-இ-இக்பால் பூங்காவில் உயிர்ப்பு ஞாயிறு கொண்டாட்டத்தின் போது, தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 70 பேர் கொல்லப்பட்டு, 300 பேர் காயமடைந்தனர்.
சுவாமி விபுலாநந்தர் (பி. 1892)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 26 – மார்ச்சு 28 – மார்ச்சு 29
- 1737 – மராத்தியர்கள் பாஜிராவ் தலைமையில் முகலாயர்களை தில்லிப் போரில் தோற்கடித்தனர்.
- 1802 – என்ரிக் ஒல்பெர்சு 2 பலாசு என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார்.
- 1959 – சீன மக்கள் குடியரசின் அரச மன்றம் திபெத்து அரசைக் கலைத்தது.
- 1970 – மேற்கு துருக்கியை நிலநடுக்கம் தாக்கியதில் 1,086 பேர் உயிரிழந்தனர்.
- 1988 – ஹலப்ஜா நகரின் குர்திய இன மக்களுக்கு எதிராக வேதி ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதில் சுமார் 5 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.
- 2005 – இந்தோனேசியாவின் சுமாத்திராவில் இடம்பெற்ற 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 915 முதல் 1,314 பேர் வரையானோர் உயிரிழந்தனர்.
வி. நாகையா (பி. 1904) · சத்தியமூர்த்தி (இ. 1943) · ந. மு. வேங்கடசாமி நாட்டார் (படம், இ. 1944)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 27 – மார்ச்சு 29 – மார்ச்சு 30
- 1807 – 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை செருமானியய வானியலாளர் ஐன்ரிக் ஓல்பர்சு கண்டுபிடித்தார்.
- 1849 – பஞ்சாபை பிரித்தானியா கைப்பற்றியது.
- 1857 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் மங்கள் பாண்டே (படம்) பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். இதுவே பின்னர் இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாக அமைந்தது.
- 1867 – கனடாக் கூட்டமைப்பை சூலை 1 இல் உருவாக்குவதற்கான பிரித்தானிய வட அமெரிக்க சட்டத்தை பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணி அரச ஒப்புதலை அளித்தார்.
- 1886 – அமெரிக்காவின் அட்லான்டா நகரில் ஜோன் பெம்பேர்ட்டன் என்பவர் முதல் தொகுதி கொக்கக் கோலா மென்பானத்தைத் தயாரித்தார்.
- 1973 – வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் தெற்கு வியட்நாமை விட்டு முற்றாக வெளியேறினர்.
- 2007 – கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.
பாலூர் து. கண்ணப்பர் (இ. 1971) · சி. கே. சரஸ்வதி (இ. 1997) · சுப்புடு (இ. 2007)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 28 – மார்ச்சு 30 – மார்ச்சு 31
- 1699 – குரு கோவிந்த் சிங் பஞ்சாபின், அனந்த்பூர் சாகிப் நகரில் கால்சா அமைப்பைத் தோற்றுவித்தார்.
- 1818 – இயற்பியலாளர் அகசுடீன் பிரெனெல் ஒளியியல் சுழற்சி பற்றிய தனது குறிப்புகளை பிரெஞ்சு அறிவியல் கழகத்தில் படித்தார்.
- 1831 – யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமெரிக்க மிசன் கட்டிடங்கள் தீப்பிடித்து அழிந்தன.
- 1842 – அறுவைச் சிகிச்சைகளில் முதன்முதலாக ஈதர் மயக்க மருந்து குரோபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது.
- 1861 – தாலியம் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1867 – அலாஸ்கா மாநிலத்தை 2 சதம்/ஏக்கர் ($4.19/கிமீ²) என்ற கணக்கில் 7.2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (படம்), உருசியாவிடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா கொள்வனவு செய்தது.
- 1981 – அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் வாசிங்டனில் உணவு விடுதி ஒன்றில் வைத்து மார்பில் சுடப்பட்டார்.
ஆனந்தரங்கம் பிள்ளை (பி. 1709) · க. சொர்ணலிங்கம் (பி. 1889) · தி. க. சிவசங்கரன் (பி. 1925)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 29 – மார்ச்சு 31 – ஏப்பிரல் 1
மார்ச் 31: மால்ட்டா - விடுதலை நாள் (1979)
- 1492 – எசுப்பானியாவில் இருந்து அனைத்து 150,000 யூதர்களும் முசுலிம்களும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவை இசபெல்லா மாகாராணி பிறப்பித்தார்.
- 1889 – ஈபெல் கோபுரத்தின் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
- 1917 – அமெரிக்கா டானிசு மேற்கிந்தியத் தீவுகளை டென்மார்க்கிடம் இருந்து $25 மில். டாலர்களுக்குக் கொள்வனவு செய்து அமெரிக்க கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றியது
- 1918 – 12,000 முசுலிம் அசர்பைஜான்கள் ஆர்மீனிய புரட்சிக் கூட்டமைப்புப் படையினராலும் போல்செவிக்குகளாலும் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனி வானோடி ஒருவர் செருமனியில் இருந்து வெளியேறி மெசேர்ஸ்கிமிட் எம்.இ 262 (படம்) என்ற உலகின் முதலாவது ஜெட் போர் விமானத்தை அமெரிக்காவுக்குக் கையளித்தார்.
- 1959 – திபெத்தின் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, இந்தியாவினுள் நுழைந்து அரசியல் புகலிட உரிமை கோரினார்.
- 1990 – இந்திய அமைதிப் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது.
என்றி மார்ட்டின் (இ. 1861) · சா. ஜே. வே. செல்வநாயகம் (பி. 1898) · தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் (இ. 1965)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 30 – ஏப்பிரல் 1 – ஏப்பிரல் 2